Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 மார்ச் 2009

Part 1: PS3-யும் உங்கள் PC-யும்!

PS3-ஐ பத்தின போன பதிவுகளில், அது ஒரு அருமையான மீடியா ப்ளேயர்ன்னு பார்த்தோமில்லையா? அதை எப்படி மீடியா ப்ளேயரா உபயோகிக்கறதுன்னு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லுறேன். 1. PS3-யின் ஹார்ட் ட்ரைவ்: உங்கள் படங்கள், பாடல்கள், புகைப்படங்களை PS3-யின் உள்ளிணைந்த ஹார்ட் ட்ரைவில் காப்பி செய்வது. இந்த முறையில்.. உங்களுக்கு எந்த கஷ்டமும் இருக்கப்போறது இல்லை. காப்பி செய்வதற்கு, நீங்க ஒரு மெமரி ஸ்டிக்கையோ, மெமரி கார்டையோ, USB எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவ்களையோ... யூஸ் பண்ணி.. காப்பி பண்ணிடலாம். அதுக்கப்புறம்... எந்த தொந்தரவும் இல்லாம பார்க்கவோ, கேட்கவோ முடியும். 2. எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவ்: ஒரு 500GB/1TB எக்ஸ்டெர்னல ஹார்ட் ட்ரைவ் வாங்கிடுங்க. தொந்தரவே இல்லை. உங்க அத்தனை மீடியா ஃபைல்களையும் அதுல போட்டுக்கங்க. அதை.. PS3-யின் USB ஸ்லாட்டில் கனெக்ட் பண்ணிட்டீங்கன்னா.. போதும். முதல் முறையில் இருக்கற... காப்பி-பேஸ்ட் தொந்தரவு இல்லை. இரண்டாவது.. ஒருவேளை உங்களுக்கு, PS3-யின் ஹார்ட் ட்ரைவை, ஃபார்மேட் செய்ய வேண்டியிருந்தால்... எந்த ஃபைலையும் இழக்க தேவையில்லை பாருங்க. ஆனா.. இந்த இரண்டு முறைகளிலும்.. ஒரு பெரிய தொந்தரவு இருக்கு. அதுக்கு பேரு FAT 32. நீங்க ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவை PS3-யோடு கனெக்ட் பண்ணனும்னா அந்த ட்ரைவ், FAT32-க்கு ஃபார்மேட் செய்யப்பட்டிருக்கனும். இது USB மெமரி கார்டுகளுக்கும் பொருந்தும். இந்த FAT 32 பத்தி அதிகமா சொல்லுறதுக்கு ஒன்னுமில்லை. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி WINDOWS ME இருக்கற வரைக்கும், இந்த முறையில்தான் நம்ம ஹார்ட் ட்ரைவ், ஃபார்மேட் ஆகியிருக்கும். Win NT/2000, XP வந்த பின்னாடிதான் NTFS-ங்கற ஃபார்மேட்டுக்கு மாறினோம். FAT32-ல என்ன தொந்தரவுன்னா... அதுல 4GB-க்கு மேல ஒரு ஃபைலின் சைசை இருக்க விடாது. அதாவது உங்க கிட்ட.. சிவாஜி படத்தின் 720p ப்ளூரே காப்பி MKV ஃபைலின் சைஸ் ஒரு 7gb (ஒரே ஃபைல்)ன்னு வச்சிப்போம். அப்ப உங்களால.. இந்த ஃபைலை... PS3-யின் ஹார்ட் ட்ரைவிலோ (PS-Operating System) அல்லது எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிலோ காப்பி பண்ண முடியாது. அப்ப என்னதான் செய்யறது? 3. PC-ஐ PS3-யுடம் இணைப்பது ஆமாங்க.. இதுதான் இப்போதைக்கு பெட்டர் வழி! இவை ரெண்டையும் இணைப்பது ஒன்னும் பெரிய கம்பச்சித்திரம் இல்ல. ஜஸ்ட் லைக் தட்... பண்ணிடலாம். எப்பொழுதும் போல இரண்டு வழிகள் உண்டு. Wired and Wireless. a. Wired: உங்க கிட்ட.. ஏதாவது ஒரு ரவுட்டர் (Router) ஒன்னு இருந்தா போதும். அப்புறம்.. தேவையான நீளத்துக்கு ஒரு நெட்வொர்க் கேபிள். ரெண்டு முனைகளையும் கனெக்ட் பண்ணிட்டா மேட்டர் சால்வ்ட். b. Wireless: இதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு வயர்லெஸ் ரவுட்டர் (Wireless Router) ஒன்னு இருந்தா போதும். எதுவும் பாஸ்வேர்ட் செக்யூரிட்டி கொடுக்காம இருந்தீங்கன்னா... PS3 அதுபாட்டுக்கு கனெக்ட் ஆய்டும். கொடுத்து இருந்தாலும் பிரச்சனையில்லை. PS3-யில் அதை கான்ஃபிகர் பண்ணிக்க முடியும். என்ன.... உங்க கிட்ட ஒரு வயர்லெஸ் கீபோர்டும், மவுஸும் இருந்தால்.. பாஸ்வேர்டை அடிக்கறது ஈஸி. இல்லைன்னா... PS3-யின் கன்ட்ரோலரை வச்சி.. ஒவ்வொன்னா தட்டனும். பாஸ்வேர்ட் சைசுக்கு ஏத்த மாதிரி உங்களுக்கு.. தாவு தீரும். ஆனா எந்த பிரச்சனையும் இல்லாம... ஸ்மூத்தா.. கனெக்ட் ஆய்டும்...!! பயப்படாதீங்க. ஓகே... கனெக்ட் பண்ணியாச்சி.! இப்ப.. எப்படி இதை ஒரு மீடியா ப்ளேயரா.. யூஸ் பண்ணுறது? - ஓட்டு போட்டீங்கன்னா.... நாளைக்கு சொல்லுறேன். :-)

