Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

08 ஜூன் 2012

கூகுள் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க - Terminal for Google



கூகுள் பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு கிளிக் செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.


நீட்சியின் பயன்கள்:
  • ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.
  • உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
  • எந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில் மற்றும் பிளாக்கரில் share செய்யும் வசதி.
  • கூகுள் சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தேர்வு செய்து கொள்ளலாம்.
  • ஜிமெயில் மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு. 
உபயோகிக்கும் முறை:
இந்த Terminal for Google நீட்சியை டவுன்லோட் செய்து குரோம் உலவியில் இன்ஸ்டால் செய்து கொண்ட பிறகு க்ரோமில் தோன்றும் அந்த ஐகானை கிளிக் செய்தால் கூகுள் சேவைகள் வரும் அதில் நிறைய கூகுள் சேவைகள் இருக்கும் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Services என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை கிளிக் செய்தால் வரும், Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம். 

இனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.

Tech Shortly
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்

யூரோ கால்பந்தில் வெற்றியுடன் துவக்குமா போலந்து! * இன்று கிரீஸ் அணியுடன் மோதல் *


கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த யூரோ கோப்பை தொடர் இன்று துவங்குகிறது. முதல் போட்டியில் போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன. சொந்தமண்ணில் களமிறங்கும் போலந்து வெற்றி பெறும் நோக்கத்தில் உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு சார்பிலான, யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியில், "ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 தொடரில் முதன் முதலாக யூரோ போட்டியில் பங்கேற்ற போலந்து அணி, 2ல் தோற்று ஒரு போட்டியில் "டிரா' செய்து வெளியேறியது. இம்முறை சொந்த மண் என்பதால் வெற்றியுடன் துவக்க முயற்சிக்கலாம். இதற்கு தகுந்து இந்த அணி கடைசியாக பங்கேற்ற 5 போட்டிகளில் 4ல் வெற்றி, ஒரு "டிரா' செய்த நம்பிக்கையில் உள்ளது. கிரீஸ் அணிக்கு எதிராக பங்கேற்ற "நட்பு' போட்டியிலும், போலந்து தான் ஆதிக்கம் செலுத்தியது.
இருப்பினும், 2009ல் நடந்த உலக கோப்பை தகுதி சுற்றில் சொதப்பியதால், போலந்து அணி எவ்வித தொடர்களிலும் பங்கேற்காதது பின்னடைவு தான். கேப்டன் ஜாக்கப் பிளாஸ்சிகவுஸ்கி, ராபர்ட், லுகாஸ், சீஸ்னி ஆகியோர் தெளிவான திட்டத்துடன் களமிறங்கினால், முதல் வெற்றி பெறலாம்.
கிரீஸ் எப்படி:
கடந்த 2004ல் யூரோ கோப்பை வென்று அதிர்ச்சியளித்த கிரீஸ் அணி, இதன் பின் பெரிய அளவிலான தொடர்கள் எதிலும் பிரகாசிக்கவில்லை. 2008 யூரோ, 2010 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்ற 6 போட்டியில் 5ல் தோற்று, லீக் சுற்றுடன் வெளியேறியது. இம்முறை நம்பிக்கையுடன் களமிறங்கும் கிரீசிற்கு 16 மாதங்களுக்குப் பின் அணிக்கு திரும்பிய ஏஞ்சலோஸ் சாரிஸ்டீஸ், கரகவுனிஸ், கட்சவுரனிஸ் போன்ற சீனியர்கள் உதவலாம்.
ரஷ்யா மோதல்:
இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் ரஷ்யா, செக் குடியரசு அணிகள் மோதுகின்றன.
வெற்றி ஆதிக்கம்
போலந்து, கிரீஸ் அணிகள் இதுவரை 15 முறை மோதியுள்ளன. இதில் போலந்து அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. 2 போட்டிகளை "டிரா' செய்த இந்த அணி, 3ல் மட்டும் தோற்றது.
* கடைசியாக மோதிய 8 போட்டிகளிலும், கிரீஸ் தோற்றுள்ளது. இதில் நான்கு கோல்கள் மட்டுமே அடித்த இந்த அணி, போலந்திடம் 22 கோல்கள் வாங்கியுள்ளது.
யானை கணிப்பு பலிக்குமா
கடந்த உலக கோப்பை தொடரில் போட்டி முடிவுகளை சரியாக கணித்தது "பால்' ஆக்டோபஸ். இப்போது யூரோ கோப்பை போட்டிகளை கணிக்கிறது இந்திய யானை "சிட்டா'.
 தற்போது போலந்தின் மிருக காட்சி சாலையில் "சிட்டா' குறித்து பாதுகாவலர் ஜெர்சி பிரோக் கூறியது:
யானை "சிட்டா' கூறும் முடிவுகள் 100 சதவீதம் சரியாக உள்ளது. சமீபத்திய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனலில் கோப்பை வென்ற அணியை, முன்னதாகவே கணித்தது. இப்போது, போலந்து அணி பங்கேற்கும் போட்டிகளின் முடிவை கணிக்கிறது. இதன் படி, இன்றைய முதல் போட்டியில் போலந்து தான் வெற்றி பெறுமாம்.
அதாவது, இந்த யானை முன், போலந்து, கிரீஸ் தேசிய கொடிகளுடன், மற்றொரு கொடியையும் ("டிரா') வைத்து, ஒவ்வொன்றின் முன்னால், பழத்தை வைத்தனர். போலந்து கொடியின் முன் உள்ள பழத்தை எடுத்து, போலந்து வெற்றியை குறித்தது. இது சரியா என்று, இன்று தெரியும்.

