Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

12 ஆகஸ்ட் 2009

நானோ கார் வேண்டாம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

டாடா நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்போகும் நானோ காருக்கு இப்போதே இஎம்ஐ செலுத்தச் சொல்வதால், பல வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா நிறுவனத்திடம் நானோ கார் கேட்டு சுமார் 2 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் முதல்கட்டமாக 1 லட்சம் பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் முதல் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

ஒதுக்கீடு பெறாதவர்களில் சுமார் 55 ஆயிரம் பேர், அடுத்த ஒதுக்கீடு வரை காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் செலுத்தியுள்ள முன்பணத்துக்கு 8.75 சதவீத வட்டி தருவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒதுக்கீடு பெற்றுள்ளவர்களுக்கு 2011ல் தான் டெலிவரி கிடைக்கும். எனினும், வங்கிகள் மூலம் ஒதுக்கீடு பெற்ற அனைவருக்கும் மாதாந்திர தவணை (இஎம்ஐ) கடந்த மாதத்திலிருந்தே தொடங்குவதாக டாடா கூறி உள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர் தங்களது ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளனர். ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை வந்துள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

இதுவரை 2,475 கார்கள் வழங்கப்பட்டுள்ளது. ரத்து செய்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கார் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்து என டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட்டின் Xbox வித்தை

வீடியோ விளையாட்டுகள் என்பது ஒன்றும் சின்ன பசங்க விஷயம் என்று ஒதுக்கி விடும் விஷயமில்லை. உலக அளவில் சென்ற 2008ஆம் ஆண்டு மொத்த வீடியோ விளையாட்டு பொருட்கள்,மென்பொருட்கள் விற்பனை மட்டும் 32 பில்லியன் டாலர்கள்.கணினியில் விளையாடப்படும் விளையாட்டுகளின்றி,வீடியோ விளையாட்டுகளுக்கேன்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கேமிங் கன்சோல்(Gaming Console)எனப்படும் விளையாட்டு இயக்கு பெட்டிகள் இப்போது உலகமெங்கும் சக்கை போடு போட்டுவருகின்றன.முதல் மூன்று இடத்தில் கடும் போட்டியுடன் இருப்பவை நின்டெண்டோவின்(Nintendo) விய்(Wii)மற்றும் DS,மைக்ரோசாப்ட்டின் Xbox மற்றும் சோனியின் ப்ளே ஸ்டேஷன் 3.

ஒருவருக்கொருவர் சளைக்காமல் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு இயக்கு பெட்டிகளையும் மென்பொருட்களையும் வெளியிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ பெட்டிகளை இயக்க ஒரு கட்டுப்பாட்டு பெட்டியும்(Gaming Controller)உண்டு.நின்டெண்டோவின் விய் ஒரு அருமையான விளையாட்டு சாதனம்.இதனுடன் இணைந்த சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை கையில் வைத்து கொண்டு எந்த திசையில் அசைத்தாலும் வீய் அதை உணர்ந்து கொள்ளும்.உதாரணத்திற்கு இந்த வீடியோ சாதனத்துடன் டென்னிஸ் விளையாடும் போது சிறிய கட்டுப்பாட்டு பெட்டியை உபயோகித்து பந்தை அடிப்பது போல் காற்றில் பாவனை செய்தாலே போதும்.இதே போல அதி துல்லிய வீடியோ விளையாட்டுகளை கையாள வல்லது சோனி ப்ளே ஸ்டேஷன். கடும் போட்டி கொடுத்த மைக்ரோசாப்ட் Xbox இப்போது தனது புதிய கண்டுபிடிப்பான Project Natal ஐ அடுத்த வருடம் வெளியிட இருக்கிறது.அசைவுகளை உணர்தலில் ஒரு படி மேலே சென்று,நமது கை,கால்கள் மற்றும்,உடலின் அசைவுகள்,மற்றும் குரலை கொண்டே Xbox சாதனத்துடன் விளையாட முடியும்.இதற்கென ஒரு விசேஷ சென்சார் கருவியை Xbox சாதனத்துடன் இணைத்தால் போதும்.இதுவே project Natal சென்சார் கருவி எனப்படுகிறது. திரைப்படங்களை,கையை காற்றில் அசைத்து,தேர்வு செய்து பார்க்கலாம்.மேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவை பாருங்கள்.

