Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

09 ஆகஸ்ட் 2012

அந்த நேரத்தில் சுத்தம் கூடுதல் சுகம் தரும்!


உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் சுத்தமாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். அதுபோல தாம்பத்ய உறவு சங்கடமின்றி சந்தோசமாக அமைய சுத்தத்தை கடைபிடிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சுத்தம் பற்றி கண்டுகொள்ளாமல் விடுவதால் துர்நாற்றம் எழுந்து மகிழ்ச்சியான உறவுக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ஆரோக்கிய முத்தம்
முத்தம் கொடுக்க நெருங்கும் போது சுவாசம் புத்துணர்ச்சியோடு இருக்கவேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசும் இது உங்கள் துணையின் மூடினை அப்செட் ஆக்கிவிடும். இருமுறை பல் துலக்குவது பலரிடம் இல்லாத ஒன்று. அதனையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் குடிக்கிற தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
சிகரெட் புகைப்பவர்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதோடு ஈறுகளும் பல்லின் எனாமலும்கூட கெட்டுப்போய்விடும். தம்பதி இருவருமே படுக்கைக்குப் போகும் முன் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மூச்சுக் குழாய் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை நோய், மலச் சிக்கல், சைனஸ் தொற்று, மூக்கில் கட்டி, சொத்தைப் பல் போன்ற காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். இதுதவிர பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக உண்பவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே வாய் சுத்தம் பேணாதவர்களுக்கு முத்தம் கிடைப்பது கானல் நீராகிவிடும்.
Tips On Sex Hygiene

உள்ளாடைகளில் கவனம்
பல பேர் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவதே இல்லை. 'உள்ளே போட்டுக்கொள்வதுதானே வெளியிலா தெரியப்போகிறது' என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம். ஆனால் அதுதான் சந்தோசமான உறவுக்கு ஆப்பு வைக்கும் செயல் என்பது தெரியாமலே இருக்கின்றனர். அழகான, சுத்தமான, கச்சிதமான உள்ளாடை அணிந்த கணவனை பார்க்கும் மனைவிக்கு ஆசை தீ கொழுந்து விட்டு எரியுமாம். அதேபோலத்தான் மனைவியின் கச்சிதமான சுத்தமான உள்ளாடைகள் கணவனின் உணர்ச்சியை தூண்டிவிடுமாம். எனவே தினமும் சுத்தமான, பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகளை அணிவதே நல்லது.
வியர்வை குளியல்
பொதுவாக வியர்வையில் எந்தவிதக் கெட்ட வாடையும் அடிப்பது இல்லை. ஆனால், வியர்வையுடன் பாக்டீரியா கிருமி சேர்ந்தாலோ அல்லது வேலையின் தன்மை, தட்பவெப்பம், மனக்கவலை, உடல் பருமன், தைராய்டு பிரச்னை, சிலவகை மருந்துகள் போன்ற காரணங்களைச் சார்ந்து வியர்வை நாற்றம் அடிக்கலாம். இரண்டு வேளை குளித்தால் வியர்வை நாற்றம் குறையும். படுக்கை அறைக்கு செல்லும்முன் உடலை சுத்தம் செய்து ஈரத்தை நன்கு உறிஞ்சும் பருத்தித் துணியினைப் பயன்படுத்த வேண்டும். வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் நறுமணப் பவுடரைப் பயன்படுத்தலாம். மேலும், இறுக்கமான உடைகளைத் தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
உறுப்புகள் சுத்தம்
உடல் சுத்தம் என்பது வெளிப்படையான உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டும் அல்ல; பிறப்பு உறுப்புகளையும் சேர்த்துதான். பெண்ணின் பிறப்பு உறுப்பில் சில திரவங்கள் இயல்பாக சுரந்துகொண்டே இருக்கும். இவற்றில் இருந்து துர்வாடை வருவதுடன் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் குளிக்கும்போது ஜனன உறுப்புகளைச் சுத்தப்படுத்துவதையும் சிறுநீர் கழித்த உடனே பிறப்பு உறுப்பைத் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி ஜனன உறுப்பைச் சுத்தப்படுத்த அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பும் சாதாரண தண்ணீருமே போதுமானது. ஏனெனில் வாய் வழி புணர்ச்சி கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் சுத்தத்தை எதிர்பார்ப்பார்கள்.
அதேபோல் ஆண் உறுப்பின் முன் தோலில் மெழுகு போன்ற திரவம் திரளும். இதனை சுத்தப்படுத்தாவிட்டால் துர்வாடை அடிக்கும். அங்கே கிருமித் தொற்று வளரவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஒவ்வோர் ஆணும் குளிக்கும்போது ஆண் உறுப்பின் முன்தோலையும் தலைப் பகுதியையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அனைத்திற்கும் மேலாக உடல் உறவுக்குப்பின் பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது என்கின்றனர் நிபுணர்கள்.

