Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

28 ஆகஸ்ட் 2009

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள். ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும். 1.Eraser தரவிறக்கச்சுட்டி : http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download 2.Kill Disk தரவிறக்கச்சுட்டி : http://www.killdisk.com/ நன்றி வணக்கம் ! தொடர்புடைய பதிவு : அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

ரவியுடன் நடிக்க மறுத்த நடிகை!

ஜெயம் ரவியுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் பானு. தாமிரபரணியில் அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான அழகர் மலையில் நடித்தவர் பானு. மலையாள நடிகையான இவருக்கு ஜெயம் ரவியின் புதிய படமான தில்லாலங்கிடியில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம்.
Bhanu
ஆனால் அதை வேண்டாம் என்று கூறிவிட்டாராம். காரணம்? "எனக்கு கொஞ்சம்கூட பிடிக்காத, பொருத்தமில்லாத வேடம் அது. அதை எப்படி செய்வது? எக்கச்சக்கமாக கிளாமர் காட்ட வேண்டியிருக்கும் என்றார்கள். நான் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். அதனால் அந்த வேடத்தை மறுத்துவிட்டேன். இப்போதைக்கு வேறு தமிழ்ப் படங்கள் எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் நான் விரும்பியபடி அமைவதால் அங்கு தொடர்ந்து நடிக்கிறேன்!", என்கிறார் பானு.

விரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்‌ட்வேர்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமை செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்துவோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் இறுதியிலேயே இதை வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த வெர்சன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7ஐ அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ‌வெளியிடுகிறது. இதற்கு முன்னர் ஆப்பிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் புதிய வெர்சன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ- மெயிலிங், காலண்டர் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல் ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும் ‌என கூறப்படுகிறது. ஆப்பிளின் இந்தி புதிய வெர்சன் ஸ்நோ லெபர்ட் இதற்கு முந்தைய வெர்சனை விட பாதி அளவு தான். இதை இன்ஸ்டால் செய்ய 1 கிகாபைட் ரேம் ஸ்‌டோரேஜ் கெபாசிட்டி தான் தேவைப்படுமாம்.

"விருப்பப்படி" -ஒரு முழுமையான தமிழ் மென்பொருள்

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக்குடும்பங்களும், பத்திற்கும் மேற்பட்ட விசைப்பலகை வகைகளும் உள்ளன. இதனால் ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்தோர் மற்ற எழுத்துருவில் அத்தகவலை பார்க்க முடியாமல், தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளனர். இதே போல் ஒரு விசைப்பலகையில் பழகியோர் அந்த விசைப்பலகை துணை செய்யாத மற்ற எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய முடியாத நிலை உள்ளது. 'விருப்பப்படி' மென் பொருளானது மேற்கூறிய சிக்கல்களை எளிதாக தீர்த்து வைக்கிறது. அதாவது ஒரு தகவல் எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், எந்த விசைப்பலகை முறையை பயன்படுத்தி உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒருவர் அதே எழுத்துருவில் அவர் அறிந்த விசைப்பலகை முறையை கொண்டு 'தட்டச்சு' செய்ய முடியும். அதாவது எந்த விசைப் பலகை முறையை கொண்டும் எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்யவோ அல்லது ஏற்கனவே தட்டச்சு செய்ததை 'தட்டச்சு' செய்யவோ முடியும். இம்மென்பொருளை பயன்படுத்தி பெரும்பாலான மென்பொருள்களில்(MS Office,Corel draw,Pagemaker..) தட்டச்சு செய்ய முடியும். இந்த பயன்பாடு விருப்பபடி மென்பொருளின் முதன்மையான வசதியாக கூறப்பட்டாலும் மேலும் பல மேம்பட்ட வசதிகளை கொண்டுள்ளது. கீழ்காண்பது விருப்பப்படி மென் பொருளின் விசைப் பலகை மற்றும் எழுத்துருக் குடும்பம் தேர்வு செய்யும் முறை ..

