Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

29 ஜூன் 2012

துப்பாக்கி திரைப்படம் திட்டமிட்டபடி திட்டமிட்ட திகதியில் வெளியாகும் : தயாரிப்பாளர் தாணு



இளையதளபதி விஜய் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாய் உருவாகிவரும் துப்பாக்கி திரைப்படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் என்று, ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், சிக்கல் எல்லாம் ஒன்றுமில்லை.
படம் திட்டமிட்டத் தேதியில் வெளியாகும் என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

துப்பாக்கி திரைப்படம், படப்பிடிப்பு ஆரம்பித்தவுடன், விஜய் சுருட்டு பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது என்று சர்ச்சை கிளம்பியது. அது ஒருவாறாக ஓய்ந்து, இப்போது  துப்பாக்கி என்கிற தலைப்பை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் மூலம் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. ஏற்கனவே ஒருவர் துப்பாக்கி என்று தலைப்பு பதிவு செய்திருப்பதாகவும், அவர்தான் நீதிமன்றம் மூலம் ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்கிறார் எனவும் காரணம் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி பேசிய துப்பாக்கி திரைபடத் தயாரிப்பாளர் கலைபுலி தாணு, "தலைப்பு எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை தாண்டவம் என்று ஒரு படத்தில் விக்ரம் நடிக்கிறார். ஆனால், ஆனந்த தாண்டவம், ருத்ர தாண்டவம் என்றெல்லாம் படம் எடுக்கவில்லையா? இந்த படத்தின் இயக்குனர் 7ஆம் அறிவு படம் இயக்கும்போதே தமிழ்த் திரைப்பட வர்த்தக சபையில் துப்பாக்கி தலைப்பை பதிவு செய்துவிட்டார்.

தென்னிந்திய வர்த்தக சபையில் உறுப்பினர் இல்லாத ஒருவர் துப்பாக்கி தனது தலைப்பு என்று சொல்லிவருகிறார். அவரிடம் எடுத்து சொன்னால் அவர் புரிந்துகொள்ளக் கூடிய சூழல்தான் இப்போது இருக்கிறது. எனவே அவரை சமாதானப் படுத்தி, திரைப்படத்தை அதேபெயரில் வெளியிடும் முயற்சி நடக்கிறது. படம் திட்டமிட்டபடி, திட்டமிட்ட தேதியில் வெளியாகும் என்றார்.

நடிகர் விஜய், தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம். படத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். ரசிகர்களிடையே நிச்சயம் இப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

கள்ளத்துப்பாக்கி எனும் பெயரில் 2009ம் ஆண்டே பெயர் பதிவு செய்துவிட்டதாக கூறியுள்ள நார்த் ஈஸ்ட் பிலிம் ஓர்க் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து துப்பாக்கி எனும் தலைப்பில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு ஜூலை 16ம் திகதி வரை இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புறைகளை(Folder) மறைத்து வைத்துக்கொள்வது எப்படி?


கையடக்கத்தொலைபேசிகளில் கோப்புகளையோ அல்லது ஆவணங்களையோ எந்த மென்பொருளின்  உதவியும் இன்றி மறைத்துவைப்பதற்கான ஒரு வழிமுறைதான் இது.
1. முதலில் ஒரு கோப்பொன்றை (Folder) உருவாக்கிகொள்ளுங்கள் அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கோப்பையும்(Existing Folder) மறைத்துவைக்க பயன்படுத்தலாம்.
2.மறைத்துவைத்துக்கொள்ளவேண்டிய கோப்பை(Folder) .jad என்னும் நீட்சியுடன்(Extension) மீள் பெயரிட்டுக்கொள்ளுங்கள்(Rename the folder  with extension of  .jadஉதாரணம்: IMAGES.jad
3.இப்பொழுது அதேபெயரில் புதிய கோப்பொன்றை .jar என்ற நீட்சியுடன்(extension) உருவாக்கிக்கொள்ளுங்கள்.(now create a new folder with same name in the same directory with extension of .jar). உதாரணம் : IMAGES.jar
4.இப்பொழுது IMAGES.jad என்னும் கோப்புறை மறைந்துவிடும்.