பிறந்தநாள் கொண்டாட்டமாக குழந்தைகளை தத்தெடுத்தார் ஹன்சிகா


கொலிவுட் நடிகை  ஹன்சிகா, தனது பிறந்த நாளான இன்று குழந்தைகள் இருவரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்பு செலவுகளை கவனிக்க உள்ளார்.
கொலிவுட்டில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஹன்சிகா.
ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற தற்போது கொலிவுட் நடிகைகளில் நட்சத்திர வரிசையில் ஹன்சிகாவும் உள்ளார்.

























இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹன்சிகா, ஏதாவது சமூக அக்கறையுள்ள விடயத்தை செய்யவேண்டுமென நினைத்து குடிசை பகுதிகளில் வசிக்கும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.
இவர்களுக்கான படிப்பு, மருத்துவம், அன்றாட தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் இவரே கவனிக்க உள்ளார்.
இன்று மாலை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டியும் தனது பிறந்தநாளை ஹன்சிகா கொண்டாட உள்ளார்.

நடிகைகளுக்கு குடி பழக்கம் இருப்பது உண்மை: சனாகான்


சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சனாகான் சமீபத்தில் இந்தி நடிகைகளைவிட தென்னிந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர் என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
மும்பை நட்சத்திர ஓட்டல்களில் தென்னிந்திய நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிப் போவதை பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன்ற பழக்கம் எதுவும் கிடையாது, என்றும் கூறியிருந்தார்.
சனாவின் இந்த பேட்டிக்கு நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சனா கானை கண்டித்து பேட்டியளித்தனர். எச்சரிக்கையும் விடுத்தார்கள்.
இந்நிலையில் சனாகான் மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தி பேட்டியளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், நான் தவறாக எதையும் பேசிவிடவில்லை. மது, புகை பழக்கம் உள்ள நடிகைகள் பற்றிய உண்மையைதான் சொன்னேன்.
இன்றும் நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் மது கிளாசை கையில் வைத்திருப்பது போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த பழக்கத்தை அவர்கள் விட்டு விடாமல் மாறாக என் மீது பாய்வது முறையல்ல என்றும் நடிகைகள் பற்றி நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

08 ஆகஸ்ட் 2012

பசுபதிக்கு ஜோடியா நடிக்கமாட்டேன் - நயன்தாரா கோபம்


சென்னை: பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார் நடிகை நயன்தாரா.
பிரபுதேவா விவகாரம் முடிந்த ஒன்றாகிவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.
Nayanthaara Refused Act With Pasupathy

விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வருகிறார். புது இயக்குனர் மோகன் தனது படத்தில் மம்முட்டி-நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சித்தார். நயன்தாராவுக்கு கதை பிடித்ததாகவும் மம்முட்டியுடன் நடிக்க சம்மதம் என்று கூறிவிட்டாராம். ஆனால் மம்முட்டி இப்படத்தில் நடிக்க சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.
ஒரு கோடி சம்பளம், கேரள வெளியீட்டு உரிமை... இதுதான் மம்முட்டி போட்ட நிபந்தனை. அதற்கு இயக்குனர் மோகன் சம்மதிக்கவில்லை. மம்முட்டிக்கு பதில் நடிகர் பசுபதியை கதாநாயகனாக தேர்வு செய்தார்.
ஆனால் பசுபதி ஜோடியாக நடிக்குமாறு நயன்தாராவைக் கேட்டபோது, ஒருபோதும் முடியாது என கோபத்துடன் கூறிவிட்டாராம். நயன்தாராவுக்கு பிடித்தமாதிரி ஒரு நடிகரைத் தேடி வருகிறாராம் இயக்குநர்.

