Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

26 ஜூன் 2009

படித்ததில் பிடித்தது: தமிழகத்தை குறிவைக்கும பாலிவுட் கவர்ச்சி

கேரளாவில் ஷகிலா அலை ஓய்ந்த பிறகு காலைக்காட்சி படங்கள் கொஞ்சம்

கட்டுக்குள் இருந்தன. தமிழர்களும் நிம்மதியாக இருந்தார்கள். அந்த நிம்மதி நீடிக்காதுபோல் தெரிகிறது. அந்தளவுக்கு பயமுறுத்துகின்றன பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகும் சில படங்கள். பிபாஷாபாசு, ஜான் ஆபிரஹாம் நடித்து சில ஆண்டுகளுக்கு முன் 'ஜிஸம்' என்ற படம் வெளியானது. ஒரு பெண்ணின் தவறான உறவை சித்தரிக்கும் 'ஜிஸம்' அன்றைய தேக்கநிலை இந்தி சினிமாவில் ஒரு அலையை கிளப்பியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருந்த பாலிவுட், பாதை மாறியதற்கு துவக்கம் அமைத்துக்கொடுத்தது 'ஜிஸம்'. பிபாஷாபாசுவின் கவர்ச்சியை நம்பி வெளியான இப்படம் 'தேகம்' என்ற பெயரில் தமிழில் வெளியானது. 'ஜிஸம்' அமைத்துக்கொடுத்த ஒற்றையடி பாதையை ராஜபாட்டையாக மாற்றியது மல்லிகா ஷெராவத்தின் 'மர்டர்' படம். கவர்ச்சி இருந்தால் காசு பார்க்கலாம் என்ற கருத்தை பாலிவுட்டின் மூளையில் அழுத்தமாக பதித்தது, மல்லிகா நீச்சல் உடையில் தோன்றிய இப்படம். 'கல் கோ நா கோ', 'ரோடு', 'பிளாக்', 'ரங் தே பசந்தி' என ஒருபுறம் இந்தி சினிமா இறக்கை கட்டி பறக்க, மறுபுறம் கவர்ச்சி, காமம், தவறான உறவு இவற்றை மையப்படுத்தி பெருவாரியான படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தி பேசும் மாநிலங்களை தாண்டி தமிழிலும் இப்படங்கள் வெளியாவது அதிர்ச்சியான நிகழ்வு. மலையாள ஆபாசபடங்களின் வரத்து தமிழகத்தில் ஏறக்குறைய நின்றுபோன நிலையில், அந்த இடத்தை பாலிவுட்டின் பலான படங்கள் நிரப்பியுள்ளன. தமிழில் 'காதல் கவிதை', 'என் சுவாசக்காற்றே' படங்களில் நடித்த இஷா கோபிகர், 'ஜே ஜே' நாயகி அமோகா போன்ற முன்னணி நடிகைகள் இதுபோன்ற கவர்ச்சி படங்களில் நடிக்க தயங்குவதில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்!
பெண்ணுடன் பெண் உறவு கொள்ளும் இஷா கோபிகரின் 'கேர்ள் பிரெண்ட்' படம், இந்தியாவின் முதல் லெஸ்பியன் படம் என்ற விளம்பரத்துடன் தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று டஜன் திரைப்படங்கள் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வர வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றின் உள்ளடக்கத்தை இப்படங்களின் பெயர்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன. '8-வது இரவு', 'உச்சக்கட்டம்', 'சிருங்காரி', 'சேத்னாவின் இரவுகள்'.... பலருடன் தவறான உறவு வைத்துக்கொள்வது, கணவனுக்கு துரோகம் இழைப்பது, விலைமாதுவின் இரவு வாழ்க்கை, பில்லிசூன்யம், நிர்வாணபூஜை...ஆகியவையே இப்படங்களின் கதை களங்கள். விரைவில் தமிழுக்கு வரவிருக்கும் '8-வது இரவு' படத்தில் நடித்திருப்பவர் மேக்னா நாயுடு. உலகின் மிகப்பெரிய இயற்கை சீற்றங்கள் எட்டாம் தேதியிலேயே நடந்திருக்கின்றன. இதனை மையப்படுத்தி வெளிவரும் படமே எட்டாவது இரவு. பில்லி சூன்யம் முக்கியமாக இடம்பெறும் இப்படத்தில் மேக்னா நாயடுவின் தோழியாக வரும் இரு பெண்கள் தோஷம் நீங்க நிர்வாண பூஜை செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மேக்னா நாயுடுவின் தாராள கவர்ச்சி படத்துக்கு போனஸ். மேக்னாவுக்கு இப்படத்தில் ஜோடி ராஜாதாரா என்ற நடிகர். கரண் ராம்தான் இப்படத்தை இயக்கியுள்ளார். 'கேர்ள் பிரெண்ட்' ஜாதியில் இஷா கோபிகர் நடித்திருக்கும் புதிய படம் 'ஹசீனா'. இரண்டு ஆண்களை காதலித்து அதில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் கதை. நாயகன் வர்மாவுடன் இஷா நடித்திருக்கும் நெருக்கமான காதல் காட்சிகளுக்காகவே இப்படம் தமிழகத்துக்கு வருகிறது. தமிழில் 'ஹசீனா'வின் பெயர் 'உச்சக்கட்டம்'. ப்ரீத்தி ஜிங்கானி இதன் இயக்குனர்.
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகள் சோனாலி, பிந்து நடித்த இந்திபடம், 'சேத்னாவின் இரவுகள்' என்ற பெயரில் விரைவில் தமிழுக்கு வருகிறது. சேத்னாவின் இரவு வாழ்க்கை படத்தின் பிரதான கதை பகுதி! விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் அதிகம் எதிர்பார்க்கும் இன்னொரு படம் 'சிங்காரி'. பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் நடித்தது. 'சிங்காரி'யை இயக்கியிருப்பவர் 'காமசூத்ரா'வை இயக்கிய கல்பனா ஜி. லஷ்மி என்பதால் இப்படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை எந்த வகையிலும் ஏமாற்றாத கதை, 'சிங்காரி'. நகர பரபரப்பிலிருந்து விலகி இருக்கும் கிராமம் ரவ்பூர். விலைமாதர்கள் நிறைந்த கிராமம். இங்கு பிரதான தொழிலே விபச்சாரம்தான். இங்கு, மனதுக்கு பிடிக்காமல் வேறுவழியின்றி விபச்சாரம் செய்து வருபவள் பசந்தி. நல்ல மனிதன் யாராவது அகப்பட்டால் அவனுக்கு மனைவியாகி விபச்சாரத்தை விட்டொழித்து வாழ ஆசைப்படுகிறாள் பசந்தி. ஆனால், அப்படியொரு ஆணுக்கு ரவ்பூரில் கடுமையான தட்டுப்பாடு.
இந்நிலையில் பசந்தியை சந்திக்கிறான் கந்தன் மிஸ்ரா. பசந்தியின் கனவு நாயகனின் குணங்கள் கந்தன் மிஸ்ராவிடம் கச்சிதமாக பொருந்துகிறது. கந்தன் மிஸ்ராவும் பசந்தியின் அழகில் மயங்குகிறான். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். வாழ்க்கை சுபத்தில் சென்று கொண்டிருக்க விபத்தாக வருகிறது பவன் புண்டாவின் வரவு. ரவ்பூர் கிராமத்தை கடவுளின் பெயரை சொல்லி அடிமைப்படுத்தியிருக்கும் நவீன பண்ணையார் (சாமியார்?) இந்த பவன் புண்டா. இவனுக்கு பசந்தி மீது அளவுகடந்த காமம். புண்டாவின் ஆன்மீக செல்வாக்கு சிரமமில்லாமல் பசந்தியை படுக்கையில் வீழ்த்தி விடுகிறது. அவனிடமிருந்து தப்பித்து கந்தன் மிஸ்ராவுடன் ஒன்றுசேர போராடுகிறாள் பசந்தி. அவளது போராட்டம் நிறைவேறியதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ். கவர்ச்சியில் தோயத்து எடுத்த இந்த கதையில் பசந்தியாக பாரபட்சமில்லாத கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார் சுஷ்மிதா சென். கந்தன் மிஸ்ராவாக அனுக் சவானியும், பவன் புண்டா பாத்திரத்தில் மிதுன் சக்ரவர்த்தியும் நடித்துள்ளனர். 'சிங்காரி' போன்ற ஒருடஜன் படங்கள் தமிழில் வெளியாக காத்திருக்கின்றன. மாளவிகா இந்தியில் நடித்த 'சீ யூ அட் 9' திரைப்படம் சென்னை தியேட்டர் ஒன்றில் 150 நாள்கள் ஓடியதை தொடர்ந்து இதுபோன்ற படங்களுக்கு மார்க்கெட் கிராஃப் ஏறுமுகத்தில் இருக்கிறது. கற்பு குறித்தும் கலாச்சாரம் குறித்தும் படங்களின் பெயர் குறித்தும் கூச்சலிடும்
அமைப்புகள் இந்த பாலிவுட் பாய்ஸனை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியை அளிக்கிறது. ஒருவகையில் மலையாள காலைக்காட்சி படங்களைவிட இவை அபாயகரமானவை. மலையாளப் படங்களை பார்க்க செல்லும் பார்வையாளர்கள், தவறான ஒன்றில் ஈடுபடும் குற்றவுணர்வுடன் முடிந்த அளவு தங்களை மறைத்துக்கொண்டே தியேட்டருக்குள் நுழைகிறார்கள். மேக்னா நாயுடு, இஷா கோபிகர், சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் பாலிவுட் படங்கள் பார்வையாளர்களுக்கு எவ்வித குற்றவுணர்வையும் ஏற்படுத்துவதில்லை. சாதாரண பார்வையாளர்களின் மனநிலையுடனேயே இவர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். திருட்டை அது திருட்டு எனும் குற்றவுணர்வு இல்லாமல் செய்யும் அபாயகரமான மனநிலை இது. இந்த அழிவுப்பாதைக்கு முடிவு கட்டுவது யார்? தமிழ் கலாச்சார உலகின் மிகப்பெரிய கேள்வி இது!