ஒபாமாவின் பிரச்சனைக்கும் அசின் பிரச்சனைக்கும் ஒரே தீர்வுதான்

உலகம் ஆரம்பித்த நாட்களில் எல்லாம் பிரச்சனை சந்தித்த மனிதர்கள் மட்டுமே மேலே வந்திருக்கிறார்கள். அவர்களும் பிரச்சனையை எப்படி சமாளித்திருக்கிறார்கள்? எப்படி அதை வென்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள்தான் சரித்திர் நாயகர்களாக விளங்கியிருக்கிறார்கள் என்பது புலப் படும். உலக மக்களின் பிரச்சனைகள் தீரவும், உலக சமாதானம் உருவாகவும் நம்மாளான் ஒரு பங்களிப்பாக இந்த ஆராய்ச்சியைத் தொடருகிறோம். கிரிக்கெட் விளையாட்டு. கிரிக்கெட் விளையாட்டினை எடுத்துக் கொண்டால் முதலில் காசு சுண்டுகிறார்கள். காசு சுண்டுதலில் வெற்றி பெறுதல் என்பது அதிஷ்டம் தொடர்புடைய விஷயமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து நாம் பேட்டிங் , பவுலிங் தேர்ந்தெடுப்பது என்பது நமது திறமை தொடர்புடைய நிகழ்வாக அமையும். வாழ்க்கை என்பது அப்படித்தான். அதிர்ஷ்டம் வந்தாலும் அதை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும் அவர்களால்தான் வாழ்க்கையை வெற்றி பெற முடியும். பேட்டிங் தேர்ந்தெடுத்து உள்ளே செல்வது என்பது தலைமை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி, த்லைமை சொல்வதை நாம் கண்டிப்பாக நாம் கேட்டாக வேண்டும். பேட்டிங் செய்ய தொடங்கினாலும், நம்மை அவுட் ஆக்க நம்மைச் சுற்றி வியூகம் அமைத்து செயல் படுவார்கள். அதுதான் வாழ்க்கை. சில நேரங்களில் நம்மை அவுட் ஆக்க நடுவர்கள் கூட முயற்சி செய்வார்கள். என்னதான் சிறந்த ஆட்டக் காரராக இருந்தாலும், ஒரு பந்தில் நாம் ஏமாந்தாலும் நம்மை ஆட்ட்மிழக்கச் செய்து உள்ளே அனுப்பிவிடுவார்கள். தலைமை நமக்கு கொடுக்கும் பணியினை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உள்ளே நாம் ஆட இறங்கும் போது சற்று நிதானமாக ஆடுமாறு நமக்கு ஆலோசனை கூறப்படலம். அதன் பொருள் ரன் எடுக்காதே என்பதல்ல.. ஆட்ட்ம் இழக்காதே .. என்பது தான் பொருளாக அமையும். என்பதை உணர்ந்து கொண்டு ஆட வேண்டும், விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டு ஓட்டங்களைக் குவித்தால் மகிழ்ச்சியே அடைவார்கள். மட்டை பிடிக்கும் போது பந்தை எவ்வாறு அடிப்பது என்பதை பந்து வீச்சாலரின் கையிலிருந்து வெளியேறி தரையில் பட்டு திரும்பிய பின்னரே முடிவு செய்ய வேண்டும். அது சரியான பயிற்சி இல்லையென்றால் மட்டை ஓங்கும் முன்ன்ரே குச்சி காணாமல் போய்விடும். முதலிலேயே எவ்வாறு அடிப்பது என்பதை முடிவு செய்தால் சுலபமாக அவுட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடும். வாழ்க்கையும் அப்படித்தான். எந்த பிரச்சனையும் வரும்போது சரியான முறையில் சமாளிக்கும் திறமை வேண்டும். அதற்கான பயிற்சி அவசியமாக அமையும். தேவையில்லாமல் முதல் பந்தில் இரண்டாம் பந்தைப் பற்றி கவலை படவேண்டிய அவசியமில்லை.இந்த பிரச்சனையைப் பார்க்கும்போது அடுத்த பிரச்சனை பற்றி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. நாம் பந்துவீசுதல் என்று வரும்போது வேகமாக வீசுதல் என்பது சில நேரங்கள் மட்டுமே உபயோகப் படும் அதுவும் துவக்க காலத்தில் மாட்டுமே உபயோகப் படும். பழகிவிட்டால் எந்த வேகத்தையும் சுலமாக சமாளித்துவிடுவார்கள். எனவே எதிராளியை ஆட்டமிழக்கச் செய்ய பலவகைகளில் முயற்சி செய்ய வேண்டும். சில ஆட்டக்காரர்கள் தானாக ஆட்டமிழ்ந்து சென்றுவிடுவார்கள். அவர்களுக்கான வசதிகளை மாட்டும் செய்து கொடுக்க வேண்டும், அதாவது அவருக்கு விருப்பமான இடத்தில் ஒரு ஃபீல்டரை நிறுத்திவிட்டால் தானே கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்து விடுவார். சில நேரங்களில் பல வகையான பந்துகளையும், வியூகங்களையும் உபயோகப் படுத்த வேண்டும். இந்த மாதிரி வியூகங்கள் அமைப்பதற்கு ந்ல்ல தலைமையும் அவசியம். நாம் விக்கெட் எடுப்பதற்கு நல்ல தலைமையும் அவசியம். தலமைக்கு கீழ்படிதல் என்பது மிக அவசியம். த்லமை டீப் விக்கெட்டில் நிற்கச் சொல்லும்போது நாம் மிட் ஆனில் நின்றால் கண்டிப்பாக அணிக்குத்தோல்விதான். நாம் எவ்வள்வு ஸ்கோர் எடுத்திருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எதிராளியைவிட அதிகமாய் எடுத்திருக்கிறோமா, நம்மைவிட குறைந்த ஸ்கோரில் எதிரியைக் கட்டுப் படுத்தி இருக்கிறோமா? என்பதில்தான் நமது வெற்றியே அடங்கியிருக்கிறது. இந்த மாதிரியே கிரிக்கெட் பார்த்து விளையாடி பழகிக் கொண்டால் ஒபாமா, அசின் மட்டுமல்ல , நாமும்கூட எல்லா பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்துவிடலாம்.

