
25 ஜூலை 2009
பிகினிக்கும் ஓகே! - இறங்கி வந்த ஸ்னேகா
நடித்தால் குடும்ப குத்துவிளக்காகத்தான் நடிப்பேன் எனக் கூறிவந்த ஸ்னேகா, இப்போது பிகினி என்றாலும் ஓகே என்று இறங்கி வந்துவிட்டாராம்.
பிஸ்டல் தூக்கி 'அதிரடி பவானி'யாக வந்தவர், திடீரென்று 'பிகினி பேப்' லெவலுக்கு வந்துவிட்டதன் மர்மம் என்ன?
நீச்சல் உடை என்பதை நான் வெறுக்கவில்லை. இதுவரை அந்தத் தேவை எனக்கு இல்லாமல் இருந்தது. ஆனால் கதைக்கு அவசியம் எனும்போது பிகினியில் தோன்றுவதில் தப்பே இல்லை, என புதிய தத்துவம் பேசுகிறார் ஸ்னேகா.
"போட்டியைத் தாக்குப் பிடிக்க வேண்டாமா... இன்றைக்கு போர்த்திக் கொண்டுதான் நடிப்பேன் என்று சொன்ன அத்தனை பேரும் பீல்ட் அவுட் ஆகிவரும் நிலையில், ஸ்னேகா மட்டும்தான் தேவைக்கேற்ப கவர்ச்சி, குடும்பப் பாங்கு என பாலன்ஸ் செய்து நடித்து வருகிறார்.
ஆனால், இந்த டெக்னிக் ரொம்ப நாள் ஒர்க் அவுட் ஆகாது. மேலும் ஸ்னேகாவும் பத்து வருடத்துக்குமேல் நடித்துவிட்டார். எனவே பீல்ட் அவுட் ஆவதற்குள் தன் கவர்ச்சி அஸ்திரத்தையும் ஏவிப் பார்க்க முடிவு செய்துவிட்டார்", என்கிறது கோலிவுட் வட்டாரம்.
முக்கியமான சமாச்சாரம்... அம்மணியின் இந்த பிகினி தரிசனம் தமிழக ரசிகர்களுக்கு இல்லையாம்... ஒன்லி தெலுங்கு தேசத்துக்கு மட்டும்தானாம்!

அஜீத் படத்தில் ஷாரூக்கான்?
அஜீத் நடிக்கும் அசல் படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ஷாரூக்கானின் அசோகா படத்தில் அவரது தம்பியாக கௌரவ வேடத்தில் நடிகத்தார் அஜீத். அப்போதிலிருந்து இருவரும் நண்பர்களாகப் பழகி வருகிறார்கள்.
இப்போது அஜீத் அசல் எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சில காட்சிகளில் இந்தி நடிகர் ஷாரூக்கான் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த இயக்குநர் சரண், அதுகுறித்து அஜீத்திடம் பேசியுள்ளார்.
இதுகுறித்து ஷாரூக்கானிடம் அஜீத் பேசியிருப்பதாகவும், அவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பாளர் பிரபுவும் இதுகுறித்து பேசினாராம்.
ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அசல் படத்தில் அஜீத்தின் ஜோடியாக சமீரா ரெட்டி மற்றும் பாவனா நடிக்கிறார்கள். பரத்வாஜ் இசையமைக்கிறார். மலேஷியாவில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடக்கிறது.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடிக்கிறது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com
NOKIA India வெளியிட்டுள்ள புதிய மாடல் செல்போன்கள்
மோதி விளையாடி" ஜெயித்த இயக்குநர் சரண்?
தனது நிஜ வாழ்க்கையில் சினிமா உலகம் கொடுத்த நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்த இயக்குநர் சரண் பின்னாளில் அந்த நண்பர்களாலேயே ஏமாற்றப்பட்டு பின்பு தனித்து விடப்பட்டு கஷ்டப்பட்ட கால கட்டங்களில் கூடவே இருந்த இரண்டு குரு பக்தியுள்ள உதவி இயக்குனர்களை வைத்துக் கொண்டு இயக்கி வெளிவந்திருக்கும் படம்.
படத்தோட கதையையும், வசனங்களையும் நம்ம பதிவுலகத்துல தொடர்ந்து எழுதிக்கிட்டு வர்ற மரியாதைக்குரிய எழுத்தாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியிருக்கிறார்.
ஒரே மாதிரி மசாலாப் படங்களை பாத்து பாத்து புளித்துப்போன நம்ம கண்களுக்கு இந்த படம் உண்மையிலேயே கோடை வெயிலுக்கு இதமா கிடைக்கிற ஐஸ்க்ரீம் மாதிரி.
அதே மாதிரி இந்த படத்தோட கதையும் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லாதது.நன்றி: ராமகிருஷ்ணன சார்)
உலக பணக்காரர்கள்ல ஒருத்தர் தான் கலாபவன்மணி,அவரோட வேலையே ரொம்ப நஷ்டத்துல இருக்குற ஒவ்வொருத்தோட கம்பெனிகளையும் அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கி லாபம் சம்பாதிக்கிறது.