படித்ததில் பிடித்தது: தமிழகத்தை குறிவைக்கும பாலிவுட் கவர்ச்சி

கேரளாவில் ஷகிலா அலை ஓய்ந்த பிறகு காலைக்காட்சி படங்கள் கொஞ்சம்

கட்டுக்குள் இருந்தன. தமிழர்களும் நிம்மதியாக இருந்தார்கள். அந்த நிம்மதி நீடிக்காதுபோல் தெரிகிறது. அந்தளவுக்கு பயமுறுத்துகின்றன பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகும் சில படங்கள். பிபாஷாபாசு, ஜான் ஆபிரஹாம் நடித்து சில ஆண்டுகளுக்கு முன் 'ஜிஸம்' என்ற படம் வெளியானது. ஒரு பெண்ணின் தவறான உறவை சித்தரிக்கும் 'ஜிஸம்' அன்றைய தேக்கநிலை இந்தி சினிமாவில் ஒரு அலையை கிளப்பியது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருந்த பாலிவுட், பாதை மாறியதற்கு துவக்கம் அமைத்துக்கொடுத்தது 'ஜிஸம்'. பிபாஷாபாசுவின் கவர்ச்சியை நம்பி வெளியான இப்படம் 'தேகம்' என்ற பெயரில் தமிழில் வெளியானது. 'ஜிஸம்' அமைத்துக்கொடுத்த ஒற்றையடி பாதையை ராஜபாட்டையாக மாற்றியது மல்லிகா ஷெராவத்தின் 'மர்டர்' படம். கவர்ச்சி இருந்தால் காசு பார்க்கலாம் என்ற கருத்தை பாலிவுட்டின் மூளையில் அழுத்தமாக பதித்தது, மல்லிகா நீச்சல் உடையில் தோன்றிய இப்படம். 'கல் கோ நா கோ', 'ரோடு', 'பிளாக்', 'ரங் தே பசந்தி' என ஒருபுறம் இந்தி சினிமா இறக்கை கட்டி பறக்க, மறுபுறம் கவர்ச்சி, காமம், தவறான உறவு இவற்றை மையப்படுத்தி பெருவாரியான படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தி பேசும் மாநிலங்களை தாண்டி தமிழிலும் இப்படங்கள் வெளியாவது அதிர்ச்சியான நிகழ்வு. மலையாள ஆபாசபடங்களின் வரத்து தமிழகத்தில் ஏறக்குறைய நின்றுபோன நிலையில், அந்த இடத்தை பாலிவுட்டின் பலான படங்கள் நிரப்பியுள்ளன. தமிழில் 'காதல் கவிதை', 'என் சுவாசக்காற்றே' படங்களில் நடித்த இஷா கோபிகர், 'ஜே ஜே' நாயகி அமோகா போன்ற முன்னணி நடிகைகள் இதுபோன்ற கவர்ச்சி படங்களில் நடிக்க தயங்குவதில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்!
பெண்ணுடன் பெண் உறவு கொள்ளும் இஷா கோபிகரின் 'கேர்ள் பிரெண்ட்' படம், இந்தியாவின் முதல் லெஸ்பியன் படம் என்ற விளம்பரத்துடன் தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று டஜன் திரைப்படங்கள் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வர வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றின் உள்ளடக்கத்தை இப்படங்களின் பெயர்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன. '8-வது இரவு', 'உச்சக்கட்டம்', 'சிருங்காரி', 'சேத்னாவின் இரவுகள்'.... பலருடன் தவறான உறவு வைத்துக்கொள்வது, கணவனுக்கு துரோகம் இழைப்பது, விலைமாதுவின் இரவு வாழ்க்கை, பில்லிசூன்யம், நிர்வாணபூஜை...ஆகியவையே இப்படங்களின் கதை களங்கள். விரைவில் தமிழுக்கு வரவிருக்கும் '8-வது இரவு' படத்தில் நடித்திருப்பவர் மேக்னா நாயுடு. உலகின் மிகப்பெரிய இயற்கை சீற்றங்கள் எட்டாம் தேதியிலேயே நடந்திருக்கின்றன. இதனை மையப்படுத்தி வெளிவரும் படமே எட்டாவது இரவு. பில்லி சூன்யம் முக்கியமாக இடம்பெறும் இப்படத்தில் மேக்னா நாயடுவின் தோழியாக வரும் இரு பெண்கள் தோஷம் நீங்க நிர்வாண பூஜை செய்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மேக்னா நாயுடுவின் தாராள கவர்ச்சி படத்துக்கு போனஸ். மேக்னாவுக்கு இப்படத்தில் ஜோடி ராஜாதாரா என்ற நடிகர். கரண் ராம்தான் இப்படத்தை இயக்கியுள்ளார். 'கேர்ள் பிரெண்ட்' ஜாதியில் இஷா கோபிகர் நடித்திருக்கும் புதிய படம் 'ஹசீனா'. இரண்டு ஆண்களை காதலித்து அதில் ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் கதை. நாயகன் வர்மாவுடன் இஷா நடித்திருக்கும் நெருக்கமான காதல் காட்சிகளுக்காகவே இப்படம் தமிழகத்துக்கு வருகிறது. தமிழில் 'ஹசீனா'வின் பெயர் 'உச்சக்கட்டம்'. ப்ரீத்தி ஜிங்கானி இதன் இயக்குனர்.
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகள் சோனாலி, பிந்து நடித்த இந்திபடம், 'சேத்னாவின் இரவுகள்' என்ற பெயரில் விரைவில் தமிழுக்கு வருகிறது. சேத்னாவின் இரவு வாழ்க்கை படத்தின் பிரதான கதை பகுதி! விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களும் அதிகம் எதிர்பார்க்கும் இன்னொரு படம் 'சிங்காரி'. பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் நடித்தது. 'சிங்காரி'யை இயக்கியிருப்பவர் 'காமசூத்ரா'வை இயக்கிய கல்பனா ஜி. லஷ்மி என்பதால் இப்படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை எந்த வகையிலும் ஏமாற்றாத கதை, 'சிங்காரி'. நகர பரபரப்பிலிருந்து விலகி இருக்கும் கிராமம் ரவ்பூர். விலைமாதர்கள் நிறைந்த கிராமம். இங்கு பிரதான தொழிலே விபச்சாரம்தான். இங்கு, மனதுக்கு பிடிக்காமல் வேறுவழியின்றி விபச்சாரம் செய்து வருபவள் பசந்தி. நல்ல மனிதன் யாராவது அகப்பட்டால் அவனுக்கு மனைவியாகி விபச்சாரத்தை விட்டொழித்து வாழ ஆசைப்படுகிறாள் பசந்தி. ஆனால், அப்படியொரு ஆணுக்கு ரவ்பூரில் கடுமையான தட்டுப்பாடு.