20 மார்ச் 2009

போலீஸ் விசாரணை: நடிகை அசின் விளக்கம்

உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் அசின். இவர் அடுத்து நடித்த எம்.குமரன் படம் மூலம் ஸ்டார் அஸ்தஸ்து பெற்றார். சூர்யாவுடன் இணைந்து நடித்த கஜினி செம ஹிட். இதையடுத்து இந்திக்கு போனார். அங்கே அமீர்கானுடன் இந்தி கஜினியில் நடித்தார். தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துவிட்டார். தான் நடிக்கும் படங்களால் ஏற்படும் பிரச்சனையை விட தன்னிடம் வேலை செய்பவர்களால் அசினுக்கு ஏற்படும் பிரச்சனைதான் பெரிதாக இருக்கிறது. இதற்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் அசினின் உதவியாளராக இருந்து சென்னை போலீஸில் அசின் கொடுமை படுத்துவதாக புகார் சொன்னார். இப்போது அசினின் உதவியாளர்(ஆண்) காணாமால் போய்விட்டார். அசின் தான் அவரை கடத்திவைத்திருப்பதாக காணாமல் போனவரின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த பேரூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் முத்துகருப்பன். இவரது மனைவி சுடலைவடிவு. இவர்களது மகன் நல்ல முத்துக்குமார். கடந்த 7 வருடத்துக்கு முன்பு சென்னைக்கு வந்த முத்துக்குமார் நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலை பார்த்தார். 4 வருடத்துக்கு முன்பு நடிகை அசினிடம் முத்துக்குமார் வேலைக்கு சேர்ந்தார். அசின் படப்பிடிப்புக்காக மும்பைக்கு சென்றபோது முத்துக்குமாரையும் அழைத்து சென்றார். ஒரு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டதால் முத்துக்குமார் சென்னை வந்து சிகிச்சை பெற்றார். 11/2 மாதம் கழித்து உடல் நலம் தேறிய பிறகு மும்பை சென்று மீண்டும் அசினிடம் வே
லைக்கு
சேர்ந்தார்.
கடந்த 1 மாதமாக முத்துக்குமார் தனது தாயாரிடம் தொடர்பு கொண்டு பேச வில்லை. இதுபற்றி சுடலை வடிவு அசினின் தந்தை ஜோசப்புக்கு போன் செய்து விசாரித்த போது, முத்துக்குமார் ஜனவரி 21-ந்தேதிக்கு பிறகு வேலையை விட்டு நின்று விட்டதாகவும், அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை என்றும் கூறினார். தன் மகன் மாயமானது பற்றி சுடலைவடிவு புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப் பிரமணியம் விசாரித்தார். அப்போது சுடலைவடிவு போலீசாரிடம் தனது மகன் காணாமல் போனது பற்றி அசினும், அவரது தந்தையும் முன்னுக்குபின் முரண்பாடாக சொல்கிறார்கள். அவர்கள் எனது மகனை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக சந்தேகப்படுகிறேன் என்று கூறினார். இது தொடர்பாக அசினின் தந்தை ஜோசப்பிடம் போலீசார் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர் போலீசாரிடம் கூறும்போது, ஜனவரி 21-ந்தேதி முத்துக்குமார் வேலையை விட்டு நிற்பதாக கூறி சம்பளத்தை கணக்கு முடித்து வாங்கி சென்று விட்டார். அவர் வீட்டுக்கு செல்லவில்லை என்பதால் பிப்ரவரி 9-ந்தேதி போலீசில் புகார் செய்து விட்டோம் என்றார். இந்த நிலையில் உதவியாளர் மாயமானது தொடர்பாக நடிகை அசினிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், எனது உதவியாளர் நல்ல முத்துக்குமார் வேலையை விட்டு சென்ற உடனேயே நாங்கள் போலீசுக்கு சொல்லி விட்டோம். எனவே அந்த பிரச்சினைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விட்டார்.

19 மார்ச் 2009

இணைய அரட்டை அடிக்க Digsby - (பலவும் ஒன்றில்)

இணையத்தின் ஊடாக அரட்டை(chatting) அடிப்பதற்காக ஏராளமான இலவச மென்பொருட்கள் (Freeware) உள்ளன.

AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, மற்றும் Facebook அரட்டை என இத்தனை தளங்களும் இலவச அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. ஆனால் ஒவ்வொரு தளத்தின் ஊடாக அரட்டை அடிப்பதற்கும் நாம் தனித்தனி மென்பொருட்களை இணையிறக்கம் (download) செய்து நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-மெயில், யாகூ பயனர் கணக்கின் வாயிலாக அரட்டை அடிப்பது கடினம்.

Digsby- அரட்டை அரங்கங்களின் சங்கமம்

Digsby- அரட்டை அரங்கங்களின் சங்கமம்

இவையனைத்திற்கும் பதிலாக ஒரு மாற்று மென்பொருள் பயன்பாடுதான் Digsby. இந்த ஒரே பயன்பாட்டை மட்டும் நிறுவிவிட்டு அனைத்து அரட்டை அடிக்கும் தளங்களின் பயனர்கணக்கையும், கடவுச்சொல்லையும் (User Name, Password)கொடுத்துவிட்டால் - இதை மட்டும் பயன்படுத்தி அனைவருடனும் சாட்டிங் செய்து மகிழலாம்.