இது எதிர்பார்ட்டிகளுக்கு கடுப்ப கிளப்புது.அப்படி கம்பெனியை இழந்து அதனால தன்னோட மகனையும் இழந்து பாதிக்கப்பட்ட ஒருத்தர் கலாபவன்மணி பையனான வினய்யை காலிபண்ண பாக்குறாரு..,
எப்பவுமே தன்னோட நண்பர்கள் சந்தானம்,யுவா(புதுமுகம்) இவங்களோட சேர்ந்து அப்பா கொடுத்த முழு security பாதுகாப்போட சுத்துற கலாபவன்மணியோட பையன் வினய்யை சுட்டுக் கொள்ள முயற்சி பண்ற எதிரி கூட்டம் தவறுதலா அவனோட நண்பர் யுவாவை சுட்டு கொன்னுடுறாங்க.
ஆனா மறுநாள் வினய்க்கிட்டேயிருந்து பாதுகாப்பு,பணவசதி,வேலையாட்கள் இப்படி எல்லா வசதிகளும் பறிக்கப்படுது, ஏன்? அப்போ கலாபவன்மணியோட உண்மையான பையன் யாரு..? யுவாதான் அவரோட பையன்னா எதுக்கு வினய்யை உலகத்துக்கு தன்னோட பையனா காட்டனும்? இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்லுது படம்.
ஹீரோ வினய், "உன்னாலே உன்னாலே" படத்துக்கு பின்னால ரொம்பவே தேறிட்டாரு,பாக்குறதுக்கு அமுல்பேபி மாதிரி இருந்தாலும் ஆளு சும்மா ஹன்ட்சமா இருக்காரு.
"பழனி" படத்துக்கு பின்னாடி காஜல் அகர்வால் நடிப்புல மட்டுமில்ல அழகுலேயும் கிறங்க வைக்கிறாங்க.சும்மா பாத்துகிட்டே இருக்கலாம் அவ்ளோ அழகு, (இப்படி பாத்துகிட்டே இருந்தா..ன்னு யாரோ சொல்றது எனக்கு கேக்குது)
பெரும்பாலான படங்கள்ல மிமிக்ரி பண்ற கலாபவன் மணி இந்த படத்துல அத குறச்சிருக்கார்.(தேங்க்ஸ்...மணி)
பிளைட்லவர்றது,பிளைட்லபோறது,ஷாப்பிங்மால்ஸ்,சத்யம்சினிமாஸ்,
துபாய்,சென்னையில் இருக்குற பணக்கார ஏரியாவான 'அடையார் போட்கிளப்' இப்படி படம் முழுக்க பணக்காரத்தனம்.புதியவர் கருணோட ஒளிப்பதிவு அப்பப்பா அப்டியே கண்ல ஒத்திக்கலாம்.படம் முழுக்க போரடிக்காத ஒரு புது ஸ்டைலிஷ்.
இப்போ இருக்குற தொழில்நுட்பத்தின் பெரும்பாலான பரிமாணங்களை இந்த படத்துல கொட்டி குடுத்துருக்கார் இயக்குனர் சரண், சரண் இதுவரைக்கும் இப்படி ஒரு படம் பண்ணினதே இல்ல.(ஆல் த பெஸ்ட் சரண்.)
லக்ஷ்மன் பின்னணி இசை ஒரு ஆங்கிலப் படத்துக்கு நிகரா இருக்கு,ஹரிகரன்&லெஸ்லி யோட மியூசிக்ல வெள்ளைக்காரி, லட்சம் வார்த்தைகள், மோதி விளையாடு இப்படி எல்லா பாட்டுமே போரடிக்காத பாட்டுகள் தான்.
காட்டு கத்தல்,காத கிழிக்கிற சவுண்ட்,ஒரே ரத்த வாடைநீளமான வசனங்கள் இப்படி எந்த கடுப்பையும் கிளப்பாம நம்மள ஒரு புது உலகத்துக்கு கூட்டிட்டு போற படம்


மாளுவுக்கு வயசு 30!
முன்னாள் கவர்ச்சிக் கன்னி மாளவிகாவுக்கு வயது 30. மும்பையில் தனது கணவர், குழந்தையுன் பிறந்தநாளை கொண்டாடினாராம் மாளவிகா.
வாளை மீனு படத்திற்கு முன்பு வரை சாதாரணமாக நடித்துக் கொண்டிருந்த மாளவிகா அதன் பின்னர் விதம் விதமான கேரக்டர்களில் நடித்து அசத்தினார். கவர்ச்சியிலும் புதிய கோணம் காட்டி வந்தார்
.
இந்த நிலையில் திடீரென அவருக்கு கல்யாணமாகி விட்டது. கணவர் சுமேஷ் மேனனுடன் மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா இப்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்டார்.
மீண்டும் நடிக்க வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கு் மாளவிகா, சமீபத்தில் தனது பிறந்த நாளை மும்பை வீட்டில் கொண்டாடினார்.
தன் குடும்பத்தினர், கணவர் குடும்பத்தார், நெருங்கிய நண்பர்களை அழைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார் மாளவிகா. நடிகை ரீமா சென் முக்கியமாக கலந்து கொண்டாராம்.
வழக்கமாக மும்பை பார்ட்டிகளில் ரீமா இருந்தால் அது அமர்க்களமாக மாறி விடும். ஆனால் மாளவிகாவின் பிறந்த நாள் பார்ட்டியில் சமர்த்துப் பெண்ணாக கம்மென்று கலந்து கொண்டாராம் ரீமா.
சரி, என்ன வயது இப்போதாவது சொல்லுங்களேன் என்று கேட்டால், 30 என்கிறார் மாளவிகா புன்னகையுடன்.
