06 ஆகஸ்ட் 2009
தபு-ஸ்ரீதேவியை 'கேட்கும்' தனுஷ்!
தனுஷுக்கு, இந்த வேடத்தில் முன்னாள் கவர்ச்சி ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என ஆசையாம். தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் மூலம் ஸ்ரீதேவியை சம்மதிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம்.
இதைத் தொடர்ந்து, தபுவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க பெரும் முயற்சி நடக்கிறது. முதிர்கன்னி தோற்றம் வந்துவிட்டாலும், நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் தபுவை ரொம்ப கஷ்டப்பட்டு ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்கள். 'படத்தில் கதாநாயகிகூட டம்மிதான்... நீங்கள்தான் மெயின்' என்றெல்லாம் பொய் சொல்ல வேண்டியதாகிவிட்டதாம் (விட்டால் தனுஷோடு டூயட் இருக்கு என்று கூட சொல்வார்கள் போல!).
ஆனாலும், சம்பள விஷத்தில் அவர் கேட்ட தொகையைக் கேட்டு திக்கென்றாகிவிட்டதாம் ஜபக்குக்கு.
'போய் லட்டர் போடுகிறோம்' என்று பெண் வீட்டாரிடம் சொல்வதுபோல சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார்களாம்.
தனுஷ் மாமியாரா நடிக்கிறது ரொம்ப காஸ்லி சமாச்சாரம் போல!.
'தம்பி வைரமுத்து...' முக அழகிரி பாசம்!
| இதில் சிறப்பு விருந்தினராக மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் முக அழகிரி பங்கேற்றார். வைரமுத்துவைப் பாராட்டிப் பேசிய அவர் கூறியதாவது: சென்னையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்துவின் திரை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஒரு தம்பி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் இன்னொரு தம்பி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பழைய பாடல்களை விரும்பி கேட்பவன். புகழ் பெற்ற பழைய கவிஞர்கள் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், ஜி.ராமநாதன், கண்ணதாசன் போன்ற வர்களின் பாடல்களை ரசித்து கேட்பேன். இவர்களின் மொத்த உருவமாக வைரமுத்து இருக்கிறார். தமிழ்திரை உலகத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் சேவை தொடர்ந்து தேவை, என்று பாராட்டினார். வைரமுத்து பேசுகையில், அண்ணன் மு.க. அழகிரி மதுரைக்கு மட்டுமல்ல, மக்களுக்கே காவலன் என்று பாராட்டினார். தொடர்ந்து பேசுகையில், தன்னுடைய சின்னச் சின்ன ஆசைகள் பாடல்தான் ஏஆர் ரஹ்மானை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டார். |
04 ஆகஸ்ட் 2009
ஜகன்மோகினி ஆடியோ-மதுரையில் வெளியீடு!
நமீதா நடித்துள்ள இந்தப் படம் எண்பதுகளில் ஜெயமாலினி நடிப்பில் வெளியான ஜெகன்மோகனியின் ரீமேக். என் கே விஸ்வநாதன் இயக்கியுள்ளார்.
ராஜா, நிலா, வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு மதுரையில் நடந்தது. இதன் துவக்க விழாவையும் மதுரையில் வைத்து அழகிரிதான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் விஸ்வநாதன், தயாரிப்பாளர்கள் ராம நாராயணன், முரளி, சீனிவாசன், சித்ரா லட்சுமணன், சுரேஷ், நடிகர் வடிவேலு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சங்கடமான புகைப்படங்களின் தொகுப்பு
இண்டெர்நெட்டில் தடுக்கி விழுந்தால் அசாதரணமான புகைப்படங்களின் தொகுப்புகளை பார்க்கலாம்.வலைப்பதிவாளர்களுக்கும் இத்தகைய புகைப்படங்களுக்கு இணைப்பு கொடுப்பதிலும் தொகுப்பாக வெளியிடுவதிலும் பெரும் ஆர்வம் இருக்கிறது.அப்படியே இ மெயில் மூலம் நண்பர்களுக்கு தட்டி விடுவதும் பலருக்கு வாடிக்கையாக உள்ளது.

ஒரு நல்ல புகைப்படத்தை ரசிப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகவும் படிப்பதைவிட பார்த்து ரசிப்பது சுலபமாக இருப்பதாலும் புகைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு கிடைத்துவிடுகிறது.
புகைப்படங்கள் பல வகைப்பட்டதாக இருக்கின்றன.ஒரு சில படங்கள் பார்த்ததும் மெலிதாக புன்னகைக்க வைக்கலாம். இன்னும் சில விழுந்து விழுந்து சிரிக்க வைக்கலாம்.சில நினைத்து நினைத்து சிரிக்க வைக்கலாம்.இத்தகைய புகைப்படங்களை சேகரித்து வெளியிடும் வலைப்பதிவு ஒன்று இணைய உலகில் குறுகிய காலத்தில் அமோக வெற்றி பெற்று முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ளது.
ஆக்வர்டுபேமலிபோட்டோஸ் என்னும் அந்த தளம் அடிப்படையில் சங்கடம் தரக்கூடிய வகையான புகைப்பங்களை வெளியிடுகின்றது.
உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் சற்றே வயதான மணமகள் கையில் பூங்கொத்தோடு மணமகன் மீது அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.இன்னொரு படத்தில் மூன்று பெண்கள் மற்றவர்களின் பாக்கெட்டில் தங்கள் கையை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி எல்லா படங்களுமே புன்னகைக்கவோ ,சிரிக்கவோ செய்யக்கூடியதாக இருக்கின்றன. எல்லா படங்களுமே திட்டமிடப்படமல் இயல்பான சூழ்நிலையில் எடுக்கப்பட்டு தற்செயலாக இத்தன்மையை பெற்றவை.அனைத்தும் குடும்பம் சார்ந்தவை. இவை பெரும்பாலும் சமம்பந்தப்பட்டவ்ர்களாலேயே சமர்பிக்கப்பட்டவை.
இந்த படங்களுடன் கொடுக்கப்படும் கிண்டலான புகைப்பட குறிப்புகள் அவற்றின் ரசிப்புத்தன்மையை பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.
அமெரிக்காவைச்சேர்ந்த மைக் பென்டர் மற்றும் டவுக் செர்னாக் ஆகிய இரண்டு நண்பர்களுமாக சேர்ந்து இந்த தளத்தை நடத்தி வருகின்றனர்.
ஒரு நாள் இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களது கதைகளை பேசிக்கொண்டிருந்தனர். இந்த கதைகளின் நகைச்சுவை தன்மை அவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.அப்போது தான குடும்பம் சார்ந்த நகைச்சுவையில் வையம் தழுவிய பொதுதன்மை இருப்பதை புரிந்துகொண்டனர்.
இந்த உணர்வை புகைப்படங்கள் மிக அருமையாக உணர்த்தக்கூடும் என நினைத்தனர்.இவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் விரும்பினர். உடனே கூகுலில் இத்தகைய புகைப்படங்களை தேடிப்பார்த்தனர்.மரத்தில் ஒரு குடும்பம் இருப்பது போன்ற படம் கன்ணில் பட்டது. அந்த படத்தின் விநோத தன்மை மற்றும் நகைச்சுவை அம்சம் பளிச்சென கவர்ந்தது.
அந்த நிமிடத்தில் இது போன்ற படங்களை சேகரித்து வெளியிட ஒரு வலைப்பதிவை துவங்க முற்பட்டனர்.இப்படி பிறந்தது தான் ஆக்வர்டுபேமலிபோட்டோஸ் தளம்.
சங்கடத்தை பகிர்ந்து கொள்வோம் என்னும் வாசகத்தோடு விநோதமான புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தனர்.பலரும் விரும்பி குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதோடு மற்றவர்களும் அதிக அளவில் வந்து பார்த்து ரசித்தனர்.
விளைவு ஒரே மாதத்தில் தளத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.
இதனிடையே வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இந்த தளம் பற்றி குறிப்பிடப்பட பார்வையாலர்கலின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.இத்தனை குறுகிய காலத்தில் ஒரு வலைப்பதிற்கு இத்தனை பெரிய வரவேற்பு கிடைப்பது பெரிய விஷயம் தான்.
இதில் இடம்பெற்றுள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் வந்துள்ள நநூற்றுக்கணக்கான பின்னுட்டங்க்களை பார்த்தாலே இவை எந்த அளவுக்கு ரசிக்கப்படுகின்றன என புரிந்துகொள்ளலாம்.
இதில் சமர்பிக்கப்படும் படங்கள் தொடர்பாகவும் சுவையான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளனவாம். ஒரு சிலர் பிரசவ காட்சிகளை எல்லாம் கூட சம்ர்பிக்கின்றனராம். ஒரு சிலர் சமர்பித்துவிட்டு பின்னர் அதனை வில்ல்க்கிவிட கோருகின்றனராம்.சமீபத்தில் ஒரு பெண்மணி தான் அனுப்பிய படம் குடிபோதையில் அனுப்பியது என கூறி அதை எடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டாராம்.
இப்படி நிறையவே சுவையான அனுபவங்கள் இருப்பதால் மைக் மற்றும் அவரது நண்பருக்கு இந்த தளம் பற்றி புத்த்கம் எழுதும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
வலைப்பதிவு மூலம் புகழ்பெற்றதோடு புத்தகம் எழுதும் பெற்ற பதிவர்களின் பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர். மைக் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பதால் இந்த வாய்ப்பால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்.
