14 செப்டம்பர் 2011
வேலாயுதம் பற்றி இயக்குனர் ராஜாவின் கருத்து
விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் வேலாயுதம். இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா " விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர்.குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.
வேலாயுதம் தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.
ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.
நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வேட்டைக்காரன் பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால் தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் வேலாயுதம் சாதனை படைத்தது.
தயாரிப்பாளர் ரவிசார் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கும் ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது. ஏன் எதற்கு என்று கேட்கவில்லைல் ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்... அசந்து போய் விட்டேன்.
இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. " என்று தெரிவித்துள்ளார்.
முத்தக்காட்சியை படமாக்கும் போது முரண்டு பிடித்த நடிகை!
ஹனிரோஸ் ஹீரோயின். மற்றும் கஞ்சா கருப்பு, தண்டபாணி, கிரேன் மனோகர், நெல்லை சிவா நடிக்கின்றனர். படத்தை இயக்கும் சலங்கை துரை கூறியதாவது: சென்னையில் தண்ணீர் லாரி டிரைவராக இருக்கும் கதிருக்கும், கல்லூரி மாணவி ஹனிரோசுக்கும் காதல் மலர்கிறது. திடீரென்று அவர்கள் காதலுக்கு தடை ஏற்படுகிறது. இதற்கு அவர்களே காரணமாகிறார்கள். அது ஏன்? எப்படி என்பதுதான் கதை.
காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் புதுமையாக இருக்கும். படத்தில் ஒப்பந்தமாகும்போது, ஹனிரோஸ் கதை கேட்கவில்லை. பிறகு ஷூட்டிங்கில் அவருக்கும், கதிருக்கும் முத்தக்காட்சியை படமாக்க முயன்றபோது, நடிக்க மறுத்தார்.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தோம். அவர்கள் விசாரித்தனர். நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு படமாக்கினோம். மற்றபடி எங்களுக்கும், ஹனிரோசுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
பழங்குடியினரின் கலாசார நடனத்தில் பொலிஸாரின் அவதூறான செய்கைகள்(படங்கள்/வீடியோ இணைப்பு)
மேற்கிந்திய தீவு மக்களின் கலாசார நடனத்தில் இரண்டு போலீசார் அவதூறான முறையில் நடனமாடியதாக செய்தி கிடைத்துள்ளது , பல பெண்களுக்கு மத்தியில் ஆபாசமாக நடனமாடும் காட்சி வீடியோவில் பதிவாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுபோல் லண்டன் நகர மத்தியில் இளசுகளுடன் போலீசார் குத்தாட்டம் ஆடியது குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)