அதுதானே, நடிக்கும் வரை 18க்குக் கீழே இறங்கவே மாட்டார்கள். கல்யாணமாகி செட்டிலாகி விட்டால் உண்மை மட்டுமே பேசுவார்கள்...

உலகின் முதலாவது 256 ஜிபி அளவுள்ள யுஎஸ்பி நினைவகம்


பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' - சங்கவி ஓபன் ஸ்டேட்மெண்ட்
'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை!' - சங்கவி ஓபன் ஸ்டேட்மெண்ட்
தனது தோழி மீனா கல்யாணம் பண்ணிக் கொண்டதைப் பார்த்ததும், சங்கவிக்கும் திருமண ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது.
திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் விருப்பம் உள்ளது என்றும், ஆனால் நல்ல பரந்த மனப்பான்மை கொண்ட ஒருவர் மணமகனாக வந்தால் அடுத்த நிமிடமே கழுத்தை நீட்டிவிட வேண்டியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமராவதியில் அஜீத்துக்கு ஜோடியாகி பின்னர் பல படங்களில் விஜய்க்கு ஆஸ்தான நாயகி ரேஞ்சுக்கு நடித்து அப்படியே தெலுங்கு, கன்னடம் என ஒரு ரவுண்டு போய் 100 படங்களைத் தாண்டியவர் சங்கவி. நடிகை மீனாவுக்கு நெருக்கமான தோழி.
இப்போது தானும் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் இதுகுறித்து சங்கவி கூறியுள்ளதாவது:
திரையுலகில் எல்லாருடனும் கலகலப்பாக பழகுபவள் நான். மிகவும் உதவியாக இருப்பேன். மீனா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி, விந்தியா, ரம்பா, சினேகா, சங்கீதா, சந்தியா ஆகிய அனைவரும் என் தோழிகள்தான்.
என் தோழிகளில் ரம்பா, சினேகா, சந்தியா ஆகிய மூன்று பேர்களை தவிர, மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதனால் எங்க வீட்டில், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள எனக்கும் விருப்பம்தான்.
ஆனால் எனக்கு வரப்போகிற மணமகன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். நல்லவராக, என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும்.
ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்துடன் இல்லாமல், பரந்த மனப்பான்மை கொண்டவராக, எனது தொழிலைப் புரிந்து கொண்டு செயல்படுவராக இருக்க வேண்டும்.
அதோடு நிறைய படித்தவராக இருந்தால் ரொம்ப நல்லது. சினிமா உலகை சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் என்னைச் சார்ந்து இருப்பவராக, இருக்கக்கூடாது.
தென்மாநிலங்களில் ஏதாவது ஒரு ஊரைச் சேர்ந்தவராக இருந்தால் கூடப் போதும், என்றார்.

22 ஜூலை 2009
சூரிய கிரகணம்- வட இந்தியா இருண்டது - வாரணாசியில் முழுமை - பெரும்பாலும் பகுதி கிரகணம
டெல்லி: உலக மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று முழு சூரிய கிரகணம் நடந்தேறியது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் முழுமையாக அது தெரியவில்லை. வாரணாசி, சூரத்தில் மட்டும் முழுமையாக இருந்தது. பீகார் மாநிலம் தெரங்கானாவில் மேகக் கூட்டத்தின் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியாததால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இயற்கையின் மிக அரிய நிகழ்வான இதைக் காண உலகம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
வாரணாசியில் 'வைரம்'...
இந்தியாவில் இன்று காலை 5.28 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. குஜராத் மாநிலம் சூரத்துக்கு அருகே அரபிக் கடலில் முதலில் சூரிய உதயப் புள்ளியில் கிரகணம் தொடங்கியது.
சூரிய கிரகணத்தைப் பார்க்க சூரத் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கண்டு களித்தனர்.
சூரத் நகர மக்கள்தான் மிகவும் கொடுத்து வைத்திருந்தனர். பிற பகுதிகளை விட இங்குதான் சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது.
உ.பி. மாநிலம் வாரணாசியிலும் சூரிய கிரகணம் முழுமையாக இருந்தது. அங்கு வைர மோதிரம் போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதைக் கண்டு கிரகணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வியப்பின் உச்சிக்கேப் போய் விட்டனர்.
தெரங்கானாவில் தெரியவில்லை...
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநிலம் தெரங்கானாவில் சூரிய கிரகணம் சரிவரத் தெரியவில்லை. மேகக் கூட்டமாக இருந்ததால் கிரகணத்தை சரிவரப் பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்ட விஐபிக்களும் சூரிய கிரகணத்தைப் பார்க்க கூடியிருந்தனர்.
இந்த இடத்தில்தான் சூரிய கிரகணம் முழுமையாகத் தெரியும் என்று நாசா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாசாவைச் சேர்ந்த இரு பிரதிநிதிகள், ஏராளமான விஞ்ஞானிகள், வானியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக தெரங்கானாவில் கூடியிருந்தனர்.
அங்குள்ள ஒரு இரண்டு மாடி மருத்துவமனையின் மொட்டை மாடியில் விஐபிக்கள் முகாமிட்டிருந்தனர்.
சிலர் டிரைபாடுகளுடன் கூடிய தொலைநோக்கியைக் கொண்டு வந்து பார்த்தனர்.
ஸ்பேஸ் அமைப்பின் பிரதிநிதியான அமிதாப் பான்டே கூறுகையில், மேகக் கூட்டமாக இருந்ததால் கிரகணத்தை சரிவர பார்க்க முடியாமல் போய் விட்டதாக ஏமாற்றம் தெரிவித்தார்.