குறிப்பாக" தன்னியக்க திருத்தம் "( Autocorrect ) எனும் வசதி எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. அடுத்ததாக "Font Sampler" எனப்படும் எழுத்துருக்களை குழுக்களாக காட்டும் வசதி உள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர். சிறப்பம்சமாக தமிழ் - ஆங்கிலம் அகராதியை கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 60000 ஆங்கில வார்த்தைகளுக்கு 1,50,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலிருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். ஒருங்குறி மூலமாகவும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விருப்பப்படி கொண்டுள்ளது. தமிழ் மொழியைப் பொறுத்தவரை கணினியில் அதன் அடுத்தக் கட்ட இலக்குகளை அடைவதில் தடையாக இருந்தவை எழுத்துருச்சிக்கல்கள், விசைப்பலகையில் உள்ள குழப்பங்கள் ஆகியவை ஆகும். இவற்றை முழுமையாக தீர்த்து வைக்கும் விதமாக "விருப்பப்படி" மென் பொருள் வெளிவந்துள்ளது. மேலும் சொல் திருத்தி போன்ற கருவிகளுக்கு அடிப்படையான " தன்னியக்க திருத்தம் "(Auto Correct) வசதியுடன் வெளிவந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். உண்மையில், 'எந்த எழுத்துருவிலும், எந்த விசைப்பலகையிலும்' என்ற நிலை ஒரு கனவு போலத்தான் இருந்து வந்திருக்கிறது இதுவரை. ஆனால் விருப்பப்படி இக்கனவை நிறைவேற்றி உள்ளது. மேலும் இதுவரையில் வெளிவந்திருக்கும் ஏராளமான எழுத்துருக்களில் எதில் தட்டச்சு செய்யப்பட்ட தகவல்களையும் எளிதாக நாம் விரும்பிய எழுத்துருவிலோ அல்லது ஒருங்குறியிலோ மாற்றம் செய்து கொள்ள முடிவது மிகவும் அரிய ஒரு வசதியாகும். தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற மொழிமாற்றும் ( transliteration )விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், ஒருங்குறியிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளது மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றமாகும். இம்மென் பொருளின் பயன்பாட்டு எல்லைகள் உண்மையில் கணக்கிட முடியாததாகும். இதுவரை வந்துள்ள பெரும்பாலான மென்பொருள் கருவிகளின் பயன்பாடுகள் அனைத்தையும் "விருப்பப்படி" மென்பொருள் ஒன்றிலேயே கொண்டுள்ளது. "விருப்பப்படி" மென்பொருளை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமெனில் ஒரு முழுமையான தமிழ் மென்பொருள் என்று கூறலாம்.

மேலதிக தகவல்களுக்கு: http://auw.sarma.co.in/Info/flasha/index.htm

எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்! - சோனியா அகர்வால்

பொதுவாக காதலியைப் பிரிந்த காதலர்கள் அல்லது மனைவியைப் பிரிந்த கணவர்கள்தான் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார்கள். இப்போது நிலைமை உல்டாவாகிவிட்டது. பெண்களும் இந்த வார்த்தயைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மிக சமீபத்தில் கிட்டத்தட்ட இந்த வாசகத்தைப் பயன்படுத்தியிருப்பவர் சோனியா அகர்வால். செல்வராகவனைத் திருமணம் செய்து கொண்டு இப்போது பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ள சோனியா அகர்வால், தங்கள் மண முறிவுக்கான காரணங்களை லேசுபாசாக மீடியாவில் சொல்ல ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் ஆங்கில நாளிதள் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் நாளாக ஆக செல்வா மாறிவிட்டார். எங்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றிவிட்டன. பின்னர்தான், என்ன காரணம் என்பதை இருவரும் புரிந்து கொண்டோம். ஒன்றாக வாழ்ந்தது போதும், கணவன் - மனைவியாக இருந்த போதும்கூட நாங்கள் அதிகம் பேசிக் கொண்டதில்லை. இறுதி நாட்களில் வெறுமையும் வெறுப்பும் ஆக்கிரமிக்கும் முன் பிரிந்துவிட்டோம். இப்போது நிம்மதியாகத்தான் உள்ளது. மனதுக்குள் எந்த வருத்தமும் இல்லை, திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்திருக்கலாமே என்ற நினைப்பத் தவிர!
Sonia Agarwal
அதற்காக செல்வராகவனை நான் வெறுக்கவில்லை. செல்வராகவனை இப்போது நண்பராப்க பார்க்கிறேன். எப்போதாவது தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம். எதிர்காலத்தில் அவர் நன்றாக இருக்க வேண்டும்... எங்கிருந்தாலும், எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் என்று வாழ்த்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார். இந்தப் பேட்டியிலும் அவர் ஆண்ட்ரியா பற்றி பேச மறுப்புத் தெரிவித்திருந்தார்.

நிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா!

வீட்டில் இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன். அதுதான் எனக்குப் பிடித்துள்ளது என்கிறார் அமெரிக்க நடிகை [^] அலிசியா சில்வர்ஸ்டோன். அலிசியாவுக்கு இப்போது 32 வயதாகிறது. ஹெல்த் என்ற இதழுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு நி்ர்வாணம் மிகப் பிடிக்கும். குறிப்பாக பணி செய்யும்போது நிர்வாணமாக இருக்கவே விரும்புவேன். வீட்டில் ஓய்வாக இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன். இன்று நேற்றில்லை சிறு வயதாக இருந்தபோதே இப்படித்தான் இருந்து வருகிறேன். வெளியில் வெயிலில் சென்று விட்டுத் திரும்பினால் முதலில் எனது உடைகளை கழற்றித் தூர எரிந்து விட்டு சுதந்திரமாகி விடுவேன். பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து மணிக்கணக்கில் நீச்சலடித்தபடி இருப்பேன். நீச்சல் குளத்திலும் கூட நான் எப்போதுமே நிர்வாணம்தான்.
Alicia Silverstone
நடிகர் உட்டி ஹேரல்சனும் ஒரு நிர்வாணப் பிரியர். அவருடன்தான் நான் அதிக நேரத்தை செலவிடுவேன். நான் நிர்வாணமாக இருப்பதை அவர் ஒருபோதும் வித்தியாசமாக பார்த்ததில்லை என்கிறார் அலிசியா. ரொம்பப் புதுசா இருக்கே...!

விதவிதமாய்-வித்தியாசமாய் ரிங்டோன்கள்

சிலர் செல்போனில் விதவிதமாக ரிங்டோன்கள் - மெசேஜ்
டோன்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே இநத
தளம் உள்ளது. இதில் 3,18,538 -க்கும் மேற்பட்ட ரிங்
டோன்கள் வெவ்வேறு கேட்டகிரியில்(Categories) உள்ளது.
புகழ்பெற்ற பாடல்கள்,செந்தில் கவுண்டமணி காமெடிகள்,
வடிவேலு காமெடிகள்,குழந்தைகளின் சிரிப்புகள்,குழந்தையின்
அழுகுரல்கள்,நகைச்சுவையான இசைதொகுப்புகள் என
நமக்குவேண்டிய கேட்டகிரியை(Categories) தேர்வுசெய்து
வேண்டியதை -விரும்பியதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல முதலில் இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து பாடலை முதலில்
முன்னோட்டம கேளுங்கள். உங்களுக்கு பாடல்- காமெடி வசனம்
-ரிங் டோன் -பிடித்திருந்தால் இதன் கீழ் உள்ள Get Ringtone கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள PC DOWNLOAD கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும்.
இதன் கீழ் புறத்தில் உள்ள Start Download கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு நீங்கள் ரிங்டோனை எந்த டிரைவில் சேமிக்க
போகின்றிர்களோ அந்த டிரைவை தேர்ந்தேடுங்கள். பிறகு
சேமியுங்கள்.
இப்போது உங்கள் விருப்பபாடல் உங்கள் கணிணியில்
இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்கள் மொபைலுக்கு
டேட்டா கேபிள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
பதிவை பாருங்கள்.பிடித்திருந்தால் மறக்காமல்
ஓட்டுப்போடுங்கள்.

THANKS

சோனியா முன்னிலையில் காங்கிரஸில் சேருகிறார் விஜய்!

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் விஜய். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vijay
நடிகர் விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் [^] முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் உள்ளார். இந்த கட்டடங்கள் ஒரு பக்கம் திருமணக் கூடங்களாகவும், இன்னொரு பக்கம் அவரது மக்கள் [^] இயக்க அலுவலகங்களாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த நெட்வொர்க்கை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பிய ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே இன்றைக்கு முழு வெற்றி பெற முடியாமல் ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம். ராகுல் காந்தியிடம் தனது விருப்பத்தைச் சொன்ன விஜய், விரைவில் சோனியா காந்தி [^] முன்னிலையில் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, இன்னும் சில தினங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்பதே பதிலாக வந்தது.