—-
சங்கடமான புகைப்படங்களின் தொகுப்பு
இண்டெர்நெட்டில் தடுக்கி விழுந்தால் அசாதரணமான புகைப்படங்களின் தொகுப்புகளை பார்க்கலாம்.வலைப்பதிவாளர்களுக்கும் இத்தகைய புகைப்படங்களுக்கு இணைப்பு கொடுப்பதிலும் தொகுப்பாக வெளியிடுவதிலும் பெரும் ஆர்வம் இருக்கிறது.அப்படியே இ மெயில் மூலம் நண்பர்களுக்கு தட்டி விடுவதும் பலருக்கு வாடிக்கையாக உள்ளது.

ஒரு நல்ல புகைப்படத்தை ரசிப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகவும் படிப்பதைவிட பார்த்து ரசிப்பது சுலபமாக இருப்பதாலும் புகைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு கிடைத்துவிடுகிறது.
புகைப்படங்கள் பல வகைப்பட்டதாக இருக்கின்றன.ஒரு சில படங்கள் பார்த்ததும் மெலிதாக புன்னகைக்க வைக்கலாம். இன்னும் சில விழுந்து விழுந்து சிரிக்க வைக்கலாம்.சில நினைத்து நினைத்து சிரிக்க வைக்கலாம்.இத்தகைய புகைப்படங்களை சேகரித்து வெளியிடும் வலைப்பதிவு ஒன்று இணைய உலகில் குறுகிய காலத்தில் அமோக வெற்றி பெற்று முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ளது.
ஆக்வர்டுபேமலிபோட்டோஸ் என்னும் அந்த தளம் அடிப்படையில் சங்கடம் தரக்கூடிய வகையான புகைப்பங்களை வெளியிடுகின்றது.
உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் சற்றே வயதான மணமகள் கையில் பூங்கொத்தோடு மணமகன் மீது அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.இன்னொரு படத்தில் மூன்று பெண்கள் மற்றவர்களின் பாக்கெட்டில் தங்கள் கையை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி எல்லா படங்களுமே புன்னகைக்கவோ ,சிரிக்கவோ செய்யக்கூடியதாக இருக்கின்றன. எல்லா படங்களுமே திட்டமிடப்படமல் இயல்பான சூழ்நிலையில் எடுக்கப்பட்டு தற்செயலாக இத்தன்மையை பெற்றவை.அனைத்தும் குடும்பம் சார்ந்தவை. இவை பெரும்பாலும் சமம்பந்தப்பட்டவ்ர்களாலேயே சமர்பிக்கப்பட்டவை.
இந்த படங்களுடன் கொடுக்கப்படும் கிண்டலான புகைப்பட குறிப்புகள் அவற்றின் ரசிப்புத்தன்மையை பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.
அமெரிக்காவைச்சேர்ந்த மைக் பென்டர் மற்றும் டவுக் செர்னாக் ஆகிய இரண்டு நண்பர்களுமாக சேர்ந்து இந்த தளத்தை நடத்தி வருகின்றனர்.
ஒரு நாள் இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களது கதைகளை பேசிக்கொண்டிருந்தனர். இந்த கதைகளின் நகைச்சுவை தன்மை அவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன.அப்போது தான குடும்பம் சார்ந்த நகைச்சுவையில் வையம் தழுவிய பொதுதன்மை இருப்பதை புரிந்துகொண்டனர்.
இந்த உணர்வை புகைப்படங்கள் மிக அருமையாக உணர்த்தக்கூடும் என நினைத்தனர்.இவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் விரும்பினர். உடனே கூகுலில் இத்தகைய புகைப்படங்களை தேடிப்பார்த்தனர்.மரத்தில் ஒரு குடும்பம் இருப்பது போன்ற படம் கன்ணில் பட்டது. அந்த படத்தின் விநோத தன்மை மற்றும் நகைச்சுவை அம்சம் பளிச்சென கவர்ந்தது.
அந்த நிமிடத்தில் இது போன்ற படங்களை சேகரித்து வெளியிட ஒரு வலைப்பதிவை துவங்க முற்பட்டனர்.இப்படி பிறந்தது தான் ஆக்வர்டுபேமலிபோட்டோஸ் தளம்.
சங்கடத்தை பகிர்ந்து கொள்வோம் என்னும் வாசகத்தோடு விநோதமான புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தனர்.பலரும் விரும்பி குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து கொண்டதோடு மற்றவர்களும் அதிக அளவில் வந்து பார்த்து ரசித்தனர்.
விளைவு ஒரே மாதத்தில் தளத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்தது.
இதனிடையே வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இந்த தளம் பற்றி குறிப்பிடப்பட பார்வையாலர்கலின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.இத்தனை குறுகிய காலத்தில் ஒரு வலைப்பதிற்கு இத்தனை பெரிய வரவேற்பு கிடைப்பது பெரிய விஷயம் தான்.
இதில் இடம்பெற்றுள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் வந்துள்ள நநூற்றுக்கணக்கான பின்னுட்டங்க்களை பார்த்தாலே இவை எந்த அளவுக்கு ரசிக்கப்படுகின்றன என புரிந்துகொள்ளலாம்.
இதில் சமர்பிக்கப்படும் படங்கள் தொடர்பாகவும் சுவையான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளனவாம். ஒரு சிலர் பிரசவ காட்சிகளை எல்லாம் கூட சம்ர்பிக்கின்றனராம். ஒரு சிலர் சமர்பித்துவிட்டு பின்னர் அதனை வில்ல்க்கிவிட கோருகின்றனராம்.சமீபத்தில் ஒரு பெண்மணி தான் அனுப்பிய படம் குடிபோதையில் அனுப்பியது என கூறி அதை எடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டாராம்.
இப்படி நிறையவே சுவையான அனுபவங்கள் இருப்பதால் மைக் மற்றும் அவரது நண்பருக்கு இந்த தளம் பற்றி புத்த்கம் எழுதும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
வலைப்பதிவு மூலம் புகழ்பெற்றதோடு புத்தகம் எழுதும் பெற்ற பதிவர்களின் பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ளனர். மைக் ஒரு திரைக்கதை ஆசிரியர் என்பதால் இந்த வாய்ப்பால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்.
—-
பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற
நண்பர்களே தொடர்ந்து வேலைகள் அதிகரித்து வருவதால் முன்னெப்போதும் போல் தொடர்ந்து எழுத முடியவில்லை என்னை மன்னித்து உங்கள் ஆதரவை எப்போழுதும் தர வேண்டுகிறேன். ஹுலு என்ற இணையத்தளத்தை தெரியாதவர்கள் இணையத்தில் இருக்கவே முடியாது. தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். இந்த தளத்தில் யூட்யூப் போன்றே நிறைய வீடியோக்கள் உள்ளது. அது மட்டுமில்லை டிவியில் ஒளிபரப்பாகும் ஆங்கில சீரியல்கள் முழு திரைப்படங்கள் அனைத்தும் உயர்தரத்தில் உள்ளது.
இந்த தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதன் மென்பொருள் பெயர் ஹுலு வீடியோ டவுண்லோடர் இந்த மென்பொருள் மூலம் தரவிறக்கும் வீடியோக்களை எம்பெக் 2, ஏவிஐ (MPEG 2) AVI) போன்ற கோப்புகளாக மாற்றி தரக்கூடிய வல்லமையுடையது ஓலிகளை தேட உங்கள் பவர்பாயிண்ட் பிரசன்டேசன்களில் பின்புல இசை கொடுக்க நீங்கள் புதிய இசையை தேடுபவரா நீங்கள் இங்கே செல்லுங்கள். இந்த தளத்தில் எந்தவித இசையாக இருந்தாலும் சரி ஒலியாக இருந்தாலும் சரி இங்கு கட்டாயம் கிடைக்கும். எந்தவித ஒலிக்கள் இங்கு உள்ளன என்பதை இவர்கள் இங்கு வரிசைப்படுத்திருக்கிறார்கள் சுட்டி இணையத்தள சுட்டி பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற நீங்கள் வைத்திருக்கும் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றி யூட்யுபில் வெளியிட ஆசையா உங்களுக்கு இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றி தரும். பிறகு நேரடியாக யூட்யுப் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்து நீங்கள் மாற்றி வைத்திருக்கும் வீடியோ கோப்பை பதிவேற்றுங்கள் முடிந்தது. இனி உங்கள் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக யூட்யூபில் பார்க்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி நன்றி மீண்டும் வருகிறேன்.எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது:சத்யராஜ்
புரட்சித்தமிழன் சத்யராஜ், ‘சினம்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக விழாவில், நடிகர் சத்யராஜ் பேசினார்.
’’எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் படத்தில் வரும் ’ஆடலுடன் பாடலைக்கேட்டு’ என்ற பாடலை, இந்த படத்துக்காக `ரீமிக்ஸ்' செய்து இருக்கிறார்கள்.
ரீமிக்ஸ் செய்வது தவறு அல்ல. அதன்மூலம் பழைய தலைமுறை நடிகர்களின் பாடலை, இப்போது உள்ள இளைய தலைமுறைகள் கேட்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இளைய தலைமுறை ரசிகர்கள் மத்தியில், ரீமிக்ஸ் பாடல்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
அதேபோல் பழைய படங்களை மீண்டும் தயாரிப்பதும் தவறான விஷயம் அல்ல. அந்த காலத்தில் பி.யு.சின்னப்பா நடித்த `உத்தம புத்திரன்' படத்தை மீண்டும் தயாரித்தபோது, சிவாஜி நடித்தார்.
