Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

30 ஆகஸ்ட் 2009

விஜய் காங்.கில் சேர்ந்தால் படங்களைப் புறக்கணிப்போம்: கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம்

நடிகர் விஜய் காங்கிரசில் சேர முடிவு செய்தால், அவரது படங்களை புலம்பெயர் தமிழர்கள் முழுமூச்சாக புறக்கணிப்போம் என கனடாவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த் [^], சரத்குமார் [^], கார்த்திக் [^] பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் [^] வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன் வந்தாலோ, அப்படியொரு முடிவு எடுத்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். இந்தியா வழங்கிய ராணுவ உதவிகள்... மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு இலங்கையின் தற்காப்புக்கு ஹெலிகாப்டர்கள், ரோந்து கப்பல்கள், டாங்கிகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார். சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) 'பீஷ்மா' ரக டாங்கிகளை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளவாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில்தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் 2007 ஜூன் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, புலிகளை அழிக்க சிங்கள பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சொன்னார். இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார். இந்தியா இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு [^] அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் -திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. தமிழர்களை அழிக்க நினைக்கும் ராகுல் இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
Vijay
எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!

சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி. தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை [^] நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.
Vikram and Shreya
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா [^] வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ் [^]ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. அனாத்து திரையரங்குகளின் வசூல் விவரம் திரையரங்கத்தின் பெயர் மொத்த வசூல் அபிராமி காம்ப்ளக்ஸ் 27,18,184.00 (33790 ரசிகர்கள்) சத்யம் [^] காம்ப்ளக்ஸ் 43,17,072.00 (44899) ஆல்பர்ட் காம்ப்ளக்ஸ் 12,77,317.00 (21659) ஐநாக்ஸ் காம்ப்ளக்ஸ் 14,58,045.00 (14258) ஐடிரிம்ஸ் காம்ப்ளக்ஸ் 9,23,463.00 (13947) கமலா தியேட்டர் 11,76,679.00 (15697) மகாராணி தியேட்டர் 8,60,161.00 (19859) மெலோடி தியேட்டர் 6,82,536.00 (13944) சங்கம் தியேட்டர் 15,64,458.00 (21707) சாந்தி காம்ப்ளக்ஸ் 8,28,214.00 (16646) உதயம் காம்ப்ளக்ஸ் 15,37,649.00 (31641) மொத்தம்............... 1,73,43,778.00 2,48,047 இந்த ஏழு நாட்களில் படம் [^] பார்த்தவர்கள் மொத்தம் இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து ஏழு பேர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும், என்று குறிப்பிட்டுள்ளார்.

கோப்புகளை மறைப்பது எப்படி?

எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை எழுத்துபலகையைத்( Notepad ) திறந்து அதில் சேமிக்கவும். அந்த வாக்கியங்களில் இருக்கும் "type your password here" என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லை வழங்குங்கள் (மேற்கோள்கள் இன்றி தரவும்). இதை எந்தக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம். அந்த கோப்பை ஏதாவது ஒரு பெயர் கொடுத்து *.bat கோப்பாக சேமிக்கவும். உதாரணமாக hide.bat என கோப்பின் பெயரைக்கொடுத்து சேமிக்கவும். ---------------------------------------------------------- cls @ECHO OFF title Folder Locker if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK if NOT EXIST Locker goto MDLOCKER :CONFIRM echo Are you sure u want to Lock the folder(Y/N) set/p "cho=>" if %cho%==Y goto LOCK if %cho%==y goto LOCK if %cho%==n goto END if %cho%==N goto END echo Invalid choice. goto CONFIRM :LOCK ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" echo Folder locked goto End :UNLOCK echo Enter password to Unlock folder set/p "pass=>" if NOT %pass%=="type your password here" goto FAIL attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker echo Folder Unlocked successfully goto End :FAIL echo Invalid password goto end :MDLOCKER md Locker echo Locker created successfully goto End :End ------------------------------------------------------------- நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள். இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சு செய்தால் Locker மறைந்து விடும். மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat என்ற கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கணனி திரையில் வரும். குறிப்பு: கூடுதல் பாதுகாப்பு தேவை என கருதினால் hide.bat கோப்பினை வேறொரு இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லது வேறொரு வட்டில் சேமித்துக்கொண்டு, இந்தக்கோப்பை நீக்கி விடுங்கள்.

எம்எல்ஏ போட்ட நிபந்தனை... அதிர்ச்சியில் மந்த்ரா!

'பணம் வேண்டுமா... என்னோடும் நண்பர்களோடும் சில இரவுகள் தங்க வேண்டும். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்..' -நடிகை மந்த்ராவிடம் ஆந்திர எம்எல்ஏ ஒருவர் போட்ட இந்த படு பச்சையான டீல்தான் இப்போது டோலிவுட் முழுக்க பரபரப்புப் பேச்சாக உள்ளது. தமிழில் மந்த்ரா என்ற பெயரில் சில படங்களில் நடித்து பின் தெலுங்கில் படு பிஸியான நடிகையாக இருந்தவர் ராசி. அருண் விஜய்யுடன் பிரியம், அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசு, பிரபுவுடன் தேடினேன் வந்தது, கார்த்திக்குடன் கண்ணன் வருவான் போன்ற படங்களில் நடித்தவர் இவர். தொன்னூறுகளில் இவர் தெலுங்கின் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தார். தெலுங்கு காமிராமேன் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து சொந்தப் படம் எடுத்தார். நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் அந்தப் படத்தில் போட்டார். கடனுக்கும் சிலரிடம் பணம் வாங்கியிருந்தார். ஆனால் அந்தபடம் தோல்வி அடைந்து மந்த்ராவை பெரும் கடனாளியாக்கியது. மேற்கொண்டு கதாநாயகியாக நடிக்க வயதும் உடலும் இடம் தரவில்லை. மீண்டும் திரைப்படம் தயாரித்து விட்ட பணத்தைப் பிடித்துவிடலாம் என சிலர் ஆசைக் காட்டவே, தன்னிடமிருந்து இன்னொரு கதையைப் படமாக்க முயன்று, பணத்துக்காக அலைந்தார். ஆனால் தெரிந்தவர்கள் யாரும் பணம் தர முன்வரவில்லை. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் தரும் ஆந்திர எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்க முடிவு செய்து, அவர் வீட்டுக்குப் போனாராம் மந்த்ரா.
Manthra
பணம் தர உடனே ஒப்புக் கொண்ட எம்எல்ஏ, அதற்கு பிரதியுபகாரமாக, தன்னுடன் ஒரு வாரம் தங்க வேண்டும் என நிபந்தனை விதித்தாராம். அதோடு துபாயில் இருந்து வரும் தனது நண்பருடனும் சில இரவுகள் தங்க வேண்டும் என்றாராம். இதற்கு உடன்பட மறுத்த மந்த்ரா, தனது நெருங்கிய நண்பர்களிடம் இந்த அவலத்தைச் சொல்லிப் புலம்பிக் கொண்டுள்ளாராம். இந்த சூழலில் படம் தயாரிக்கத்தான் வேண்டுமா... அல்லது கிடைக்கிற அக்கா, அம்மா அண்ணி வேடங்களில் நடித்து கடனை அடைக்கலாமா என யோசித்து வருகிறாராம் மந்த்ரா.

லலிதா குமாரிக்கும், குழந்தைகளுக்கும் பிரகாஷ்ராஜ் எந்த உதவியும் செய்வதில்லை: டிஸ்கோ சாந்தி

லலிதா குமாரிக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை என லலிதா குமாரியின் அக்கா டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதகுமாரியை 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜூக்கும், லலிதாகுமாரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லலிதகுமாரி 2 குழந்தைகளுடன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், நீலாங்கரையில் வசிக்கிறார். நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த பிரகாஷ் ராஜ் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி லலிதா குமாரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.

பிரகாஷ் ராஜ் மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தியிருத்தியிருந்தது. இதற்கிடையில் லலிதா குமாரி கணவர் பிரகாஷ் ராஜுடன் சேர்த்து வைக்குமாறு தொடர்ந்த மனுவும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் லலிதா குமாரி கணவர் பிரகாஷ் ராஜை பிரிந்து வாழ சம்மதம் தெரிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கணவர் பிரகாஷ் ராஜுடம் இருந்து மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாஷ்ராஜ் லலிதகுமாரி விவாகரத்து பற்றி டிஸ்கோ சாந்தி கூறியதாவது,

என் தங்கை லலிதகுமாரியை பிரகாஷ்ராஜ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். வடபழனியில் உள்ள முருகன் கோவிலில்தான் திருமணம் நடந்தது.

ஆரம்பத்தில் ஒழுங்காக குடும்பம் நடத்தி வந்த பிரகாஷ்ராஜ், நாளடைவில் மாற ஆரம்பித்தார். அவருக்கும், என் தங்கைக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது, இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று புத்திமதி சொன்னேன். பிரகாஷ்ராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டு பேரும் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள். என் தங்கை 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை. குடிக்கிற தண்ணீர் சப்ளை செய்வதை கூட நிறுத்தி விட்டார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம், என் தங்கை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன். என் தங்கையின் மூத்த மகள் பூஜா, சமீபத்தில் பூப்படைந்தாள். அவளுக்கு நகைகள் செய்து போட்டு நான்தான் சடங்கு நிகழ்ச்சியை நடத்தினேன்.

பெற்ற மகளின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட பிரகாஷ்ராஜ் வந்து வாழ்த்தவில்லை. அவர் யார் யாருக்கோ செலவு செய்கிறார். குழந்தைகளுக்கு உடைகள் கூட வாங்கி தருவதில்லை. இரண்டாவது மகளின் பிறந்தநாளுக்கு நான்தான் உடை வாங்கி கொடுத்தேன்.

எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகள் கிடையாது. என் தங்கை மகள்களைத்தான் சொந்த மகள்களாக நினைக்கிறேன் என்றார்.

கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க

உங்களுக்கு ஒரு அதிசயமான விஷயம்.கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க முடியும்.இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை இப்போது பார்க்கலாம். போட்டோ எடுக்கும் முன்னர் உங்கள் முகத்தை கம்ப்யூட்டர் மானிட்டர் பார்த்தவன்னமாக வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்தது முக்கியமான ஒன்று மறக்காமல் சிரித்தவாறே கீழே உள்ள கேமரா பட்டனை அமுத்துங்கள். அழுத்திய ஒரு சில வினாடிகளில் உங்கள் போட்டோவை ஸ்க்ரீனில்பார்க்கலாம்.

சரி ரெடியா அழுத்துங்க கேமராவை

பார்த்துட்டு ஒட்டு போட மறக்காதீங்க.

Google - புத்தகங்களும் இனி இலவசம் ...

http://books.google.com மூலம் புத்தககங்களை தேட,படிக்க மற்றும் வாங்கும் வசதியை இலவசமாக வழங்கி வந்த கூகுள், இனி புத்தகங்களும் இலவசமாக கொடுக்க போகின்றது. இப்புத்தகங்களை Public Domain மூலம் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நீங்கள் PDF அல்லது EPUB Format-ல் தரவிறக்கலாம். உதாரணமாக William Shakespeare-இன் படைப்பான Hamlet இலவசமாக கொடுக்கின்றது.தரவிறக்க இங்கே சொடுக்குங்கள். மேலும் 10 லட்சம் புத்தகங்கள் படிக்கவும்,தரவிறக்கவும் காத்திருக்கின்றன உங்களுக்காக ... விரையுங்கள் Google Books
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com