இந்நிலையில் பசந்தியை சந்திக்கிறான் கந்தன் மிஸ்ரா. பசந்தியின் கனவு நாயகனின் குணங்கள் கந்தன் மிஸ்ராவிடம் கச்சிதமாக பொருந்துகிறது. கந்தன் மிஸ்ராவும் பசந்தியின் அழகில் மயங்குகிறான். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். வாழ்க்கை சுபத்தில் சென்று கொண்டிருக்க விபத்தாக வருகிறது பவன் புண்டாவின் வரவு. ரவ்பூர் கிராமத்தை கடவுளின் பெயரை சொல்லி அடிமைப்படுத்தியிருக்கும் நவீன பண்ணையார் (சாமியார்?) இந்த பவன் புண்டா. இவனுக்கு பசந்தி மீது அளவுகடந்த காமம். புண்டாவின் ஆன்மீக செல்வாக்கு சிரமமில்லாமல் பசந்தியை படுக்கையில் வீழ்த்தி விடுகிறது. அவனிடமிருந்து தப்பித்து கந்தன் மிஸ்ராவுடன் ஒன்றுசேர போராடுகிறாள் பசந்தி. அவளது போராட்டம் நிறைவேறியதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ். கவர்ச்சியில் தோயத்து எடுத்த இந்த கதையில் பசந்தியாக பாரபட்சமில்லாத கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார் சுஷ்மிதா சென். கந்தன் மிஸ்ராவாக அனுக் சவானியும், பவன் புண்டா பாத்திரத்தில் மிதுன் சக்ரவர்த்தியும் நடித்துள்ளனர். 'சிங்காரி' போன்ற ஒருடஜன் படங்கள் தமிழில் வெளியாக காத்திருக்கின்றன. மாளவிகா இந்தியில் நடித்த 'சீ யூ அட் 9' திரைப்படம் சென்னை தியேட்டர் ஒன்றில் 150 நாள்கள் ஓடியதை தொடர்ந்து இதுபோன்ற படங்களுக்கு மார்க்கெட் கிராஃப் ஏறுமுகத்தில் இருக்கிறது. கற்பு குறித்தும் கலாச்சாரம் குறித்தும் படங்களின் பெயர் குறித்தும் கூச்சலிடும்
அமைப்புகள் இந்த பாலிவுட் பாய்ஸனை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியை அளிக்கிறது. ஒருவகையில் மலையாள காலைக்காட்சி படங்களைவிட இவை அபாயகரமானவை. மலையாளப் படங்களை பார்க்க செல்லும் பார்வையாளர்கள், தவறான ஒன்றில் ஈடுபடும் குற்றவுணர்வுடன் முடிந்த அளவு தங்களை மறைத்துக்கொண்டே தியேட்டருக்குள் நுழைகிறார்கள். மேக்னா நாயுடு, இஷா கோபிகர், சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் பாலிவுட் படங்கள் பார்வையாளர்களுக்கு எவ்வித குற்றவுணர்வையும் ஏற்படுத்துவதில்லை. சாதாரண பார்வையாளர்களின் மனநிலையுடனேயே இவர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். திருட்டை அது திருட்டு எனும் குற்றவுணர்வு இல்லாமல் செய்யும் அபாயகரமான மனநிலை இது. இந்த அழிவுப்பாதைக்கு முடிவு கட்டுவது யார்? தமிழ் கலாச்சார உலகின் மிகப்பெரிய கேள்வி இது!

கூகிள் ஆன்லைன் கோப்புகளை தரவிறக்க எளிய வழி

நண்பர்களே நாம் கூகிளில் உள்ள கூகிள் டாக்ஸ் உபயோகப்படுத்தியிருப்போம். அந்த ஆன்லைன் Google docs நிறைய கோப்புகள் சேமித்திருப்போம். அப்படி சேமித்த அனைத்து கோப்புகளையும் தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.
இந்த மென்பொருளை தரவிறக்கி சாதராண மென்பொருள் போல நிறுவிக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த மென்பொருளை இயக்கி அதில் User Name உங்கள் கூகிள் நுழைவுச் சொல்லை கொடுக்கவும்.
பின்னர் Password என்ற இடத்தில் உங்கள் (Password) கடவுச்சொல்லை கொடுக்கவும்.
பின்னர் உங்கள் கணிணியில் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பின்னர் Exec என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் Google Docs அனைத்தும் தரவிறக்கி கொடுத்து விடும்.
இந்த மென்பொருள் மிகவும் நம்பகத்தன்மையானது. அது மட்டுமில்லாமல் புதிய பதிப்பு வந்தால் புதுப்பித்துக் கொள்ளும் வசதி. அத்துடன் கூகிளின் நிறுவனத்தில் இருந்து வந்தது என்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?
மென்பொருள் தரவிறக்க சுட்டி
.
இந்த பதிவு பிடித்திருந்தால் வோட்டு போடுங்கள் விளம்பரங்களி கிளிக் செய்து வளரச் செய்யுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்

இலவச அழகிய பிளாக்கர் வார்ப்புரு (free blogger template)

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஒரு அழகிய பிளாக்கர் வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். இதில் உள்ள வசதிகள்