'அந்த' சமயத்தில் இந்த தப்புகளை கண்டிப்பா செய்யாதீங்க!


சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய எரிச்சலுக்கு வழி வகுத்து விடும். குறிப்பாக உறவின்போது செய்யும் சின்னத் தவறுகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடலாம். மூடு மாறக் காரணமாகி விடலாம். குறிப்பாக உறவின்போது பெண்கள் செய்யும் சில காரியங்கள், ஆண்களின் மூடை ஸ்பாயில் செய்து விடுகிறதாம். எனவே இதை அவர்கள் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்டுகள்.
பெட்ரூமில் மட்டும்தான்... சில பெண்களுக்கு பெட்ரூமில் மட்டும்தான் செக்ஸ் வைத்துக் கொள்ள பிடிக்கும். இதை அவர்கள் கண்டிஷனாக கடைப்பிடிப்பார்கள். பெட்ரூமைத் தாண்டி வேறு எங்காவது கூப்பிட்டால் வர மறுத்து விடுவார்கள். பிடிவாதமாகவும் இருப்பார்கள். இது கணவர்களை டென்ஷனாக்கி விடுகிறதாம்.
பெட்ரூமில் மட்டுமல்லாமல், சமையல் அறை, ஹால், மொட்டை மாடி, மாடிப் படி என விதம் விதமான இடங்களில் உறவு வைத்துக் கொள்வதில் ஆண்கள் பொதுவாக ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதை மனைவி மறுக்கும்போது அந்த கணவனுக்கு எரிச்சலாகி விடுகிறதாம், மூட் அவுட் ஆகி விடுகிறதாம்.
3 Mistakes Women Should Avoid

