Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 ஜூலை 2012

கைதாகிறார் "போதை' ராகுல் சர்மா! * இந்திய கிரிக்கெட்டில் அதிர்ச்சி


மும்பை: நள்ளிரவு "பார்ட்டியில்' இந்திய வீரர் ராகுல் சர்மா, போதை மருந்து பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இவர் விரைவில் கைது செய்யப்பட இருப்பதால், இலங்கை தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்தவர் ராகுல் சர்மா, 25. சுழற்பந்துவீச்சாளரான இவர், சமீபத்திய ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த மே 20ம் தேதி மும்பை ஓட்டலில் நடந்த நள்ளிரவு "பார்ட்டி'யில் சக புனே வீரர் பார்னலுடன்(தென் ஆப்ரிக்கா) கலந்து கொண்டார். இதில் பங்கேற்றவர்கள் போதை மருந்து பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 இது தொடர்பாக நடந்த "ரெய்டில்' ராகுல் சர்மா, பார்னல் உட்பட 90 பேர் பிடிபட்டனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று முதல் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகின. இதில், ராகுல் சர்மா, பார்னல், முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடியின் மகன் அங்கன் பேடி உட்பட 42 பேர் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாக, துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் டிகோகர் தெரிவித்தார். இவர்கள் "கேனபிஸ்', "கோகெய்ன்' போன்ற போதை மருந்துகளை மாத்திரை வடிவில் உட்கொண்டுள்ளனர். அனைவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இன்று இலங்கை தொடர் துவங்க உள்ள நிலையில் ராகுல் சர்மா மீதான கைது நடவடிக்கை இந்திய அணியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர் இத்தொடரில் பங்கேற்பது இனி சந்தேகம் தான். "நான் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால், கிரிக்கெட்டை விட்டே விலகுவேன்,'' என அப்போது ராகுல் சர்மா சவால் விடுத்தார். இப்போது சோதனை முடிவு "பாசிட்டிவ்' என்ற நிலையில், என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை. இவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஐ.சி.சி., தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
பி.சி.சி.ஐ., நிதானம்:
இப்பிரச்னையில் அவசரப்படப் போவதில்லை என இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது. இதன் தலைவர் சீனிவாசன் கூறுகையில்,""அனைத்து தகவல்களையும் பெற்ற பின் ராகுல் சர்மா மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,''என்றார்.


நல்ல பாடம்: கங்குலி 
ராகுல் சர்மாவுக்கு முன்னாள் கேப்டன் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில்,""இளம் வீரர் என்பதால் "பார்ட்டியின்' போது தெரியாமல் தவறு செய்திருக்கலாம். இவர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. இது இவருக்கு சிறந்த பாடமாக அமையும். இதற்காக சிறிய தண்டனை அளிக்கலாம். இந்திய அணியில் பங்கேற்க தடை விதிக்கக் கூடாது,''என்றார்.

முத்தக்காட்சியில் துணிச்சலுடன் நடித்தேன்! இனியா8

Iniya replies about liplock with santhannuதங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் அம்மாவின் கைப்பேசி படத்தில் நாயகன் சாந்தனுவுக்கு, நாயகி இனியா முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெறுகிறது. இந்த காட்சியில் சாந்தனுவுக்கு முத்தம் கொடுத்த அனுபவம் பற்றி இனியா பேட்டியொன்றில் கூறியுள்ளார். 
அவர் தனது பேட்டியில், தங்கர்பச்சான் தேவையில்லாமல் முத்தக்காட்சியை வைக்க மாட்டார். கதைக்கும், காட்சிக்கும் அத்தியாவசியமாக இருந்ததால்தான் அந்த காட்சியை படமாக்கினார். படம் பார்க்கும்போது தெரியும். அதில் விரசம் இருக்காது. ஒரு அத்தை மகனை, மாமா மகள் எந்த அளவுக்கு நேசிக்கிறாள் என்பது அந்த காட்சியில் வெளிப்படும். அதனால்தான் துணிச்சலுடன் அந்த காட்சியில் நடித்தேன், என்று கூறியுள்ளார்.

