என் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள்.
இவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான்.
இப்படி இருக்க, ஒரு நாள் ஞாயிறன்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்க, எனக்கு மட்டும் செம போர் அடித்தது. சரி ஏதோ நம்மாலான ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று அவனது மொபைல்ஃபோனை எடுத்து, அந்த பெண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.
“சில விஷயங்களை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. மனதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வெளிப்படுத்த என் மனது தயார்….. இனிய காலை வணக்கம்”
சில நொடிகளில் அந்த பெண்ணிடம் இருந்து வந்த பதில்,
“என் மனதும் தயார்.”
இது போதுமே, அன்றைக்கு ஃபோனை காதில் வைத்தவன், இன்று வரை கீழே வைக்கவில்லை.
இதேபோல் நீங்களும் உங்கள் உயிர்த்தோழியை காதலியாக்க என்னாலான சில யோசனைகள்…
முதலில் உங்கள் தோழிக்கு உங்கள் மீது காதல் இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும்.
- உங்களை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பில் ஒரு சந்தோஷமும், பாதுகாப்பும் இருக்கும்.
- உங்களைப்பார்த்து சிரிக்கும் சிரிப்பிற்கும், மற்றவர்களை பார்த்து சிரிக்கும் சிரிப்பும் வித்தியாசமாக இருக்கும்
- நீங்கள் அடுத்த பெண்ணிடம் பேசினாலோ, பசங்களுடன் பேசினாலோ ஒரு பொசசிவ்னெஸ் காண்பிப்பாள்
- ஒரு நாள் கூட உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டாள்
- விடுமுறை நாட்களில் கூட உங்களைப்பார்க்க விரும்புவாள்
- மற்றவர்களைப்பற்றி உங்களிடம் புகார் செய்வாள் (பெண்/ஆண் நண்பர்கள்)
- காசு விஷயத்தில் கொடுத்த காசை திரும்ப கேட்கமாட்டாள், ரெஸ்டாரண்டில் அவள் பணம் கொடுப்பாள்.
- உங்கள் உடை விஷயத்தில் அக்கறை காட்டுவாள்
- ஃபோனில் பேசும்போது கூட என்ன உடை அணிந்துவருகிறாய் என்று கேட்பாள்
- ஒருமுறையாவது உங்களுக்காக அழுவாள்(அது சின்ன விஷயமாக இருந்தாலும்)
- உங்களிடம் இருக்கும்போது, தான் பெண் என்பதை மறந்து இருப்பாள் (பாட்டு பாடலாம், உடை கலைந்து இருக்கலாம் etc)
- சண்டை போட்டு நீங்கள் முறுக்கிக்கொண்டு இருந்தாலும், அவள் தானாக இறங்கி வருவாள்.
- நீங்கள் அவளுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு சுதந்திரம் கொடுப்பாள்
காதல் இருப்பது உறுதியாயின், கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தி காதலாக்குங்கள்
- தயவு செய்து முறுக்கிக்கொண்டு நிற்காமல், உடனடியாக காதலை சொல்லுங்கள்.
- அவளுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்கள், அவளுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை குறைத்துக்கொண்டே செல்லுங்கள்.
- அவளை அடுத்த ஆண்களுடன் பழகவிடாதீர்கள், உங்களுக்கு பக்கத்து சீட்டை எப்போதும் அவளுக்காக துண்டு போட்டு வையுங்கள் and vice versa ;).
- மேலே சொன்ன கதைபோல் மெசேஜ் அல்லது ஈமெயில் அனுப்புங்கள்
- இரவு நீண்டநேரம் பேசிக்கொண்டு(கடலை) இருக்கும்போது, அப்படியே லேசாக காதலை தலையைச்சுற்றி மூக்கைத்தொடுங்கள்
- உங்கள் வீட்டில் அவளை அறிமுகப்படுத்துங்கள், உங்கள் குடும்பம் எவ்வளவு அழகு என்று காட்டுங்கள். முக்கியமாக உங்கள் அம்மாவிற்கும் அவளிற்கும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொடுங்கள்.
- அவள் எங்கு கூப்பிட்டாலும் கூடவே செல்க. நெருக்கத்தில் உங்களை மறந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொல்லி விடுங்கள்.
- காதலைச்சொல்வதற்கு முன் ஒரு நிமிடம்(நிஜமாகவே 60 நொடிகள்) அவள் கண்ணையே பார்த்துக்கொண்டிருங்கள். அவள் கண்கள் நாணி, கண்களாலேயே என்ன வேண்டும் என்று கேட்கும்போது காதலைச்சொல்லுங்கள். கண்டிப்பாக சக்ஸஸ் தான்.