ஆனால் பெண்கள் இவ்வாறு மறுக்க வெட்கம், தயக்கம்தான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள். அதேசமயம், செக்ஸ் உறவின்போது இருவருக்கும் நல்ல மூட் இருக்க வேண்டியது அவசியம் என்பதால் பாதுகாப்பானதாக கருதினால் கணவன் கூப்பிடும் இடத்திற்கு மனைவி போவதில் தயக்கம் காட்டுவது தேவையில்லை என்பது இவர்களின் கருத்து. காரணம், இப்படி வித்தியாசமான இடங்களில் செய்யும்போது கணவனுக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் கூட வித்தியாசமான அனுபவம் கிடைப்பதால்.
ஓரல் செக்ஸ்... பல பெண்களுக்கு வாய் வழி உறவில் உடன்பாடு உண்டு என்றாலும் கூட சிலருக்கு இதில் வெட்கம் மற்றும் அறுவறுப்பு இருக்கும். அதெப்படி அதைக் கொண்டு வாயில் ... என்று அவர்கள் தயங்கலாம். இதைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. இருப்பினும் இந்தத் தயக்கம், ஆண்களுக்கு மூட் அவுட் பண்ணி விடுகிறதாம். இதைத் தவிர்க்க முதலில் ஆண்கள் களத்தில் இறங்குவது நல்லதாம். மனைவியிடம் கணவன் முதலில் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கு அந்த சுகத்தைப் புரிய வைக்கலாம். பின்னர் இதேபோல எனக்குச் செய் என்று மனைவியிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.
ஓரல் செக்ஸ் என்பது இருவருக்கும் மனம் ஒத்து வரும்போதுதான் செய்ய முடியும். கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் ஓரல் செக்ஸ் வேண்டாம் என்று ஆண் கேட்டு பெண் மறுத்தாலும் அல்லது பெண் கேட்டு ஆண் மறுத்தாலும் சரி செக்ஸ் மூட் மாறிப் போய் விடும் அபாயம் உள்ளதாம்.
ராத்திரி மட்டும்தான்... சில பெண்களுக்கு இரவு நேரத்தில் மட்டும்தான் உறவு வைத்துக் கொள்ள பிடிக்கும். பகல், காலை, மதியம் என பிற நேரங்களை அவர்கள் விரும்புவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு எப்போது மூடு வருகிறதோ, அப்போது உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள். அதாவது பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது அவர்களின் பாலிசி. அதேசமயம், பெண்களோ, கட்டுப்பாடு காக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பவர்கள். இது ஆண்களின் மூ்டை காலி செய்து விடுமாம்.
கடி, கிள்ளு... பெரும்பாலான பெண்களுக்கு தங்களது துணைவர், கன்னம், மார்பு உள்ளிட்ட இடங்களில் லேசாக கடிப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யும்போது அதை ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். அதேசமயம், இதை மனைவிமார்கள் தங்களுக்குச் செய்ய விரும்பினால் பல ஆண்கள் விரும்புவதில்லையாம். வலிக்கும் என்பதுதான் ஆண்கள் இதற்குச் சொல்லும் காரணம். இதையேதான் அவர்கள் மனைவிமார்களிடம் செய்கிறார்கள் என்றாலும், அதையே மனைவி செய்தால் இவர்கள் ஏற்பதில்லை. இதுபோன்று நடக்கும்போது மனைவியருக்கு கடுப்பாகி விடுகிறதாம். இவர் மட்டும் கடிக்கலாம், நான் கூடாதா என்று அவர்கள் கொதிக்கிறார்கள். எனவே பரஸ்பர கடி, கிள்ளு இருக்குமாறு பார்த்துக் கொள்வது உத்தமமாம்.
இப்படி சின்னச் சின்னத் தவறுகள் நிறைய இருக்கின்றன. இதைத் தவறு என்று கூற முடியாது. மூடை கெடுக்கும் காரணிகள் என்று கூறலாம். இதைத் தவிர்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சப்ஜாடான உறவு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

06 ஆகஸ்ட் 2012

Computer Start செய்யும் போது பிரச்சனையா ?

உங்கள் கம்ப்யூட்டர் இயங்க தொடங்குகையில் ஏதேனும் புதிய பிரச்னை ஏற்படுகிறதா? வழக்கத்தைக் காட்டிலும் தாமதாகத் தயாராகிறதா? இது உங்கள் கம்ப்யூட்டர் தொடங்குகையில் ஸ்டார்ட் அப் மூலம் தயார் நிலையில் வைக்கும் புரோகிராம்களினால் ஏற்படுவது. உங்களை அறியாமல் இன்ஸ்டால் செய்திடும் புரோகிராம்கள் பல தொடக்கத்திலேயே தயாராகும்படி அமைக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய புரோகிராம்கள் இப்போது உங்களுக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.

எனவே உங்களுக்கு எந்த புரோகிராம்கள் தேவை என்று பார்த்து அவற்றை மட்டும் இயங்கும்படி செலக்டிவ் ஸ்டார்ட் அப் தயார் செய்திடலாம். அதற்கான வழியினை விண்டோஸ் தருகிறது. அதனை இங்கு காண்போம்

start up slow for your pc

1.ஸ்டார்ட் பட்டன் அழுத்தி ரன் விண்டோவினைப் பெறவும்.

2.இந்த விண்டோவில் “msconfig” என டைப் செய்திடவும்.

3.கிடைக்கும் விண்டோவில் General” என்ற டேபில் கிளிக் செய்திடவும்.

4.இதில் “Selective Startup” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

5.இதில் பல பிரிவுகள் சிறிய கட்டங்களுடன் இருக்கும். இந்த டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.

6.முதல் கட்டத்தில் மட்டும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ரீ பூட் செய்திடவும்.