இனியாவின் முத்தத்தை இன்முகத்துடன் பெற்ற சாந்தனு கூறுகையில், தங்கர்பச்சான் இயக்கத்தில் அம்மாவின் கைப்பேசி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்துக்காக என்னிடம் உடல் எடையை குறைக்க சொன்னார். ஆறரை கிலோ உடல் எடையை குறைத்தேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, அவருடைய வீட்டில் நடிப்பு பயிற்சி பெற்றேன். அவர் நடித்துக்காட்டியபடி, படத்தில் நடித்து வருகிறேன். அவர் சொன்னதை எல்லாம் செய்கிறேன். அப்படித்தான் இந்த முத்த காட்சியும். ஒரே டேக்கில் படமாக்கி விட்டார், என்றார்.

20 ஜூலை 2012

ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி


ஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்கள்.இது ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைத்திருபவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும். நம்மில் சிலர் ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைச்சுருப்போம்,நம்ம அதிகம் பயன்படுத்துற ஜிமெயில் கணக்கிலிருந்து, மற்ற கணக்கை Link செய்து மெயில் Compose செய்து அனுப்பலாம். கீழே படங்களை பார்த்தால் தெளிவாக புரியும்.

                              
   முதலில் உங்கள் மெயின் ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து கொள்ளுங்கள்.


                                                    
மெயின் ஜிமெயில் கணக்குக்குள் சென்று settings,Account and Import,Send mail from another   address கிளிக் செய்யவும். இங்கு எந்த ஈமெயிலை  லிங்க் செய்ய  வேண்டுமோ அதை தந்து Next step கிளிக் செய்யவும்.

 
                                           
                                              Send verification கிளிக் செய்யுங்கள்
                                      

அடுத்து     VERIFICATION CODE கேட்கும். அதற்கு நீங்கள் எந்த ஈமெயில்       கணக்கை லிங்க் செய்ய தந்தீர்களோ அதற்கு Verification   ஈமெயில் வரும்.
அங்கு சென்று Confirmation code number யை  verification box யில் தந்து விடுங்கள்.
வேலை முடிந்தது.பிறகு உங்கள் மெயின் கணக்குக்குள் நுழைந்து மெயில் Compose  பண்ணினால் அங்கு புதுசாக ஒரு From : Dropdown  வந்திருக்கும் அதில் நீங்கள்  கேட்ட  ஈமெயில்  கணக்கு    வந்திருக்கும். நீங்கள் அந்த கணக்குக்குள்  நுழையாமலே இந்த கணக்கிலிருந்தே அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்பலாம்.

அதிகம்  பயன்படுத்தாத   சில   கணக்கை   லிங்க்   செய்து  கொள்ளுங்கள்.சில சமயம்  அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்ப தேவை இருந்தால்,மெயின்
கணக்கிலிருந்தே  நீங்கள் மெயில் அனுப்பி கொள்ளலாம்.

ஷங்கர் படத்தில் பவர் ஸ்டார்! ஒரு ஷாக் நியூஸ்!!இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தில் பிஸியாக பரபரப்பாக பேசப்படும் ஒரே ஸ்டார் என்றால் அது பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் தான். எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர்  தலையை கோதி  விடும் ஸ்டைலும், எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் அதை அசால்ட்டாக எடுத்து கொள்ளும் மனபக்குவம் கொண்டவர், தனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க, பேஸ்புக்கில் 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க என்று சிரிக்காமல் ‌சொல்பவர் இந்த மனிதர்.

தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், முதன்முறையாக சந்தானத்துடன் கைகோர்த்து இருக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கிய மணிகண்டன் என்பவர் இவர்களை வைத்து "கண்ணா லட்டு திண்ண ஆசையா" என்ற படத்தை இயக்கி வருகிறார். ராமநாரயணன் இப்படத்தை தயாரிக்கிறார். பவர்ஸ்டார், சந்தானம் ஆகியோருடன் சேது என்ற மற்றொரு ஸ்கின் டாக்டரும் நடிக்கிறார். படத்தின் கதைப்படி இவர்கள் மூவரும் ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள். ஆனால் அந்தப்பெண் இவர்கள் மூவரில் யாரை காதலிக்கிறாள் என்பதை கலகலப்பாக சொல்ல போகிறாராம் டைரக்டர். தற்போது இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார் பவர்ஸ்டார்.

இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர், விக்ரமை வைத்து இயக்கும் "ஐ" படத்தில் ஒரு முக்கிய ரோலில் சந்தானத்துடன் சேர்ந்து பவர் ஸ்டாரும் நடிக்கிறார். என்ன நம்பமுடியவில்லையா...? நம்பாவிட்டாலும் அதுதான் நிஜம்!