வெப் ஹோஸ்டிங் தெரிவு செய்வது எப்படி?


வெப் ஹோஸ்டிங்க் பற்றி எழுதி ரொம்ப நாள்  ஆகிவிட்டது. அநேகமாக கடந்த பதிவுகளை படித்தவர்களுக்கு வெப் ஹோஸ்டிங்க் பற்றி தெரிந்து இருக்கும். வெப் ஹோஸ்டிங்க் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். இப்போது உங்கள் வெப் ஹோஸ்டிங்க் எப்படி தெரிவு செய்வது என்று சொல்கிறேன். 


முதலில் நீங்கள் எதற்கு வெப் ஹோஸ்டிங்க் வாங்குகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்கள் நிறுவனத்துக்கோ அல்லது இயக்கம், அமைப்பு போன்றவற்றுக்கு என்றால் அதற்கு ஏற்றபடி தெரிவு செய்ய வேண்டும். எதுவாய் இருப்பினும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது பேண்ட்வித், டிஸ்க் ஸ்பேஸ். 

ஏன் என்றால் இயக்கம் அல்லது அமைப்பு போன்றவற்றுக்கு என்றால் அது உங்களைப் பற்றி சொல்வதற்கு மட்டுமே இருப்பினும் குறைந்த அளவு பேண்ட்வித் உள்ளது போல போதும். இதே போல டிஸ்க் ஸ்பேஸ், நீங்கள் என்ன அப்லோட் செய்கிறீர்கள் என்பதை பொறுத்தது. எனவே நல்ல திட்டமிடல் அவசியம். 


நீங்கள்  ஹோஸ்டிங்க் வாங்கும் தளத்தில் வேர்ட்ப்ரஸ் பிளக்-இன் வசதி உள்ளதா என்று பாருங்கள். ஏன் என்றால் பிளாக்கர்க்கு அடுத்து எல்லோரும் தெரிவு செய்வது வேர்ட்ப்ரஸ்  . (இது வருமானத்திற்காக ஹோஸ்டிங்க் செய்ய விரும்புபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது).

அடுத்து தள வடிவமைப்பு வசதிகள்: நாம் வடிவைப்பு செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். (Template Availability ) இல்லை என்றால் இதற்கு தனியாக நீங்கள் செலவு செய்ய வேண்டி வரும். (வெப் மொழிகள் தெரியாதவர்களுக்கு மட்டும்)

உதாரணமாக அன்லிமிடெட் பேண்ட்வித்,டிஸ்க் ஸ்பேஸ், இமெயில் அக்கௌண்ட்ஸ் என்று வாங்கினால் மாதம் 500 ரூபாய்(உத்தேச மதிப்பு) (10$) என்று கொண்டால் வருடத்திற்கு 6000 ரூபாய் (120$) . இவ்வளவு செலவு என்பது வருமானம் உள்ள தளத்துக்கு தான் சரிப்படும்.1000 ரூபாயில் கூட முடிக்கலாம் ஒரு வருடத்துக்கு.

ஒரு டிரஸ்ட் ஒன்றுக்கு தளம் என்றால் முதலில் கூறிய அதிக செலவு தேவைப்படாது. எனவே இரண்டாவதை தெரிவு செய்யலாம்.