பில்லா' படத்தை மீண்டும் தயாரித்தபோது, அஜீத் நடித்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.
நான், எம்.ஜி.ஆர். நடித்த பாடலுக்கு ஆடியிருப்பது, ஒரு ஆசைக்காகத்தான். அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வது மாதிரி. எம்.ஜி.ஆர். பாடலுக்கு ஆடுவதால், அவரைப்போல் ஆகிவிடமுடியாது. இந்த உலகத்துக்கு ஒரே சூரியன், ஒரே சந்திரன்.
அதேபோல் ஒரே எம்.ஜி.ஆர். இனிமேல் எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது’’என்று பேசினார்.
கோமா நிலையிலிருந்த பெண்ணை பிழைக்க வைத்தது என் காமெடி - வடிவேலு பேட்டி
வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. அதையொட்டி சென்னையில் வடிவேலு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி (போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக வந்தவர், அனைவரிமும் தனது பாணியில் வருத்தம் தெரிவித்துவிட்டு அளித்தது...):
அழகர் மலையில் உங்கள் வேடம் பற்றிச் சொல்லுங்கள்...
எல்லா படங்களுக்குமே நான் உதவியாக இருக்க வேண்டும் என்று தான் உழைக்கிறேன். சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு போய் எதையும் யோசிக்கிறேன் என்று சொல்லி தயாரிப்பாளர்களின் காசை விரயம் செய்வதில் எனக்கு சம்மதம் இல்லை. நாளைக்கு சுடுகின்ற தோசைக்கு முந்திய நாளே மாவை தயார் செய்து விட வேண்டும். அப்போது தான் தோசை `ருசியாக' இருக்கும். அது மாதிரி என் படங்களில் காமெடி சீனுக்காக முந்திய நாளே தயார் ஆகிறேன்.
அழகர்மலையில் எனக்கு தனியான காமெடி ட்ராக் கிடையாது. கதையோடு வரும் காமெடி இது. ஆர்கேவுக்கு நான்தான் இதில் தாய்மாமன். படம் முழுக்க வர்றேன். உங்க வயித்து வலிக்கு நான் கியாரண்டி. எல்லாம் அவன் செயல் படத்தை விட இரண்டு மடங்கு இந்தப் படத்தில் எங்க கூட்டணி ஒர்க் அவுட் ஆகும்...
தொடர்ந்து அடிவாங்கும் நகைச்சுவை காட்சிகளிலேயே நடிக்கிறீர்களே?
அடிவாங்குவது வடிவேலு இல்லை. வடிவேலை அடிக்க முடியாது. கதாபாத்திரம் தான் அடிவாங்குகிறது. நான் அடிவாங்குகிறேனா? இல்ல சாக்கடையில் விழுகிறேனா? என்பது முக்கியமல்ல. மக்கள் சிரிக்கிறார்களா? என்பதுதான் முக்கியம்.
அடிவாங்குகிற காட்சியாக இருந்தாலும், அதில் யாரும் யோசிக்காத விஷயங்களை கொண்டு வரவேண்டும். திரும்ப வருகிற மாதிரியான காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். புது அடிவாங்குகிற காட்சிக்காக `ரூம்' போட்டு யோசிக்கிறோம் அப்பு.... சும்மா இல்ல!!
நகைச்சுவை நடிப்பில் தொடர்ந்து வித்தியாசம் காட்ட முடியுமா?
நான் அரை 'டவுசர்' போட்டு நடித்தவன். இப்போது, அரசர் வேடம் வரைக்கும் வந்து விட்டேன். இதை விட வேறு என்ன வேண்டும். சொல்வதற்கு நிறைய காமெடி இருக்கிறது. எல்லாவற்றையும் மக்கள் கிட்டேயிருந்து தான் எடுக்கிறேன். அவர்களை விட்டு தள்ளிப்போயிட்டா வேறு எவனுக்கோ காமெடி பன்றாங்கண்னு சிரிக்காமல் இருந்துடுவாங்க... அதனாலதான் நீங்க பேச,சிரிக்க நினைக்கிற விஷயங்களை தேடிப்பிடிக்கிறேன்.
உங்களோட இருந்த சில நடிகர்கள் இப்போது உங்கள் பக்கம் இல்லை என்கிறார்களே?
அவங்களும் வரணுமில்லை... இப்போ அவங்க தெரிஞ்ச முகமாகிட்டாங்க. வேற வேற படங்களில் நடிக்க வாய்ப்பு வருது, போய் பண்றாங்க. இப்போ நிறைய புதுமுகங்களோடும், புதிய நகைச்சுவை காட்சிகளோடும் நான் போய் கொண்டிருக்கிறேன். வெரைட்டி வேணும்ல...
கதாநாயகனாக நடிக்க நிறையபேர் வருகிறார்கள். ஆனால், நகைச்சுவை நடிகராக ஆசைப்பட்டு அதிகமாக வருவது இல்லையே, ஏன்?
கதாநாயகனாக அடி-தடி, காதல் காட்சிகளில் இறங்குவது ஈஸி. ஆனால், சிரிக்க வைக்கிறது கஷ்டம். காமெடியை நீங்கள், நான் யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால், காமெடி பண்றது கஷ்டம். அது கூட காரணமாக இருக்கலாம்.
அழகர் மலையில் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்?
அய்யா... என் காமெடிக்குன்னு ஒரு கூட்டம் இருக்கா இல்லியா... அந்தக் கூட்டம் வரணுமின்னு என்னோட போட்டோவப் போடறது ஒரு தப்பாய்யா... அழகர் மலையில் அதிரடி காமெடி தர்பார் நடத்தியிருக்கோம்.
சமீபத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவம்?
சேலத்தைச் சோ்ந்த ஒரு குழந்தை விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜிலிருந்துருக்கு. அப்போ என்னோட காமெடியை டிவில போட்டுக் காட்டி, குழந்தையை சுய நினைவுக்கு கொண்டு வந்து குணப்படுத்தினாங்களாம். உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போச்சுய்யா... அந்தப் பெண் இப்போ நல்லா இருக்காம். இதுக்குமேல நம்ம காமெடிக்கு வேற என்ன பெருமை வேணும்...
காமெடிக்கு இப்போது முன்பை விட அதிக முக்கியத்துவம் உள்ளதே...
தனி சேனல் ஆரம்பிக்கிற அளவுக்கு நகைச்சுவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. காமெடி இப்போது தேவையான மருந்து. காமெடி இல்லாமல் சினிமா இல்லை, என்றார் வடிவேலு.
பேட்டியின்போது படத்தின் நாயகன் ஆர்கே, நாயகி பானு, மக்கள் தொடர்பாளர் ஜான் ஆகியோர் உடனிருந்தனர்.
தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் இந்திய செல்போன் நிறுவனங்கள்?
"வர வர மாமியா கழுத மாதிரி போன கதையா "இருக்கு இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தரும் சேவைகள்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருகிறது என்று கடுப்பை கிளப்பும் செய்திகளை படிக்கும் போது நமக்கு கோபம் தான் வருகிறது.
புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சிறந்த சலுகைகளை அளிப்பதன் மூலமே அது மக்களை போய் முழுமையாக சேரும்.
ஆனால் இந்திய மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனங்களோ ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருந்த சேவைகளை முழுமையாக நிறுத்தி விட்டு வாடிக்கையாளர்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை புடுங்கும் வேலையில் முமுரமாக இறங்கி விட்டன.
உதாரணமாக "ஜி.பி.ஆர்.எஸ்" சொல்லப்படுகிற மொபைல் வழியாக இணையதளப் பயன்பாட்டு சேவையில் இந்திய மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பயங்கரமாக கொள்ளையடித்து வருகின்றன.
மிக அதிக வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு முதல் இடத்தில் இருந்து வரும் airtel நிறுவனம் தனது ஜி.பி.ஆர்.எஸ் சேவையில் முன்பு அளவற்ற பயன்பாட்டை தந்து வந்தது.
அதாவது கட்டண திட்டம் இப்படி இருந்தது:
1 day gprs pack - 20 rupees (unlimited)
1 week gprs pack - 75 rupees (unlimited)
1 month gprs pack - 375 rupess (unlimited)
என்று இருந்த பயன்பாட்டுக் கட்டணம் இப்போது இப்படி ஆகிவிட்டது:
Daily rental basic pack @Rs.10/day & enjoy 3MB Free, post free usage charges are 20p/50KB.
Daily rental premium pack @Rs.20/day & enjoy 8MB Free,post free usage charges are 20p/50KB
zero rental GPRS facility with no rental,get charged for what you use. Charges 30p/50KB
இந்த அடிப்படையில் பார்த்தால் அளவற்ற ஜி.பி.ஆர்.எஸ் பயன்பாட்டு சேவையை நிறுத்தி விட்டு இது வாடிக்கையார்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக காசை பிடுங்கும் வேலை என்பது அப்பட்டமாக தெரிகிறது.
உதாரணமாக நீங்கள் yahoo இணையதளத்தை முகப்பு பக்கத்தை திறந்து பார்த்தாலே 2 ரூபாய் ஸ்வாகா செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் நாம் மொபைல் வழியாக இன்டர்நெட் பயன்பாட்டை முழுமையாகவும்,சுதந்திரமாகவும் பயன்படுத்தமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் உட்பட எல்லா நிறுவனங்களின் ஜி.பி.ஆர்.எஸ் சேவைக் கட்டணங்களும் இப்படித்தான் உள்ளது.