இதுகுறித்து பவர்ஸ்டார் நம்மிடம் கூறியதாவது, ஷங்கர் படத்தில் நடிப்பது உண்மை. எப்படி இப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டால் எல்லாம் கடவுளின் அருள் என்றார். சரி படத்தில் உங்கள் ரோல் என்ன என்று கேட்டபோது, சாரி! இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஷங்கர் படம், இப்போது 3 நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். இன்னும் 2நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றார் ரொம்ப அடக்கமாய். மேலும் தான் நடித்துள்ள "ஆனந்த தொல்லை" படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், தீபாவளி அன்று தான் என் படம் ரிலீஸ் ஆக வேண்டும். அப்போது தான் ரசிகர்களிடம் அது ரீச்சாகும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றார் சிரிக்காமல்...!

எது எப்படியோ, பவர்ஸ்டார் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!!

Recycle பின்லிருந்து செய்த கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது??

நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக செய்து விடுவோம்.பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம்.Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?ஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

                                                                 Recuvaகீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும் கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை ஐகானுடன்  வரும்.   இப்படி   வந்தால்   உங்களது  கோப்பை(File)  திரும்ப  எடுக்க முடியும்  என்று  அர்த்தம். பிறகு   வலது  ஓரம் இருக்கும் Recover கிளிக் செய்தால் உங்களது  கோப்பு  திரும்ப  கிடைத்துவிடும்.

17 ஜூலை 2012

Skype வீடியோ கோல்களை பதிந்து கொள்ள இலவச மென்பொருள்! ( + தரவிறக்க தொடுப்பு)ஸ்கைப் (Skype) ஊடான மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புக்கள் அனைத்தையும் ஒலி-ஒளி வடிவமாக உயர் தரத்தில் (HD) பதிந்துகொள்ள (Record) உதவும் ஒரேயொரு சிறந்த மென்பொருளையே இன்று நீங்கள் தரவிறக்கப்போகிறீர்கள்.
சிறப்பம்சங்கள்.
  • வீடியோ கோல்களை நேரடியாக உங்கள் கணனியில் பதிந்துகொள்ள முடியும். ( ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் அழைப்புக்களையும் பதிந்துகொள்ள முடியும்! )
  • screen sharing இன் போதும் வீடியோவை பதிந்துகொள்ள முடியும். ( இது ஒன்லைன் கல்வியின் போது பயண்படும்)
  • தன்னியங்கி அழைப்பு பதிவு. (Automatic call recording )
  • தானியங்கி சட்டிங் பதில் அளிப்பு. (Automatic chat reply)
அளவு :10.6 MB
தரவிறக்க : Download now :)
  

கணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்


உங்கள் கணணி, வந்தட்டுக்கள், யு.எஸ்.பிக்கள், நினைவு அட்டைகள் (மெமரிக்கார்ட்) போன்றவற்றில் ஏற்பட்ட வைரஸ்தாகுதல் அல்லது பழுதுகாரணமாக முழுத்தரவுகளும் அழிக்கப்பட்டுவிட்டனவா? அவற்றை மீட்டெடுக்க முடியவில்லையா?
அதற்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருளே இது!
இலகுவாகவும், காலவரையறைக்கமையவும் தரவுகளை மீட்டுத்தர இவ் மென்பொருள் துணை புரிகின்றது!
கணணியில் நிறுவிப்பயண்படுத்தவேண்டிய அவசியமில்லாததால், உங்கள் யு.எஸ்.பி சாதனங்களில் இவ் மென்பொருளை தரவிறக்கிவைத்துக்கொள்வதன் மூலம், தற்செயலாக அல்லது விபத்தாக அழியும் தரவுகளை மீட்கத்துணை புரியும்!
அளவு : 8 MB
தரவிறக்க : Download here!

கார்த்தியின் சம்பளம் ரூ.14கோடியாம்!!

நடிகர் கார்த்தியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரூ.14 கோடிக்கு சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் ஒருவர் கார்த்தியிடம் பேசியுள்ளாராம்.பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, சிறுத்தை, சகுனி ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை. இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது.சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.


Actor_Karthi_Saguni_Movie_First_Look_Wallpapers_Posters_02


அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம். விஜய், அஜீத்  போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு இந்த சம்பளம் ரூ 20 கோடியில் போய் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். 
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com