Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

14 மே 2009

மகளுடன் வந்து ஓட்டுப் போட்டார் ரஜினி - அரசியலுக்கு வருவது குறித்து மெளன பதில்

சென்னை: மகள் செளந்தர்யா ரஜினிகாந்துடன் வந்து வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . நாளை மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடும் நிலை வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மெளனமாக வானத்தை நோக்கி கையைக் காட்டியபடி சென்றார் ரஜினி.சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மகள் செளந்தர்யாவுடன் இன்று காலை 8.45 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு வந்தார்.அங்குள்ள வாக்குச் சாவடியில் ரஜினியும், செளந்தர்யாவும் வாக்களித்தனர்.பின்னர் வெளியில் வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். வழக்கம் போல யாருக்கு ஓட்டுப் போட்டீங்க என்று செய்தியாளர்கள் கேட்டபோது, யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதை வெளியில் சொல்ல மாட்டேன். ஆனால் ஓட்டுப் போட வேண்டியது நமது கடமை.ஓட்டுப்போடுவதை யாரும் தவிர்க்கக் கூடாது. எல்லாரும் கண்டிப்பாக தங்கள் ஓட்டை போட வேண்டும் என்றார் ரஜினி.பின்னர் வழக்கம் போல அரசியல் பிரவேசம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். இந்த முறை சற்று வித்தியாசமாக, எதிர்காலத்தில் மக்கள் இது போன்று உங்களுக்கு ஓட்டு போடும் நிலை வருமா என்று கேட்டனர். செய்தியாளர்கள் கில்லாடி என்றால் ரஜினி கில்லாடிக்கு கில்லாடி ஆச்சே. ஹா.. ஹா.. ஹா.. சிரித்துக் கொண்டே, பதில் ஏதும் சொல்லாமல், எல்லாம் அவன் செயல் என்பதை உணர்த்தும் விதமாக, வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்திக் காட்டி விட்டுச் சென்று விட்டார்.

USB Drive ஐ NTFS File சிஸ்டத்தில் ஃபார்மேட் செய்வது எப்படி?

NTFS File சிஸ்டம் என்பது அதிக பாதுகாப்பும், வேகமும் கொண்டதாகும்.ஆரம்ப காலங்களில் விற்பனைக்கு வந்த USB டிரைவ்கள் குறைந்த கொள்ளளவு கொண்டதாக இருந்தது. எனவே அதற்கு NTFS File சிஸ்டம் தேவைப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது சந்தையில் விற்பனைக்கு வருகின்ற USB Drive கள் அதிக கொள்ளளவு கொண்டதாக உள்ளதால் இதனை NTFS File system மூலம் ஃபார்மேட் செய்வது பாதுகாப்பானதாகும்.வழக்கமாக USB Drive -ஐ ஃபார்மேட் செய்ய முற்படுகையில் அதில் FAT - option மட்டுமே இருக்கும். NTFS -option - ஐ கொண்டுவர என்ன செய்ய..,USB drive ஐ கணினியில் பொருத்துங்கள்.My Computer - ஐ ரைட் கிளிக் செய்து Device Manager க்கு செல்லுங்கள்.Select Disk Drives and expandRight Click on USB drive and select PropertiesGoto policies tab and select Optimize for performance and press OKOpen My Computer, Click on USB Drive and select Format OptionNow you can have NTFS option there.NTFS enabled USB Drives are write-able only on one PC and becomes read only on all other PCs. Hence, we can read and write on our own PC and transfer files to elsewhere without any fear of virus.