புளு-ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களை தயாரிக்க இலவச மென்பொருள்

சிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா! ஆஹா! இத்தனையும் இலவசமா என்று வியப்படையாதீர்கள். சிடி பர்னர் எக்ஸ்பி என்ற புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் சிஸ்டம் ஒத்துழைத்தா புளு ரே மற்றும் எச்.டி –டிவிடிக்களையும் தயாரித்து வழங்குகிறது.இதன் லேட்டஸ்ட் பதிப்பு (4.2.4) ஆக கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தி டலாம். மற்ற சிடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்தவிதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.
கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. ஆகியனவற்றினைத் தேர்ந்தெடுக்கத் தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும். இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் டேட்டா பைல்களைக் கொண்டு சிடி உருவாக்கப் போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஆப்ஷன் திரை கிடைக்கும். பின் அதன் வழியே சென்றால் எளிதாக சிடி பர்ன் செய்யலாம்.
இந்த புரோகிராமினை விண் டோஸ் 2000 ல் தொடங்கி இன்றைய விஸ் டா ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில் .net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

32.5 அடி நீள தோசை-அகமதாபாத் ஹோட்டல் கின்னஸ் சாதனை

ஆமதாபாத்: ஆமதாபாத்தை சேர்ந்த சங்கல்ப் ஹோட்டல் தான் இந்த 32.5 அடி நீள கின்னஸ் சாதனை தோசை தயாரித்துள்ளது.
Dosa
ஆமதாபாத்தை சேர்ந்த சங்கல்ப் ஹோட்டல்கள் நீண்ட தோசைகளை சுடுவதில் பிரபலமானவர்கள். இவர்கள் கடந்த 1997ல் முதன் முறையாக 25 அடி நீள தோசை தயாரித்து கின்னசில் இடம்பிடித்தனர். பின்னர் 2006 பிப்ரவரியில் இரண்டாவது முறையாக 30 அடி 5 அங்குல நீளத்துக்கு தோசை தயாரித்து சாதனை படைத்தனர். தற்போது கடந்த 19ம் தேதி 32.5 அடி நீளத்துக்கு மொறு, மொறு தோசையை வெறும் 40 நிமிடங்களில் தயாரித்து தங்களது முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர். இந்த தோசைக்கு விரைவில் தெலுங்கு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவர இருக்கும் குயிக் கன் முருகன் என்ற திரைபடத்தின் பெயரை சூட்டியுள்ளனர். இந்த படம் சைவத்தின் பெருமை உணர்த்துவதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த தோசையை 16 சமையலறிஞர்களும், 8 உதவியாளர்களும் சேர்ந்து 10 நாள் கடும் பயிற்சிக்கு பின் தயாரித்துள்ளனர். இது குறித்து சுவாமி கோடா என்ற சமையலறிஞர் கூறுகையில், இதற்காக நாங்கள் 35 அடி நீள இரும்பிலான தோசை கல்லை பயன்படுத்தினோம். கல்லின் அனைத்து பகுதிகளும் ஒரே வெப்ப நிலையில் வைத்திருக்க மிகவும் கஷ்டப்பட்டோம். மாவை 32.5 அடி நீளத்துக்கு ஊற்றி தோசை சுடுவது சாதாரணம் அல்ல என்றார்.

26 ஆகஸ்ட் 2009

'Project Natal': அசர வைக்கும் மைக்ரோசாப்ட்!

பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து (reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் நிறுவனம் என்ற பெயர் உண்டு. அந்தப் பெயரை மாற்றும் வகையில் தற்போது 'Project Natal' என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது மைக்ரோசாப்ட். கையின் அசைவுகளை வைத்து வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டில் மாபெரும் புரட்சி செய்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான வேலையில் இறங்கியுள்ளது.அதற்கு தான் 'Project Natal' என்று பெயர். இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்களையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன்படுத்த வேண்டியதும் இல்லை. நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன்படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணரச் செய்கிறார்கள். நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! (http://www.youtube.com/watch?v=I9tmr8VDqN8) (http://www.xbox.com/en-US/live/projectnatal/) இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது. உண்மையிலேயே நம்பவே முடியவில்லை. வீடியோ விளையாட்டில் இது நிச்சயமாக 'evolution' ஆக இருக்காது, 'revolution' ஆக இருக்கும்!