வட இந்தியா இருண்டது...
சூரிய கிரகணம் தொடங்கியதுமே வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருளாக இருந்தது. சூரிய கிரகணம் இங்கு தெளிவாகத் தெரியவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆக்ரா, குவஹாத்தி, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் பாதி அளவே கிரகணத்தைக் காண முடிந்தது. தலைநகர் டெல்லியிலும் முக்கால்வாசி கிரகணத்தையேப் பார்க்க முடிந்தது.
டெல்லியில் உள்ள நேரு பிளானட்டோரியத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசித்தனர்.
சென்னையில் ...
சென்னையிலும் சூரிய கிரகணம் சரியாகத் தெரியவில்லை. கிண்டியில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மக்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்க சிறப்பு தொலைநோக்கி வசதி செய்யப்பட்டிருந்தது. இதை ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று பயன்படுத்தி கிரகணத்தைப் பார்த்தனர்.
ஆனாலும், மேகக் கூட்டம் காரணமாக கிரகணம் சரிவரத் தெரியவில்லை. பாதி அளவே தெரிந்தது.
நெல்லையில்...
நெல்லையி்ல் கிட்டத்தட்ட 40 சதவீத அளவுக்கு கிரகணம் தெரிந்தது. இதை அங்குள்ள மாவட்ட அறிவியல் மையத்தில், வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
கொல்கத்தாவில் 91 சதவீதம்..
கொல்கத்தாவில் 91 சதவீத கிரகணத்தைப் பார்க்க முடிந்தது. மேகக் கூட்டம் ஓரளவுக்கு இருந்தாலும் கூட இந்த அளவுகக்கு கிரகணத்தைப் பார்க்க முடிந்ததால் மக்கள் திருப்தி அடைந்தனர்.
கொல்கத்தாவில் காலை 6.20 மணிக்கு கிரகணம் ஏற்பட்டது. நிலவின் நிழல், சூரியனுக்கும், பூமிக்கும் இடையே கடந்து சென்ற அந்த அரிய காட்சியைப் பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பிறையைப் போல சூரியன் காணப்பட்டது.
உயர்ந்த கட்டடங்களின் மாடிகள் உள்ளிட்டவற்றில் இருந்து மக்கள் இந்த இயற்கை அதிசயத்தைக் கண்டு களித்தனர்.
ஹூக்ளி நதிக் கரையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
ஜெய்ப்பூரில்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிகாலை 5.46 மணிக்கு கிரகணம் ஏற்பட்டது. ஆனால் மேகக் கூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை. இதேபோல உதய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர் உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் சரிவரத் தெரியவில்லை.
அஸ்ஸாமில் முழுமை...
அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் பகுதியில் காலை 6.31 முதல் 6.34 வரை முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.
குருஷேத்ராவில் புனித நீராடிய மக்கள்
சூரிய கிரகணத்தையொட்டி ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் கூடினர்.
அங்குள்ள பிரம்மசரோவர் நதியில், அவர்கள் புனித நீராடினர். கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் புனித நீராடியிருக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3 மணி முதலே மக்கள் இங்கு அலை அலையென வரத் தொடங்கினர்.
மகாபாரதப் போர் நடந்த இடம் தான் குருஷேத்திரம். இதனால் இது புனித இடமாக கருதப்படுகிறது. சண்டிகரிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் குருஷேத்திரம் உள்ளது.
பள்ளிகள் நேரம் மாற்றம்...
சூரிய கிரகணத்தையொட்டி இன்று தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் நேரங்கள் மாற்றி அமைக்ப்பட்டன. 9 மணிக்கு தொடங்குவதாக இருந்த பல பள்ளிகளின் நேரம் 9.30, 10 மணி என மாற்றப்பட்டிருந்தன. இருப்பினும் எந்தப் பள்ளிக் கூடத்திற்கும் விடுமுறை விடப்படவில்லை.
கோவிலகள் நடை சாத்தப்பட்டன...
அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இன்று அதிகாலையில் கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நடைகள் சாத்தப்பட்டிருந்தன. கால பூஜையின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டிருந்தன.
தொடர்பான வீடியோ.....
தெலுங்குப் படத்தில் நாயகியாகும் ராதா மகள்!

பொது மக்களுடன் அமர்ந்து ஹாரி பாட்டரை ரசித்த ரஜினி!
சமீபத்தில் உலகமெங்கும் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்து வரும் ஹாரி பாட்டர் படத்தை சத்யம் திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவரது மகள் சௌந்தர்யா ரஜினியும் இந்தப் படத்தை தந்தையுடன் பார்த்து ரசித்தார்.
சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடந்த சிறப்புக் காட்சிக்கு பிரதான விருந்தினராக ரஜினியை அழைத்திருந்தார்கள். ஆனால் அவருடன் பொதுமக்களும் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் பொதுவாக இம்மாதிரி சிறப்புக் காட்சிகளைத் தவிர்க்கும் ரஜினி, எப்போதும் தனியாகவே போர் பிரேம்ஸில் படம் பார்ப்பார்.
ஆனால் நேற்று விஷயத்தை அவரிடம் கூறியவுடன், படத்துக்கு தன் மகள் சௌந்தர்யாவுடன் வருவதாகக் கூறிய ரஜினி, கண்டிப்பாக பொதுமக்களையும் படம் பார்க்க அனுமதியுங்கள் என்று சத்யம் நிர்வாகிகளிடம் கூறிவிட்டாராம்.