You might also like:

கோலிவுட்டை பன்றிக்காய்ச்சல் படுத்தும் பாடு!

பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குமோ என்ற அச்சம் காரணமாக வெளிநாடுகளில் நடக்கவிருந்த பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். அசல் படப்பிடிப்புக்காக ஏற்கெனவே மலேஷியா - சிங்கப்பூர் சென்று வந்தனர் சரண் மற்றும் குழுவினர். அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக பல வெளிநாடுகளுக்குப் போகத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பன்றிக்காய்ச்சல் பயம் காரணமாக இப்போது அடியோடு அந்த திட்டத்தையே ரத்து செய்துவிட்டனர். அதேபோல, விஜய் படத்தின் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது அந்த எண்ணத்தையே கைவிட்டுவிட்டனராம். தென்னமெரிக்காவில் நடக்கவிருந்த த்ரிஷா நடிக்கும் சங்கம் படப்பிடிப்பும் ரத்தாகிவிட்டது.
Sameera Reddy
வெளிநாட்டுப் படப்பிடிப்புகள் ரத்து ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் வட இந்திய நடிகைகளுடன் நடிப்பதை அடியோடு தவிர்த்து வருகிறார்கள் முன்னணி தமிழ் நடிகர்கள். முடிந்தவரை, காதல் காட்சிகளை சில நாட்கள் தள்ளி எடுத்தால் போதும் என்று இயக்குநர்களிடம் கூறிவருகிறார்களாம். சமீரா ரெட்டி மும்பைக்கே போகாமல் சென்னையிலேயே தங்கியிருக்கிறாராம்.

இனி செல்போனிலும் "HD" தொழில்நுட்பம்!

lankasri.comநாளுக்கு நாள் பெருகிவரும் மொபைல் போன் பயன்பாட்டை அடுத்து அதை தயாரித்து தரும் நிறுவனங்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் தாங்கள் தயாரிக்கும் போன்களின் புதிய புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி பயனாளர்களை கவர வேண்டிய கட்டாயத்துக்கு தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் அண்மையில் தென்கொரிய நாட்டை சார்ந்த சாம்சங் நிறுவனம் தண்ணீரிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு மொபைல் போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அதே போல் சூரிய ஒளியில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை புகுத்தி ஒரு போனையும் அறிமுகப்படுத்தியது.அதே போல் இப்போது இருக்கும் TFT-LCD திரையின் அடுத்த கட்டமாக உள்ள AMOLED என்ற தொழில்நுட்பத்தை புகுத்தி Samsung Jet என்ற போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இப்படி புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தென்கொரிய நிறுவனங்கள் தான் முதலிடத்தில் உள்ளன. இப்போது தென்கொரிய நாட்டை சாந்த மற்றொரு நிறுவனமான எல்.ஜி நிறுவனம் மொபைல் திரையில் மிக உயர்ரக தொழில்நுட்பமாக முதல் முறையாக HD (HighDefinition) தொழில்நுட்பத்தை புகுத்தி "Chocolate BL40" என்ற பெயரில் ஒரு போனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கிட்டதட்ட எல்.சி.டி டிவிக்களில் பயன்படுத்தப்படும் இந்த HD தொழில்நுட்பம் முதமுறையாக மொபைல் போனில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நாம் நமது மொபைல் போனில் எல்.சி.டி டிவியில் காட்சிகளை பார்ப்பது போன்ற ஒரு புதிய அனுபவத்தை பெறலாம். இன்னும் இந்திய சந்தையில் வராத இந்த போனின் விலை 38000/- என்ற குறியீட்டு விலைக்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. lankasri.com

நமீதாவின் கடின உழைப்பு வெற்றி பெறும் - சரத்குமார்

ஜெகன்மோகினி திரைப்படும் அந்தக் காலத்தில் பெரும் வெற்றி பெற ஜெயமாலினியின் கடும் உழைப்பும், அபார நடிப்பும் உதவியாக இருந்தது. அதேபோல இன்று ரீமேக் செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகினி படமும் நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்று பாராட்டியுள்ளார் நடிகர் சரத்குமார்.
Sarathkumar with Namitha in Jagan Mohini Trailer Launch
நமீதா, நிலா நடிப்பில் ஜெகன்மோகினி ரீமேக் ஆகியுள்ளது. ஜெயமாலினி கேரக்டரில் நமீதா நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் ஆடியோவை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். நடிகர்கள் சரத்குமார், ராஜா, நடிகைகள் நமீதா, நிலா, தயாரிப்பாளர்கள் முரளி, அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நமீதா பேசுகையில், படத்தின் கதையை இயக்குநர் விஸ்வநாதன் என்னிடம் சொன்னபோது, இது வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. ஆனால் நடிக்க ஆரம்பித்த பின்னர் அந்த சந்தேகம் போய் விட்டது என்றார். சரத்குமார் பேசுகையில், ஒரிஜினல் ஜெகன்மோகினி, ஜெயமாலினியின் சிறப்பான நடிப்பால் வெற்றி பெற்றது. அதேபோல, இந்த ஜெகன்மோகினியும், நமீதாவின் கடின உழைப்பால் பெரும் வெற்றி பெறும் என்றார். அபிராமி ராமநாதன் பேசுகையில், படத்தின் சில காட்சிகளை பார்த்து நான் பிரமித்துப் போய் விட்டேன். ஹாரி பாட்டர், ஹாலிவுட் படங்களின் தரத்தில் அவை உள்ளன. தமிழ் சினிமாவின் தரத்தை இந்தப் படம் மேலும் உயர்த்தும் என்றார்.

உலகின் முதல் 2 TB வன்தட்டுகள் : ஹிடாச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியது

Hitachi Global Storage Technologies நிறுவனம் 2 TB கொள்ளளவுடைய வன்தட்டுக்களை(Hard Disc) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வன்தட்டுக்கள் 7200 RPM வேகத்தில் இயங்கக்கூடியவை. இந்த வன்பொருளின் பெயர் Deskstar 7K2000 . இது தான் உலகின் அதிகபட்ச கொள்ளளவுடைய வன்தட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 32 MB cache மெமரியும் உள்ளது. 2007 ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகின் முதல் 1 TB கொள்ளளவுடைய Deskstar 7K1000 என்ற வன்தட்டை வெளியிட்டதும் இந்த நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த பவரை உபயோகித்து அதிக performance சை கொடுப்பது இந்த வன்தட்டின் சிறப்பம்சமாகும் . இதன் விலையை இன்னும் இந்நிறுவனத்தினர் வெளியிடவில்லை.

பொன்னர் சங்கரில் தீபிகா?

பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க, அவரது தந்தை தியாகராஜன் இயக்கும் பொன்னர் சங்கர் படத்தில் தீபிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றனவாம். கலைஞர் கருணாநிதியின் நூல் பொன்னர் சங்கர். இப்போது இது திரைப்படமாகிறது. தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். பிரஷாந்த் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் பாலிவுட்டின் கனவுக் கன்னி தீபிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயன்று வருகிறார்களாம். அவர் இதுவரை சம்மதம் தெரிவித்ததாக தெரியவில்லை. இருப்பினும் முயற்சிகள் தொடருகிறதாம். தீபிகா ஒரு வேளை ஒப்புக் கொண்டால் கலைஞரின் படைப்பில் நடிக்கும் முதல் பாலிவுட் நாயகி என்ற பெருமை தீபிகாவுக்குக் கிடைக்கும்.
Deepika Padukone
தமிழில் நடிக்க தீபிகாவுக்கு ஆட்சேபனை இல்லையாம். ஆனால் 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இதனால்தான் ஏற்கனவே அவரை அழைத்து வர முயன்றவர்கள் அமைதியாகி விட்டனர். இந்த நிலையில்தான் தியாகராஜன் தீபிகாவை அழைத்து வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

Blog-ன் Secret Followers எத்தனை? கண்டுபிடிப்பது எப்படி? Blogger Tips

ஆராய்ச்சியை புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படை விவரம். Blogger-ல் (Blogspot) நமக்கு தேவையான வலைப்பூவை இரண்டு விதமாக Follow செய்யலாம். 1. வெளிப்படையாக (Publicly) 2. இரகசியமாக ( Privately or Anonymously or Secretly) எந்த விதமாக Follow செய்தாலும், அந்த வலைப்பூவின் புதிய பதிவுகளை Blogger Dashboard-ல் உள்ள ‘Reading List' வழியாக Follow செய்பவர் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். ’Public Followers" எத்தனை என்பதை Followers Widget-ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் “Secret Followers" எத்தனை என்பதை நேரடியாக தெரிந்துகொள்ள வழி இல்லை. குறிப்பிட்ட Follower நமக்கு தேவையில்லை என்றால் அவரை Block செய்துவிடலாம். அவர் ”Blocked Followers" லிஸ்ட்டுக்கு போய்விடுவார். ஆராய்ச்சியில் இறங்கியது ஏன்? ”யாராவது என் வலைப்பூவை இரகசியமாக Follow செய்கிறார்களா? அப்படி என்றால் அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியுமா? ” இது எனக்கு ரொம்ப நாளாகவே இருக்கும் ஒரு சந்தேகம். அதிர்ஷ்டவசமாக அந்த சந்தேகத்தில் பாதியை நானாகவே Solve செய்துவிட்டேன். எனக்கு தெரிந்து இதற்கு முன் யாரும் இதை Solve செய்யவில்லை. (தற்பெருமை அடித்துக்கொள்ள இதுதான் சரியான சமயம். சான்ஸை விட்டுடாதே! சரி.... டும் டும் டும்). இதற்கு விடை கூகிளில் எவ்வளவு நேரம் தேடினாலும் கிடைக்காது. ஏனென்றால் நான்தான் முதலில் கண்டுபிடித்தேன். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவு தமிழில் முதல்முதலாக வெளிவருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. துப்பறியும் காண்டம். முதலில் உங்கள் கூகிள் கணக்கில் Login செய்துகொள்ளவும். "Blocked Followers" எண்ணிக்கையை (If any) தெரிந்துகொள்ள Blogger Dashboard-ல் உள்ள Followers கிளிக் செய்யவும். அடுத்து வரும் பக்கத்தில் Show Blocked Followers கிளிக் செய்து Blocked Followers எண்ணிக்கையை கண்டுபிடித்துக் கொள்ளலாம். உங்கள் வலைப்பூவின் "Secret Followers"-ன் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள உங்கள் "Public Followers" எண்ணிக்கையையும், “Blocked Followers" எண்ணிக்கையையும் கூட்டிக் கொள்ளவும் (SUM1). அடுத்து http://www.google.com/friendconnect செல்லவும். உச்சகட்டம் (Climax) Google FriendConnect பக்கத்தில் Total Members என்று ஒரு எண்ணிக்கை வரும். அதில் SUM1 கழித்துவிட்டால் மீதி வருவதுதான் உங்கள் வலைப்பூவின் Secret Followers-ன் எண்ணிக்கை. எடுத்துக்காட்டாக எனக்கு Total Members கூகிள் FriendConnect-படி .... 129 Public Followers ................................................118 Blocked Followers................................................. 7 அப்படியானால் ஃபார்முலா பின்வருமாறு Total Members - Public Followers - Blocked Followers = Secret Followers. 129 - 118 - 7 = 4 Secret Followers. நானே என்னை இரகசியமாக Follow செய்து கொள்கிறேன். (Blogger Reading List-லே என் பதிவுகள் ஒழுங்கா வருதான்னு செக் பண்ண வேணாமா?). அப்படின்னா என்னை கழித்த பிறகு 3 வருகிறது. இப்ப கண்டுபிடிச்சுட்டேன்!! என் வலைப்பூவை 3 பேர் இரகசியமாக Follow செய்கிறார்கள் என்று.

'களவாணி' ஹெலன்!

மலையாளத்திலிருந்து இன்னொரு நாயகி தமிழுக்கு வருகிறார். அந்த அழகியின் பெயர் ஹெலன். நடிக்கவிருக்கும் படம் களவாணி. மலையாளத்தில் கலாபவன் மணி, விமலா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அபூர்வா 18 இயர்ஸ் ஓல்ட். இப்படத்தில்தான் ஹெலன் நடித்துள்ளார்.
Apurva movie still
இந்தப் படம் இன்னும் முடியாத நிலையில் தமிழ் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. பசங்க படத்தின் நாயகன் விமல் நாயகனாக நடிக்கும் களவாணி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஹெலன். கிரீடம் பட இயக்குநர் விஜய்யின் உதவியாளர் சற்குணம் இயக்குகிறார். சரண்யா, இளவரசு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். செப்டம்பர் 4ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறதாம். ஏற்கனவே ஏகப்பட்ட மலையாள நடிகைகளால் திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழில் தனக்கும் ஒரு இடம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹெலன். தமிழ் எல்லோருக்கும் சொர்க்கம், ஹெலனுக்கும் அது 'ஹெவன்' ஆக அமையட்டும்!

இலங்கைப் பதிவர்கள் சந்தோசத்தில்...

இலங்கைப் பதிவர்களிடையே தப்போது அதிகமாகப் பேசப்படுகின்ற விடயம்தான் இலங்கைப் பதிவர்கள் சந்திப்பு. சந்திப்புக்கான நேரம், இடம், நோக்கங்கள் என்பன தீர்மானிக்கப் பட்டுவிட்டன. பதிவர் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கோர் முக்கிய திருப்பு முனையாக அமைய இருக்கின்றன. நீண்ட காலமாக எதிர் பார்க்கப்பட்ட விடயம் தற்போது கை கூடியிருக்கிறது. காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை . நேரம் : காலை 9 மணி. இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம், இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்) கொழும்பு 06. நோக்கங்கள் : இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல். புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல் இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல். பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல். பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல் இன்னும் பல‌.. வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும். லோஷன் : arvloshan@gmail.com புல்லட் : bullettheblogger@gmail.com வந்தி : vanthidevan@gmail.com ஆதிரை : caskaran@gmail.com முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும். இங்ஙனம் ஏற்பாட்டுக் குழுவினர். பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும். ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும். யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள். இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம். உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

09 ஆகஸ்ட் 2009

மீண்டும் பெயர் மாறிய அமோஹா

செப்டம்பர் 30ல் கூகுள் வேவ்

கூகுள் வேவ் குறித்து கம்ப்யூட்டர் மலரில் வந்த தகவல்கள் உங்கள் மனதில் இன்னும் இருக்கும் என எண்ணுகிறேன். சென்ற மே மாதம் நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கில் இது குறித்த அறிவிப்பினை கூகுள் முதல் முதலில் வெளியிட்டது. ஆனால் அதனை அடுத்து மைக்ரோசாப்ட் தன் பிங் (Bing) சேவை குறித்து செய்திகள் வெளியிட்டு டிஜிட்டல் மீடியா கவனத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது. கூகுள் மே மாதம் அறிவித்த போது இது கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி சாதனையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. தற்போதைய ஜிமெயிலின் ஒரு எக்ஸ்டென்ஷனாகத்தான் இது இருக்கும் என அனைவரும் எண்ணினார்கள். இதன் மூலம் பயனாளர்கள் இமேஜஸ், வீடியோ மற்றும் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்றும் பலர் ஒரே நேரத்தில் எளிதாகத் தங்களுக்குள் உரையாடலை நடத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 30ல் இந்த சேவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே 6000 டெவலப்பர்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு அவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இதனை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தந்து வருகின்றனர். அடுத்து பொது மக்களில் ஒரு லட்சம் பேரைத் தேர்ந்தெடுத்து சிக்கள்கள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்க கூகுள் முடிவு எடுத்துள்ளது. இவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இன்னும் கூகுள் அறிவிக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து தகவல் பெற http://wave.google.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்.

மகனை தமிழிலும் பாட வைப்பேன்- ரகுமான்

என் மகன் ஆலிம் நிச்சயம் தமிழ்ப் படத்திலும் பாடுவான், என்று இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் கூறினார். சரிகம ஆடியோ நிறுவனம், 'ஊலலலா' எனும் இசை ஆல்பத்தை தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆல்பத்தின் முதல் பிரதியை வெளியிட, இயக்குநர் கவுதம் மேனன் பெற்றுக்கொண்டார். விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, இந்த ஆல்பத்தில் பாடியவர்களுக்கும், இசையமைத்தவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஒற்றுமையாக இருங்கள். சந்தோஷமாக இருங்கள், என்றார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: உங்கள் மகன் ஒரு 'ஹாலிவுட்' படத்தில் பாடியிருக்கிறான். அவனை தமிழ் படத்திலும் பாட வைக்கும் எண்ணம் இருக்கிறதா? என் மகன் ஆலிம் ரஹ்மானுக்கு ஆறரை வயது ஆகிறது. இப்போதுதான் இசை கற்று வருகிறான். ஹாலிவுட் படத்தில், ஒரு பாட்டு பாடியிருப்பது உண்மைதான். அடுத்து தமிழ் படத்திலும் அவனை பாட வைக்கும் எண்ணம் இருக்கிறது. நிச்சயமாக தமிழ் படத்தில் பாடுவான், என்றார் ரஹ்மான்.
AR Rahman
நிகழ்ச்சியில் சரிகம நிறுவனத்தின் பிஆர் விஜயலட்சுமி, கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை நிகில் முருகன் செய்திருந்தார்

Microsoft Virtual PC 2007 – Tech Videos

Using Microsoft Virtual P.C. 2007

Virtual PC is currently a free download from Microsoft.