* தேடுபொறிகளுக்கு ஏற்றவகையில் உங்கள் பதிவுகளின் தலைப்பை காட்டுதல் * தமிழ்மண கருவிப்பட்டை இணைக்கப்பட்டுள்ளது. * தமிழ் புக்மார்க் தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. * நீங்கள் இடும் பதிவுகளை எத்தனை பேர் வாசித்தார்கள் என காட்டும் நிரலி இணைக்கப்பட்டுள்ளது. வார்ப்புருவை தரவிறக்க இங்கே அழுத்தவும்

'கோபம் கொண்ட ராஜா...' பாக்யராஜின் ப்ளாஷ்பேக்

திரையுலகில் தனக்கு முந்தைய சாதனையாளர்கள் பற்றித் தெரிந்து கொள்ளாத எவரும் சாதிக்க முடியாது, என்றார் இயக்குநர் பாக்யராஜ். ஏழு புதுமுகங்கள் நடித்துள்ள புதிய படம் புகைப்படம். இந்தப் படத்‌தி‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌ யா‌மி‌னி‌, பி‌ரி‌யா‌ ஆனந்‌த்‌, மி‌ருணா‌ளி‌னி‌, நந்‌தா‌, அம்‌ஜத்‌, சி‌வம்‌,ஹா‌ரீ‌ஸ்‌, டி‌.கே‌.மதன்‌ ஆகி‌யோ‌ருடன்‌ சண்‌முகசுந்‌தரம்‌, வெ‌ங்‌கட்‌, நீ‌லி‌மா‌, தே‌வகி‌, ஞா‌னசம்‌பந்‌தம்‌, சி‌வபா‌லன்‌, முத்‌துரா‌ஜ்‌ உட்‌பட பலர்‌ நடி‌த்‌துள்‌ளனர்‌. கங்‌கை‌ அமரன்‌ இசை‌யமை‌க்‌க பா‌டல்‌களை‌ நா‌.முத்‌துக்‌குமா‌ர்‌, கவி‌ஞர்‌ வி‌வே‌கா‌, கங்‌கை‌ அமரன்‌, ரா‌ஜே‌ஷ்‌லி‌ங்‌கம்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதி‌ உள்‌ளனர்‌. வி‌ஜய்‌ ஆம்‌ஸ்‌ட்‌ரா‌ங்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. படத்‌தொ‌குப்‌பு‌ - பி‌.லெ‌னி‌ன்‌. பிஆர்ஓ பாலன். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் கே பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் மகேந்திரன் மற்றும் நடிகர் மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் பாக்யராஜ் பேசியதாவது: சினிமாவில் என்றல்ல... எந்தத் துறையாக இருந்தாலும் பழைய விஷயங்களை, முன்னோடிகளின் சாதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் புதிதாகச் சாதிக்க முடியாது. இலக்கணம் தெரிஞ்சாதான் அதை உடைக்க முடியும். மரபுக் கவிதை தெரிஞ்சாதான் புதுக்கவிதை எழுதமுடுயும். என்னை எல்லோரும் திரைக்கதையில் மன்னன் என்கிறார்கள். நான் சிறப்பாக திரைக்கதை அமைப்பதற்கு தூயவன், கலைஞானம் போன்றவர்களை என்னுடன் வைத்துக் கொண்டதுதான் காரணம். அதனால்தான் ஜெயிக்க முடிந்தது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கங்கை அமரனைப் பார்க்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. நான் முதன்முதலாக இயக்கிய 'சுவரில்லா சித்திரங்கள்' படத்துக்கு இசையமைத்தவர், கங்கை அமரன்தான். அந்த படம் வெற்றி பெற்றது. அடுத்து, என்னுடைய 'மவுனகீதங்கள்' படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். அந்த படம் வெள்ளிவிழா கொண்டாடியது. பாடல்கள் படுபிரபலம். ஏவி.எம்.நிறுவனத்துக்காக, 'முந்தானை முடிச்சு' படம் செய்தபோது, இசையமைப்பாளராக கங்கை அமரனைத்தான் என்றேன் நான். ஏவி.எம். நிறுவனத்தினர், இளையராஜாவை இசையமைக்க வேண்டும் என விரும்பினார்கள். எனக்கு ராஜாகிட்ட போக தயக்கமாக இருந்தது. ஒரு கட்டத்தில், கங்கை அமரனே என்னிடம் வந்து, 'இந்தப் படத்துக்கு அண்ணன் இசையமைக்கட்டும். நான் அடுத்த படத்துக்கு பண்ணுகிறேன்', என்றார். ராஜாவின் கோபம்... நான், இளையராஜாவிடம் சென்று இசையமைக்கக் கேட்டேன். 'நீ, அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். இப்போ நான் எதுக்கு... அமரே பண்ணட்டும், போய்யா' என்றார். 'அமரன் யார், ஆப்பிரிக்காக்காரரா, உங்க தம்பிதானே...' என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும்...போதும்...என்றாகி விட்டது. ஆனால் இதெல்லாம் ஒரு சுவையான அனுபவங்களாக அமைந்தன. எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்களிடம் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என நினைத்து பெருமைப்படுகிறேன்...', என்றார். மகேந்திரன் இயக்குநர் மகேந்திரன் பேசுகையில், எவ்வளவு பெரிய படம், நட்சத்திரங்கள் நடித்தாலும் திரைக்கதை சரியாக இல்லாவிட்டால் படம் வெற்றிபெற முடியாது, என்றார். நடிகர் மோகன், கவிஞர்கள் நா.முத்துக்குமார், விவேகா, இசையமைப்பாளர் கங்கை அமரன், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங், 'ஆயிரத்தில் ஒருவன்' பட அதிபர் ரவீந்திரன் ஆகியோரும் பேசினார்கள். 'புகைப்படம்' படத்தின் தயாரிப்பாளர் என்.சி.மணிகண்டன் வரவேற்று பேசினார். இயக்குநர் ராஜேஷ்லிங்கம் நன்றி கூறினார்.

25 ஜூன் 2009

பாடகராகிறார் சூர்யா!

கோலிவுட்டில் இன்றைய ட்ரெண்ட் என்ன தெரியுமா... நடிகர்கள், தங்களுக்கான பாடலை தாங்களே பாடுவதுதான். கமல்ஹாசனில் தொடங்கி இன்றைய சுள்ளான்கள் வரை அவரவர் தங்கள் குரல் வளத்தை ரசிகர்களிடம் சோதித்துப் பார்த்துவிட்டனர். ஹீரோக்கள் சொந்தக் குரலில் பாடுவதால் அப்படி ஒன்றும் ரசிகர்களுக்கு சுகமாக இருந்துவிடப் போவதில்லை. ஆனால் பல நேரங்களில் படத்தின் விளம்பரத்துக்கு இந்த சொந்தக் குரல் பாடல்களும் உதவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இப்போது சூர்யாவும் தன் குரல் வளத்தைக் காட்ட களமிறங்கியுள்ளார். தனது 25வது படமான சிங்கம் படத்தில் தன் சொந்தக் குரலில் அவர் ஒரு பாடல் பாடவிருப்பதாகக் கூறப்படுகிறது (ஷூட்டிங் தொடங்கும் முன்பே பப்ளிசிட்டியா!) ஹரி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் அனுஷ்கா என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஹீரோயின் விஷயம் இறுதி செய்யப்படவில்லையாம். இது சூர்யாவுக்கு 25வது படம் என்பதால், அதை மறக்கமுடியாத அனுபவமாக்கும் வகையில் பல புதுமைகளை செய்யப் போகிறார்களாம் ஹரி அண்ட் கோ. அதில் ஒன்றுதான் சூர்யாவை சொந்தக் குரலில் பாடவைப்பது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்களாம். படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவினர் ஞானவேல். பருத்திவீரன் படத்தில் அமீரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாரே... அவர்தான் இவர்!