7.பின் மீண்டும் அடுத்ததில் மட்டும் டிக் அடையாளம் ஏற்படுத்தி இதே போல் ரீ பூட் செய்திடவும்.

வரிசையாக இவ்வாறு செயல்படுகையில் பிரச்னை இருக்கும் புரோகிராம் உங்களுக்குத் தெரியவரும். அது உங்களுக்கு வேண்டுமா என்று பார்க்கவும். இப்படியே தேவயற்ற புரோகிராம்களுக்கு எதிரே உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து பூட் செய்திடவும்.

இனி எந்த சிரமமுமின்றி விண்டோஸ் இயங்கத் தொடங்கும். தேவையில்லாமல் உங்கள் ராம் மெமரியும் வீணாகாது.இதை ஒவ்வொன்றாக செய்வது நேரம் எடுக்கும் செயல் என்று நீங்கள் நினைத்தால் பாதி பாதியாக தேர்ந்தெடுத்து ரீபூட் செய்திடலாம். பின் எந்த பாதியில் பிரச்னை உள்ளது என்று பார்த்து அதில் ஒவ்வொன்றாக இறங்கலாம். இது போல ஸ்டார்ட் அப் புரோகிராம்களை சுத்தம் செய்வது ஷட் டவுண் செய்வதில் உள்ள பிரச்னைகளையும் தீர்த்துவிடும்.


முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க Windows Security


 
 
Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம்.








இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம்.


இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.



இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரபட்டுள்ளது). இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.




இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில்Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.




பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.




இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



Kaspersky Rescue Disk 10 தரவிறக்க



Read more: http://www.anbuthil.com/2012/08/windows-security.html#ixzz22mWAmNFh

உங்களுக்கு முட்டைக் கண்ணா... அப்படீன்னா ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!


அழகிய, பெரிய, ரவுண்டான கண்களுடன் கூடிய பெண்களைத்தான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கிறதாம். இப்படிப்பட்ட பெரிய கண்களுடன் கூடிய பெண்களால், ஆண்களை ஈசியாக கவர் செய்து விட முடியுமாம்.
ஈர்ப்புக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு ஆயுதம் இருக்கும். குறிப்பாக பெண்களிடம் ஏகப்பட்ட ஈர்ப்பு விஷயங்கள் இருக்கும். அதில் முக்கியமானது இந்த கண்கள். வெறும் கண்ணை வைத்தே ஒரு ஆணை ஈசியாக வீழ்த்தி விட முடியுமாம். கண்களில் அத்தனை சமாச்சாரங்கள் இருக்கிறதாம்.
குறிப்பாக நன்கு பெரிதான, உருண்டையான, கண்களைக் கொண்ட பெண்களுக்கு ஒரு ஆணை வீழ்த்துவது என்பது ரொம்ப ஈசியானதாம். இவர்கள் தங்களது உடல் கவர்ச்சியை விட கண்களை வைத்தே யாரையும் காலி செய்து விட முடியுமாம்.அவ்வளவு ஈர்ப்பு சக்தி இருக்கிறதாம் இந்த முட்டைக் கண் பெண்களுக்கு.இப்படிப்பட்ட கண்களைக் கொண்ட பெண்கள் மன தைரியம் மிக்கவர்களாக, ஆளுமைத் திறன் படைத்தவர்களாக, எதையும் தைரியமாக நேருக்கு நேர் சந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்களாம்.