You can use this software to create a host environment for your SBS network on a Windows XP machine.

மேலாடை துறந்த ஷரோன் ஸ்டோன்!

thatsTamil RSS feed thatsTamil  iGoogle gadgets Free SMS Alerts
51 வயதிலும் கவர்ச்சி-மேலாடை இன்றி போஸ் கொடுத்த ஷரோன் ஸ்டோன்!

வயது 51. ஆனாலும் இன்னும் கவர்ச்சி குறையவில்லை ஷரோன் ஸ்டோனு்கு. இந்த வயதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இதழுக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் ஸ்டோன்.

Sharon Stone

ஒரு காலத்தில் ஹாலிவுட்டைக் கலக்கியவர் ஷரோன் ஸ்டோன். இன்னும் கூட அவர் மீதான கிரேஸ் குறையாமல்தான் உள்ளது. தற்போது ஸ்டோனுக்கு 51 வயதாகிறது. இந்த வயதில், பாரிஸ் மேட்ச் என்ற பிரான்ஸ் இதழின் அட்டைப் படத்துக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் ஸ்டோன். படு ஸ்டைலான உடையுடன் மேலாடை மட்டும் இல்லாமல், அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார் ஸ்டோன். இதுகுறித்து ஸ்டோன் கூறுகையில், ஒரு கேரக்டருக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ, அதற்கேற்ப நடிப்பது எனது ஸ்டைல். அந்த கேரக்டரின் மூட் மற்றும் முக்கியத்துவக்குக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன். அப்படிப் பார்க்கும்போது நிர்வாணம் எல்லாம் பெரிய விஷயமில்லை என்று கூறியுள்ளார். ஸ்டோன் இப்படி கவர்ச்சிகரமாக காட்சி அளிப்பது முதல் முறையல்ல. 1992ல் வந்த பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் படு கலக்கலான வந்துள்ளார். மேலும், ஆஸ்கர் விருது விழாக்களுக்கும், பிற திரைப்பட விழாக்களுக்கும், கவர்ச்சி சொட்டச் சொட்ட வந்து பயமுறுத்தியவர்தான் ஸ்டோன் என்பது நினைவிருக்கலாம்.

Inside Sony’s Blu-ray factory

Inside Sony’s Blu-ray factory

கந்தசாமியுடன் மோதும் பொக்கிஷம்!

Pokkisham
thatsTamil RSS feed thatsTamil  iGoogle gadgets Free SMS Alerts
விக்ரம் நடிப்பில் கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள கந்தசாமி திரைப்படம் விரைவில் திரையைத் தொடவிருக்கிறது. ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தப் படம் 900 திரையரங்குகளில் ரிலீசாவதால், அந்த தேதியில் வெளியாகவிருந்த கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படமே தள்ளிப் போடப்படுகிறது. ஆனாலும் ஒரே ஒரு படைப்பாளி தனது படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக கந்தசாமியுடன் மோதத் தயாராக உள்ளார். அவர் சேரன்! அவரது பொக்கிஷம் படம் நாளை சென்சார் சான்றிதழ் பெறுகிறது. கந்தசாமி வெளியாகும் அதே தேதியில் பொக்கிஷமும் உலகமெங்கும் வெளியாகிறது. 'நான் எந்தப் படத்தையும் போட்டியாக நினைப்பதில்லை. காரணம் நான் போட்டிக்குப் போவதில்லை. இந்தப் படம் இதயப்பூர்வமான காதல் கதை. இளைஞர்கள் விரும்பும் படமாக இருக்கும். ஜெயிக்கும்', என்கிறார் சேரன். கந்தசாமி 'மாஸ்' படம், பொக்கிஷம் 'க்ளாஸ்' படம்... ஜெயிக்கப் போவது யார் என்று பார்க்கலாம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com