கந்தசாமி... ரஜினி பாராட்டு!

கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்காக சிறப்புக் காட்சி ஒன்றை சென்னை ப்ரிவியூ திரையரங்கில் ஏற்பாடு செய்திருந்தார் கலைப்புலி தாணு.
Shriya with Vikram in Kandhasamy
படத்தை ரசித்துப் பார்த்த ரஜினி, காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளதாகவும், நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் விக்ரம் மிகவும் சிரத்தை எடுத்து உழைத்திருப்பதாகவும் பாராட்டினார். படத்தின் நாயகன், நாயகி, இயக்குநர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில பாராட்டினாராம் ரஜினி. ரஜினி இந்தப் படம் பார்த்த நிகழ்வை பெரிய அளவில் விளம்பரமாகப் பயன்படுத்த தயாரிப்பாளர் தாணு முடிவுசெய்துள்ளார். ரஜினி படம் பாரத்த செய்தியை மீடியாவுக்கு தெரிவிக்க தாணு முடிவு செய்த போது, ‘இப்போதுதான் கந்தசாமி பற்றிய டாக் நன்றாக உள்ளதே… இன்னும் ஓரிரு நாள் கழித்து இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல செய்தியைத் தாங்கி வந்துள்ள ஒருபடம் இன்னும் அதிக மக்களைச் சென்றடைய நானும் உதவியதாக இருக்கும்’, என்றாராம் ரஜினி. இந்தப் படம் குறித்த தனது கருத்துக்களை வீடியோ பேட்டியாகவும் வழங்கியுள்ளாராம் ரஜினி. "ரஜினியின் இந்தப் பெருந்தன்மையை, நட்பை வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டேன்...", என்றார் கலைப்புலி தாணு.

ராகுலுடன் விஜய் சந்திப்பு!-காங்கிரசி்ல் இணைகிறார்!!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய்.
Rahul and Vijay
இதனால் அவர் காங்கிரசில் இணையக் கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் திரண்டு புதுச்சேரி காங்கிரசாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அரசியலுக்கு வருவதே தனது நோக்கம் என்றும் ஆனால் நிதானமாகவே வர விரும்புவதாகவும் அக்கூட்டத்தில் பேசும்போது விஜய் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு ராகுல் காந்தியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்ற விஜய், ராகுல் காந்தியுடன் இரண்டு மணிநேரம் பேச்சு நடத்தியதாக இப்போது தெரியவந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறும்போது ‘‘தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல்காந்தி தீவிரமாக இருக்கிறார். விஜய்யுடன் பேசியது அதில் ஒரு முயற்சி. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்’’ என்றனர். இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததே புதுவை முதல்வர் தான் என்றும் கூறப்படுகிறது. விஜய்க்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பைத் தர ராகுல் ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விஜய்யின் தந்தை- இயக்குனர் சந்திரசேகர் கூறுகையில், நீண்ட நாட்களாகவே விஜய்யும் ராகுலும் இ-மெயிலில் தொடர்பில் உள்ளனர். இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்வதும் வழக்கம். இப்போது நடந்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றார். ஒரு பக்கம் காங்கிரசுடன் கூட்டணிக்குத் தயார் என் தேமுதிக தலைவரான நடிகர் விஜய்காந்தின் கூறி வரும் நிலையில், அடுத்த முக்கிய நடிகரும் காங்கிரஸ் பக்கம் சாய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் 'கோயிங் ஸ்டெடி' என்பதைப் போல காட்டிக் கொண்டே, மறுபக்கம் விஜய், விஜய்காந்துடன் அரசியல் பேச ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