சிறப்பம்சங்கள் :

1) எந்த பயனர் கணக்கிற்கு புதிய மின்னஞ்சல் வந்தாலும் அதை நினைவூட்டிவிடும். (E-Mail Alert)

2) நண்பர்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்ப உதவுகிறது. (SMS - Short Message Service)

3) Hotmail, Gmail, Yahoo Mail, AOL/AIM Mail, IMAP, மற்றும் POP மின்னஞ்சல் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து நிர்வகிக்க இயலும்.

4) நண்பர்களுக்குள் கோப்புப்பகிர்வு செய்வதும் இதன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. (File sharing)

தள முகவரி : http://www.digsby.com/

Tags: , , ,

by - tamilnenjam

இமெயில் அவதாரங்கள்

3dஇமெயிலின் புதுமை மறைந்து ஒருவித அலுப்பே மிஞ்சுகிறது என்ற உணர்வு உங்களிடம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். (அ) இமெயிலில் இனியும் என்ன புதுமை படைத்து விட முடியும் என்ற எண்ணம் இருந்தாலும் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி சொல்ல வைக்கக்கூடிய வகையில் புதுமையான இமெயில் சேவை ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. இது புதுமையான இமெயில் சேவையே தவிர புதிய இமெயில் சேவை அல்ல. உண்மையில் இமெயில்களை முற்றிலும் புதுமையான முறையில் பெற உதவும் சேவை. புதுமையானது மட்டும் அல்ல மிகவும் சுவையான சுவாரசியமான சேவை! இமெயில்களை இனிமை யான அனுபவமாக மாற்ற உதவும் சேவை.

திரைப்பட உலகில் “3டி’ எனப்படும் முப்பரிமாண உத்தி அறிமுகமான போது ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது அல்லவா? அதேபோலத்தான் இப்போது இமெயில் உலகில் “3டி’ உத்தி நுழைந்திருக்கிறது. ‘3dmailbox’ என்னும் அந்த சேவை உங்கள் இமெயில் முகவரி பெட்டியை முப்பரிமாண தன்மை கொண்டதாக மாற்றித் தருகிறது. இதனால் உங்களை தேடி வரும் இமெயில்களும் முப்பரிமாணத் தன்மை கொண்டதாகவே இருக்கும். அந்த முப்பரிமான உலகம் எப்படிப் பட்டது தெரியுமா? எழில் கொஞ்சும் கடற்கரையாக உங்கள் முகவரி பெட்டியை மாற்றி விடக் கூடியது. முகவரி பெட்டி அலைகள் ஆர்ப்பரிக் கும் கடற்கரையானால் அதில் உலாவும் மனிதர்களின் வடிவத்தில் இமெயில்கள் வந்து சேரும். ஆம், புதிய இமெயில் வந்து சேரும்போது, கடற்கரையில் உள்ள ஓட்டல் ஒன்று க்கு நீச்சலுடை அணிந்த அவதாரமாக இமெயில் தோற்றம் தரும்.

வர்ச்சுவல் வேர்ல்டு என்று சொல்லப்படும் இன்டெர்நெட்டில் உயிர் பெறும் பல்வேறு வகையான மாய உலகங்களைப் போலவும் அதில் படைக்கப்பட்ட மனித தோற்றங்க ளைப் போலவும் (இவற்றைதான் இன்டெர்நெட் உலகில் அவதாரம் என்று குறிப்பிடுகின்றனர்). இது இமெயிலுக்காக என்று உருவாக்கப்பட்ட மாய உலகம். இங்கே மெயில்கள் மாய மனிதர்களாக தோற்றம் அளிக்கும். கடிதங்களை நிலப்பறவைகள் என்று உரைநடையில் வர்ணிப்பது போல, இங்கு இமெயில்கள் மாய மனிதர்கள் வடிவம் பெறுகின்றன. இமெயில் களை பெற முற்றிலும் சுவையான வழிதான். இமெயில் என்றால் வீண் மெயில்களாக ஸ்பேம் தொல்லை இல்லாமல் இருக்குமா? இந்த மாய உலகில் வீண் மெயில்களை அடை யாளம் காட்டவும் வழி இருக்கிறது.

நம்பகமான மெயில்களை மட்டுமே காவலாளி அனுமதிப்பார். சந்தேகத்திற்கு இடமான மெயில்கள் வாயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு விடும். அந்த மெயில்கள் சுமோ பயில்வான் போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கும் என்பது விசேஷம். சுவாரசியம் இத்தோடு முடிந்து விடவில்லை. சந்தேகம் அளிக்கும் இமெயில்களை தேவை இல்லாதது எனத் தீர்மானித்து அவற்றை டெலிட் செய்ய முன் வந்தால் சுறா மீன் போல் தோற்றம் உண்டாகி அந்த இமெயில் மறைந்து போகும். இதனிடையே பிடிக்கப்படாத இமெயில்கள் ஓட்டல் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும். இமெயில்களை படித்தீர்கள் என்றால், அவற்றுக்கான அவதாரம் ஜாலியாக சூரியக் குளியல் எடுக்கத் துவங்கி விடும். மெயில்கள் பற்றி முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அவை சுற்று வட்டாரத்திலேயே உலாவிக் கொண் டிருக்கும். அவற்றை அனுமதித்து வரவேற்பதா (அ) வெளியேற்றுவதா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். சொல்லப்போனால் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் நீங்கள் விடுமுறையை கழிப்பது போன்ற உணர்வை இந்த “3டி’ முகவரி பெட்டிஅளிக்கும். 3டி மெயில் பாக்சை உருவாக்கி உள்ள ராபர்ட் சாவேஜ் இந்த சேவை இமெயில்களை இனிமையானதாக ஆக்கும் என்கிறார்.