சுயம்வரம்-16 பேரை மணக்க ராக்கி விருப்பம்!

தனக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய சுயம்வரம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பாலிவுட் செக்ஸ் பாம் ராக்கி சாவந்த், அதில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரும் தன்னைக் கவர்ந்து விட்டதால் அத்தனை பேரையுமே மணக்க விரும்புவதாக கூறி அதிரடித்துள்ளார். ராக்கி சாவ்ந்த் கா சுயம்வர் என்ற பெயரில் சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ராக்கி. தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ரியாலிட்டி ஷோ என இதை அவர் வர்ணித்திருந்தார். ராக்கியின் இந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்டதும் நாடு முழுவதிலுமிருந்து 12,515 பேர் மனு செய்தனர். இவர்கள் குறித்து ஆராய்ந்து, பலரை நிராகரித்து, சல்லடை போட்டு சலித்து இப்போது 16 பேரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்துள்ளார் ராக்கி. ஆனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாகி விட்டதாம். காரணம், 16 பேரும் பக்கவாக, பர்பக்ட் ஆக இருப்பதால், யாரை விடுவது, யாரை தேர்வு செய்வது என்று அவருக்குப் புரியவில்லையாம். இதுகுறித்து செய்தியாளர்களைக் கூட்டி ராக்கி பேசுகையில், மகாபாரத்தில் திரவுபதி இருந்தது போல நானும் மாடர்ன் திரவுபதி ஆக விரும்புகிறேன். காரணம், நான் தேர்வு செய்த 16 பேரும் அட்டகாசமானவர்கள். இவர்கள் அனைவரையும் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன். உதய்ப்பூரில் நடந்த இந்த சுயம்வரம் நிகழ்ச்சியை நான் நன்றாக அனுபவித்தேன். எனக்கு ஒரு இளவரசியைப் போன்ற எண்ணம் ஏற்பட்டது. உதய்ப்பூரின் இளவரசியாக என்னை நான் நினைத்துக் கொண்டேன். இது மிகச் சிறந்த அனுபவம் என்றார் ராக்கி. உதய்ப்பூரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் போட்டியாளர்களை தங்க வைத்து ஒவ்வொருவரையும் நேரிலும் பரிசீலித்தார் ராக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Teen Girl Lost her life while Twittering

Image and video hosting by TinyPic
Teen Girl Lost her life while Twittering Favia Boricea was 17 years old girl. She found dead at bath dub with her Laptop. She was using Twitter all over the day. She addicted to twitter. She used her laptop while bathing in her bath dub to continue the twitter session. Her hands were wet. She continued the twitter session using her wet hands. Unfortunately she got electric shock and died immediately. The Crime report clearly says that "There was electric leakage due to improper precaution, invalid usage of laptop with wet hands". The report also says "The accident may happened due to laptop fell down to the bath dub". Related Post from Cybersimman's Blog : Twitter saved a women's Life Source : inquisitr.com
AmazingPhotos

பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க

பதிவுலகில் வலைப்பதிவு எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனி காரணம் உண்டு. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதுவோர். சிலர் தன் வாழ்வின் தடயங்களை பதிய எழுதுகின்றனர். சமூகம் குறித்தும், திரைத்துறை குறித்தும் தங்கள் பார்வையை பதிவிடுகிறார்கள். என் போன்று சில பதிவர்கள் கற்று கொண்ட விசயங்களை மற்றவர்களுடன் பகிர்வதற்காக வலைப்பதிவை உபயோகித்து வருகிறோம். ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் அவரவர் விருப்பம் சார்ந்து வாசகர் வட்டம் உண்டு. தொடர்ந்து அந்த வலைப்பதிவை வாசித்து வருவார்கள். நமது வலைப்பதிவுக்கு தினசரி புது வாசகர்கள் திரட்டிகள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ வருகிறார்கள். வருபவர்கள் தொடர்ச்சியாக நம் வலைப்பதிவுக்கு மீண்டும் வருவார்கள் என்று உறுதி கூற முடியாது. தமிழ் வலைப்பதிவுகளில் வருமானத்திற்கு வழி குறைவு என்பதால் வலைப்பதிவு எழுதுவதை யாரும் முழு நேர தொழிலாக செய்வதில்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறார்கள். வலைப்பதிவை வாசிக்க வாசகர்கள் தினசரி வரும் போது புது பதிவு இல்லை என்றால் வருபவர்கள் அதிருப்தி கொள்கின்றனர். மீண்டும் அந்த வலைப்பதிவுக்கு வருவதை குறைத்து கொள்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். மீண்டும் திரட்டிகளில் கண்ணில் தென்பட்டால்தான் வருகிறார்கள். தினமும் பதிவு எழுதுவது இயலாத காரியம்தான். இந்த சூழ்நிலையில் நம் வலைப்பதிவுக்கு வரும் வாசகர்களை தக்க வைத்து கொள்வது முக்கியம். அதற்கு சில வசதிகள் உள்ளன. RSS Feeds , Follower என்ற வசதிகள் அவை.Follower வசதி வலைப்பதிவு வைத்து உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து மற்றொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம். இப்போது RSS Feeds பற்றி பார்ப்போம். RSS Feeds பார்வையாளர்களுக்கு எந்த அளவில் உபயோகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம் என்ற இடுகையில் விரிவாக எழுதி இருந்தேன். வலைப்பதிவு வைத்து இருக்கும் நாம், பார்வையாளர்களுக்கு RSS Feeds வசதிகள் அளிப்பது நமக்கு எந்த அளவில் உபயோகப்படும் என்று பார்ப்போம். நான் முன்னர் கூறி உள்ளபடி நமது வலைப்பதிவுக்கு வரும் புதிய வாசகர்களை நம் பதிவின் நிரந்தர வாசகராக மாற்றுவது இருவருக்கும் நன்மை பயக்கும். அதற்கான வசதிதான் RSS Feeds. நாம் புதிய இடுகைகள் இடும் போது வாசகர் உபயோகிக்கும் Feed Reader ல் நமது புதிய இடுகைகள் புதுப்பிக்கப்பட்டு விடும். அவர் உங்கள் எழுத்துக்களை எளிய முறையில் தொடர்ச்சியாக வாசித்து கொள்வார். பிளாகரில் (blogger.com) வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு அவர்கள் வலைப்பதிவின் RSS Feeds URL பொதுவாக இப்படி இருக்கும். http://YOURBLOGNAME.blogspot.com/feeds/posts/default/ . இதனை Feed Reader -ல் இணைப்பதன் மூலம் இடுகைகளை வாசித்து கொள்ள முடியும். Feed Reader உபயோகிப்பதற்கு ஓரளவாவது இணையம் சார்ந்த அறிவு வேண்டும். அவர்கள் பிளாக்கர் அளிக்கும் இந்த RSS வசதியை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் புதியவர்கள் சிலர் ஈமெயில் மட்டும் உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு RSS Feed , Reader என்பன குழப்பத்தை தரலாம். அவர்களுக்கும் உங்கள் எழுத்துகளை கொண்டு சென்று சேர்க்க வசதி உள்ளது. RSS Feeds பொறுத்தவரை FeedBurner.com தளம் மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளிக்கிறது. பிரபலமான அந்த தளம் கூகிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு மேலும் பிரபலமாகி உள்ளது. Feedburner.com சென்று கூகிள் கணக்கு மூலம் லாகின் செய்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பிளாக்கின் URL கொடுத்து புதிய RSS Feed உருவாக்கி கொள்ளுங்கள். அங்கு கேட்கப்படும் தகவல்களை அளிக்கும் போது உங்களுக்கு புதிய RSS Feed முகவரியை அளிக்கும். உதாரணத்திற்கு இப்படி இருக்கும். http://feeds.feedburner.com/tvs50posts . இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும். இதில் முக்கிய வசதியான ஈமெயில் மூலம் சந்தாதாரர் (Subscribe) பற்றி பார்க்கலாம். மற்ற வசதிகளை பற்றி பின்பு தனி இடுகைகளாக எழுதுகிறேன். ஈமெயில் சந்தாதாரர் வசதியை பெற Feedburner சென்று Publicize --> Email Subscriptions கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யவும். சந்தாதாரர் வசதி அளிப்பதற்கு Code கொடுப்பார்கள். அதை உங்கள் வலைப்பதிவில் வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்தால் போதுமானது. அல்லது பிளாக்கரில் எளிதாக இணைக்கும் வசதியையும் கொடுத்து உள்ளார்கள். அதனை உபயோக படுத்துங்கள். அங்கே Feed Count என்ற வசதியும் உண்டு. அதன் மூலம் உங்கள் வலைப்பதிவை தினமும் எத்தனை பேர் RSS Feeds மூலம் படிக்கிறார்கள் என்பதனை உங்கள் வலைப்பதிவில் காட்டலாம். பிளாக்கரில் Feedburner உபயோகப்படுத்துவது குறித்த இந்த செய்முறை வீடியோ கொஞ்சம் வளா வளா என்று இருந்தாலும் புரியும் படி உள்ளது. பார்க்கவும்.
இனி உங்கள் வலைப்பதிவில் வாசகர்கள் ஈமெயில் மூலமும் சந்தாதாரர் ஆகி கொள்ளலாம். நீங்கள் இடும் புதிய இடுகைகள் சந்தாதாரரை ஈமெயில் மூலம் சென்றடைந்து விடும். அவர் உங்கள் தளத்துக்கு வர தேவை இல்லை. உங்கள் பார்வையாளர்களை RSS Feeds உபயோகிக்க ஊக்கப்படுத்துங்கள். இந்த எளிய முறை மூலம் உங்கள் வாசகர்கள் பெருகி கொண்டு செல்வார்கள். இப்போதெல்லாம் வைரஸ் போன்ற பிரச்சினைகளால் வலைப்பதிவுகள் காணாமல் போகின்றன. மேலும் சிலர் பதிவு எழுதுவதை சில காலம் நிறுத்தி விட்டு மீண்டும் துவங்குகிறார்கள். நீங்கள் பதிவு எழுதுவதை நிறுத்தி விட்டு ஒரு வருடம் கழித்து மீண்டும் எழுதினாலும் நீங்கள் தக்க வைத்து கொண்டுள்ள வாசகர்களுக்கு உங்கள் படைப்புகளை கொண்டு செல்ல முடியும். அல்லது புதிய வலைப்பதிவு எழுதினாலும் Edit Feed Details மூலம் புதிய Feed மாற்றி அளித்து அங்கும் இவர்களுக்கு நம் படைப்புகள் கொண்டு செய்ய வைக்க முடியும். இது போன்ற வசதிகள் நம் வாசகர்களை இழக்காமல் வைத்து கொள்ள உதவும். இதன் மூலம் வாசகர்கள் பெருகும் போது நாம் எழுதுவதை நம்மால் எடை போட்டு கொள்ள முடியும். அதிகரித்தால் துணிச்சலாக எழுதலாம் :) . எழுதும் போதும் நம்மை நம்பி சந்தாதாரர் ஆகி உள்ளவர்களுக்காக எழுதுகிறோம் என்று உற்சாகம் பிறக்கும். RSS Feed வசதி அளிப்பதால் வாசகர்கள் நம் தளத்திற்கு வர மாட்டார்கள். Feed Reader , ஈமெயில் மூலம் வாசித்து இருந்து விடுவார்கள் என்ற தவறான குற்றசாட்டு உண்டு. தளத்திற்கு வந்து படிப்பவர்களை இது பாதிப்பதில்லை. ஒன்றுமில்லாமல் போவதற்கு பதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாசகர்களையாவது கையில் வைத்து கொள்ளலாமே. Feedburner உங்கள் வாசகர் வட்டத்தை அதிகப்படுத்தும். கண்டிப்பாக உபயோகியுங்கள்.

Vista/Windows7 - இல் Check Boxes option கொண்டு வருவது

ஒன்றுக்கு மேற்ப்பட்ட கோப்புகளை காப்பி செய்யும் போது நாம் Ctrl Key - யை அதிகமாக பயன்படுத்துவோம்.இதனை தவிற்க இந்த முறைய பயன்படுத்தலாம் இதனை செயல்படுத்த எளிமையான வழி பின் வரும்மாறு செய்யவும் Organize ->Folder and search options ->view tab then check the option "Use Check Boxes to select items" and select ok இந்த படத்தை பர்க்கவும் இதில் உள்ள Check Box - யை டிக் செய்யவும். பின்பு Ok - அழுத்தவும் . இனிமேல் நாம் கோப்புகளை காப்பி செய்ய Ctrl key அழுத்தி mouse -யை போட்டு அட்டமாட்டோம் .cut,copy delete -செய்வது எளிமையாக இருக்கும்.

ஐஸ்வர்யா ராய் மீது வழக்கு!

சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலைக்கு பழங்குடியினர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் நடிகை ஐஸ்வர்யாராய் மீது மகாராஷ்ட்ர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல காற்றாலை நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி மகாராஷ்ட்ராவின் நந்தர்பார் மற்றும் துல் மாவட்டங்களில் காற்றாலைகள் அமைக்க ஏராளமான நிலங்களை வாங்கியது. பழங்குடி மக்களுக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அப்படி வாங்கப்பட்ட இந்த நிலங்களில் காற்றாலைகள் அமைக்க அரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்ட சுஸ்லான், பின்னர் காற்றாலை அமைக்காமல், நிலங்களை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களுக்கு எக்கச்சக்க விலைக்கு விற்று லாபம் பார்த்ததாக கூறப்படுகிறது. எனவே பழங்குடி மக்களை ஏமாற்றி மோசடி செய்து இந்த நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக மகாராஷ்ட்ர அரசு கடந்த முறை சட்ட சபையிலேயே அறிவித்தது நினைவிருக்கலாம். நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் அமிதாப் பச்சன், ட்விங்கிள் கன்னா மற்றும் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர் சிங் ஆகியோர் பெயர்களில் இந்த நிலங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மகாராஷ்ட்ர அரசே எழுப்பியுள்ள இந்தப் புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சன்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரும் இந்த நிலங்களை வாங்கியிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அவர் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