நீங்கள் மீண்டும் மறைந்து காணப்படும் கோப்புறையை பெற்றுக்கொள்ள .jar என்னும் நீட்சியுடன் உருவாக்கிய கோப்புறையிலுள்ள .jar என்னும் நீட்சியை அகற்றிவிடுங்கள்.

(நீண்ட நாட்களாக மிகுந்த வேலைப்பளு காரணமாக பதிவுலகப்பக்கம் தலைகாட்டமுடியவில்லை இனி அவ்வப்போது பதிவிடுவன் என்று நம்புறன்)

26 ஜூன் 2012

ராகுல் காந்தி அவமதிப்பு : நடிகர் கார்த்தி, சந்தானம் எதிராக போராட்டம் அறிவிப்பு



காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையிலும், கேலி செய்யும் வகையிலும், சகுனி திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள இளைஞர் காங்கிரஸினர் இதை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அருண் பிரசாத் தெரிவிக்கையில் அண்மையில் (22-ந்தேதி) வெளியான சகுனி படத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் இளம் தலைவர் ராகுல் காந்தியை இழிவு படுத்தும் முறையில் அவரின் பெயரை குறிப்பிட்டு பேசுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த படத்தை அரசியல் சம்பவங்களை மையப்படுத்தி எடுத்துள்ளனர். ஆனால் தேவையில்லாமல் ராகுல் காந்தியின் பெயரை இழுத்து அவரை இழிவுபடுத்துவது போல் காட்சி அமைந்துள்ளது உள்நோக்கத்துடன் யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்துள்ளனர் என தோன்றுகிறது.

எனவே இதில் எங்கள் கட்சி தலைவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி வருத்தம் தெரிவிக்கவில்லை எனில் படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம். மேலும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கார்த்தி, சந்தானம் ஆகியோர் வீடுகள் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்றும், படத்தை திரையிடவிடமாட்டோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இனி பேஸ்புக் காமெண்டுக்களை எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் : புதிய வசதி


பேஸ்புக்கில் இதுவரை நீங்கள் இடுகின்ற கருத்துக்களை எடிட் செய்ய முடியாது.
ஆனால் தற்போது தவறுதலாக இடுகின்ற கமான்ட்களை எடிட் அல்லது டிலீட் செய்துவிடக் கூடிய புதிய வசதியை தந்திருக்கின்றது பேஸ்புக்.

முன்னர் ஒரு நிமிடத்திற்குள் மாத்திரம் இவ்வாறான மாற்றங்களைச் செய்ய முடியும். ஆனால் தற்போது எப்போது வேண்டுமாயினும் நீங்கள் இவ்வாறு இடுகின்ற கருத்துக்களை மாற்றிவிடவோ அல்லது அழித்துவிடவோ முடிகின்றது.
கமாண்டுகளை எடிட் செய்வதற்கு அதற்கு அருகில் மேலிருக்கும் பென்சில் அடையாளத்தை கிளிக் செய்தால் எடிட் மற்றும் டிலீட் ஆப்ஸன் தெரியும அவற்றை அழுத்துவதன் மூலம் மாற்றங்களைச் சேர்த்துவிடலாம். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட கருத்துக்களுக்கு கீழே Edited என்று குறிப்பிருக்கும். இதன் மூலம் ஏனையவர்கள் மாற்றங்களை அறிந்து வாசிக்க முடிகின்றது.

இந்த வசதி பேஸ்புக் பாவனையாளர்கள் அனைவருக்குமாக இன்னும் சில நாட்களில் செயற்படுத்தப்படும் என அறிவிக்கின்றது பேஸ்புக்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com