மற்றபடி எந்த தளத்தில் டொமைன் வாங்குவது என்பதை நான் பரிந்துரைக்க விரும்பவில்லை. விலை, உங்கள் தேவை என்பதை பொறுத்து இது மாறும். எனவே முதலில் உங்கள் திட்டமிடல் தான் அவசியம்.

Host U Can என்ற தளத்தில் நீங்கள் எந்த மாதிரியான ஹோஸ்டிங்க் செய்ய வேண்டும் என்பதை கொடுத்தால் உங்களுக்கு ஏற்ற வகையில் ஹோஸ்டிங்க் தகவல்களை கொடுக்கிறது.

ஆரம்பத்தில் சில தகவல்களை கொடுத்த பின் Side Bar இல் உங்களுக்கு தேவையான படி Filter செய்து கொள்ளலாம். 

இதில் ஒரு குறைபாடு இது அமெரிக்க கணக்கில் பணம் கூறுவது. ஆனாலும் பயனுள்ளது.


Read more: http://www.karpom.com/2011/12/web-hosting-4.html#ixzz1xCBMYVSZ

04 ஜூன் 2012

அழுதால் இறந்துவிடுவாளாம் இந்தக் குழந்தை!


அரைவாசி மண்டையோட்டுடன் பிறந்த 2 வயதுக் குழந்தை அழுதால் இறந்துவிடக்கூடும். அடம்ஸ்-ஒலிவர் அறிகுறி என்ற 130 பேரில் ஒருவருக்கு ஏற்படும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளாள் இச்சிறுமி.
 
இவளது மண்டையோட்டில் 7 செ.மீ. இல் 6 செ.மீ. பகுதி இல்லை. இவளது மூளையானது திரவத்தினாலும் அதனைச் சுற்றிலும் மெல்லிய தோற்படையினாலும் மட்டுமே சுற்றப்பட்டுள்ளது.
 
இதனால் அக்குழந்தையை அழவிடாது வைக்கும்படி வைத்தியர்கள் அதன் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவள் எப்போதுமே ஒரு தலைக்கவசத்தினை அணிந்தபடியே இருக்கின்றாள். ஏனைய பிள்ளைகளுடன் அவளால் விளையாடவும்முடியாது.
 
13 வயதிற்குப் பின்னரே இவளது மண்டையோடு பலமாகும் என்பதால் அதன்பின்னரே இவளுக்குச் சத்திர சிகிச்சை செய்யமுடியுமென்றனர் லண்டனின் Great Ormond Street வைத்தியசாலையின் வைத்தியர்கள்.
 
இவளது மண்டையோடு பிறந்ததைவிடவும் சற்று நிரவியுள்ளதாகக் கூறினாலும் அதன்பின்னர் அது வளர்வதற்கு இடமில்லையென்றும் நிரந்தரமாகவே இந்த இடைவெளியுடனேயே காணப்படுமென்றும் தெரிவித்தனர். 

அடுத்த குழந்தைக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராய்


கடவுள் ஆசிர்வதத்தால் அடுத்த குழந்தைக்கு தயாராவேன் என்று முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியுள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் 10 ஆண்டுகளாக கலந்து கொண்டு வருகின்ற ஐஸ்வர்யா ராய், இவ்வருடம் பார்த்தவர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள்.
காரணம், கடந்த ஆண்டுகளை விட இவ்வருடம் ஐஸ்வர்யாவின் உடலில் ஏற்பட்ட கூடுதல் அளவே ஆகும்.
திருமணத்திற்கு பின்பு குழந்தை பெற்றெடுத்த ஐஸ்வர்யாவின் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால் எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்து ஐஸ்வர்யா பேசியதாவது, நான் குழந்தையின் அம்மாவாக எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கின்றேன்.
என் உடம்பை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் பட்டினியாக இருக்க விரும்ப வில்லை. என் குழந்தையின் நலனை கவனித்து நன்றாக சாப்பிடுகின்றேன்.
நான் குண்டாக இருப்பதாக அக்கறையுடன் கவலைப்படும் ரசிகர்களுக்கு நன்றி கூறிய ஐஸ், கடவுள் ஆசிர்வாதத்தால் அடுத்த குழந்தைக்கு தயாராவேன் என்றும் கூறியுள்ளார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com