Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

29 ஜூலை 2009

என்னை விட்டா யாரு?: தனுஷ்

சுய புராணம் பாடுவதில் தமிழ் சினிமாக்காரர்களுக்கு இணை யாருமில்லை. தங்களைத் தாங்களே அவதாரமாக நினைத்துக் கொண்டு அள்ளி விடுவதில் மன்னர்கள். அதிலும் சிம்பு- தனுஷ்- பரத் போன்ற நடிகர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சிம்பு வாயைத் திறந்தாலே சுய புராணம் பங்கிங்காம் கால்வாய் ரேஞ்சுக்கு ஓடும். சமீப காலமாகத்தான் சற்று அடக்கி வாசிப்பது போல நடிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரது தொழில் எதிரி தனுஷ் இப்போது ஆரம்பித்துள்ளார். படிக்காதவன் என்ற தலைப்பை வைத்ததற்கே தனுஷ் மீது பல தீவிர ரஜினி ரசிகர்கள் கடுப்பிலிருக்கிறார்கள். 'இவர் ரஜினி மாப்பிள்ளைன்னா இவர் பண்ற சேட்டையையெல்லாம் ரசிக்கனும்னு தலை எழுத்தா?' என பலர் வெளிப்படையாகவே விமர்சித்தார்கள். இப்போது, ரஜினியின் 'பிளாக் பஸ்டர்' படமான மாப்பிள்ளையை ரீமேக் செய்கிறாராம் தனுஷ். அதுமட்டுமல்ல, இந்த ரீமேக் குறித்து அவர் நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டிதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. தொடர்ந்து இரண்டு சுமாரான படம் கொடுத்ததற்கே இந்த பில்டப் என்றால், இன்னும் ரஜினி மாதிரி தொடர் வெற்றிகளைக் கொடுத்திருந்தால், தமிழ்நாட்டையே விலை பேசுவார் போலிருக்கே என்கிறார்கள் விமர்சகர்கள். அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி, "நான் ரஜினியின் மருமகன் என்ற உரிமையில் இந்தப் படத்தைப் பண்ணவில்லை. எனக்கு இந்தப் படம் பிடிக்கும் அதனால் விரும்பி செய்கிறேன். நான் ஒரு நடிகர், என்ற முறையில் ரஜினியிடம் இதற்கான அனுமதி பெற்றுவிட்டேன். இதைவிட முக்கியம், இந்தப் படத்தை ரீமேக் செய்ய என்னைவிடத் தகுதியான ஆள் வேறு யார் இருக்கிறார்கள் இங்கே? நிறைய பேர் என்னை அடுத்த ரஜினி என்கிறார்கள் (?!). ஆனால் ரஜினியின் கார்பன் காப்பியாக நான் இருக்க விரும்பவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு ரஜினிதான். நான் என் ஸ்டைல்ல கதைகளைத் தேர்வு செய்கிறேன்..."என்று கூறியுள்ளார். அதுக்கு ஏன் ரஜினி படங்களை ரீமேக் பண்ணனும்... சொந்தமா கஸ்தூரிராஜா ஸ்டைல்ல முயற்சிக்கலாமே தனுஷ்!!.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com