மாலை 6 மணிக்கு படம் பார்க்க வந்த ரஜினிக்கும் சௌந்தர்யாவுக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது திரையரங்க நிர்வாகம்.
இந்தப் படத்தை தான் மிகவும் ரசித்துப் பார்த்ததாக பின்னர் தெரிவித்தார் ரஜினி.
மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி இப்போது ஒரு 3 டி அனிமேஷன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
20 ஜூலை 2009
"குமரன்- ரஜினி ரசிகன்"!
புஜ்ஜிகாடு- மேட் இன் சென்னை' என்று கடந்த ஆண்டு தெலுங்கில் ஒரு படம் வெளியானது. ரஜினிதான் இந்தப் படத்தின் ஆடியோவை வெளியிட்டார், அதுவும் சென்னையில்.
ஒரு தெலுங்குப் படத்தின் ஆடியோ தமிழகத்தில் வெளியாகக் காரணம் என்ன?.
"இதில் படத்தின் நாயகன் ரஜினியின் தீவிர ரசிகனாக நடித்திருக்கிறார். ரஜினி ரசிகன்தான் படத்தின் பிரதான பாத்திரம் எனும்போது, படத்தின் ஆடியோவை ரஜினி இருக்கும் தலைநகர் சென்னையில் வைப்பதுதானே முறை... அதனால்தான் இங்கு வைத்தோம். இன்னொன்று படத்தின் நாயகன் மட்டுமல்ல, படத்தை உருவாக்கிய நானும் ஒரு தீவிர ரஜினி ரசிகன்தான்", என்று பதிலளித்தார் இயக்குநர் பூரி ஜெகன்நாத்.
இந்தப் படம் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் பெரும் தோல்வியடைந்தது. இப்போது அதை அப்படியே தமிழில் "குமரன்- ரஜினி ரசிகன்" என டப் செய்து வெளியிடுகிறார்கள்.
இந்தப் படத்தில் ரஜினியின் மெகா ஹிட் படங்களான பாட்ஷா மற்றும் படையப்பாவிலிருந்து அதிரடி காட்சிகளை சேர்த்து வெளியிட்டிருந்தனர்.
படத்தைப் பார்த்த பிரபல பாடகர் மனோ, அதன் தமிழ் உரிமையை வாங்கி, எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிடுகிறார்.
பிரபாஸ், த்ரிஷா நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மோகன்பாபு.

பிரபுதேவா மூலம் இந்தியில் நுழையும் நயன்!
அசின், த்ரிஷா, ஜெனிலியா என இங்கிருந்து போன நடிகைகள் இந்தியில் கலக்குவதைப் பார்த்த நயன்தாராவுக்கு, தானும் எப்படியாவது இந்திப்படத்தில் நடித்துவிட வேண்டும் என்றக ஆர்வம் வந்துவிட்டதாம்.
விளைவு, பிரபுதேவாவே அவரை இந்திப்படம் ஒன்றில் அறிமுகம் செய்யப் போகிறாராம்.
இப்படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார்.
இப்போது தமிழில் சூர்யாவுடன் நயன்தாரா நடித்துவரும் ஆதவன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளதால், தனது அடுத்த படமாக இந்திப் படம் இருக்க வேண்டும் என பிரபுதேவாவுக்கு அன்புக் கட்டளையே போட்டுவிட்டாராம் அம்மணி.
இதற்கிடையே, நயன்தாராவுக்கு காதல் பரிசாக ஐதராபாத்தில் பிரபுதேவா பெரிய பங்களா வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், இருவரும் இப்போது இந்த பங்களாவில்தான் தங்குகிறார்கள் என்றும் ஆந்திரப் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்துள்ளன.

ரகஸியாவுடன் டான்ஸ் - 'வைகை' பாலா புளகாங்கிதம்!
மானாட மயிலாட நிகழ்ச்சியில் தனது நடனத் திறமைக்காக முதல் பரிசு வாங்கியவர் பாலா. அதற்கு முன்பே நாகரீகக் கோமாளி என்ற சிறந்த படத்தில் நாயகனாக நடித்தவர். தற்போது "வைகை" படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சுத்தமான தமிழர் இந்த நடிகர்.
வைகை திரைப்படம் படம் வெளியானதிலிருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
வைகை பட வாய்ப்பும் அனுபவமும் எப்படி இருந்தது? இதோ பாலா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வைகை படத்தின் வாய்ப்பு எப்படி அமைந்தது?.
நான் மாடலிங் செய்து கொண்டிருந்த போது நாகரீக கோமாளி படத்துக்கு அழைத்தார்கள். அந்தப் படத்தில்தான் முதலில் கதாநாயகனாக நடித்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு ஒன்றறை வருடம் இடைவெளி விழுந்துவிட்டது.
நல்ல புராஜட் எதுவும் அமையல. பிறகு கண்ணும் கண்ணும் நோக்கியா என்று ஒரு படம் பண்ணினேன். அந்த புராஜக்ட் அறுபது சதவீதம் முடிஞ்சிருக்கு. சில பிரச்சினைகளால் படப்பிடிப்பு தொடரவில்லை.
அதுக்குப் பிறகு ஒரு வருடம் கலா மாஸ்டரிடம் டான்ஸ் பயிற்சிக்கு போனேன்.