மினி மோடில் மீடியா பிளேயர்

விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குகிறீர்கள் .அதன் மூலமாக ஒரு ஆடியோ அல்லது வீடியோ பைலை பாட அல்லது ஆட வைக்கிறீர்கள்.என்ன நடக்கிறது?. திரை முழுவதும் தெரிகிறது.இந்த புரோகிராமின் ஷார்ட் கட் ஐகான் அல்லது ஆல் புரோகிராம்ஸ் சென்று அக்சசரீஸ், என்டர்டெய்ன்மெண்ட் என்று சென்று அதில் விண்டோஸ் மீடியா பிளேயரைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து இயக்குகிறீர்கள்.கம்ப்யூட்டரில் மற்ற பணிகளை மேற்கொண்டிருக்கையிலே ஒரு ஓரமாக சிறிய வடிவத்தில் மீடியா பிளேயர் இயங்க வேண்டுமா?விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கத்திற்கு கொண்டு வாருங்கள்.பின் டாஸ்க் பாரில் ஒன்றும் இல்லாத இடத்தில ரைட் கிளிக் செய்திடுங்கள்.
எழுந்து வரும் சிறிய மெனுவில் டூல் பார்ஸ் என்னும் பிரிவில் கிளிக் செய்தால் இன்னொரு துணை மெனு கிடைக்கும்.இதில் விண்டோஸ் மீடியா பிளேயர் என்று இருப்பதில் சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்துங்கள்.டாஸ்க் பாரின் வலது மூலையில் சிறிய அளவில் விண்டோஸ் மீடியா பிளேயரின் மெனு பார் காட்டப்படும்.இதில் நீங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். வீடியோ பைலைக் கிளிக் செய்தால் சிறிய கட்டத்தில் வீடியோ காட்சிகள் காட்டப்படும்.அதைப் பார்த்துக் கொண்டே மற்ற வேலைகளிலும் ஈடுபடலாம்.இது விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 9 வைத்திருப்பவர்களுக்கு.உங்களிடம் 10 பதிப்பு அல்லது 11 உள்ளதா? விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கும்போதே சிறியதாகத் தேவையான கண்ட்ரோல்களை மட்டும் வைத்து இயக்க முடியும்.முழுமையாகத் திரை முழுவதும் இன்றி சிறியதாக இது திரையில் காட்சி அளிக்கும்.இதனை Mini Player Mode என்று கூறுகிறார்கள்.இதன் மூலம் இன்னும் கூடுதல் வசதிகளையும் மேற்கொள்ளலாம்.குறிப்பாக மியூசிக் பைல்களைத் திறந்து இசையை மட்டும் ரசிக்க விரும்புபவர்களுக்கு முழுமையான மீடியா பிளேயரின் காட்சி வேண்டாமே!
மினி பிளேயர் மோடில் இதனைத் திறக்கும்படி செட் செய்திட விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோவில் Tools தேர்ந்தெடுக்கவும்.பின் அதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும்.இந்த விண்டோவில் "Start the Mini Player for file names that contain this text"என்ற வரியுடன் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் தென்படும்.இதில் ஏற்கனவே voiceatt.wav என்ற பைல் டைப் பெயர் தென்படும்.நீங்கள் உங்களின் அனைத்து எம்பி3 பைல்களும் இந்த மினி மோடில் திறக்கப்பட வேண்டும் என்றால் இந்த இடத்தில .mp3 என்று டைப் செய்திடவும்.அல்லது குறிப்பிட்ட டிரைவ் அல்லது போல்டரில் உள்ள பைல்களை இயக்குகையில் மினி மோடில் திறக்க வேண்டும் என எண்ணினாலும் அந்த டிரைவின் எழுத்து (D:/E:) என எதனையேனும் அமைக்கலாம்.அல்லது போலடரின் பாத் கொடுக்கலாம்.எந்த ஆடியோ மற்றும் வீடியோ பைலாக இருந்தாலும் மினி மோடில் தான் இயக்கப் பட வேண்டும் என முடிவு செய்தால் ஜஸ்ட் ஒரு கோலன் (:) டைப் செய்தால் போதும்.ஒற்றை நினைவில் கொள்ள வேண்டும்.முதலில் கூறியபடி இந்த வகை மோடில் வீடியோ காட்சிகளை இயக்க முடியாது.

சீமானை விரட்டியடித்த திமுக-காங் தொண்டர்கள்

காரைக்குடி: காரைக்குடியில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர் களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரசாரும் விரட்டியடித்தனர். ஓட்டுச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடாதீர்கள், அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று அங்கு வாக்களிக்க வந்தவர்களிடம் கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூரமாக ஒரு இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர்.இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூரில் வாக்களித்தார் சீமான்.அமீருக்கு வாக்கு இல்லை.

அதே போல இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர்.ஆனால் இந்த முறை வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதனால் ஓட்டு போட வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.அமீரின் உதவியாளர் போல இருக்கும் நடிகர் 'கஞ்சா' கருப்பின் பெயரும் சென்னையில் இல்லை. இதனால் சாலி கிராமத்தில் வசிக்கும் அவர் ஓட்டு போட முடியவில்லை.

13 மே 2009

தடை நீக்கப்பட்ட சிடி ,மக்கள் தொலைக்காட்சியுடன் கலைஞர், சன் மோதல்!