வீடியோ:நோக்கியாவின் லேப்டாப்

முன்னணி செல்பேசி நிறுவனமான நோக்கியா லேப்டாப் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. நோக்கியா நிறுவனம் இன்று தனது சிறிய லேப்டாப்பை(Nokia Booklet 3G)அறிமுகப்படுத்தியது.10.1 இன்ச் அகல அதி துல்லிய(High Defninition) திரையுடன் வரும் இந்த லேப்டாப் 1.25 கிலோ எடை மட்டுமே கொண்டது.3G வயர்லெஸ் வசதி கொண்ட இந்த லேப்டாப் விண்டோஸ் இயங்குதளத்தை கொண்டிருக்கும்.HDMI வெளியீடு(அதிதுல்லிய தொலைக்காட்சி பெட்டியுடன் இணைக்க),உள்ளிணைந்த A-GPS(இருப்பிடங்களை அறிந்து கொள்ள)வசதிகளையும் கொண்ட இந்த லேப்டாப்பின் முக்கிய சிறப்பம்சம் 12 மணி நேரம் உபயோகிக்கும் அளவுக்கு ஆற்றல் தரும் இதன் பேட்டரி தான். இந்த லேப்டாப்பின் விலை மற்றும் மேலதிக விவரங்களை நோக்கியா நிறுவனம் செப்டம்பர் 2 ஆம் தேதி ஜெர்மனியில் நடைபெறும் Nokia World 2009 என்னும் கருத்தரங்கில் வெளியிடப்போகிறது.

ஜெசிகா பியல்-நம்பர் 1 'வைரஸ்' ஸ்டார்!

இன்டர்நெட்டின் மிகவும் அபாயகரமான ஸ்டார் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஹாலிவுட் கவர்ச்சி நடிகை ஜெசிகா பியல். இவரது பெயரில்தான் இன்டர்நெட்டில் ஏகப்பட்ட வைரஸ் புரோகிராம்கள் வலம் வந்து கொண்டுள்ளனவாம்.
Jessica Biel
சைபர் உலகின் மிகவும் அபாயகரமான நட்சத்திரம் என்ற பெருமை முன்பு பிராட் பிட்டிடம் இருந்தது. இப்போது அதை பியல் தட்டிப் பறித்துள்ளார். இன்டர்நெட் பாதுகாப்பு நிறுவனமான மெக்காஃபீ நடத்திய கணிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வயதாகும் ஜெசிகா பியல், 7வது சொர்க்கம் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவரது பெயரில்தான் தற்போது இன்டர்நெட்டில் ஏகப்பட்ட வைரஸ் புரோகிராம்கள் உலா வந்து கொண்டுள்ளனவாம். ஐந்து வைரஸ் புரோகிராம்களில் ஒன்று பியல் பெயரைத் தாங்கி வருகிறதாம். இதுகுறித்து மெக்காஃபீயின் ஜெப் க்ரீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நட்சத்திரங்கள், பிரபலங்களின் பெயர்களில் வைரஸ்களை உலா விடுவது இப்போது அதிகரித்து விட்டது. அப்படி விட்டால்தான் நிறையப் பேர் ஏமாந்து போய் வருவார்கள் என்பது அவர்களின் எண்ணம். அதிலும் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு இருக்கும் பாப்புலாரிட்டியை இவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்களின் பெயர்களில் வைரஸ்கள், மால்வேர் உள்ளிட்டவற்றை அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் கம்ப்யூட்டர்கள் பாதிப்படைந்து அவற்றைப் பயன்படுத்துவோர் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. கிம் கர்தர்ஷியான், ரிஹானா, பிராட் பிட், ஏஞ்செலீனா ஜூலி, மேகான் பாக்ஸ் உள்ளிட்டோரின் பெயர்களில் ஏகப்பட்ட மால்வேர், வைரஸ் புரோகிராம்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இவர்களின் பெயர்களில் இன்டர்நெட்டில் உலா வரும் ஸ்கிரீன் சேவர், ரிங்டோன் போன்றவற்றை உள்ளடக்கிய தளங்களுக்குப் போனால் அங்கு வைரஸ்தான் கொட்டிக் கிடக்கும். குறிப்பாக பாப் பாடகி பியான்ஸ் பெயரில் ரிங்டோன்கள் டவுன்லோடு செய்யும் தளங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை வைரஸ்தான். எங்களது கருத்துக் கணிப்புப் பட்டியலில் ஜெனீபர் அனிஸ்டனுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. அனிஸ்டன் பெயரில் ஸ்கிரீன் சேவர்கள் நிறைய வலம் வருகின்றன. ஆனால் பெரும்பாலானவை வைரஸ்கள்தான். மைலி சைரஸ், ஆஷ்லே டிஸ்டேல், லின்ட்சே லோஹன் ஆகியோருக்கும் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. மேகான் பாக்ஸ், ஜூலி ஆகியோர் 8வது இடத்தில் இணைந்து உள்ளனர். 4வத இடத்தில் டாம் பிராடியும், 6வது இடத்தில் கிஸெல் பன்ட்செனும் உள்ளனர். ஒபாமாவுக்கு 34- மிஷலுக்கு 39 அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இந்தப் பட்டியலில் 34வது இடம் கிடைத்துள்ளது. அவரது மனைவி மிஷல் 39வது இடத்தில் உள்ளார். பிராட் பிட்டுக்கு இம்முறை 10வது இடம்தான் கிடைத்துள்ளது.