வீடியோ கேமின் தன்மையை இமெயில்களுக்கு ஏற்பத்தி தரும் முயற்சி இது என்கிறார்அவர். உங்களுக்கு வீடியோ கேம் பிடிக்கும் என்றால் இமெயில் மீது மிகுந்த மோகம் இருக்கிறது என்றால் இந்த சேவை நீச்சயம் உங்கள் மனதை கவர்ந்து விடும் என்கிறார் அவர். இமெயில்களை மனிதர்கள் வடிவில் மாற்றித் தரும் அனுபவம் வீடியோ கேமில் மூழ்கி இருப்பதற்கு நிதானமாக இருக்கும் என்றும் அவர் சொல்கிறார்.

முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற மியாமி கடற்கரையை போல இந்த இமெயில் மாய உலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல்வேறு வகையான பின்னணியில் மாய உலகங்களை படைத்து இமெயில் களை வித்தியாசமான முறையில் தோற்றம் தர வைக்க முடிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இமெயில்கள் எல்லாம் போயிங் விமானமாக வந்து நிற்கும். நிச்சயம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இமெயில்களில் இருந்து முற்றிலும் வேறானது. வித்தியாசத்தை வரவேற்பவர்கள் இந்த இமெயில் முறையை ஆதரிக்கலாம். அப்படி பரவலான வரவேற்பு இந்த சேவைக்கு கிடைக்கும் என்றால் மேலும் பல விமான உலகங்கள் இமெயில் களுக்காக உருவாக்கப் படலாம். எல்லாம் சரி இமெயில் சேவை இலவசமானது ஆயிற்றே! இந்த சேவை எப்படி? இந்த சேவையை சோதித்து பார்ப்பது இலவசமானது. சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறது. என்றால் கட்டணம் செலுத்தி தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த சேவையை உருவாக்கி உள்ள ராபர்ட் சாவேஜ், ஏற்கனவே இன்டெர்நெட் உலகில் பல டாட்காம் நிறுவனங்களை துவக்கி நடத்தினார். 1994ம் ஆண்டு வாக்கிலேயே மார்க்கெட் வாட்ச் என்னும் டாட் காம் நிறுவனத்தை துவக்கிய அவர் ஐஜம்ப், டிரேடிங் புளோர் என மேலும் டாட்காம்களை நடத்தி இருக்கிறார். இப்போது இமெயில்களை புதிய அவதாரம் எடுக்க வைத்து இருக்கிறார்.

18 மார்ச் 2009

உலகை மாற்றிய டாப் 10 சங்கதிகள்

technology.jpg

கிரெடிட் கார்டுகள், பயிற்சிக்கான ஷூஸ், சமூகத்தை ஒன்றிணைக்கும் இணைதளங்கள், ஜி.பி.எஸ். டெக்னாலஜி உள்ளிட்ட 10 சங்கதிகளை உலகை மாற்றிய சங்கதிகளாக வரிசைப்படுத்தி உள்ளனர் அறிவியலாளர்கள். பிரிட்டனின் தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் வாரத்தை ஒட்டி, 20 அறிவியலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, உலகை மாற்றிய டாப் 10 சங்கதிகள் குறித்து அலசப்பட்டது.

அவர்கள் வரிசைப்படுத்திய டாப் 10 சங்கதிகள் இதோ:

ஜி.பி.எஸ். டெக்னாலஜி: அமெரிக்க ராணுவம் தங்கள் பயன்பாட்டுக்காக கண்டுபிடித்த டெக்னாலஜி இது. ஆனால், உலகின் முகத்தை நம் முன்னாடி காட்டிவிடும் இந்த தொழில்நுட்பம் கார்கள், விமானங்கள், படகுகள் என சிறந்த வழிகாட்டியாக மாறிவிட்டது.

சோனி வாக்மேன்: இன்றைக்கு காதுக்குள்ளேயே பாட்டு கேட்டுக்கற பல சங்கதிகள் வந்துவிட்டாலும், அதற்கு முன்னோடி சோனி நிறுவனம் தான். அது 1979 இல் கண்டுபிடித்து விற்பனைக்குவிட்ட சோனி வாக்மேன்தான் 2வது முக்கிய சங்கதிபார்கோட்: எந்த பொருளானாலும் தற்போது பார்கோடு இல்லாமல் வருவதில்லை. பார்கோடில் உள்ள கருப்பு வெள்ளைக் கோடுகள்தான் ஒரு பொருளின் விலையை உலக அளவில் துல்லியமாகக் குறிப்பிட உதவுகின்றன. நார்மன் வுட்லேண்ட் என்பவர் 1949இல் கண்டறிந்தது இது

ரெடிமேட் உணவுகள்: அவசரகதியில் இயங்கும் உலகை அதே சீரான இயக்கத்தில் வைக்க உதவும் சங்கதி. 1970க்குப் பிறகு சுறுசுறுவென எகிற ஆரம்பித்த ரெடிமேட் உணவு ஜூரம் இப்போது உலகம் முழுக்க காய்ச்சி எடுக்கிறது என்றால் மிகையில்லை.

ப்ளே ஸ்டேஷன்: அடுத்தது சோனி 1994 இல் கண்டுபிடித்த ப்ளே ஸ்டேஷன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தனி ப்ளே ஸ்டேஷன் முதல் குழந்தைகளின் படுக்கை அறை வரை வியாபித்திருக்கும் சங்கதி இது. குழந்தைகள் உலகத்தில் இதற்கு முக்கிய இடமுண்டு.

சோசியல் நெட்வொர்க்கிங்: சமூகத்தை ஒன்றிணைக்கும் இணையதளங்கள் என்று சொல்லலாம். ஃபேஸ்புக் என்ற இணை தளம் மூலம் மட்டுமே 3 கோடி மனித நிமிடங்கள் தினசரி செலவழிக்கப்படுகிறதாம். மேலும், மனிதர்களை இணைக்க உதவும் மைஃபேஸ் மற்றும் டிவிட்டர் இணையதளங்களும் இவ்விஷயத்தில் முக்கிய பங்கை ஆற்றிவருகின்றன. இந்த இணையதளங்களால் உரையாடல் கலையின் தன்மையே மாறிப் போயிருக்கிறது. இவற்றின் மூலம் உலகம் முழுக்க உள்ள எண்ணற்ற நண்பர்கள் மற்றும் புதியவர்களுடன் நம்முடைய தொழில் ரீதியான, தனிப்பட்ட விஷயங்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது..