மனதைப் பிசையும் தமிழ் இனப்படுகொலை காட்சிகளுடன் ஆளும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று முழங்கும் சிடிக்களை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மக்களை பார்க்கவிடாமல் கேபிள் கட், சில இடங்களில் பவர் கட் என்று மக்கள் தொலைக்காட்சி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் நற்பெயரை(?)க் கெடுக்க சமூகவிரோதிகள் திட்டமிட்டு மின்சாரம் துண்டிப்பு, 4 பேர் கைது என்று சன்னும், கலைஞர் டிவியும் பதிலுக்கு பதில் ஏசிக் கொண்டிருக்கின்றன. ஜெயா டிவி கப்சிப் என்றிருக்கிறது. அந்த சிடியையும் கண்டுகொள்ளவில்லை, மின்வெட்டையும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் தொலைக்காட்சியில் நான் அந்த சிடிக்களை முழுக்கப் பார்த்துவிட்டேன். இதுவரை பார்க்காதவர்கள் உடனே மக்கள் டிவியை பார்க்கவும். போகிற போக்கைப்பார்த்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு (பிரச்சார நேரம் ஓய்ந்த பின்னும்) எதிர்பிரச்சாரமாக விடிய விடிய ஒளிபரப்பாகும் என எண்ணுகிறேன். அதே சமயம் ஆளும் தி.மு.க எப்படியாவது நீதி மன்றத் தடையை பெற்றுவிடும் என்று தோன்றுகிறது. இந்த சிடிக்கள் எப்படியும் யுடியுபில் வந்துவிடும். ஆனால் தேர்தல் பரபரப்புடன் பார்க்வேண்டுமானால் இப்போதே மக்கள் டிவி பாருங்கள். நீதி - வழக்கறிஞர்களுடன் மோதக் கூடாது. மோதினால் . . . ? பிரச்சாரம் ஓய்ந்தபின்னும், எதிர்கட்சிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி கிடைக்கும்.

நட்பை காதலாக மாற்றுவது எப்படி?

என் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள்.

இவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான்.

இப்படி இருக்க, ஒரு நாள் ஞாயிறன்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்க, எனக்கு மட்டும் செம போர் அடித்தது. சரி ஏதோ நம்மாலான ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று அவனது மொபைல்ஃபோனை எடுத்து, அந்த பெண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

“சில விஷயங்களை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. மனதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வெளிப்படுத்த என் மனது தயார்….. இனிய காலை வணக்கம்”

சில நொடிகளில் அந்த பெண்ணிடம் இருந்து வந்த பதில்,

“என் மனதும் தயார்.”

இது போதுமே, அன்றைக்கு ஃபோனை காதில் வைத்தவன், இன்று வரை கீழே வைக்கவில்லை.

இதேபோல் நீங்களும் உங்கள் உயிர்த்தோழியை காதலியாக்க என்னாலான சில யோசனைகள்…


முதலில் உங்கள் தோழிக்கு உங்கள் மீது காதல் இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும்.
  • உங்களை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பில் ஒரு சந்தோஷமும், பாதுகாப்பும் இருக்கும்.
  • உங்களைப்பார்த்து சிரிக்கும் சிரிப்பிற்கும், மற்றவர்களை பார்த்து சிரிக்கும் சிரிப்பும் வித்தியாசமாக இருக்கும்
  • நீங்கள் அடுத்த பெண்ணிடம் பேசினாலோ, பசங்களுடன் பேசினாலோ ஒரு பொசசிவ்னெஸ் காண்பிப்பாள்
  • ஒரு நாள் கூட உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டாள்
  • விடுமுறை நாட்களில் கூட உங்களைப்பார்க்க விரும்புவாள்
  • மற்றவர்களைப்பற்றி உங்களிடம் புகார் செய்வாள் (பெண்/ஆண் நண்பர்கள்)
  • காசு விஷயத்தில் கொடுத்த காசை திரும்ப கேட்கமாட்டாள், ரெஸ்டாரண்டில் அவள் பணம் கொடுப்பாள்.
  • உங்கள் உடை விஷயத்தில் அக்கறை காட்டுவாள்
  • ஃபோனில் பேசும்போது கூட என்ன உடை அணிந்துவருகிறாய் என்று கேட்பாள்
  • ஒருமுறையாவது உங்களுக்காக அழுவாள்(அது சின்ன விஷயமாக இருந்தாலும்)
  • உங்களிடம் இருக்கும்போது, தான் பெண் என்பதை மறந்து இருப்பாள் (பாட்டு பாடலாம், உடை கலைந்து இருக்கலாம் etc)
  • சண்டை போட்டு நீங்கள் முறுக்கிக்கொண்டு இருந்தாலும், அவள் தானாக இறங்கி வருவாள்.
  • நீங்கள் அவளுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு சுதந்திரம் கொடுப்பாள்