Simbhu, Sandhya in Aadhi Narayana Audio Launch Stills, Pics Gallery

Simbhu, Sandhya in Aadhi Narayana Audio Launch Stills, Aadhi Narayana Audio Launch Pics, Aadhi Narayana Audio Launch Gallery, Aadhi Narayana tamil movie Audio Launch
Please Click The Photo For Clear View

Related Posts

நாளையை பற்றி மட்டுமே யோசிப்பேன்!-ரஜினி

நான் எப்போதுமே நாளையைப் பற்றி மட்டும்தான் யோசிப்பேன். நாளை மறுநாளைப் பற்றி யோசிக்க மாட்டேன் நடிகர் ரஜினிகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த 15ம்ந் தேதி முதல், நாடக விழா நடைபெற்று வந்தது. நேற்று விழாவின் நிறைவுநாள்.
Rajini
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் நடித்த 'வெற்றி வெற்றி வெற்றி' என்ற நாடகம் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு கேடயம் வழங்கி கெளரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது: நான் பொதுவாக எல்லா விழாக்களுக்கும் சரியான நேரத்துக்குப் போய் விடுவேன். இந்த நிகழ்ச்சி நமது குடும்ப விழா. நமது சகோதர, சகோதரிகள் இங்கு இருக்கிறார்கள் என்பதால், கொஞ்சம் தாமதமாக வந்தேன். உண்மையாகவே ரொம்ப வித்தியாசமான நிகழ்ச்சி இது. உள்ளே விட மறுத்த காவலாளி... 1979ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. அப்போது மக்கள் [^] திலகம் எம்.ஜி.ஆர். தலைமையில் சிவாஜி நடித்த 'அசோக சக்கரவர்த்தி' நாடகம் நடைபெற்றது. நான் 'ஷூட்டிங்' முடித்து விட்டு, ஒரு ஸ்கூட்டரில் நடிகர் சங்கத்துக்கு வந்தேன். போலீஸ்காரர்கள் என்னை உள்ளே விடவில்லை. என்னை யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அதன்பிறகு சிலர் வந்து, 'இவர்தான் ரஜினிகாந்த் [^]' என்று என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். உள்ளே உட்காரக்கூட இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டே நாடகத்தை பார்த்து ரசித்தேன். அதன்பிறகு சில கசப்பான சம்பவங்கள் நடந்தன. இப்போதுதான் மகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். சரத்குமார், இங்கே நாடகத்தில் நடித்தார். அவரிடம் 'நீங்கள் ஏற்கனவே நாடகத்தில் நடித்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'பழக்கம் இல்லை, இதுதான் முதல் அனுபவம்' என்று சொன்னார். எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷனில் 'வேலைக்காரன்' படத்தில் நான் நடித்தபோது, குறிப்பிட்ட ஒரு சீனில் குழப்பம் ஏற்பட்டது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.கே.ராமசாமி, டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வி.கே.ராமசாமி என்னை அழைத்து, 'நீ நாடகத்தில் நடித்து இருக்கிறாயா?' என்று கேட்டார். 'நடிச்சிருக்கேன்'னு சொன்னேன். 'மேடை நாடகங்களில் நடித்தால்தான் நடிகர்களுக்கு 'டைமிங் சென்ஸ்' வரும்' என்று சொன்னார். என் நடிப்புலக அறிமுகமே மேடையில்தான் நடந்தது. நான் பஸ் கண்டக்டராக இருந்தபோது 25 நாடகங்களில் நடித்தேன். அதைப் பார்த்து என் நண்பர்கள், 'நீ சினிமாவுக்கு போனால் பெரிய ஆளாகி விடுவாய்' என்று ஏத்திவிட்டுட்டாங்க. அப்படியே நான் சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் 2 வருடங்கள் நடிப்பு பயிற்சி பெற்றேன். என்னுடைய நாடக நடிப்பை கே.