மெசேஜ்ஜிங்: செல்போனில் மெசேஜ் அனுப்பும் முறை மொழியில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. மொழியை பயன்படுத்தும் முறை, சுருக்கமாகக் குறிப்பிடுதல், இலக்கணம் என நிறைய மாற்றங்களை இந்த மெசேஜ் அனுப்பும் முறை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக ஆங்கில மொழியில் நிறைய மாற்றங்களை இது ஏற்படுத்தியுள்ளதாம்.

எலக்ட்ரானிக் மணி(கிரெடிட் கார்டுகள்): இவை இல்லாவிட்டால் நிறைய பேருக்கு வாழ்க்கை நகராது. கிரெடிட் கார்டுகள் வைத்துக்கொள்ள வசதியானவை மட்டுமல்ல பாதுகாப்பானவையும்கூட. இது இருந்தால் போது உலகை வெறும் கையால் முழம் போட்டுவிடலாம் அல்லது வலம் வந்துவிடலாம். எதை வேண்டுமானாலும் எங்கிருந்தபடியும் வாங்கமுடியும் அப்பா, அம்மா உறவுகளைத் தவிர.

மைக்ரோ வேவ்ஸ்: இது மட்டும் இல்லாவிட்டால் இன்றைக்கு பேச்சு மூச்சு இருக்காது. ஆமாங்க, நாம் பயன்படுத்தும் செல்போன்கள், இணையதள இணைப்புகள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக, அவற்றை இயக்குவது எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் எனப்படும் நுண்ணிய அலைகளே. மேற்கூறிய சாதனங்கள் இயங்க, சிக்னல்பெற இந்த நுண்ணிய அலைகள் (அலை நீளம்) ஒரு மில்லி மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைகள் நம்மைச் சுற்றி சுழன்றுக் கொண்டிருப்பது நம் கண்ணுக்குத் தெரியாது.

டிரெய்னர்ஸ்: டிரெய்னர்ஸ் எனப்படும் பயிற்சி மற்றும் சாதாரண பயன்பாட்டுக்கு உதவும் ஷூக்கள். குட்இயர் மெட்டாலிக் ஷூ கம்பெனி ரப்பரை துணிகளில் உருக்கி ஊற்றி, 1892 இல் கண்டறிந்தது தான் இந்த வித ஷூக்கள். இவை இல்லாவிட்டால் இன்றைக்கு யாராவது ஓடுவார்களா ஆடுவார்களா என்பது சந்தேகம்தான்.

Most Commented Posts

17 மார்ச் 2009

உலகின் பணக்கார நடிகைகள்!

நிறைய ஆங்கிலப்படங்கள் படங்கள் பார்க்கிறோம்! அதில் நடிக்கும் நடிகைகளைப்பற்றி நிறைய நமக்குத்தெரியாது!

அவர்களில் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட சில நடிகைகள் பற்றிப் பார்ப்போம்!

1.ட்ருவ் பார்ரிமோர் அமெரிக்க நடிகையும், drew_barrymore18.jpg drew barrymore picture by milkshake_f27படத்தயாரிப்பாளரும் ஆவார்.11 வது மாதத்தில் குழந்தையாக நடிக்க(?) ஆரம்பித்தார். ஈ.டி. படத்தின் மூலம் குழந்தை நடிகையாகப் புகழ் பெற்றார்! இளம் வயதிலேயே மதுவுக்கும், இதர போதைப்பொருட்களுக்கும் அடிமை ஆனார். அதன் பின் கவர்ச்சி நடிகை ஆனார்.இவருடைய ”பாய்ஸன் ஐவி”படம் பார்த்து இருக்கீங்களா? இந்த கவர்ச்சிப்புயல் ஐ.நா.வின் பட்டினி ஒழிப்புக்கு 1மில்லியன் டாலர் பணம் அளித்தார்.அதன் பிரதிநிதியாகவும் ஆனார்???

2.ஜெனிஃபர் அனிஸ்டன்

ஜெனிஃபர் அனிஸ்டன் 1969 ல் பிறந்தார். 1990 களில் வந்த ”ஃப்ரண்ட்ஸ்” சீரியலில் நடித்து எம்மி விருது,நம்ம ரஹ்மான் வாங்கிய கோல்டன் குளோப் விருது போன்றவற்றை அள்ளினார்..புரூஸ் அல்மைட்டி போன்ற நிறைய காமெடி படங்கள் நடித்து உள்ளார்.

3.ஜெனிஃபர் லோபெஸ்.1969 ல் பிறந்தார்.ஜெ.லோ என்று அழைக்கப்படும் இவர் 7 பாடல் தொகுப்புகள் வெளியிட்டு உள்ளார். சிறந்த பாடகி விருதுகள் நிறைய வாங்கியுள்ளார்.

ஜெனிஃபர் லோபெஸ் எல்லோருக்கும் தெரிந்த முகம்.ஆனால் அவருடைய திறமைகளைப்பாருங்கள்:நடிகை,பாடகி,ஃபாஷன் டிசைனர்,டி.வி.தயாரிப்பாளர்,டான்ஸர்!! அப்பாடி.ஒரு கவர்ச்சிப்புயலுக்குள் இவ்வளவு திறமைகளா?

