Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

27 ஆகஸ்ட் 2011

ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுபடுத்தாலம் சிறந்த எஃபெக்ட் கொடுக்கலாம் உதவும் பயனுள்ள தளம்.

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஆன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம்,இவை எல்லாவற்றையும் விட சிறந்த முறையில் நம் புகைப்படங்களுக்கு எஃபெக்ட் கொடுக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஆன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி :http://ipiccy.com

இத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில் Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும். இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில் என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதா ஒரே சொடுக்கில் செய்யலாம். கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது.புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கலாம் நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த மென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஆன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம். புகைப்படத்தை வித்தியாசமாக மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அழகுபடுத்த நினைப்பவர்களுக்கு இத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

ஆன்லைன் -ல் புகைப்படங்களை வெட்ட , அளவுகளை மாற்ற உதவும் அசத்தலான இணையதளம்.

நம் புகைப்படத்துக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் ( Image Effects ) நொடியில் ஆன்லைன் மூலம் செய்யலாம்.

புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.

பெரிய புகைப்படங்களின் அளவை சுருக்காமல் உங்கள் வலைப்பூவில் காட்டஅருமையான வழி.

வந்துவிட்டது கூகிள் ப்ளஸ் Share பட்டன்

கூகிள் ப்ளஸ் வந்தவுடன் பதிவர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு, "பேஸ்புக் பட்டன், ட்விட்டர் பட்டன்" போன்று கூகிள் ப்ளஸ்ஸில் பதிவுகளை பகிரும் வசதி என்று வரும்? என்பது தான். தற்போது அந்த வசதியை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ளஸ் ஒன் பட்டனே ஷேர் பட்டனாகவும் வேலை செய்கிறது. இதன் மூலம் நாமும், நமது நண்பர்களும் கூகிள் ப்ளஸ்ஸில் நமது பதிவுகளை எளிதாக பகிரலாம். மேலும் நாம் படிக்கும் பதிவை நமது நண்பர்கள் பகிர்ந்திருந்தால் அவர்களின் புகைப்படங்களும் காட்டும். ஆனால் இந்த வசதி சில நபருக்கு மட்டும் தான் என நினைக்கிறேன். எனக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை. "அடுத்த பதிவு ரெடி" என்று அந்த பக்கத்திற்கு போனால், ஒரே குழப்பம். கூகிள், மைக்ரோசாஃப்ட், யாஹூ இவையெல்லாம் இணைந்து ஏதோ Schema.org என்று ஏதோ கொண்டுவந்திருக்கிறதாம். அதன் நிரலையும் சேர்க்க வேண்டும் என சொன்னது. அதை பற்றி தெரிந்துக் கொள்ளப்போனால் இன்னும் குழப்பம். அப்புறம் ஒருவழியாக அந்த Code-ஐ வேறு மாதிரியாக கொடுக்கலாம் என்று, அந்த Code-ஐ மாற்றி அமைத்து முயற்சித்தேன். சரியாக வந்தது. பிறகு எதேச்சையாக இன்னொரு தளத்திற்கு சென்று பார்த்தால், பழைய Code-களிலும் இது நன்றாக வேலை செய்கிறது. செம டென்ஷன்...! நான் ஏன் குழம்பினேன் என்று அறிய: http://www.google.com/webmasters/+1/button/ சரி விசயத்துக்கு வருவோம். கூகிள் ப்ளஸ்ஸில் பகிர்வது எப்படி? பதிவுகளை ப்ளஸ் ஒன் பட்டனில் ப்ளஸ் செய்தவுடன், நீங்கள் ப்ளஸ் செய்த தகவலும், அதன் கீழே Share On Google+ என்று வரும். கூகிள் ப்ளஸ்ஸில் எப்படி பகிர்வோமோ அது போல பகிர வேண்டியது தான். இன்னொன்று, நீங்கள் ப்ளஸ் ஒன் செய்தால் தான் பகிர முடியும்.
இந்த ஒரு பத்தியை எழுதுவதற்கு கூகிள் என்னை ஒருமணி நேரம் டென்ஷன் படுத்திவிட்டது. இதுவரை கூகிள் ப்ளஸ் ஒன் பட்டனை நிறுவாதவர்கள் பின்வரும் Code-ஐ, எந்த இடத்தில் பட்டனை வைக்க வேண்டுமோ அதற்கு ஏற்றவாறு Edit Html பகுதிக்கு சென்று Paste செய்யவும்.

இணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta

கூகுள் நிறுவனம் வெளியிட்ட கூகுள் குரோம் பிரவுசர் பல சிறப்பான வசதிகளால் வாசகர்களால் கவரப்பட்டு வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது வளர்ச்சியில் சென்று கொண்டுள்ள ஒரே பிரவுசன் கூகுள் குரோம் தான். IE மற்றும் Firefox தன்னுடைய நிலையில் இருந்து கீழே நோக்கி சென்று கொண்டு உள்ளது. எளிமையும்,வேகமும் இந்த உலவி இவ்வளவு தூரம் வளர காரணமாகும் மற்றும் அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகப்படுதுவதாலும் வாசகர்கள் இதனை விரும்பி பயன்படுத்துகின்றனர்.
எந்த உலவியிலும் இல்லாத சிறப்பம்சமே கூகுள் குரோம் இதன் எளிமை தான். தேவையில்லாத வசதிகளை குப்பைகளை போல் அடுக்காமல் என்ன வசதி வேண்டுமோ அதை மட்டுமே வெளியிடுவது இதன் சிறப்பு. இப்பொழுது இந்த உலவியின் புதிய பதிப்பு வெளியிட்டு உள்ளனர். முழுக்க முழுக்க வேகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த புதிய பதிப்பை உருவாக்கி உள்ளனர்.
எப்பொழுதும் போல தற்போது இதை சோதனை(Beta) நிலையிலேயே விட்டுள்ளனர். க்ரோம் உலவியை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக இணைய வேகத்தில் வித்தியாசத்தை உணர்வீர்கள். டவுன்லோட் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மென்பொருளை டவுன்லோட் செய்ய - Google Chrome 14 Beta

24 ஆகஸ்ட் 2011

இணையத்தில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட 10 டொமைன்கள் [High expensive domains]

இந்தச் சுருக்கவிவரம் இல்லை. இடுகையைப் பார்க்க, இங்கே கிளிக் செய்க .

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர். முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும். ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும். விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும். துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது. ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள் * விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும். ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும். முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம். ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!

சீறிலங்கா இராணுவத்துக்கு சிங்களப் பெண்மணி ஒருவர்தான் தளபதியாக இருக்கின்றரா என்ற கேள்வியை இராணுவ அதிகாரிகளும், படையினரும் எழுப்புவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவத் தளபதி லெட். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மனைவி மஞ்சுலிகா அருணா விஜயசூரியவின் தவறான நடத்தையின் காரணமாகவே இவ்வாறான பிரச்சினை ஒன்று இராணுவ வட்டாரங்களில் உருவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சேவா வனிதா என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாடுகளுக்காக இராணுவ முகாம்களுக்கு இவர் விஜயம் செய்யும் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட முகாம்களின் தளபதிகள், பிரதித் தளபதிகள் மட்டுமன்றி அவர்களுடைய மனைவிமார்களும் அங்கு சமூகமளித்து தன்னை வரவேற்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளாராம். இந்த உத்தரவுக்கு கீழ்படியத் தவறுபவர்கள் மறுநாள் கட்டாய லீவில் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இராணுவத் தளபதிக்கு அவர் கடுமையான வார்த்தைகளில் உத்தரவிடுவதை இராணுவ அதிகாரிகள் பலர் நேரில் பார்த்துள்ளார்கள். மஞ்சுலிகா அருணா விஜயசூரியவின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பவர்கள் உடனடியாகவே தண்டனைக்கு அல்லது இடமாற்றத்துக்கு உள்ளாவதால், இராணுவத் தளபதியை விட அவரது மனைவியைச் சமாளிப்பதிலேயே இராணுவத் தளபதிகள் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இராணுவத்தின் சேவா வணிதா பிரிவு இராணுவ முகாம்கள் பலவற்றிலும் ஆரம்பப் பாடசாலைகளை நடத்திவருகின்றது. பொதுமக்களிடமிருந்து இதற்காக ஒரு தவணைக்கு 1,500 ரூபாவும், படையினரது பிள்ளைகளுக்காக 600 ரூபாவும் அறவிடப்படுகின்ற போதிலும், இதற்கும் மேலாக வேறு காரணங்களைக் காட்டி பெருமளவு பணம் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ முகாம்களில் உள்ள சிறுவர் பாடசாலைகளுக்கு இவர் விஜயம் செய்யும் போது ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் வழங்கப்படுவதைப் போல செல்வந்த உணவு வகைகளே அவருக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இதற்கான செலவீனத்தை குறிப்பிட்ட முகாம்களின் இராணுவத்தினரே பொறுப்பேற்க வேண்டும். உணவு விடயத்தில் குறைபாடுகள் காணப்பட்டால் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளும் அவர், குறிப்பிட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குவதற்கம் தயங்குவதில்லை எனக் கூறப்படுகின்றது.

மூவர் உயிர் காக்க - தமிழருவி மணியன் , தோழர் தியாகு (VIDEO)

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய குற்றமற்ற மூன்று தமிழர்க​ளை மரண தண்ட​னையிலிருந்து காக்க ​சென்​னை எம்.ஜி.ஆர் நகரில் ​கட்சி ​வேறுபாடுக​ளைக் கடந்து த​லைவர்கள் பங்​கேற்ற பொதுக்கூட்டம் 22.08.2011 அன்று ந​டை​பெற்றது. அக்கூட்டத்தில் தமிழருவி மணியன் ,தோழர் தியாகு அவர்களின் ​பேச்சு.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com