இதில் ஏர்செல் நிறுவனம் சமீபத்தில் "பாக்கெட் இன்டர்நெட்(pocket internet)" என்ற பெயரில் தனது ஜி.பி.ஆர்.எஸ் சேவையை ஆரம்பித்தது.100 ரூபாய் கட்டணத்தில் ஒரு மாதத்திற்கு அளவற்ற ஜி.பி.ஆர்.எஸ் சேவையை நாம் பயன்படுத்த முடியும். இது சிறந்த கட்டணமாக இருந்தாலும் டேட்டாவின் வேகம் படுமோசமாக உள்ளது. 500 kb அளவுள்ள ஒரு பைலை தரவிறக்கம் செய்ய 5 நிமிடங்கள் ஆகிறது.
ஆக இப்படி கட்டணங்கள் அநியாயமாக இருப்பதாலோ என்னவோ பி.எஸ்.என்.எல் நிறுவனம் 3g சேவையில் இதுவரை வெறும் 10,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
தொழில்நுட்பம் வளர வளர வாடிக்கையாளர்களை எப்படி ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்ற நுட்பமும் மொபைல் ஆப்பரேட்டர்களிடம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
அதனால் அரசு சொல்வது போல் உண்மையிலேயே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வளர வேண்டுமென்றால் இது போன்ற விஷயங்களில் மத்திய அரசு மற்றும் ட்ராய் அமைப்பு தலையிட்டு வாடிக்கையாளர்களின் நலனைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயம்வரம் நிகழ்ச்சியில் மணமகனை தேர்ந்தெடுத்தார் ராக்கி சவந்த்
| தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் நடிகை ராக்கி சவந்த் தனது மகனை தேர்ந்தெடுதுள்ளார். |
பிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த் சுயம்வரம் மூலம் தனது கணவரை தேர்ந்து எடுக்க முடிவு செய்தார். மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் டெலிவிஷன் சேனல் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. `ராக்கி கா சுயம்வர்' என்ற பெயரில் இந்த சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ராக்கி சவந்தை மணக்க விரும்பி உலகம் முழுவதிலும் இருந்து 12 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பங்களை அனுப்பினர். அவர்களில் 16 பேரை தேர்வு செய்த ராக்கி சவந்த், பின்னர் அவர்களில் இருந்து எலேஷ், மானவ், சிட்டிஸ் ஆகிய 3 பேரை இறுதிப்போட்டிக்கு தேர்ந்து எடுத்தார்.
சுயம்வரத்தின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. அந்த 3 பேரில் யார் ராக்கி சவந்தை மணக்க போகும் அதிர்ஷ்டசாலி என்று எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சியில் 3 பேரும் மணமகன் போல் உடை அணிந்து முழு அலங்காரத்தில் வந்து இருந்தனர். ராக்கி சவந்தும் மணமகள் போல் உடை அணிந்து தேவதை போல் காட்சி அளித்தார்.
மன்னர் காலத்தில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி போல் எலேஷ், மானவ், சிட்டிஸ் ஆகிய 3 பேரும் மேடையில் நிற்க, ராக்கி சவந்த் கையில் மாலையுடன் வந்தார்.
அவர் யாருக்கு மாலை அணிவிக்கப்போகிறார்? என்று ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்து படபடப்புடன் காத்திருக்க, 3 பேரையும் உன்னிப்பாக பார்த்து சென்ற ராக்கி சவந்த், இறுதியில் எலேசின் கழுத்தில் மாலையை அணிவித்து, அவரை தனது மணமகனாக, அதாவது வருங்கால கணவராக தேர்ந்து எடுத்தார். எலேசும் ராக்கி சவந்தின் கழுத்தில் மாலை அணிவித்தார். அப்போது கூடி இருந்தவர்கள் அவர்கள் மீது மலர்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
சுயம்வரத்தில் கலந்து கொண்டு வாய்ப்பை இழந்த மானவ், சிட்டிஸ் ஆகியோரும் ராக்கி சவந்துக்கும், எலேசுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராக்கி சவந்த்-எலேஷ் திருமணம் பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தனது வருங்கால கணவராக ராக்கி சவந்த் தேர்ந்து எடுத்துள்ள எலேஷ் கனடா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆவார். |








02 ஆகஸ்ட் 2009
கலைஞர் டிவியின் சித்திரம்
கலைஞர் டிவி குழுமத்திலிருந்து ஏற்கனவே கலைஞர் டிவி, இசையருவி, செய்திகள், சிரி்ப்பொலி என நான்கு சானல்கள் உள்ளன. இந்த நிலையில் குழந்தைகளுக்கான சானலாக சித்திரம் மலருகிறது.
இதுகுறித்து கலைஞர் டிவி தரப்பில் கூறுகையில், புதிய சானல் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். ஏற்கனவே இதற்கான உரிமம் வாங்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்டது.
கலைஞர் டிவி குழுமத்திலிருந்து ஏற்கனவே கலைஞர் ஏசியா என்ற சேனலும் புதிதாக வருகிறது. இது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள நேயர்களுக்கானது. சென்னையிலிருந்து இயங்கவுள்ள இந்த சேனல் தாய்காம்-5 செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்படும்.
இதற்காக தனியாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட மாட்டாதாம். மாறாக கலைஞர் டிவி குழுமத்தில் உள்ள சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்தில் இதில் ஒளிபரப்பவுள்ளனர். குறிப்பாக தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறும். இந்திய நேரப்படி தினசரி காலை 3.30 மணிக்கு (தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அப்போது காலை 6 மணி) ஒளிபரப்பு தொடங்கும்.
கருத்து யுத்தம்..
இதற்கிடையே கலைஞர் டிவியில் கருத்து யுத்தம், பூவா தலையா என்ற இரண்டு புதிய ஷோக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடங்குகின்றன.
பூவா தலையா நிகழ்ச்சியை ஸ்ரீபிரியா, குஷ்பு ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இந்த நிகழ்ச்சியில் அலசவுள்ளனராம்.
கருத்து யுத்தம் ஒரு டாக் ஷோ ஆகும். சண்முகசுந்தரம் இதை தொகுத்து வழங்கவுள்ளார். பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்த கருத்துப் பரிமாற்றமே இது.
மிகக்கடினமான நானோ பிளாஸ்டிக் மூலப்பொருள் கண்டுபிடிப்பு - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
இந்தியப் பிரதமரின் விஞ்ஞான அறிவுரையாளரான Dr.CNR றாவோ தலைமையிலான 5 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று சமீபத்தில் மிகக்கடினமான பிளாஸ்டிக் மூலப்பொருளை நனோ தொழிநுட்ப முறையில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இம்மூலப்பொருள் ஏவுகணைகளிலும் விமானங்களிலும் உதிரிப் பாகங்களுக்குப் பாவிக்கப்படக்கூடியது.
ஒரு மில்லிமீட்டரின் மில்லியனில் ஒரு பங்குத் தடிப்பமே உடைய கார்பன் ஹனி கோம்ப் சிலிண்டர்களில் சாதாரண பிளாஸ்டிக்கை நானோ வைரங்களுடன் இட்டு இறுக்கப்படுவதன் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு பொதுவான பிளாஸ்டிக் பொலிமரை நானோ வைரத்துடன் கலந்து உருவாக்கப்பட்ட கிரபேன் grephene எனும் கார்பன் நானோ டியூப் மூலப்பொருளான இது மற்றைய மூலப்பொருட்களை விட 400 மடங்கு அதிகமான உறுதித்தன்மையும் நெகிழ்தன்மையும் உடையது. ஜவஹார்லால் நேரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக இந்த நானோ பிளாஸ்டிக் கம்போசிட்டை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளனர். Dr.CNR Rao வே JNCASR என சுருக்கமாக அழைக்கப்படும் இவ்வாய்வு கூடத்தின் தலைவர் ஆவார்.
ஈழத் தமிழர்களுக்கு தீர்வு வரும் .. ரஹ்மான் உருக்கம்
நிகழ்ச்சியில் ரஹ்மான் உருக்கமாக பேசினார். தனது பேச்சைத் தொடங்கியதும், இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் துயர நிலையை கருத்தில் கொண்டு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்து அதன்படி தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தேன்.
நான் ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க என்னை தமிழகத்தில் அழைத்தனர். ஆனால் அவற்றை நான் தவிர்த்து வந்தேன். இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் இருக்கும்போது நாம் விழாவில் பங்கேற்க வேண்டாமே என்ற காரணத்தால்தான் இதைத் தவிர்த்தேன். ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வு வரும் என்று நம்புகிறேன்.
பலரது அழைப்புகளை நான் நிராகரித்தது அவர்களை வருத்தியிருந்தால், அதற்காக இப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் நான் தமிழகத்தில் கலந்து கொள்ளும் 2வது நிகழ்ச்சி இது. சில நாட்களுக்கு முன்பு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை தொடக்க விழாவில் கலந்து கொண்டேன் என்றார் ரஹ்மான்.
சமீபத்தில் நடிகர் ராதாரவி, தாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு ரஹ்மான் வர ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கும் சேர்த்தே நேற்றைய தனது பேச்சில் பதிலளித்துள்ளார் ரஹ்மான்.