23 ஜூன் 2009

பில் கேட்ஸ் வீட்டில் iPod, iPhone-க்கு தடை+ மற்ற IT செய்திகள்

1. உலகமே விருப்பத்துடன் பயன்படுத்தும் ஆப்பிளின் ஐபோட்(iPod), ஐஃபோன்(iPhone) மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பில் கேட்ஸ் பசங்க (2 பெண்கள், ஒரு பையன்) ஆசைப்பட்டு கேட்டாகூட கிடையாது. இதை நான் சொல்லலைங்க! பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸே Vogue பத்திரிகைக்கு கொடுத்த ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க! தன் ஃப்ரெண்ட்ஸ் வைத்திருக்கும் ஐஃபோன்களை திருமதி. பில் கேட்ஸ் பார்த்துட்டு, நமக்குன்னு ஒன்னு இல்லையே என்று ரொம்பத்தான் ஏங்கிப் போய் கிடக்கறாங்க. 2. இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பயன்படுத்துபவர்களுக்கு $10,000 பரிசை தர மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளது. IE8-ல் மட்டுமே தெரியும் மாதிரி ஒரு web page-ஐ உருவாக்கி மறைத்து வைத்துள்ளது. Twitter-ல் அது தொடர்ந்து தரும் clue-க்களை வைத்து அந்த webpage-ஐ முதலில் கண்டுபிடிப்பவருக்கே அந்த $10,000 சொந்தம். 19 ஜூனில் இருந்து அந்த போட்டி நடந்துகொண்டு இருக்கிறது. மேற்கொண்டு விவரங்களுக்கு http://www.tengrandisburiedhere.com/ பாருங்கள். “சொக்கா! இந்த பரிசு எனக்கில்லே. எனக்கில்லே.” 3. ஒரு ஆய்வில், சுமார் மூன்றில் இரண்டு பேர், கம்பெனி கொடுத்த லாப்டாப்பை அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போட (sincerely) பயன்படுத்துவதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். 4. இன்டெர்நெட்டில் தற்போது சுமார் 500 பில்லியன் GB அளவுக்கு data கொட்டிக் கிடப்பதாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். விலை குறைந்து போச்சுன்னு டபுள் டிஜிட் மெகாபிக்சல் டிஜிட்டல் கேமரா வாங்கி நாம இஷ்டத்துக்கு சுட்டுத் தள்ளிய ஃபோட்டோக்களும், வீடியோக்களும் இதில் சேர்த்தி. 5. இன்னும் சில மாதங்களில் Unix Operating System தனது 40-ஆவது பிறந்த நாளை கொண்டாடப் போகிறது. நம்ம லினக்சுக்கு சுமார் 18 வயது ஆகப்போகிறது. மேஜர் ஆகப்போகும் லினக்சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! 6. Redhat ஸ்பான்சர் செய்யும் ஃபெடோரா(Fedora) லினக்ஸ் புதியதாக Fedora 11 பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 20 நொடியில் booting ஆக முயற்சிப்பது, default ஃபைல் சிஸ்டமாக புதிய ext4, ஓப்பன் ஆபீஸ் 3.1, KDE 4.2.2 ஆகியவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில சிறப்பு அம்சங்கள். செல்லப் பெயர் Leonidas. 7. V1*GRA வாங்கலியோ.. இப்படி இதை வாங்கு. அதை வாங்குன்னு அழையா விருந்தாளியா வந்து தொல்லை கொடுக்கும் குப்பை ஈமெயில்களைத்தான் Spam என்கிறார்கள். மைக்ரோசாஃப்ட் தன் அறிக்கையில் உலகின் மொத்த ஈமெயிலில் 97 சதவீதம் spam என்று சொல்கிறது. அவ்வளவு ஒன்னும் என் inbox-க்கு வரலியேன்னா அதுவும் சரிதான். Mail server-லியே Spam filter வைத்து அதிகபட்சம் ஸ்பாமை நசுக்கிடறாங்களே! நீங்கள் ஓட்டு போட்டு இந்த பதிவை மேலும் பலர் படிக்க வழி செய்யுங்களேன்.

இன்று விஜய் பிறந்த நாள்: இலவச கம்ப்யூட்டர் மையங்கள் திறப்பு

தமிழ் திரையுலகில் இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்குஇன்று 36-வது பிறந்தநாள். இந்த பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்விப் பயிற்சி மையங்களைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய்.22062009 அடுத்த ஆண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் இயக்கத்துக்கு அச்சாரமாக இந்த நற்பணிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மற்றும் சாலிகிராமம் அருணாச்சலா சாலையில் இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார் விஜய். இவை தவிர தமிழகம் முழுவதிலும் இது போன்ற கல்வி மையங்களைத் திறக்கவிருப்பதாகவும் கூறினார் விஜய். பின்னர் வடபழனியில் உள்ள அவரது ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை விஜய் தொடங்கி வைத்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். விழாவில் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். பிறந்த நாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்த விஜய் பல்வேறு உதவிகளை வழங்கினார். வடபழனி முருகன் கோயில் அருகில் ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். லிட்டில் பிளவர் பள்ளி, மெர்சி ஹோம், ஸ்மாஸ்டிக்சொசைட்டி போன்றவற்றில் விஜய் மதிய உணவு வழங்கினார். வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் முழுக்க விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியும், 'நாளைய முதல்வர் விஜய்' என வர்ணித்தும் பேனர்கள், விஜய் மன்ற கொடிகள் மற்றும் போஸ்டர்கள் மயமாகவே இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு தனது கல்யாண மண்டப பால்கனியில் நின்றபடி டாட்டா காட்டினார் விஜய்!

அப்ரிதிக்கு 'டோப்' டெஸ்ட்!-யூனிஸ் கான் ஓய்வு!!

லண்டன்: டுவென்டி 20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல பேருதவி புரிந்த ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிதிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திடீரென ஊக்க மருந்து சோதனை நடத்தியுள்ளது. நேற்று லண்டனில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த நிலையில் அப்ரிதிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊக்க மருந்து சோதனை நடத்தியுள்ளது. ஊக்க மருந்து சோதனை நடத்த வருமாறு அப்ரிதிக்கு திடீரென அழைப்பு விடுக்கப்பட்டதாம். போட்டியின் முடிவில் சோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளார் அப்ரிதி. இதனால் அப்ரிதியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் வியப்படைந்தனராம். ஆனால் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரருக்கு இதுபோன்ற சோதனை நடத்துவது வழக்கமானதுதான் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கான அணியில் இல்லை.. இதற்கிடையே, இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணியில் அப்ரிதி சேர்க்கப்படவில்லை. வருகிற 26-ம் தேதி முதல் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது பாகிஸ்தான். இதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அப்ரிதி இடம் பெறவில்லை. மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்ரிதி இடம் பெறவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. யூனிஸ் கான் ஓய்வு!!: இதற்கிடையே டுவென்டி-20 உலக கோப்பை தொடரை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி்-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். கடந்த 2007ல் நடந்த முதல் டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் வீழ்த்தி கோப்பை வென்றது. இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலில் விளையாடிய யூனிஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கையை வீழத்தி கோப்பை வென்றது. இந்நிலையில் கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் டுவென்டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கோப்பையை என் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். இது தான் நான் விளையாடிய கடைசி டுவென்டி-20 போட்டி. இந்த போட்டியுடன் டுவென்டி-20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். எனக்கு தற்போது 34 வயதாகிவிட்டது. இந்த வயதுக்கு மேல் டுவென்டி-20 விளையாட முடியாது. பாகிஸ்தான் வாருங்கள்... சமீபகாலமாக பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. அனைத்து நாடுகளும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அப்போது தான் எனது மகனும், பக்கத்து வீட்டு சிறுவர்களும் கிரிக்கெட் விளையாட அதிக ஆர்வம் காட்டுவார்கள். பாகிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்க்க முடியும். பாகிஸ்தான் வீரர்களாக சிறப்பாக விளையாடினார்கள். அதிரடி அப்ரிதி ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் உலக கோப்பை தொடருக்கு முன்பாக பயிற்சி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டி ஆகியவற்றில் தோல்வியடைந்தோம். இதனால் நாங்கள் சூப்பர்-8 தொடருக்கு முன்னேற மாட்டோம் என விமர்சித்தார்கள். தொடரை தோல்வியுடன் துவக்கினாலும் இறுதியில் கோப்பையுடன் நாடு திரும்புகிறோம் என்றார் யூனிஸ்.