 இவர்களை நேருக்கு நேர் கண்ணைப் பார்த்துப் பேசவே மற்றவர்களுக்கு தயக்கமாக இருக்குமாம். அப்படி ஒரு பார்வையாம் இவர்களுக்கு.
அதேபோல பெரிய, உருண்டையான கண்களைக் கொண்டுள்ள பெண்களுக்கு மாத விலக்கு நெருங்க நெருங்க செக்ஸ் உணர்வுகள் அதிகம் பொங்கிப் பெருகுமாம். இதை கண்கள் மூலம் அதிகம் வெளிப்படுத்துகிறார்களாம். மேலும் இப்படி உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களுக்கு காம உணர்வும் கூட மற்ற பெண்களை விட அதிகமாக இருக்குமாம்.
இதனால்தான் உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். காரணம், இத்தகைய பெண்களிடம் எக்கச்சக்க இன்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே. அதேசமயம், உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களை திருப்தி செய்வது என்பதும் சற்று சிக்கலான காரியம்தானாம். அவர்களுக்கேற்ற ஆண்கள் கிடைப்பதும் முக்கியமானது என்பதை மனதில் கொள்க.
உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் நல்ல உடல்வாகு இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக நல்ல உயரமும், சற்று குண்டான உடலுடனும் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்களாம். சுருங்கச் சொன்னால் ஓங்கு தாங்காக இருப்பார்களாம்.
குழந்தைப் பிறப்பிலும் கூட உருண்டையான கண்களைக் கொண்ட பெண்கள் மற்றவர்களை விட சற்று முன்னணியில் இருப்பார்களாம். அதாவது இவர்களிடம் மலட்டுத்தன பிரச்சினை என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
சரி உங்க கண்ணு எப்படி, நீங்க எப்படி...!

மறுபடியும் முதல்லேர்ந்து.... மீண்டும் நெருக்கமான சிம்பு - நயன்தாரா!!


சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி!
சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்.வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள்.
கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து போனார்கள். இந்த நிலையில் திடீரென்று இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
இதற்கான காரணங்களை இருவருமே சொல்லவில்லை. ஆனால் நயன்தாரா மட்டும், சிம்பு தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஹைதராபாதில் கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.





அதன்பிறகு தமிழில் ரொம்ப நாள் வரை நடிக்காமலே இருந்தார் நயன்தாரா (இப்போது தமன்னா இருக்கிறாரே... அப்படி!!).
பின்னர் மெல்ல அவரை மீண்டும் தமிழுக்கு வரவைத்தார்கள். ரஜினியெல்லாம் தலையிட்டு நயனுக்கு ஆறுதல் சொல்லி, தன் படங்களிலேயே வாய்ப்புக் கொடுத்தார் (சிவாஜி, குசேலன்). அதைத் தொடர்ந்து தனது அடுத்த ரவுண்டை கோலிவுட்டில் ஆரம்பித்த நயன்தாரா, மீண்டும் தனுஷுடன் இணைத்துப் பேசப்பட்டார்.
ஆனால் அது சிறிது காலம்தான். வில்லு படத்தில் நடித்தபோது அவருக்கும் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு, நயன்தாரா - பிரபு தேவா காதல் விவகாரம்தான் கடந்த நான்கு வருடங்களாக மீடியாவின் முதன்மைச் செய்தியாக இருந்தது. நயன்தாரா காதலுக்காக தன் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா.
இன்னொரு பக்கம், பிரபுதேவாவை திருமணம் செய்ய, மதம் மாறி, கையில் அவர் பெயரை பச்சைக் குத்திக் கொண்டு நயன்தாரா தயாராக இருந்த நிலையில், இருவரின் காதலும் திடீரென முறிந்தது.
இதற்கும் காரணம், பிரபுதேவாவின் நம்பிக்கை துரோகம் என்று பேட்டியளித்தார் நயன்தாரா.


இப்போது, மீண்டும் தமிழ்ப் படங்களில் பிஸியாகிவிட்டார் நயன். கூடவே காதல் தோல்வியில் அவர் தவித்த சூழலில், மீண்டும் தன் பழைய காதலன் சிம்புவுடன் நெருக்கமாகியுள்ளார் (பிரபு தேவாவுடன் காதல் இருந்தபோதே, நயனும் சிம்புவும் ராசியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது).
இந்த நெருக்கத்துக்கு சாட்சியாக இருவரும் ஒரு பார்ட்டியில் எடுத்துக் கொண்ட படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது. இது எத்தனை நாளைக்கோ...!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com