காதல் இருப்பது உறுதியாயின், கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தி காதலாக்குங்கள்
  • தயவு செய்து முறுக்கிக்கொண்டு நிற்காமல், உடனடியாக காதலை சொல்லுங்கள்.
  • அவளுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்கள், அவளுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை குறைத்துக்கொண்டே செல்லுங்கள்.
  • அவளை அடுத்த ஆண்களுடன் பழகவிடாதீர்கள், உங்களுக்கு பக்கத்து சீட்டை எப்போதும் அவளுக்காக துண்டு போட்டு வையுங்கள் and vice versa ;).
  • மேலே சொன்ன கதைபோல் மெசேஜ் அல்லது ஈமெயில் அனுப்புங்கள்
  • இரவு நீண்டநேரம் பேசிக்கொண்டு(கடலை) இருக்கும்போது, அப்படியே லேசாக காதலை தலையைச்சுற்றி மூக்கைத்தொடுங்கள்
  • உங்கள் வீட்டில் அவளை அறிமுகப்படுத்துங்கள், உங்கள் குடும்பம் எவ்வளவு அழகு என்று காட்டுங்கள். முக்கியமாக உங்கள் அம்மாவிற்கும் அவளிற்கும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொடுங்கள்.
  • அவள் எங்கு கூப்பிட்டாலும் கூடவே செல்க. நெருக்கத்தில் உங்களை மறந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொல்லி விடுங்கள்.
  • காதலைச்சொல்வதற்கு முன் ஒரு நிமிடம்(நிஜமாகவே 60 நொடிகள்) அவள் கண்ணையே பார்த்துக்கொண்டிருங்கள். அவள் கண்கள் நாணி, கண்களாலேயே என்ன வேண்டும் என்று கேட்கும்போது காதலைச்சொல்லுங்கள். கண்டிப்பாக சக்ஸஸ் தான்.

அட.. அப்படியா..?ஆச்சர்யமா இருக்கே..! என்னோட COMPUTER - ல என் அனுமதி இல்லாம...

INSTALL BLOCK - A VERY POWERFUL TOOL FOR COMPUTER USERS

INSTALL, UNINSTALL மட்டுமில்ல, ஒரு சின்ன FILE அ கூட DELETE பண்ண முடியாது. உங்க பையனாலயோ, பொண்ணாலயோ GAMES INSTALL பண்ணி விளையாட முடியாது. நண்பர்கள் தேவை இல்லாதத DOWNLOAD பண்ணிINSTALL பண்ணமுடியாது. இவ்வளவு ஏன் SEARCH ல போயி ஒரு சின்ன FILE ல கூட தேட முடியாது. இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் உங்களோட அனுமதி வேணும்.

இதுக்கு INSTALL BLOCK ன்னு ஒரு சின்ன மென்பொருள் இருக்குங்க, அத உங்க கணினில நிறுவிகிட்டீங்கன்னா, உங்க அனுமதி இல்லாம யாரும் மேலே சொன்ன‌ எதையும் பண்ணவே முடியாது.

இன்னும் நிறைய தெரிஞ்சுகனும்னா இத படிங்க :

Uses:

Install-Block customers are many schools and colleges, internet cafes, banks, hospitals, manufacturing plants, design firms, call centers, and small businesses. Of course parents also find the software very useful as well. Install-Block password-protects all software installs, prompting the user for a password before allowing the installation to continue. Install-Block can prevent people from using specific programs, websites, or Windows features, in addition to the ability to disable installing of new software. Install-Block can be used to secure your systems, put a stop to time-wasting activities, limit an employee or child's access to programs, and much more. Install-Block has been found useful for combatting gambling addiction -- stopping a spouse or loved one from downloading casino software or visiting online gambling websites.

கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ள‌வும். அத‌னுள் இருக்கும் CRACK FOLDER - ஐ OPEN செய்து BSIB PATCH FILE - ஐ COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> BASH SOFTWARE -> INSTALL-BLOCK FOLDER ரினுள் சென்று PASTE செய்ய‌வும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE ப‌ண்ண‌ வேண்டுமா என்று கேட்கும் அத‌ற்கு YES என்று கொடுக்க‌வும்.அவ்வ‌ள‌வுதான் இப்பொழுது உங்க‌ள் INSTALL-BLOCK SOFTWARE ரெடி... அதுல‌ TUTORIAL & HELP இருக்கும் அத‌ ப‌டிச்சிங்க‌ன்னாவே எப்படி பயன்படுத்தனும்னு தெளிவா புரியும். க‌ண்டிப்பா ப‌டிங்க‌.