பாலசந்தர் சார்தான் மாத்தினார். நாளை பற்றி மட்டும்தான் யோசிப்பேன்! கலை உலகின் மிகப்பெரிய மகான்களான என்.டி.ராமாராவ், சிவாஜி, ராஜ்குமார் போன்றவர்களின் கடைசி காலகட்டத்தில் அவர்களுடன் பழகுகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த மகான்கள் நாடக கலையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார்கள். இதுதொடர்பாக நானும் அவர்களிடம் பேசி இருக்கிறேன். நாடகத்தில் நடிக்கும்போது கிடைக்கும் சந்தோஷம், வேறு எதிலும் கிடைக்காது. நான் எப்போதுமே நாளையை பற்றி யோசிப்பேன். நாளை மறுநாளைப் பற்றி யோசிக்க மாட்டேன். நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிப்பது எப்படி, பார்ப்பது எப்படி, வசனம் பேசுவது எப்படி என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பது எப்படி என்று மட்டும் சொல்லிக் கொடுப்பது இல்லை. அதுதான் தலைவிதி. சம்பாதித்த பணத்தை எப்படி கட்டிக்காப்பது என்றும் நாடக நடிகர்களுக்கு தெரியாது. பொழுதுபோக்காக ஆரம்பித்து பிழைப்பாக மாறுவது இரண்டு விஷயங்களில்தான். ஒன்று கலை, இன்னொன்று விளையாட்டு [^]. கலைஞர்களுக்கு பணம் இருந்தால் பொழுது போய்விடும். பணம் இல்லை என்றால், விடிந்தாலே கஷ்டம். இங்கே மனோரமா பேசும்போது, கலைஞர்களுக்கு வயது ஆகக்கூடாது என்று கூறினார். உடம்புக்கு வயது ஆவதை தடுக்க முடியாது. மனதுக்கு வயது ஆகாமல் தடுக்க முடியும். தங்கத் தட்டில் தேங்காய்! நடிகர் சங்கத்துக்கு நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். என்ன விஷயமாக இருந்தாலும், மனநிறைவோடு செய்ய வேண்டும். நடிகர் சங்கம் இருப்பது தி.நகரில். அதுவும் 18 கிரவுண்டில். இந்த இடத்தை வைத்துக்கொண்டே ஒரு மாதத்தில் சில லட்சங்கள் வருமானம் பார்க்கலாம். 18 கிரவுண்டு நிலத்தை வைத்துக்கொண்டு வருமானம் இல்லாமல் இருப்பது தங்கத் தட்டில் தேங்காய் விற்பது போலாகி விடும். இப்போது நடப்பது உங்கள் ஆட்சி. கலைஞர் முதல்வராக இருக்கிறார். ஆச்சி மனோரமா போன்றவர்கள் அவரிடம் சென்று நடிகர் சங்கத்துக்கு உதவ வேண்டும் என்று சொன்னால், அவர் தட்ட மாட்டார். அந்த இடத்தை வளர்ச்சியடையச் செய்து வருமானம் வருகிற மாதிரி செய்யலாம். அழகான திரையரங்கத்தை உருவாக்கலாம். இதுபற்றி தீவிர ஆலோசனை நடத்த வேண்டும். நடிகர் சங்கம் உருவாவதற்கு காரணமான எம்.ஜி.ஆர்., சிவாஜி, நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு பாடுபட்ட விஜயகாந்த் [^], சரத்குமார், ராதாரவி போன்றவர்களை மறக்க முடியாது என்றார் ரஜினி. நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் எம்.என்.ராஜம், முதல் பெண் தலைவர் அஞ்சலிதேவி ஆகிய இருவரும் விழாவில் கெளரவிக்கப்பட்டனர். விழாவில், நடிகர் சங்க தலைவர் சரத்குமார் [^], செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோரும் பேசினார்கள்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com