4.நிகொல் கிட்மேன் 1967 ம் ஆண்டு பிறந்தார்.ஹவாயில் பிறந்த ஆஸ்திரேலிய நடிகை இவர்.இவரும் பாடகி,மாடல்,நடிகை என்று தூள் கிளப்புபவர். ”ஐ.நாவின் சிறந்த மனிதர்”என்ற விருது ”பெற்றவர். ஆஸ்திரேலியாவின் ”உயர்குடிமகன் விருது பெற்றவர். டு டை ஃபார்,தி ஹவர்ஸ் போன்றபடங்கள் குறிப்பிடத் தகுந்தவை.

5.ஜூலியா ராபர்ட்ஸ்!!

ப்ரெட்டி உமன் படத்தின் மூலம் உலக ஆண்,பெண் அனைவரையும் கவந்தவர்! 1967 ல் பிறந்தவர்.ப்ரெட்டி உமன் படம் 1990களில் $463 மில்லியன் சம்பாரித்தது.எரின் ப்ரொக்கோவிச் படத்துக்காக சிறந்த நடிகை விருது ஆஸ்கார் பெற்றவர்.நாட்டிங் ஹில்,ரன் அவே ப்ரைட் ஆகிய காதல் காமடிகள் பிரபலமானவை..2002லிருந்து 2005 வரை உலகின் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக இருந்தார்..படத்தயாரிப்பாளராகவும் இருக்கிறார்..

ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!

மேலேகண்ட நடிகைகளிடம் மனிதாபிமானமும் திறமையும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதை அவர்களைப் பற்றி படிக்கும்போதுதான் தெரிகிறது.

வீடியோபேட் - இலவச வீடியோ எடிடிங்க் மென்பொருள்

VidoPad - A Freeware Application for Video Editing Purpose

டிஜிடல் வீடியோக் (Digital Video) கோப்புகளில் இருந்து ஒரு தொடர்ச்சியான படத்தை உருவாக்குவது என்பது இது வரை உங்களுக்குக் கடினமாக இருந்திருக்கலாம்.

ஒரே ஒரு வீடியோ கோப்பிலிருந்தோ / நிறையக் கோப்புகளில் இருந்தோ ஒரு அருமையான தொடர்படத்தை (continuous movie) உருவாக்குவதற்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம்.

VideoPad - Video Editing

VideoPad - Video எடிட்டிங்

avi, .wmv, .3gp, .wmv, .divx மற்றும் இன்னும் பல விதமான வடிவங்களில் இருக்கும் கோப்புகளையும் இதனால் கையாள இயலும்.

சிறப்பு விளைவுகள் (special effects), தலைப்பிடுதல் (Video titling), ஏற்கனவே இருக்கும் ஒலிப்பகுதிக்குப் பதிலாக வேறொன்றைச் செருகுதுல் போன்றவற்றை இதன் மூலம் எளிமையாகச் செய்திடலாம்.

இது முழுக்க முழுக்க இலவசமாக (Freeware) இருப்பினும் கைதேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டதால் சிறப்பம்சங்கள் மிகுந்தது.

இணையிறக்கச் சுட்டி : http://www.nchsoftware.com/videopad/vpsetup.எஷெ

My Documents - Folder Location -ஐ வேறு Drive க்கு மாற்றுவது எப்படி?

வழக்கமாக My DocumentsC:\Documents and Settings\உங்கள் User Name\My Documents என்று இருக்கும். ஒருவேளை உங்கள் System Drive -ல் இடபற்றாகுறை, மற்றும் இதர காரணங்களுக்காக நீங்கள் My Documents ஐ வேறு டிரைவிற்கு மாற்ற வேண்டுமென்றால்,
1. தேவையான டிரைவில் "My Documents" Folder -ஐ Create செய்து கொள்ளவும்.
2. My Computer -ஐ திறந்து கொண்டு, அதில் இடது புறமுள்ள Common Task pane-ல் உள்ள "My Documents" -ஐ ரைட் கிளிக் செய்து Properties -க்கு செல்லவும். (வலதுபுறமுள்ள "My Documents Folder"-ல் அல்ல.)
3. இதில் Target எனும் இடத்தில் நீங்கள் புதியதாக உருவாக்கிய "My Documents"- Folder-ன் சரியான பாதையை டைப் செய்து Apply -ல் கிளிக் செய்யவும்.

16 மார்ச் 2009

ஏ.ஆர்.ரகுமான் அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை ..!

அஜ்மீர்: பிரபல இசை அமைப்பாளர், ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் நேற்று அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்தார். அங்குள்ள கவாஜா மொய்னுதீன் ஹசன் சிஸ்டி மகான் நினைவிடத்தில் மலர்ப்போர்வை போர்த்தி வேண்டுதலை நிறைவேற்றினார். ஆஸ்கார் பரிசு வென்றதற்காக பிரார்த்தனை செலுத்த வந்ததாகவும், இது முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட வருகை என்றும் ஏ.ஆர்.ரகுமான் நிருபர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்கள் கேள்விகளைத் தொடுக்க, சற்று எரிச்சலடைந்த ரஹ்மான், கூட்டங்கள், விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என தனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதாகவும், சிறிது காலத்துக்காவது தன்னைத் தனிமையில் விடுமாறும் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்.

நடிகை ஸ்ரீதேவியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ..!