அவுங்க மானாட மயிலாட நிகழ்ச்சியை துவங்கும் போது அதுல கலந்துக்கச் சொன்னாங்க. இதுல டான்ஸ் பண்ணு. இது முடியிறதுக்குள்ள உனக்கு வாய்ப்பு அமையும்னு சொன்னாங்க. அந்த நம்பிக்கை இந்த வைகை படம் மூலமா பலித்து விட்டது.
மானாட மயிலாட செமி பைனல்ல இருக்கும் போது இந்த வைகை படத்தோட டைரக்டர் சுந்தரபாண்டி என்னை அனுகி இந்தப் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். என்னோட தேதிகளை சரி செய்து கொடுத்து நடித்தேன். இதோ படம் உங்க முன்னால வந்தாச்சு.
உங்கள் தந்தை பெரிய தொழிலதிபர். அப்படி இருக்கும் போது சொந்த படத்தில் நடித்தோ, அல்லது பணத்தை செலவு செய்தோ நடிகராக இறங்கியிருக்கலாமே?.
என்னிடம் திறமை இருக்குன்னு எங்க அப்பா முன்பே உணர்ந்திட்டார். அதனால பையன் முட்டி மோதி எப்படியாவது மேலே வந்திடுவான்னு அவருக்கு நம்பிக்கை. அதனால அவர் ஆரம்பத்திலேயே அதாவது ஐந்து வருடத்துக்கு முன்பே என்னிடம் "நீ எத்தனை வருஷம் கஷ்டப்பட்டாலும் சினிமாவுக்காக என்னிடம் வந்து நீ பத்து பைசா கேட்டாலும் நான் கொடுக்க மாட்டேன். நீ வேற தொழில் செய்றதா இருந்தால் மட்டும் சொல்லு பணம் தர்றேன்"னு சொல்லிவிட்டார்.
சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் திறமையை வைத்து வந்தார்கள். அதுக்குப் பிறகு தான் அவர்களிடம் பணம் வந்ததுன்னு முன் உதாரணம் சொன்னார். ஆனால் நீ சினிமாவில் ஜெயிக்கிறதுக்காக எத்தனை வருஷம் வேணும்னாலும் உழை. கஷ்டப்படு. என சுதந்திரம் கொடுத்தார். சாதிச்ச பிறகு வந்து என்கிட்டே பேசன்னு சொன்னார். அதனால இன்னைய வரைக்கும் நான் அவரிடம் பேசல. சாதிச்ச பிறகு பேசுவேன்.
வைகை படத்தில் நடத்த அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்ப ரொம்ப சூப்பரான அனுபவம். அந்த கதாபாத்திரத்துக்காகத்தான் என்னை தேர்ந்தெடுத்தார்கள். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அனால் நடிப்பு என்கிற போது அந்த கேரக்கடர் எப்படி பேசணுமோ, எப்படி இருக்குமோ அதுமாதிரி இருக்கணும்னு டைரக்டர் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். அதை செய்ய நான் நிறைய உழைக்க வேண்டியதா இருக்கும்னு நினைத்தேன்.
ஆனால் அப்படி உழைக்க டைரக்டர் பெரிய உதவியா இருந்தார். அந்த கதாபாத்திரம் சரியானபடி தெரியனும்னு எந்த இடத்துலேயும் ஓவர் ஆக்டிங் இல்லாமல், எங்கேயும் கம்மியாவும் இல்லாமல் இருக்கனும்னு வேலை வாங்கினார். அது அவரிடம் இருந்து வந்த கதாபாத்திரம். அதை நான் வெளிப்படுத்திருக்கேன். மத்தபடி அதைப் பற்றி ரசிகர்கள்தான் சொல்லனும்.
ரகசியா கூட சேர்ந்து ஆட்டம் போட்டிருந்தீங்களே? அந்த அனுபவம் எப்படி?
அது ஒரு பயங்கர அனுபவம். அவுங்க ரிகர்சல் கூட எடுத்துக்க மாட்டேனுட்டாங்க. மாஸ்டரோட அசிஸ்டென்ட் ஆடுறதை பாப்பாங்க. அப்படியே டேக் போயிடலாம்பாங்க. அவுங்க கூட ஆடும் போது ரீடேக் வாங்க கூடாதுன்னு நினைப்பேன். அவுங்க புதுமுகம்னு நினைக்காமல் பிரண்ட்லியா ஆடுனாங்க. எனக்கும் பயம் போச்சு. நானும் நல்லா பர்பாம் பண்ண முடிஞ்சிது. இங்கே திறமைதான் முக்கியம்.
உங்களின் அடுத்த படங்கள்?
இந்த படம் ரிலீசுக்காக வெய்ட் பண்றேன். ரெண்டு, முணு, புராஜக்ட் பேச் வார்த்தைல இருக்கு, எதுவும் பைனல் ஆகாமல் சொல்லக் கூடாது இல்லையா.
காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் இதுல எந்த மாதிரி ஹீரோவா வர வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?
எனக்கு ஆக்ஷன் ஹீரோவாக ஆகனும்னுதான் ஆசை. எப்போ நடிக்கனும்னு ஆசைப்பட்டேனோ, அன்னையிலேர்ந்து ஆக்ஷன் படங்கள்தான் பிடிக்கும். அதே மாதிரி ஆக்ஷன் படத்துல நடிக்கனும்னு தான் ஆசை. நான் உடனே ஆக்ஷன் ஹீரோவாக வர முடியாது. ரெண்டு, முணு படம் காதல் ரொமான்ஸ் என பன்னிட்டு, பிறகு அதிக மக்களை சென்றடைந்த பிறகு ஆக்ஷனை கையில் எடுக்கனும். எல்லாம் ரசிகர்கள் கொடுக்கிற வரவேற்ப்புல தான் இருக்கு.
