20 ஜூலை 2009
ரகஸியாவுடன் டான்ஸ் - 'வைகை' பாலா புளகாங்கிதம்!
மானாட மயிலாட நிகழ்ச்சியில் தனது நடனத் திறமைக்காக முதல் பரிசு வாங்கியவர் பாலா. அதற்கு முன்பே நாகரீகக் கோமாளி என்ற சிறந்த படத்தில் நாயகனாக நடித்தவர். தற்போது "வைகை" படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சுத்தமான தமிழர் இந்த நடிகர்.
வைகை திரைப்படம் படம் வெளியானதிலிருந்து பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
வைகை பட வாய்ப்பும் அனுபவமும் எப்படி இருந்தது? இதோ பாலா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வைகை படத்தின் வாய்ப்பு எப்படி அமைந்தது?.
நான் மாடலிங் செய்து கொண்டிருந்த போது நாகரீக கோமாளி படத்துக்கு அழைத்தார்கள். அந்தப் படத்தில்தான் முதலில் கதாநாயகனாக நடித்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு ஒன்றறை வருடம் இடைவெளி விழுந்துவிட்டது.
நல்ல புராஜட் எதுவும் அமையல. பிறகு கண்ணும் கண்ணும் நோக்கியா என்று ஒரு படம் பண்ணினேன். அந்த புராஜக்ட் அறுபது சதவீதம் முடிஞ்சிருக்கு. சில பிரச்சினைகளால் படப்பிடிப்பு தொடரவில்லை.
அதுக்குப் பிறகு ஒரு வருடம் கலா மாஸ்டரிடம் டான்ஸ் பயிற்சிக்கு போனேன்.
அவுங்க மானாட மயிலாட நிகழ்ச்சியை துவங்கும் போது அதுல கலந்துக்கச் சொன்னாங்க. இதுல டான்ஸ் பண்ணு. இது முடியிறதுக்குள்ள உனக்கு வாய்ப்பு அமையும்னு சொன்னாங்க. அந்த நம்பிக்கை இந்த வைகை படம் மூலமா பலித்து விட்டது.
மானாட மயிலாட செமி பைனல்ல இருக்கும் போது இந்த வைகை படத்தோட டைரக்டர் சுந்தரபாண்டி என்னை அனுகி இந்தப் படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். என்னோட தேதிகளை சரி செய்து கொடுத்து நடித்தேன். இதோ படம் உங்க முன்னால வந்தாச்சு.
உங்கள் தந்தை பெரிய தொழிலதிபர். அப்படி இருக்கும் போது சொந்த படத்தில் நடித்தோ, அல்லது பணத்தை செலவு செய்தோ நடிகராக இறங்கியிருக்கலாமே?.
என்னிடம் திறமை இருக்குன்னு எங்க அப்பா முன்பே உணர்ந்திட்டார். அதனால பையன் முட்டி மோதி எப்படியாவது மேலே வந்திடுவான்னு அவருக்கு நம்பிக்கை. அதனால அவர் ஆரம்பத்திலேயே அதாவது ஐந்து வருடத்துக்கு முன்பே என்னிடம் "நீ எத்தனை வருஷம் கஷ்டப்பட்டாலும் சினிமாவுக்காக என்னிடம் வந்து நீ பத்து பைசா கேட்டாலும் நான் கொடுக்க மாட்டேன். நீ வேற தொழில் செய்றதா இருந்தால் மட்டும் சொல்லு பணம் தர்றேன்"னு சொல்லிவிட்டார்.
சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் திறமையை வைத்து வந்தார்கள். அதுக்குப் பிறகு தான் அவர்களிடம் பணம் வந்ததுன்னு முன் உதாரணம் சொன்னார். ஆனால் நீ சினிமாவில் ஜெயிக்கிறதுக்காக எத்தனை வருஷம் வேணும்னாலும் உழை. கஷ்டப்படு. என சுதந்திரம் கொடுத்தார். சாதிச்ச பிறகு வந்து என்கிட்டே பேசன்னு சொன்னார். அதனால இன்னைய வரைக்கும் நான் அவரிடம் பேசல. சாதிச்ச பிறகு பேசுவேன்.