INSTALL-BLOCK : download link

சிகர்களின் கடனாளி நான் நெகிழும் ஏ.ஆர்.ரஹ்மான்

முதல் காதல், முதல் முத்தம்போலவே முதல் உதவியையும் மறக்காதவர்களே சிறந்த மனிதர்களாக இருப்பார்கள். இதில் ரஹ்மானும் ஒருவர்.
எப்போதோ தனக்கு உதவிய தெலுங்கு திரையுலகை நன்றியோடு நினைத்துப்பார்த்து பாராட்டியுள்ளார். தெலுங்கு திரையுலகம் சார்பில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ரஹ்மானை பாராட்டி அவருக்கு தங்க கிரீட்ம் அணிவித்தார் பின்னணி பாடகி பி.சுசிலா. கிரீடம் அணிவித்ததும் கூச்சம் ஒளிவீசியபடி ரஹ்மான் பேச ஆரம்பித்தார். "இங்கு எனக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதற்காக இங்கு வரவில்லை. நான் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தபோது எனது குடும்பம் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டது. அப்போது தெலுங்கு இசை அமைப்பாளர் ரமேஷ் நாயுடு என்னை அவரது குழுவில் இணைத்துக்கொண்டார். அதிலிருந்து என்னை வளர்த்துக்கொண்டேன். பிறகுதான் இளையராஜாவிடம் இரண்டு வருடம் பணிபுரிந்தேன். பிறகு ஆறு வருடங்கள் தெலுங்கு இசை அமைப்பாளர்கள்தான் எனக்கு உதவி புரிந்தார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு இன்னும் நான் கடனாளியாகத்தான் இருக்கிறேன். நான் ஐதராபாத்தில் குடியேறினால் எனக்கு பஞ்சரா ஹில்ஸில் வீடு வாங்கி தருவதாக 10 வருடத்துக்கு முன் தயாரிப்பாளர் சுப்புராமி ரெட்டி சொன்னார்" என ப்ளாஸ்பேக்கில் மூழ்கிய ரஹ்மான், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 'ஜெய்ஹோ...' பாடலை பாடிக்காட்டினார்.

இணையத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்

ரஹ்மானின் பாடல்கள் இணையத்தில் டவுன்லோட் ஆவது மிகச் சாதாரண விஷயம். அவர் இசையமைப்பில் ஆடியோவே வெளியிடப்படாத படத்தின் பாடல்கள் டவுன்லோட் ஆவதுதான் ஆச்சரியம். சமீபத்தில் வேட்டைக்காரன் படப்பாடல் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதேபோல், கெளதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரு பாடல்கள் இணையத்தில் கேட்க கிடைக்கின்றன. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை நான்கு பாடல்களுக்கான ஒலிப்பதிவு நடந்துள்ளதுது. இதில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், அன்பே என் காதலனே... எனத் தொடங்கும் பாடலும், எந்தன் நெஞ்சில் அற்புதம்... என்ற பாடலும் இணையத்தில் வெளியானது. Updated அஜித்தினுடைய அசல் படத்தின் தீம் மியூசிக்கும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

10 மே 2009

நகுலுடன் காதலா? மழுப்பும் சுனேனா

காதலில் விழுந்தேன் படத்தில் ஜோடியாக நடித்த நகுலும் சுனேனாவும் லவ்வுவதாக கோடம்பாக்கம் முழுக்க பேச்சாக இருக்க, அந்த ஜோடியே பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்கள் காதல் கசமுச பற்றி பேட்டி வேறு கொடுத்துள்ளது.காதலில் விழுந்தேனுக்கு பிறகு நகுலும் சுனேனாவும் மீண்டும் மாசிலாமணி என்ற படத்தில் நடிக்கிறார்கள்.
இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டபோது, "எனக்கு சுனேனாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால் இது காதல் இல்லை. பிரண்ட்ஷிப் மட்டும்தான். ஆனால் எல்லா விஷயங்களையும் வெளிப்படையா இருவரும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்காமானவங்க" என்று குழப்பினார்.இதுபற்றி சுனேனாவிடம் கேட்டபோது, "எங்களுக்கிடையே மிகவும் இணக்கமான ஒரு உறவு உள்ளது. நகுல் இருக்கிறார் என்றால் மனதுக்கு சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அவர் எனது முதல் ஹீரோ. மிகவும் பிடித்தமானவர். அவர் நட்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதுக்குமேல சொல்லத் தெரியல," என்று மழுப்பினார்.அப்ப இது 'அதானே...''அதேதான்!'