மறுபடியும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடுவீங்களா?
இப்போது கூட ரெண்டு நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டாங்க. இப்போ முணு பட வாய்ப்பு இருப்பதால அதுக்கு நேரம் ஒதுக்க முடியுல. அதனால வேண்டாம்னு சொல்லிட்டேன், என்றார் பாலா.

புரோகிராம்களை நீக்கும் புரோகிராம்கள்
இணையத்திலிருந்தும், இமெயில் வழியாகவும் மற்றும் பிற வழிகளிலிருந்தும் பல்வேறு புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கிறோம். பயன்படுத்திப் பார்த்துவிட்டு அல்லது சில நாள் பழகிப் பார்த்துவிட்டு இது எதற்கு என்று நீக்க விரும்புகிறோம். ஒரு சிலர் அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் என விட்டுவிடுவார்கள். ஆனால் நீக்க விரும்புபவர்கள் அதற்கான வழிகளை நாடுவார்கள்.
இவர்களுக்கு சில வழிகளை அந்த புரோகிராம் அல்லது கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருகிறது.சில புரோகிராம்களில் அவற்றின் லிஸ்டிங் மெனுவிலேயே Uninstall என்று ஒரு பிரிவு இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் புரோகிராமினைச் சரியாக நீக்கிவிடும். சார்ந்த எந்த இயக்க பைல்களும் கம்ப்யூட்டரில் தங்காது. ஏனென்றால் புரோகிராமினை வடிவமைத்தவர்கள் சரியாக இந்த அன் இன்ஸ்டால் புரோகிராமினை வடிவமைத்திருப்பார்கள். இரண்டாவதாக இன்னொரு வழி இருக்கிறது. கண்ட்ரோல் பேனல் சென்று Add or Remove Programs பிரிவு சென்று அங்கு பயன்படுத்தும் புரோகிராமின் பிரிவைக் கண்டுபிடித்து எதிரே உள்ள கட்டத்தில் ரிமூவ் என்ற இடத்தில் கிளிக் செய்தால் உடனே அன் இன்ஸ்டால் புரோகிராம் இயக்கப்பட்டு புரோகிராம் நீக்கப்படும்.
இதில் என்ன சிக்கல் என்றால் ஒரு சில பைல்களை கோடிட்டுக் காட்டி இந்த பைல் மற்ற புரோகிராம்களினாலும் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது;அழிக்காமல் விட்டுவிட்டால் கம்ப்யூட்டர் இயக்கத்திற்குத் தீங்கு விளைவிக்காது; அழிக்கவா, விட்டுவிடவா என்ற கேள்வியுடன் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதைக் கண்டவுடன் நாம் சற்று திகைப்போம். இருந்தாலும் எதற்கு வம்பு என்று அந்த பைலை அழிக்காமல் விட்டுவிடுவோம். சில வேளைகளில் புரோகிராம் முழுமையாக நீக்கப்படாமல் ஒரு சில பைல்கள் தேங்கி விடும். சில வேளைகளில் ஒரு சில புரோகிராம்களை நீக்குவதற்கு மேலே சொல்லப்பட்ட இரண்டு வழிகளுமே கிடைக்காது.
இந்நிலையில் என்ன செய்வது? இதற்கு கை கொடுக்கத்தான் புரோகிராம்களை நீக்கும் புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை இரண்டு வகைப் படுகின்றன. முதலாவதாக பயன் பாடு போல அவற்றிலும் மேம்படுத்தப்பட்ட புரோகிராம்கள் சில உள்ளன. இந்த புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாகப் படித்து என்ன என்ன புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளன என்று முழுவதுமாகப் படித்துப் பார்த்து பட்டியலிடுகின்றன. இந்த புரோகிராம்கள் மூலமாக ஒரு புதிய புரோகிராமை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்திடலாம்.
இன்ஸ்டால் செய்திடும் முன் இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் உள்ளவற்றை ஒரு போட்டோ மாதிரி எடுத்து வைத்துக் கொள்கிறது. பின் அன் இன்ஸ்டால் செய்திடுகையில் மீண்டும் ஒரு முறை போட்டோ போல எடுத்து எவை எல்லாம் மாறி இருக்கின்றன என்று கணக் கிட்டு, அதன் அடிப்படையில் நீக்க வேண்டியவற்றை நீக்குகிறது. இரண்டாவதாக கிடைப்பது மிக அருமையாக நீக்கும் மற்றும் பதியும் வேலையை மேற்கொள்கிறது. நீக்கும் நேரத்தில் அந்த புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனல் இந்த புரோகிராம் இன்னொரு புரோகிராமினை நீக்குகையில் சற்று நேரம் எடுக்கிறது. கீழே ஒவ்வொரு வகைக்குமாக இரண்டு புரோகிராம்கள் எடுத்துக் காட்டுக்களாகத் தரப்படுகிறது.
1. MyUninstaller
இந்த தளத்தைப் பார்த்தவுடன் எங்கே புரோகிராமைக் காணோமே என்று கலவரப் பட வேண்டாம். இந்த தளம் சற்று நீளமான பக்கத்தை ஹோம் பேஜாகக் கொண்டது. கீழாக நன்கு ஸ்குரோல் செய்து சென்று இந்த புரோகிராமிற்கான லிங்க்கைக் காணலாம். இதனை உங்கள் ஹார்ட் டிரைவில் டவுண்லோட் செய்து அந்த ஸிப் பைலில் இருந்து “myunist.exe” என்ற பைலை எக்ஸ்ட்ராக்ட் செய்திடவும். இந்த பைல் தான் நமக்கு இன்ஸ்டால் / அன் இன்ஸ்டால் செய்திடும் பணியை மேற்கொள்ளும் புரோகிராம் ஆகும். இந்த பைலை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை.
அப்படியே கம்ப்யூட்டரில் இயங்கும். இதனை இயக்கியவுடனேயே உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன புரோகிராம் உள்ளது. அவை சார்ந்த மற்ற புரோகிராம்கள் என்ன என்ன என்ற பட்டியலுடன் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அத்துடன் அந்த பக்கத்தில் இரண்டு ஐகான்களை மேலாகக் காணலாம். முதல் ஐகான் மூலம் வழக்கமான வகையில் ஒரு புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடலாம்.
அடுத்த ஐகான் ஏற்கனவே அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராமின் மிச்ச மீதி பதிவுகளை, பைல்கள் இருந்தால் அவற்றை, நீக்குவதற்கென தரப்பட்டுள்ளது. பெரும்பாலும் ரெஜிஸ்ட்ரியில் உள்ள பதிவுகள் நீக்கப்படமால் இருந்தால் அவற்றை இந்த ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் நீக்கலாம். ரெஜிஸ்ட்ரி என்றவுடன் கவலைப் பட வேண்டாம். இந்த புரோகிராம் அதனைச் சரியாக மேற்கொண்டு உங்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இன்றிப் பார்த்துக் கொள்ளும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
2. ZSoft Uninstaller
இனி அடுத்த வகை அன் இன்ஸ்டால் புரோகிராமினைப் பார்க்கலாம். இந்த புரோகிராம் மூலம் வழக்கமான வழியில் ஒரு புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடலாம். ஆனால் ஒரு ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ரைட் கிளிக் செய்தால் புரோகிராம் குறித்த கூடுதல் தகவல் கிடைக்கிறது. அன் இன்ஸ்டால் செய்திடும் ஆப்ஷன் குறித்து இது என்ன சொல்கிறது என்று பார்ப்போம். முதலில் Analyze பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் சில ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் “Analyze an installation.” என்ற முதல் பட்டனில் கிளிக் செய்திடவும். இதன் பின் எந்த டிரைவ் அல்லது டிரைவ்களை அனலைஸ் செய்திட வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும். பொதுவாக இது சி டிரைவாகத்தான் இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன் புரோகிராம் மெதுவாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரியில் உள்ள பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்திடும்.
இதன் மூலம் இன்ஸ்டலேஷன் அல்லது அன் இன்ஸ்டலேஷன் பணிகளுக்கு முன் உள்ள நிலை குறித்த ஒரு போட்டோகிராபிக் ஐடியா ஒரு பைலாக உருவாக்கிக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து புரோகிராம் இயங்குகையில் புதிய புரோகிராமின் இன்ஸ்டலேஷனைத் தொடங்கலாம். இந்த பணி முடிந்தவுடன் மீண்டும் ZSoft Uninstaller சென்று After Installation பட்டனைத் தட்டவும். மறுபடியும் அதே வரிசையில் செயல்பாடு தொடங்கப்படும். இப்போதும் ஒரு போட்டோகிராபிக் வியூவில் பைல்கள் குறித்த பைல் ஒன்று தயாரிக்கப்படும். அடுத்து இன்ஸ்டலேஷனுக்கு ஒரு பெயர் வழங்கச் சொல்லி புரோகிராம் கேட்கும்.
புரோகிராம் உடனே வேகமாக ஒரு கணக்குப் போட்டு தானே மூடிக் கொள்ளும். சரி, அன் இன்ஸ்டலேஷன் எப்படி என்று பார்ப்போமா! மீண்டும் After Installation என்பதில் தொடங்கவும். மெயின் ஸ்கிரீனில் Analyzed Programs என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அன் இன்ஸ்டால் செய்ய வேண்டிய புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ரைட் கிளிக் செய்திடவும். உடனே பல பாக்ஸ்களைப் பார்க்கலாம். இதில் எல்லாம் நீங்கள் அவை கேட்கும் கேள்விகளுக்கேற்ப டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். இவை மட்டுமின்றி இறுதியாக கீழே “I don’t want to confirm every delete” என்று இருக்கும் பாக்ஸிலும் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் புரோகிராம் அழிக்கும் ஒவ்வொரு பைலுக்கும் அதனை ஆமோதிக்க வேண்டும்.
எனவே இதனை முதலிலேயே அழுத்திவிட்டால் முழுமையான அன் இன்ஸ்டால் ஆகிவிடும். இஸட் சாப்ட் இன்ஸ்டாலர் இன்னும் பல புதுமைகளைக் கொண்டுள்ளது. அதன் ஹெல்ப் பட்டனை அழுத்தினால் அவற்றை அறிந்து பயன்படுத்தலாம்.எழுதியவர் : கார்த்திக்(தேங்க்ஸ்)
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்




இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)