வைகை படத்தில் நடத்த அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்ப ரொம்ப சூப்பரான அனுபவம். அந்த கதாபாத்திரத்துக்காகத்தான் என்னை தேர்ந்தெடுத்தார்கள். நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அனால் நடிப்பு என்கிற போது அந்த கேரக்கடர் எப்படி பேசணுமோ, எப்படி இருக்குமோ அதுமாதிரி இருக்கணும்னு டைரக்டர் ஆரம்பத்திலேயே சொல்லிட்டார். அதை செய்ய நான் நிறைய உழைக்க வேண்டியதா இருக்கும்னு நினைத்தேன்.
ஆனால் அப்படி உழைக்க டைரக்டர் பெரிய உதவியா இருந்தார். அந்த கதாபாத்திரம் சரியானபடி தெரியனும்னு எந்த இடத்துலேயும் ஓவர் ஆக்டிங் இல்லாமல், எங்கேயும் கம்மியாவும் இல்லாமல் இருக்கனும்னு வேலை வாங்கினார். அது அவரிடம் இருந்து வந்த கதாபாத்திரம். அதை நான் வெளிப்படுத்திருக்கேன். மத்தபடி அதைப் பற்றி ரசிகர்கள்தான் சொல்லனும்.
ரகசியா கூட சேர்ந்து ஆட்டம் போட்டிருந்தீங்களே? அந்த அனுபவம் எப்படி?
அது ஒரு பயங்கர அனுபவம். அவுங்க ரிகர்சல் கூட எடுத்துக்க மாட்டேனுட்டாங்க. மாஸ்டரோட அசிஸ்டென்ட் ஆடுறதை பாப்பாங்க. அப்படியே டேக் போயிடலாம்பாங்க. அவுங்க கூட ஆடும் போது ரீடேக் வாங்க கூடாதுன்னு நினைப்பேன். அவுங்க புதுமுகம்னு நினைக்காமல் பிரண்ட்லியா ஆடுனாங்க. எனக்கும் பயம் போச்சு. நானும் நல்லா பர்பாம் பண்ண முடிஞ்சிது. இங்கே திறமைதான் முக்கியம்.
உங்களின் அடுத்த படங்கள்?
இந்த படம் ரிலீசுக்காக வெய்ட் பண்றேன். ரெண்டு, முணு, புராஜக்ட் பேச் வார்த்தைல இருக்கு, எதுவும் பைனல் ஆகாமல் சொல்லக் கூடாது இல்லையா.
காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் இதுல எந்த மாதிரி ஹீரோவா வர வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?
எனக்கு ஆக்ஷன் ஹீரோவாக ஆகனும்னுதான் ஆசை. எப்போ நடிக்கனும்னு ஆசைப்பட்டேனோ, அன்னையிலேர்ந்து ஆக்ஷன் படங்கள்தான் பிடிக்கும். அதே மாதிரி ஆக்ஷன் படத்துல நடிக்கனும்னு தான் ஆசை. நான் உடனே ஆக்ஷன் ஹீரோவாக வர முடியாது. ரெண்டு, முணு படம் காதல் ரொமான்ஸ் என பன்னிட்டு, பிறகு அதிக மக்களை சென்றடைந்த பிறகு ஆக்ஷனை கையில் எடுக்கனும். எல்லாம் ரசிகர்கள் கொடுக்கிற வரவேற்ப்புல தான் இருக்கு.
மறுபடியும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடுவீங்களா?
இப்போது கூட ரெண்டு நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டாங்க. இப்போ முணு பட வாய்ப்பு இருப்பதால அதுக்கு நேரம் ஒதுக்க முடியுல. அதனால வேண்டாம்னு சொல்லிட்டேன், என்றார் பாலா.