26 ஆகஸ்ட் 2009
'Project Natal': அசர வைக்கும் மைக்ரோசாப்ட்!
பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து (reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் நிறுவனம் என்ற பெயர் உண்டு. அந்தப் பெயரை மாற்றும் வகையில் தற்போது 'Project Natal' என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது மைக்ரோசாப்ட்.
கையின் அசைவுகளை வைத்து வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டில் மாபெரும் புரட்சி செய்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான வேலையில் இறங்கியுள்ளது.அதற்கு தான் 'Project Natal' என்று பெயர்.
இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்களையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன்படுத்த வேண்டியதும் இல்லை. நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன்படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணரச் செய்கிறார்கள்.
நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! (http://www.youtube.com/watch?v=I9tmr8VDqN8)
(http://www.xbox.com/en-US/live/projectnatal/)
இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது. உண்மையிலேயே நம்பவே முடியவில்லை.
வீடியோ விளையாட்டில் இது நிச்சயமாக 'evolution' ஆக இருக்காது, 'revolution' ஆக இருக்கும்!