வீடியோவைச் சுருக்கித் தரும் MPEG4
திரைப்படங்களைக் கூட சிறிய சிப்களில் சுருக்கி எடுத்துச் செல்லும் வசதியை எம்பி4 என்னும் தொழில் நுட்பத்தில் அமைந்த கோப்புக்கள் நமக்குத் தருகின்றன. பாடல்களை எங்கும் எதிலும் எடுத்துச் சென்று கேட்பதற்கு நமக்கு எம்பி3 கோப்புக்கள் உதவுகின்றன. நக அளவு சிப்பில் நம்மால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பதிந்து எடுத்துச் சென்று கேட்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ஓடியோ கோப்புக்களை சுருக்கித் தரும் எம்பி3 என்ற தொழில் நுட்பம் தான் காரணம்.
ஆனால் வீடியோ கோப்புக்கள் எப்போதும் அளவு கூடியவையாகவே இருந்து வருகின்றன. இவற்றை எப்படி ஓடியோ கோப்புக்கள் போலவே சுருக்கிப் பதியலாம் என்ற ஆவலில் நமக்குக் கிடைத்த கோப்புக்களே எம்பி4 பைல்களாகும்.
எம்பி4 கோப்புக்கள் என்பவை சுருக்கப்பட்ட வீடியோ கோப்புக்களாகும். வீடியோ கோப்புக்கள் அளவில் பெரியவை. இதனால் எடுத்துச் செல்வதில் பிரச்னை மட்டுமின்றி அவற்றை இயக்குவதிலும் பிரச்னை ஏற்படு கிறது. ஆனால் எம்பி4 வடிவில் அவை சுருக்கப்பட்டு எளிதாக்கப்படுகின்றன.
எம்பி3 கோப்புக்கள(Files) போலவே எம்பி4 பைல்களும் சுருக்கப்பட்டவையாகும். இதனால் ஒளிக் காட்சி மற்றும் ஒலியின் தரத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.. எம்பி 4 என்பதனை ஆங்கிலத்தில் MPEG4 AVC என அழைக்கின்றனர். இதில் AVC என்பது Advanced Video Codingஎன்பதன் சுருக்கம்.
எம்பி 3 பிளேயர் இருப்பது போல எம்பி 4 பிளேயர் இருக்கிறதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆம், இருக்கிறது. மற்ற மீடியா பிளேயர்களைப் போலவே அதுவும் செயல்படுகிறது. மேலும் எம்பி4 பிளேயரில் பழைய எம்பி3 பைல்களையும் மற்ற வீடியோ பைல்களையும் இயக்கலாம்..
எம்பி4 தொழில் நுட்பம் பல சிறப்புகளையும் சில உறுத்தல்களையும் கொண்டுள்ளது. சிறப்பு என்று கூறுகையில் அதன் தன்மைதான் முதலில் வருகிறது. எம்பி4, 1Mbps வேகத்தில் சிறந்த டிவிடி தன்மையுடன் கூடிய எம்பி4 டிவிடிக்களை உருவாக்க முடியும். இணைய(இன்டர்நெட்) இணைப்பு இருந்தால் இந்த வேகத்தில் இவற்றை பதிவிறக்கம்(டவுண்லோட்) செய்திட முடியும். ஒரு சி.டி யில் 150 இற்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை எம்பி4 வடிவில் சேமிக்கலாம் என்றால் நம்புவீர்களா?.
உறுத்தல்கள் என்று எடுத்துக் கொண்டால் எம்பி4 தொழில் நுட்பத்திலேயே பல காப்புரிமை பிரச்சனைகள் இருக்கின்றன. இப்போது இணையத்திலேயே திருட்டுத்தனமாகக் பிரதி செய்யப்பட்ட திரைப்படங்கள் கிடைக்கின்றன. எம்பி4 தொழில் நுட்பம் பரவலாகும்போது விரைவாக பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதால் இந்த வகை திருட்டுத்தனம் இன்னும் அதிகமாகும். பொறுத்திருந்துதான் இதனைப் பார்க்க வேண்டும்.
பிலிம்பேர் விருது: சூர்யா சிறந்த நடிகர் - சசிக்குமார் சிறந்த இயக்குநர்
நடிகர் சூர்யா சிறந்த நடிகராகவும்,பூ பட நாயகி பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
பிராந்திய மொழித் திரைப்படங்களுக்கான 56வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது.
ஹாரிஸ் ஜெயராஜுக்கு குஷ்புவும், சிறந்த படத்துக்கான விருதினை சசிக்குமாரிடம் ரீமா சென், தேவிஸ்ரீ பிரசாத்தும்,
சூரியாவுக்கான விருதினை தபுவும், சசிக்குமாருக்கான விருதினை இலியானாவும், பார்வதிக்கான விருதினை ஜோதிகாவும் வழங்கினர்.
இந்த விழாவில் தமிழில் விருது பெற்றோர் விபரம்:
சிறந்த படம்: சுப்பிரமணியபுரம்
சிறந்த இயக்குநர்: சசிகுமார் (சுப்பிரமணியபுரம்)
சிறந்த நடிகர்: சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை: பார்வதி (பூ)
சிறந்த துணை நடிகை: சிம்ரன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த துணை நடிகர்: அஜ்மல் (அஞ்சாதே)
சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடகர்: நரேஷ் (வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடகி: தீபா மரியம் (சுப்பிரமணியபுரம்)
சிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்)
சிறந்த அறிமுக நாயகன்: சாந்தனு (சக்கரகட்டி)
வெட்டூரி சுந்தரராம மூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
31 ஜூலை 2009
கூகிள் நம்பர் 1 ஆனது எப்படி ?
இன்று இனைய உலகில் நம்பர் 1 என்று கூறப்படும் கூகிள் நிறுவனமும் தட்டு தடுமாறி பல தடைகளை தாண்டிதான் வந்துள்ளது . இந்த கூகிள் சர்ச் முதலில் யாஹூ நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டு , பின்னர் யாஹூ நிறுவனமே இன்று வியக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது . இது போல இன்னும் சுவாரசியமான விஷயங்கள் கூகிள் வரலாற்றில் நடந்துள்ளன . இதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் .
கட்டுரை PDF வடிவில் உள்ளது ...
ஏவி.எம் ஸ்டுடியோவில் பயங்கர தீ-ரூ. 3 கோடி செட்கள் நாசம்
நேற்று இரவு தொடங்கி நீண்ட நேரம் விஜய்யின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு இங்கு நடந்து வந்தது. படப்பிடிப்பு முடிந்து அனைவரும் வெளியேறிய நிலையில், அதிகாலை 3 மணிக்கு 7வது படப்பிடிப்புத் தளத்தில் தீ பற்றியுள்ளது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீ பரவி, அந்தத் தளமே முற்றாக எரிந்து நாசமானது.
அங்கு போடப்பட்டிருந்த அனைத்து செட்களுமே எரிந்து போய் விட்டதாக தெரிகிறது.
10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.
தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேலி்ருக்கும் எனத் தெரிகிறது.
சூறாவளி பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஓய்வு பெறுகிறார்
இருப்பினும் ஒரு நாள் போட்டிகள், டுவென்டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.
அடுத்த உலகக் கோப்பைப் போட்டி வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்றார் முரளீதரன்.
1992ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் முரளீதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெரும் சாதனையாளர் முரளீதரன். முரளிக்கும், ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னுக்கும் இடையில் உலக சாதனை படைப்பதில் கடும் போட்டா போட்டி நிலவியது.
இதில் முதலில் சாதனை படைத்தவர் ஷான் வார்ன். இருப்பினும் 2007ம் ஆண்டு வார்னின் சாதனையை (708 விக்கெட்கள்) முறியடித்து புதிய சாதனை படைத்தார் முரளீதரன்.
தற்போது 127 போட்டிகளில் ஆடி 770 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிரார் முரளீதரன். இவரது பந்து வீச்சு சரசாரசி 22 ஆகும். 800 விக்கெட்களை வீழ்த்தக் கூடிய திறமை இன்னும் முரளியிடம் உள்ளது.
ஒரு நாள் போட்டிகளிலும் முரளீதரன்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளஆர். ஒரு நாள் போட்டிகளில் முரளிதரன் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 507 ஆகும்.
இலங்கை அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருப்பவர் முரளீதரன். அவரது ஓய்வு நிச்சயம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர் முரளீதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளியால் வென்ற இலங்கை..
இதற்கிடையே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் நேற்று முரளிதரனின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையில் பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று தம்புல்லாவில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நடந்தது.
இப்போட்டியில், முதலில் ஆடிய இலங்கை அணி 232 ரன்களைக் குவித்தது.
45வது ஓவரின்போது 7 விக்கெட்களை இழந்து 173 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது இலங்கை. அப்போது களம் இறங்கிய முரளீதரன் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 32 ரன்களை விளாசினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியை, இலங்கைப் பந்து வீச்சாளர்கள் சிதறடித்து வெற்றிக் கனியைப் பறித்தனர். ஆட்ட நாயகனாக முரளீதரன் அறிவிக்கப்பட்டார்.
பிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க ·

ஹாலிவுட்டில் பாடகராகும் ஏ.ஆர். ரஹ்மான் மகன்!
'கப்பிள்ஸ் ரீட்ரீட்' எனும் ஹாலிவுட் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இப்போது இசையமைத்து வருகிறார். பீட்டர் பிரிங்ஸ்லே இயக்கும் இந்த ரொமாண்டிக் காமெடி படத்தில் வின்ஸ் வான், க்ரிஸ்டன் பெல் மற்றும் ஜாஸன் பேட்மேன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு முழுப் பாடலையும் ஆலிம் பாடுகிறார். அந்த சூழலுக்கும், பாத்திரத்துக்கும் ஆலிம் குரல் மிகப் பொருத்தமாக அமைந்ததால் மகனைப் பாடவைத்துள்ளார் ரஹ்மான்.
ஏற்கெனவே தனது ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான ஜென்டில்மேனில் தனது சகோதரி மகன் ஜிவி பிரகாஷைப் பாடவைத்துப் பிரபலமாக்கினார் ரஹ்மான் என்பது நினைவிருக்கலாம்.
சிறப்பாக பிளாக்(Blog) அமைய சில யோசனைகள்
Blogs எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த இணையத்தளம் தருகின்றது
http://www.sitesketch10.com/ என்ற முகவரியில் உள்ள தளம் பிளாக்குகள் அமைக்கவும் வெப்சைட்டுகளை உருவாக்கவும் பல வழிகளில் ஆலோசனை கூறும் தளமாக உள்ளது. இந்த தளத்தின் மேலாக உள்ள நேவிகேஷன் பாரில் இத்தளம் தரும் உதவிகளை வகைகளாகப் பட்டியல் இட்டுத் தந்துள்ளது. அவை:
Blogging Tips: இங்கு உங்களுடைய பிளாக்குகளைச் சிறப்பாக்க அவற்றில் தரப்படும் கருத்துக்கள் எதைப் பற்றி எப்படி இருக்க வேண்டும் எனவும் அந்த வலைமனைகளுக்கு நிறைய பேர் வருவதற்கான சூழ்நிலையை எப்படி உருவாக்க வேண்டும் எனவும் டிப்ஸ்கள் நிறைய தரப்பட்டுள்ளன.
Fonts: உங்களுடைய பிளாக்குகளின் தலைப்பை அமைக்க ஒரு நல்ல பாண்ட் வேண்டுமா? அதுவும் ஷார்ப்பாக சிறப்பாக இருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த பிரிவில் நிச்சயம் நுழைய வேண்டும். இங்கு இலவசமாகக் கிடைக்கக் கூடிய தளங்கள் குறித்தும் எழுத்து வகைகள் குறித்தும் தகவல் கள் தரப்படுகின்றன. உங்கள் வலைமனை களை எந்த எழுத்துக்களைக் கொண்டு கவர்ச் சியாக அமைத்திடலாம் என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.
Graphics: இங்கு உங்கள் வலைமனைகளுக்கான கிராபிக்ஸ் எங்கு கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அத்துடன் மிகச் சிறப்பாக வெப் சைட்டுகளையும் பிளாக்குகளையும் அமைத்தவர்களுடன் பேட்டியும் தரப்படுகிறது. கிராபிக்ஸை எப்படி சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்ற அறிவுரையும் தரப்படுகிறது. குறிப்பாக பிளாக்குகளுக்கான டிசைன்களை வடிமைக்கையில் எப்படி கிராபிக்ஸ் உதவுகிறது என்றும் அறிவுரை தரப்படுகிறது.
Inspiration: இங்கு மற்ற பிளாக்குகளை எடுத்துக் காட்டி எப்படி உங்கள் வலைமனைகளை இன்னும் சிறப்பாக அமைக்கலாம் என்று எடுத்துச் சொல்லப்படுகிறது. இந்த தளத்திலேயே எனக்குப் பிடித்த பிரிவு இதுதான்.
Search Engines: பெரும்பாலான இணைய தளங்கள் அந்த தளங்களில் தங்களுடைய அல்லது பிற நிறுவனங்களின் சர்ச் இஞ்சின் எனப்படும் தேடுதல் தளங்களை அமைக்கின்றனர். தளம் அமைத்தவர்களுடையதோ அல்லது கூகுள் நிறுவனத்தினுடையதோ, இன்டர்நெட்டில் உள்ள எத்தகைய தளத்திலும் ஒரு சர்ச் இஞ்சின் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. இந்த பிரிவில் அப்படிப்பட்ட ஒரு சர்ச் இஞ்சினை உங்கள் பிளாக்கில் எப்படி அமைப்பது என்ற விபரங்கள் தரப்படுகின்றன.
Updates: கடைசியாகத் தரப்பட்டுள்ள பிரிவானாலும் முக்கியமான பிரிவாகும். இதில் அண்மைக் காலத்தில் வந்த சைட் அப்டேட் பைல்கள் பட்டியல் தரப்படுகிறது. அன்றைய செய்தியும் கிடைக்கிறது. பிளாக்குகள் வைத்துள்ள அனைவரும் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இணைய தளம் இது.
அஜீத்துக்கு ஜோடி ஸ்ருதி?
அதைவிட முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக கூறப்படும் நடிகை. கமல் மகள் ஸ்ருதி ஹாசன், இந்தப் படத்தில் நடிக்கப்போவதாகவும், இது அவரது முதல் தமிழ்ப் படமாக இருக்கும் என்கிறார்கள். ஹிந்தியில் அவரது லக் படம் படுதோல்வியடைந்ததால், தமிழில் நல்ல படத்துடன் கேரியர் துவங்க வேண்டும் என ஸ்ருதி விரும்புகி்றாராம்.
உண்மையில் வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தில் வேகாவின் வேடத்தில் நடிப்பதாக இருந்தவர் ஸ்ருதிதான். ஆனால் பின்னர் அந்தப் படத்தில் நடிக்க அப்போது ஸ்ருதி மறுத்துவிட்டார்.
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இப்போது மீண்டும் அதே வெங்கட் பிரபுவின் படத்தில் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ருதி.
ஆனால் இதுபற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
google க்கு போட்டியாக இணையும் Yahoo - Mirosoft!
சில வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும் தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன. இன்றிலிருந்து சில மாதங்களில் Yahoo Search ஆனது Microsoft இன் Bing தேடு பொறியின் அணுசரனையில் இயங்க தொடங்கும். 10 வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த பேரத்தினால் Yahoo சுமார் $275 million லாபத்தை எதிர்பார்க்கிறது. இரு தரப்பிலும் பல பயனுள்ள மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மற்றும் விளம்பர வருவாய் தரக்கூடிய மாற்றங்கள் இணையத்தள உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Google இற்கு போட்டியாக கருதப்படும் இந்த ஒப்பந்தம் சிலவேளைகளில் யாகூவின் இன்னொரு பின்னடைவாக கூட அமையலாம் என கணணி வல்லுனர்களால் ஊகங்கள் எழுந்துள்ளன.
29 ஜூலை 2009
அவங்கெல்லாம் தங்கம்... நான் மட்டும் பிளாட்டினம்! - ஸ்ரேயா
தமிழ் சினிமாவில் உண்மையில் எந்த நாயகிக்கும் பெரிய மவுசும் இல்லை, மார்க்கெட்டும் இல்லை. எல்லாப் படங்களுமே ஹீரோக்களின் தயவில் ஓடிக் கொண்டிருக்கின்றன. சரியான நாயகிகள் இல்லாததால், இருக்கிறவர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உள்ளனர்.
புதிய கதாநாயகிகள் வரவு குறைவாக இருப்பதாலேயே இந்த நிலை. எனவேதான் அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் புதிய நாயகிகளை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளனர்.
ஆனால் இன்னொரு பக்கம், நான்தான் நம்பர் ஒன் என்று அடித்துக் கொள்ளாத குறையாக அக்கப்போரில் ஈடுபட்டுள்ளனர் இப்போதுள்ள நாயகிகள். சும்மா ஒப்புக்கு, எனக்கு இந்த நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லை என்று 'பீலா' விடுவார்கள்.
இதோ சமீபத்தில் ஸ்ரேயா அளித்துள்ள ஒரு பேட்டி.
நயன்தாரா, தமன்னா, த்ரிஷா போன்றவர்களால் உங்களுக்கு படங்கள் வருவது குறைந்துவிட்டதா?
"யார் சொன்னது? அதெல்லாம் கிடையாது. நான் எப்பவும் பிஸி. நீங்க சொல்ற நயன்தாரா, த்ரிஷா, தமன்னா இவங்கள்லாம் தங்கம்னா, நான் பிளாட்டினம். தங்கத்துக்கும் ப்ளாட்டினத்துக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா?" என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.
ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்ற பழைய பழமொழிதான் நினைவுக்கு வந்தது!
160 கோடியில் லண்டனில் வீடு வாங்கினார் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கானுக்கு சமீபத்தில் கலை சேவையை பாராட்டி, லண்டனில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது குடும்பத்தாருடன் லண்டன் சென்றவர், அங்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.
சென்ட்ரல் லண்டனில் பார்க் லேன் ஏரியாவில் அபார்ட்மென்ட் ஒன்று உள்ளது. அதில் ஒரு குடியிருப்பை 160 கோடிக்கு வாங்கியுள்ளார் ஷாருக். விடுமுறையை கொண்டாட ஆண்டுதோறும் ஷாருக் லண்டனுக்கு செல்வது வழக்கம். அப்போது, இந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.
பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. புகைபிடித்தல் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.
வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவே இருக்கிறது. அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. பிறவிலேயே ‘ஸ்ரீ’ குரோமோசோம்களை கொண்டுள்ள ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம். உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.
பால்வினை நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம். விந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும்.
உயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
ஆணின் விரையைச் சுற்றியுள்ள வெரிகோஸ வெயின் எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்ப நிலையை அடையும் பட்சத்தில் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
தாய்ப்பாலின் சக்தி
தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற்பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றன என சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு காரணம் குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கான்சர், நீரிழிவு நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதை தடுக்கிறது.
தாய்ப்பால் குழந்தையின் புத்திக்கூர்மையை மேலும் உயர்த்துகிறது என நம்பப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது.
மேலும் தாய்ப்பாலில் குழந்தையின் மூலை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
புதுமுக நடிகையை கற்பழித்த இயக்குநர் கைது
என்னை விட்டா யாரு?: தனுஷ்
படிக்காதவன் என்ற தலைப்பை வைத்ததற்கே தனுஷ் மீது பல தீவிர ரஜினி ரசிகர்கள் கடுப்பிலிருக்கிறார்கள். 'இவர் ரஜினி மாப்பிள்ளைன்னா இவர் பண்ற சேட்டையையெல்லாம் ரசிக்கனும்னு தலை எழுத்தா?' என பலர் வெளிப்படையாகவே விமர்சித்தார்கள்.
இப்போது, ரஜினியின் 'பிளாக் பஸ்டர்' படமான மாப்பிள்ளையை ரீமேக் செய்கிறாராம் தனுஷ். அதுமட்டுமல்ல, இந்த ரீமேக் குறித்து அவர் நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டிதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு சுமாரான படம் கொடுத்ததற்கே இந்த பில்டப் என்றால், இன்னும் ரஜினி மாதிரி தொடர் வெற்றிகளைக் கொடுத்திருந்தால், தமிழ்நாட்டையே விலை பேசுவார் போலிருக்கே என்கிறார்கள் விமர்சகர்கள்.
அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி,
"நான் ரஜினியின் மருமகன் என்ற உரிமையில் இந்தப் படத்தைப் பண்ணவில்லை. எனக்கு இந்தப் படம் பிடிக்கும் அதனால் விரும்பி செய்கிறேன். நான் ஒரு நடிகர், என்ற முறையில் ரஜினியிடம் இதற்கான அனுமதி பெற்றுவிட்டேன்.
இதைவிட முக்கியம், இந்தப் படத்தை ரீமேக் செய்ய என்னைவிடத் தகுதியான ஆள் வேறு யார் இருக்கிறார்கள் இங்கே?
நிறைய பேர் என்னை அடுத்த ரஜினி என்கிறார்கள் (?!). ஆனால் ரஜினியின் கார்பன் காப்பியாக நான் இருக்க விரும்பவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு ரஜினிதான். நான் என் ஸ்டைல்ல கதைகளைத் தேர்வு செய்கிறேன்..."என்று கூறியுள்ளார்.
அதுக்கு ஏன் ரஜினி படங்களை ரீமேக் பண்ணனும்... சொந்தமா கஸ்தூரிராஜா ஸ்டைல்ல முயற்சிக்கலாமே தனுஷ்!!.
27 ஜூலை 2009
இலவச பிளாக்கர் டெம்பிளேட்
இந்த டேம்பிலேட்டுக்கான லிங்க்
ஜெயம் ரவி படத்திலிருந்து நயன் நீக்கப்பட்டது ஏன்?
இந்தப் படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். ஆனால் அவருக்கு முன் இந்தப் படத்தில் ஒப்பந்தமானவர் நயன்தாரா.
சம்பளமெல்லாம் பேசி முடிக்கும்போதுதான், பிரபு தேவாவுடன் அவருடைய ரகசிய திருமணம், தனிக்குடித்தனம், பஞ்சாயத்து போன்ற விவகாரங்கள் வெளியாகின. எனவே படம் முடியும் வரை உடனிருந்து ஒத்துழைப்பு தருவேன் என எழுதித் தரச் சொல்லிக் கேட்டாரக்களாம் நயன்தாராவிடம்.
அவரோ அதற்கு மறுத்துவிட, 'வேற நடிகையைப் பாப்போம்... கோடம்பாக்கத்துல நடிகைகளுக்கா பஞ்சம். நமக்கு கதைமேல நம்பிக்கையிருக்கு', என எடிட்டர் மோகன் தன் ஸ்டைலில் சொல்லிவிட, அதற்குப் பிறகே தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆக, இப்போதைக்கு நயனை அந்த 'ஆதவன்' மட்டும்தான் காப்பாத்தணும், தமிழில்!
உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமரா சந்தைக்கு வருகிறது
புஜி பிலிம்(Fuji Film) நிறுவனம் இன்று வெளியிட்ட செய்தியின் படி மிக விரைவில் Fujifilm FinePix Real 3D W1 என்னும் உலகின் முதல் 3D டிஜிட்டல் கேமராவை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.ஒரு காலத்தில் புகைப்பட தொழிலில் கோலோச்சி பின்னர் நிக்கான்,கேனான் நிறுவனங்களின் கடும் போட்டியினால் தாக்கு பிடிக்க முடியாமல் பின்னடைந்த புஜி பிலிம் தன் இருப்பை காட்டிக்கொள்ள இப்போது இந்த புதிய தொழில் நுட்பத்தின் மூலம் அதிரடியாக களத்தில் இறங்குகிறது.இந்த கேமராவின் சிறப்பம்சம் 3D புகைப்படங்களை வெறும் கண்களாலேயே முப்பரிமாண கண்ணாடி இன்றி காண முடியும்.
ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் இருந்து எடுத்து,எடுக்கப்பட்ட இரு பிம்பங்களும் ஒன்றின் மீது ஒன்று வைக்கப்படும் போது முப்பரிமாண(3D) படம் கிடைக்கிறது.இந்த கேமராவில் மனித கண்களுக்கு இடையே உள்ள அதே தூர அளவில் உள்ள இரு லென்ஸ்கள் ஒரே காட்சியை இரு வேறு கோணங்களில் படமெடுக்கின்றன.அவ்வாறு படமெடுத்த காட்சியை வெறும் கண்களாலேயே 10 மெகா பிக்சல்கள் அளவில் படமெடுக்கும் இந்த கேமராவின் 2.8 இன்ச் அகல LCD திரையில் காணலாம்.முப்பரிமாண முறையில் வீடியோக்களையும் முப்பரிமாண முறையிலன்றி வழக்கமான இரு பரிமாண(2D)படங்களையும் எடுக்கவல்லது இந்த கேமரா.
இது போக FinePix Real 3D V1 என்னும் 8 இன்ச் அகலமுள்ள டிஜிட்டல் திரை சாதனத்தையும் புஜி பிலிம் அறிமுகப்படுத்தவுள்ளது.3D டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படங்களை இந்த 3D டிஜிட்டல் திரை சாதனத்தின் மூலம் பார்வையிடலாம்.இது மட்டுமன்றி முப்பரிமாண படங்களை பிரதி எடுக்க புஜி பிலிம் நிறுவனம் விஷேச காகிதங்களை தயாரித்துள்ளது.இந்த காகிதங்களின் மூலம் பிரதி எடுத்த முப்பரிமாண படங்களை வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.காகிதங்களில் பிரதியெடுக்க ஆன் லைன் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.அடுத்த மாதம் ஜப்பானில் வெளியாகி செப்டம்பர் மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ளது.
ரஹ்மானுக்கு ராதாரவி கண்டணம்!
'மண்டபம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட, நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பெற்றுக்கொண்டார்.
விழாவில், ராதாரவி பேசியதாவது:
தமிழ்நாட்டில் சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் படங்களை திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை தரவேண்டும். இந்தி படங்கள் வருகிறது என்று, தமிழ் படம் திரையிடுவதை தவிர்க்கக் கூடாது.
தமிழ் படங்களை திரையிடாத தியேட்டர்களை இழுத்து மூடவேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர் கொடுக்க மனமில்லாவிட்டால் அவற்றை குடோன்களாக ஆக்கிவிடுங்கள். வேறு எங்காவது போய் தியேட்டர் கட்டிக் கொள்ளுங்கள்.
சின்ன படங்களை திரையிடுவதற்கு பல தியேட்டர்கள் முன் வருவதில்லை. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில சட்ட திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
தமிழ் பெயர்கள்
சில நடிகர்-நடிகைகள், அம்மா, அப்பா சூட்டிய பெயர்களை மாற்றிவிட்டு, 'நியூமராலஜி'படி பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தாய், தந்தையைவிட 'நியூமராலஜி' எந்த வகையில் சிறந்தது என்று தெரியவில்லை. இது 'சோளி உருட்டுவதை நம்பி அரசியல் நடத்துவது' போல் உள்ளது.
இப்போதெல்லாம் சில இசை அமைப்பாளர்கள் 'டியூன்' போடுவதற்காக வெளிநாடுகளுக்கு போகிறார்கள். கூடுவாஞ்சேரியிலும், மதுரையிலும் கிடைக்காத 'டியூன்'களா வெளிநாடுகளில் கிடைக்கப் போகிறது. இதுபோல் ஒவ்வொரு ஏரியாவிலும் சினிமாவை கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு கண்டனம்
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படத்துக்கு இசை அமைத்துதான், இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய முதல் படம் 'ஸ்லம்டாக் மில்லினர்' அல்ல. கவிதலாயா நிறுவனம் தான் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் பட உலகை அடியோடு புறக்கணிக்கிறார்.
அவர் ஆஸ்கார் விருது பெற்றதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு தேதி தராமல், வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு விழா நடத்த சம்மதித்து இருக்கிறார்.
இத்தனையையும் தாண்டி தமிழ் படத் தயாரிப்பாளர்கள் அவர் பின்னால் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் கண்டுகொள்வதில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றார்.
பழைய Widget களை இழக்காமல் டெம்பிளேட் மாற்றுவது எப்படி ?
- முதலில் உங்களுக்கு பிடித்த டெம்பிளேட்டை அந்த தளத்திலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் .
- பின்னர் உங்கள் பிளாக்கர் கணக்கின் உள் நுழைந்து Layout ----> Edit HTML பகுதிக்கு சென்று Download Full Template என்ற இணைப்பை கிளிக் செய்து ஏற்கனவே இருக்கும் உங்கள் டெம்பிளேட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .
- புதிதாக தரவிறக்கிய டேம்பிலேட்டையும் , ஏற்கனவே இருக்கும் உங்கள் டேம்பிலேட்டையும் நோட் பதில் Open செய்து கொள்ளுங்கள் .
- பின்னர் ஏற்கனவே நீங்கள் பயன் படுத்தி வரும் டெம்பிளேட்டில் இருக்கும் Side bar HTML codes எது எல்லாம் உங்களுக்கு தேவையோ அதை வெட்டி புதிய டேம்பிலேட்டு பைலில் அதில் வருகிற Side bar Widget -க்கு கீழே ஒட்டி விடுங்கள் .
- பின்னர் அதை XML file ஆக Save கொள்ளுங்கள் .
- மீண்டும் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று Edit HTML பகுதியில் சென்று Upload a template from a file on your hard drive என்று இருக்கும் அதன் மூலம் நீங்கள் Save செய்து வைத்துள்ள டெம்பிளேட் Upload செய்து கொள்ளுங்கள் .
- Conform and Save என்று கேட்கும் நீங்கள் அதை கிளிக்கி Save செய்து கொள்ளுங்கள் . புதிய நீங்கள் விரும்பிய டெம்பிளேட் கிடைக்கும் .
- இவ்வாறு செய்ய கடினமாக இருந்தால் நீங்கள் புதிய டெம்பிளேட் தரவேற்றுவதர்கு முன்னர் உங்கள் Side bar இல் உள்ள HTML Code -களை Note pad -இல் Save செய்து கொள்ளுங்கள் . மற்றும் தேவையான அனைத்து கோடுகளையும் save செய்து விட்டு புதிய டெம்பிளேட்டை தரவேற்றுங்கள் .\
- தரவேற்றிய பின்னர் ஏற்கனவே save செய்து வைத்துள்ள HTML code களை தேவையான இடங்களில் ஒட்டி விடுங்கள் . இது மிகவும் இலகுவானது .
மது..பதானியுடன் சண்டை: த்ரிஷாவால் பரபரப்பு
நேற்று 'வீக் எண்ட் மதுவிருந்து' நடன நிகழ்ச்சிக்கு போன த்ரிஷா கடும் மோதலில் இறங்கி கைகலப்பு வரை போய்விட்டார். அவர் சண்டை போட்டது இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானியுடன்!
பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த கைகலப்பை கடைசியில் ஓட்டல் சிப்பந்திகளும், போலீசாரும் கஷ்டப்பட்டு தடுத்தார்களாம்.
வார இறுதி நாட்களை மது - மாதுக்களுடன் கொண்டாடுவதுதான் இன்றைய தமிழகத் தலைநகர் சென்னையின் கலாச்சாரம். அந்த கலாச்சார ஜோதியில் பிரபலங்கள் தொடங்கி, மாணவர்கள் வரை அனைவருமே ஐக்கியமாகி வருகிறார்கள். ஏற்கெனவே பார்ட்டி பிரியையான த்ரிஷா, பிரபல ஹோட்டல்களில் தவறாமல் அட்டென்டன்ஸ் போட்டு விடுவார். பார்ட்டியின் முடிவில் பலமுறை தகராறு, கைகலப்பு என ஏக களேபரமாகிவிடுவது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது.
நேற்றும் அப்படித்தான் ஒரு மதுவிருந்து நடன நிகழ்ச்சிக்கு தனது தோழர்-தோழியர் புடைசூழப் போனாராம் த்ரிஷா. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் ஆண்கள் என்றால் நிச்சயம் தனது பெண் ஜோடியுடன் வர வேண்டும். பெண்களுக்கு அந்தக் கட்டாயம் இல்லை. தனியாக வரலாம்... துணையோடு ஆடலாம்... போகலாம்!
பார்ட்டி உச்சகட்டத்தை எட்டிய போது, ஆட்டத்தில் லயித்திருந்த த்ரிஷாவின் மீது யாரோ பலமாக மோதிவிட்டார்களாம். உடனே அந்த நபரை நிறுத்தி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டாராம் த்ரிஷா. அவருக்கு ஆதரவாக அவர் தோழிகளும் இறங்க விவகாரம் முற்றியது. அந்த நபர் கிரிக்கெட் வீரர் பதானியாம்.
சிறிது நேரத்தில் அவரது அடிப்பொடிகளும் வந்துவிட, பெரிய 'பார் வார்' உருவாகும் நிலை ஏற்பட்டதாம். அப்போது, ஆத்திரத்தில் பதானைப் பிடித்து த்ரிஷா தள்ள, பதிலுக்கு அவரும் தள்ள ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்களாம்.
உடனே, ஹோட்டல் சிப்பந்திகள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்தில் போலீஸ் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தலைக்கு ஹெல்மெட் மாட்டாமலோ, வண்டிக்கு ஹெட்லைட் இல்லாமலோ போனால் சுறுசுறுப்பாக பிடித்து உள்ளே தள்ளுவார்கள் அல்லது இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு அனுப்புவார்கள். பெரிய இடத்து தவறென்றால் சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்கள். இவங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது!.
யாரையும் அண்ணா என்று அழைக்க மாட்டேன்! - நமீதா
நமீதா மோகினியாக நடிக்கும் `ஜகன்மோகினி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ். கார்டனில் நடந்தது. நமீதா மோகினியாகவும், வடிவேல் நாதஸ்வர வித்வானாக-நமீதாவின் அண்ணனாகவும் நடிக்கும் காட்சி படமாகிகயது.
படப்பிடிப்பு இடைவேளையில், நமீதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
"வடிவேலுவும், நானும் பல படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறோம். 4 வருடங்களுக்குப்பின், இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறோம்.
வடிவேலுவின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய 'காமெடி'யை இந்த படத்தில் சேர்க்கும்படி நான்தான் இயக்குநரிடம் சொன்னேன். அப்படி வைத்தால், அண்ணன்-தங்கை பாசம் என்று உருக்கமான காட்சிகளை வைக்க வேண்டாம். 'காமெடி'யான சீன்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.
படத்தின் கதைப்படி வடிவேல் எனக்கு அண்ணனாக நடித்தாலும், 'செட்'டில் அவரை நான், அண்ணா என்று அழைத்து சங்கடப்படுத்துவதில்லை.
'சார்' என்றுதான் கூப்பிடுகிறேன். பொதுவாக 'அண்ணா' என்று எந்த ஆணையும் நான் கூப்பிடுவதில்லை. ஆண்கள் அனைவரும் எனக்கு மச்சான்கள்தான்.
எனக்கு திருமணம் நடந்தால், எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரசிகர்கள் உள்பட அத்தனை பேருக்கும் விருந்து கொடுப்பேன். அதுவரை நான், என்னை அழகாகவும், கவர்ச்சியாகவும் வைத்துக் கொள்வேன், என்றார் நமீதா.
படு கோலாகலமாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மாலை போட்டு எலேஷை தனது மணமகனாக தேர்வு செய்துள்ளார் ராக்கி.
சுயம்வரம் முடிந்த அன்றே திருமணமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திருமணத்தைக் காண ராக்கியின் முன்னாள் காதலர் அவஸ்தியும் வந்திருந்தார். ஆனால் எலேஷ் , ராக்கியுடன் நன்கு பழகிப் புரிந்து கொள்ள அவகாசம் கேட்டதால் நிச்சயதார்த்தத்தை மட்டும் முடித்துக் கொண்டு திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.
அவஸ்தியின் வருகை குறித்து ராக்கி கூறுகையில், நான் அவஸ்தியை முற்றிலும் மன்னித்து விட்டேன். அவர் வந்திருந்தார் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போய் விட்டேன். அவர் வந்தது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் அவரை வரவேற்றிருப்பேன்.
நேற்று வரை அவர் எனது காதலர். இன்று அவர் எனது நல்ல நண்பர் என்றார் ராக்கி.
ஆனால் தனது தாயாரை மட்டும் மன்னிக்கவே மாட்டாராம் ராக்கி. இதுகுறித்து கூறுகையில், எனது தாயாரைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள். அவரால் நான் நிறைய அவஸ்தைப்பட்டு விட்டேன். அவரால் ஏற்பட்ட வலியை மறக்க முயலுகிறேன். நிச்சயம் அவரை நான் திருமணத்திற்கு அழைக்கப் போவதில்ல என்றார் கோபமாக.
திருமணத்திற்குப் பின்னர் கனடாவில் செட்டிலாகும் எண்ணம் ராக்கியிடம் இல்லையாம். எலேஷ் கனடாவில்தான் தொழில் புரிந்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
எனக்கென்று இங்கு ஒரு தொழில் உள்ளது. அதை நான் பார்க்க வேண்டும். எனக்காக வாழ ஆர்வமாக உள்ளவர் எலேஷ். எனவே அவர்தான் எப்படி இதை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும் என்கிறார் புன்னகையுடன்.
டோரன்டோவில் எலேஷின் சகோதரிக்கு கல்யாணம் நடைபெறவுள்ளதாம். அதற்கு எலேஷுடன் ஜோடியாக கலந்து கொள்ளப் போகிறாராம் ராக்கி.