உங்கள் பிறந்த நாளின் மதி்ப்பை அறிய

உங்கள் பிறந்த நாளின் மதி்ப்பை அறிய(Find value of your Birthday) உங்கள் பிறந்த நாளின் மதிப்பை அறிய நான் ஏற்கனவே நமது பிறந்த நாள் முதல் இன்று வரையிலான தேதியை கணக்கிடுவதை பார்த்தோம். அந்த வலைப்பதிவை பார்க்காத வர்கள் இங்கு சென்று பார்க்கவும்.
அதுபோல் நமது பிறந்த தேதியில் உள்ள மதிப்பை அறிய இந்த தளம் நமக்கு உதவுகிறது.இதை கிளிக் செய்ததும் உங்களுங்கு இந்த மாதிரியான சரளம் ஓப்பன் ஆகும். அதில் உங்களுடைய பிறந்த தேதி-மாதம்-வருடம் கொடுத்து அதில் உள்ள submit கிளிக் செய்யவும். ஒரு சில வினாடிகளில் உங்க டைய பிறந்த நாளின் சிறப்புகளை இந்த தளம் வெளியிடும். இதில் நீங்கள் பிறந்த நாளின் கிழமை-உங்கள் அதிர்ஷ்ட எண்- ராசி -என அனைத்தும் தெரிவிக்கும். இன்றைய தேதிவரை உங்களுடைய வயது - மாதங்கள் - வாரங்கள் - நாட்கள்- மணி நேரங்கள் - நிமிடங்கள் - வினாடிகள் என அனைத்தும் வெளியிடும். தவிர உங்கள் பிறந்த நாளின் அன்று பிறந்த (உங்களுடன் சேர்த்து) மற்ற பிரபலங்களை யும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங கள் பிறந்த வருடத்தில் பிரபலமான டாப் 10 பாடல்களையும் அறிந்து கொள்ள லாம். உங்களுடைய அடுத்த பிறந்த நாளுக்கு எத்தனை மெழுகுவர்த்திகள் தேவைப்படும் என்பதையும் அது உண்டாகும் வெப்பத்தையும் அறிந்து கொள்ளலாம்.உங்கள் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது எனவும் இதில் அறிந்து கொள்ளலாம். உங்கள் அதிர்ஷ்ட மலர் -மரம்- கற்கள் -எண்கள் இதில் உள்ளது். இதற்கான இணைய சுட்டி தளம் சும்மா டைம் - பாஸ்க்கு கிளி்க் செய்து பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள். வாழ்க வளமுடன், வேலன். பிறந்த நாளின் மதிப்பை இதுவரை அறிந்தவர்கள்வலைப்பூவில் உதிரிப்பூக்கள் உங்கள் வீட்டில் ஏற்படும் பிறப்போ - இறப்போ - எதுவாக இருந்தாலும் அன்றைய தினசரி காலண்டரின் தேதியை கிழித்து உங்கள் டைரியில் ஒட்டி விடுங்கள்.. சில நாட்கள் கழித்து குறிப்பி்ட்ட நாளின் நட்சத்திரம்-திதி நமக்கு மறக்காமல் இருக்க அது உதவும்.

'ஜெய் ஹோ': ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி!

கேரளாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதற்காக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளமாகத் தரப்பட்டது. ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை யமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்.
ஜெய் ஹோ எனும் பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரூ.7 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விளம்பரதாரர்கள் செலுத்திய கட்டணத்தைச் சேர்த்தால் ரூ.10 கேடியைத் தாண்டும் என்கிறார்கள். சர்வதேச கேரள அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சியி, பங்கேற்ற ரஹ்மானுக்கு கட்டணமாக ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் வருவாயில் ஒரு பகுதி எச்ஐவி பாதித்த குழந்தைகளின் நலனுக்காகவும், இன்னொரு பகுதி இந்தக் குழந்தைகளின் நலனுக்காக பெரிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவதற்கும் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்தப் பள்ளி கட்டி முடிக்கப்படும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் வஹாப் கூறினார்.

நேற்று, இன்று, நாளை - ஒரு அப்பாவி கணவனின் கதை

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com