XP Themes இவைற்றை பயன்படுத்துவதில் Computer வேகம் குறையாது .

நமது windows XP-யை பலப்படுத்த நான் பயன்படுத்தி பார்த்த சில Themes உங்களுக்காக . நீங்கள் பயன்படுத்தி பார்த்துவிட்டு பின்னுட்டம் எழுதுக. 1. Royale XP(SP3) இவை windows xp (SP3) வகை (Logon Sound) வித்தியாசமானவை . மேலும் இவை முற்றிலும் Control Panel மாறுப்பட்டு காணப்படும் . இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும். 2.Crystal XP இவற்றின் சிறப்பு கோப்புகளை விரைவாக Copy செய்ய உதவும்.மேலும் Booting screen மாறுப்பட்டு கானப்படும் இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும். 3.Windows 7 விண்டோஸ்7 இல்லையா என்று கவலை பட்டவர்களுக்கு இவை உதவும் விண்டோஸ்7 போலவே முற்ற்றிலும் மாறுப்பட்டு காணப்படும். இதனை தரவிறக்க இங்கு சொடுக்கவும். இவைற்றை பயன்படுத்துவதில் கனியின் வேகம் குறையாது . Note: i don't Tamil writing but try any mistake in my Tamil writing sorry friend.

தேங்க்ஸ்:_Tamil-English Computer சாம்பார்!

Twenty-20(40!) உலககோப்பை கிரிக்கெட் சிறு அலசல்

ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் கடைசியாக இலங்கை என்று வெற்றி பெரும் அணிகளை எதிர்பார்த்து இருந்த அனைவரின் நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டு அசத்தலாக கோப்பையை "பாக்" அணி கைப்பற்றி வெற்றி வாகை சூடி விட்டது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங்கை தேர்வு செய்தார், இலங்கைக்கு பாக் ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. இந்த தொடர் முழுவதும் ஜொலித்த தில்ஷன் ரன் எதுவும் எடுக்காமல் முக்கிய போட்டியான இதில் "டக்" அவுட்டானார் இளம் வீரர் முகமது அமர் பந்தில் அதுவும் முதல் ஓவரிலேயே. அதன் பிறகு அப்துல் ரசாக் மூன்று விக்கட்டுகள் விரைவில் எடுத்து இலங்கை அணியின் துவக்க வீரர்களை நிலைகுலைய செய்தார், இதன் பிறகு இலங்கை பாடு திண்டாட்டமாகி விட்டது, அணியின் ரட்சகனாக சங்ககரா திறமையாக சமாளித்து விளையாடினார் ஆனால் அவருக்கு அவர்கள் தரப்பில் மாத்யுஸ் தவிர யாரும் சரியான ஒத்துழுழைப்பு தராததால் அதிகளவில் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. கடைசியாக 138 ஓட்டங்கள் எடுத்து தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
பாக் அணியில் துவக்க வீரர்களான கம்ரன் அக்மல், ஹசன் இருவரும் நல்ல துவக்கம் தந்ததால் எந்தவித நெருக்கடியும் பாக்கிற்கு ஏற்படவில்லை. கடைசியில் அப்ரிடி சோயப் மாலிக் இருவரும் எளிதாக வெற்றியை உறுதி செய்தனர். எந்த வித பரபரப்பும் இல்லாமல் சாதாராணமாக முடிந்தது.
போன முறை இறுதி போட்டி வரை வந்த பாக் இந்த முறை உலக கோப்பையை வென்று சாதித்து விட்டது.
எனக்கு இந்த இரண்டு அணிகளுமே பிடிக்காது, இலங்கை அணி தற்போதைய சர்ச்சையால், பாக் எப்போதும் சர்ச்சையால், இவர்கள் இருவரும் இறுதி போட்டிக்கு வந்ததுமே எனக்கு செம கடுப்பாகி விட்டது. தற்போதைய கடுப்பு இலங்கை அணி மீது அதிகம் இருந்ததால் பாக் வெற்றி பெற்றதால் கொஞ்சம் அல்ப சந்தோசம் அடைந்து விட்டேன்.
நமக்கு பிடிக்கிறது பிடிக்கலை அது வேற விஷயம் ஆனால் திறமைசாலிகள் வெற்றி பெற்றார்கள் எனவே என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாக் அணிக்கு.
நம் இந்திய அணி முதலில் இருந்தே குழு மனப்பான்மையுடன் விளையாடவில்லை, சேவக் நீக்கம், சரியான துவக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய அணி குழப்பத்திலேயே இருந்தது. விளையாடியவர்களும் போட்டி மனப்பான்மையுடன் விளையாடியதை போல தெரியவில்லை, எதோ உள்ளூர் போட்டிகளில் விளையாடும் எண்ணத்துடன் ஏனோ தானோ வென்று விளையாடி சொதப்பி பல கோடி இந்திய ரசிகர்களின் இதயங்களை தங்கள் பொறுப்பற்ற தனத்தால் நொறுக்கி விட்டார்கள். வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் சகஜம் என்றாலும் கவுரவமாக தோற்று இருந்தால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை கேவலமாக தோற்றதினால் தான் கடுப்பாகி விட்டார்கள்..அட! தென் ஆப்ரிக்காவுடன் ஆறுதல் வெற்றி கூட பெறலைங்க.. என்னத்தை சொல்றது!
டோனிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரது அதிரடி ஆட்டம் எல்லாம் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது, மொக்கை போட்டுக்கொண்டு உள்ளார். இந்த போட்டிகளில் டோனி சோபிக்கவே இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றம், ஹிட்டரான இவரை போன்றவர்களை நம்பியே Twenty-20 போட்டிகள் உள்ளன.
இந்திய அணியின் பயிற்சியாளர், இந்திய அணி IPL போட்டிகளில் கலந்து கொண்டதாலே சோர்வடைந்து விட்டார்கள், இதனாலேயே நம் அணியின் வெற்றி பறி போய்விட்டது என்று குற்றம் சாட்டி உள்ளார், ஆனால் இதை டோனி மறுத்து பேசியுள்ளார். ஒரு அணி தோல்வி அடையும் போது இதை போல சர்ச்சைகள் வருவது சகