செக்ஸ் என்ற வார்த்தையே சிலரை சிலிர்க்கச் செய்யும். அதைப்பற்றிய நினைவுகளே கிளர்ச்சியை ஏற்படுத்தும். செக்ஸிற்கு ஏற்ற வயது எது என்பதைப்பற்றி இன்னமும் சரியாக கண்டறிய முடியவில்லை என்றாலும் நாற்பது வயதில்தான் நலமான செக்ஸ் வாழ்க்கை தொடங்குகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருபதுகளில் வாழ்க்கையைப் பற்றிய அச்சம், குடும்பம், வேலைப்பளு என சற்றே செக்ஸ் ஆர்வத்தை குறைத்தாலும், ஓரளவிற்கு செட்டில் ஆன 40 வயதில்தான் காதலும், காமமும் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

நாற்பது வயதிற்கு மேற்பட்ட 2000 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. 80 சதவிகிதம் பேர் இளம் வயதில் அனுபவித்ததை விட நாற்பது வயதில்தான் அதிக சுவாரஸ்யமாக ஆர்வத்துடன் இதில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு இப்பொழுதுதான் சிறந்த அனுபவம் கிடைத்திருப்பதாகவும், எந்த வித சிக்கலும் இன்றி சிறப்பாக செயல்பட முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாற்பது வயது என்பது நடுத்தர வயது. இந்த வயதில் வேலை குறித்தோ, குடும்ப வாழ்க்கை குறித்தோ எந்த வித டென்சனும் இன்றி ரிலாக்ஸ்சாக இருப்பார்கள். எந்த வித டெக்னிக்கை கையாண்டால் எந்தவிதமான சுகம் கிடைக்கும் என்று தெரிந்திருக்கும்.
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு பாலியல் குறித்த கூச்சம் நீங்கியிருக்கும். தங்களின் துணைவரிடம் இதைப்பற்றி தயங்காமல் பேசுவார்கள். எந்தமாதிரி வேண்டும் என்றும் அவர்களிடம் விவாதிப்பார்கள் என்கின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.
திருமணமான புதிதில் குழந்தையையும், குடும்பத்தையும் கவனிக்க நேரம் சரியாக இருக்கிறது. அதனால்தான் நாற்பது வயதிற்கு மேல் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கிறது என்று 53 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் கிடைக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் ஒருவித நிம்மதியும், ரிலாக்ஸ்க்கும் கிடைக்கிறதாம். நிறைய நேரம் மகிழ்ச்சிகரமாக இருப்பதோடு மனதளவில் தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.