தமிழ் சினிமாவில் 'கலைக் குடும்பம்' என்று செல்லமாக அழைக்கப்படும், நடிகர் விஜயகுமார்-நடிகை மஞ்சுளா தம்பதியினரின் இளைய மகள் நடிகை ஸ்ரீதேவியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னையில் நேற்று விமரிசையாக நடந்தது. நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, பிரீதா, ஸ்ரீதேவி ஆகிய 3 மகள்கள் உள்ளனர். வனிதாவுக்கும், பிரீதாவுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 3-வது மகள் நடிகை ஸ்ரீதேவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் ராகுல் ஹைதராபாத்தை சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியின் மகன். ஹைதராபாத்தில் சொந்தமாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். ஸ்ரீதேவி-ராகுல் நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமார்-மஞ்சுளா வீட்டில் நேற்று மாலை விமரிசையாக நடந்தது. இரவு 7.15 மணிக்கு புரோகிதர்கள் மந்திரம் ஓத நிச்சயதார்த்த நிகழ்ச்சி தொடங்கியது. மணமகன் ராகுலுக்கு மணமகள் ஸ்ரீதேவியின் அண்ணன் நடிகர் அருண் விஜய் மாலை அணிவித்தார். அதன்பிறகு சம்பந்திகள் நிச்சய தாம்பூல தட்டுகளை மாற்றிக் கொண்டனர். புரோகிதர்கள் நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்ததும் ஸ்ரீதேவியும், ராகுலும் மோதிரம் அணிவித்துக் கொண்டார்கள். திரண்டது திரையுலகம்: நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா, நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுந்தர்.சி, சந்திரசேகர், தியாகு, சஞ்சீவ், முன்னா, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நடிகைகள் மீனா, குஷ்பு, சங்கவி, சங்கீதா, லட்சுமி, ராஜஸ்ரீ, லதா, மகேஷ்வரி, டைரக்டர் பி.வாசுவின் மனைவி சாந்தி, இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி ஜீவா, சிவாஜி கணேசனின் மகள் தேன்மொழி, பேத்தி ஐஸ்வர்யா, பட அதிபர்கள் டி.சிவா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள். திருமணம்: ஸ்ரீதேவி- ராகுல் திருமணம் ஜுன் மாதம் 18-ந் தேதி சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடக்கிறது.

15 மார்ச் 2009

ரிச்சர்ட்ஸை நினைவூட்டும் ஷேவாக்- ஸ்ரீகாந்த்

ஹேமில்டன்: மேற்கு இந்திய அணிகளின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸின் நிழலை நான் ஷேவாக்கிடம் காண்கிறேன். ஷேவாக்கின் ரசிகனாகி விட்டேன் நான் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் தேர்வாளர் குழுத் தலைரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். நியூசிலாந்து அணியினரின் தூக்கத்தை கெடுத்து விட்டார் ஷேவாக். அடித்து விளாசிக் கொண்டிருக்கும் அவரை அவுட் செய்ய என்னய்யா வழி என்று நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி புலம்பிக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்றும் அவர் பீதியுடன் கூறுகிறார். அந்த அளவுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை பீதிக்குள்ளாக்கி வைத்திருக்கிறது ஷேவாக்கின் பிரமிப்பூட்டும் அதிரடி ஆட்டம். குறிப்பாக நான்காவது ஒரு நாள் போட்டியில் 60 பந்துகளில் சதம் போட்டு நியூசிலாந்து வீரர்களை சத்தாய்த்து விட்டார் ஷேவாக். இப்படி ஷேவாக் விளையாடி வருவதை ஸ்ரீகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் எனது ஹீரோ. ஷேவாக்கின் ஆட்டத்தை பார்க்கும் போது ரிச்சர்ட்சை நினைவு படுத்துகிறார். அவர் போல ஷேவாக் அதிரடியாக ஆடுகிறார். நான் ஷேவாக்கின் ரசிகராக மாறி விட்டேன். இந்திய அணி சமீபகாலமாக மிகவும் சிறப்பாக விளையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினோம். எல்லா மைதானங்களிலும் நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுகிறார்கள். உலகின் சிறந்த அணியாக இந்தியா உருவாகும் என்றார். முன்னாள் தேர்வுகுழு தலைவர் வெங்சர்க்கார் கூறும் போது, இந்தியாவின் பலமே பேட்டிங்தான். பந்து வீச்சுதான் இன்னும் வலுவாக வேண்டும் என்றார். முன்னாள் கேப்டன் கும்ப்ளே கூறுகையில், ஷேவாக் அருமையான வீரர். அவர் நல்ல பார்மில் இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து அவரை விளையாட வைக்க வேண்டும். அவருக்கு ஓய்வு தர கூடாது. காரணம், எப்போது வேண்டுமானாலும் அதிரடியாக திரும்பக் கூடியவர் அவர் என்றார்.

இஷா கோபிகருக்கு கல்யாணம்!

தமிழில் பூ மாதிரி நடித்துப் புகழ்பெற்று, இந்தியில் கவர்ச்சிப் புயலாய் கலக்கிய இஷா கோபிகரும், இல்லற ஜோதியில் ஐக்கியமாகப் போகிறார். தனது காதலர் ரோத் நரங்கை திருமணம் செய்யப்போவதாக இஷா கோபிகர் தெரிவித்துள்ளார். நெஞ்சினிலே படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் இஷா. பின்னர் காதல் கவிதை, நரசிம்மா, என் சுவாசக் காற்றே படங்களில் பிரசாந்த், விஜயகாந்த், அரவிந்த்சாமி உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். பின்னர் தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்கு சென்று, தனது தாராளக் கவர்ச்சியால் பிரபலமானார்.
Isha Gopikar
ஆரம்பத்தில் இந்தி நடிகர் இந்திரஜித்தை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர். பின்னர் ரோத் நரங் என்பவரை காதலிக்க ஆரம்பித்தார். அந்தக் காதல்தான் இப்போது கல்யாணத்தில் முடியப் போகிறது. மும்பையில் நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறார் ரோத் நரங். இதுகுறித்து பேசிய இஷா கோபிகர், "கடந்த ஆண்டு ஜூனில் ரோத்தை சந்தித்தேன். நட்பாக பழகி, காதலில் விழுந்தோம். இரு குடும்பத்தாரும் காதலை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து கடந்த டிசம்பரில் திருமணம் செய்ய முடிவு செய்தோம். எனக்கு பட வேலைகள் பாக்கி இருந்தன. ரோத்தும் சில பணிகளில் பிசியாக இருந்தார். இதனால் திருமணத்தை தள்ளிவைத்தோம். திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் இஷா!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com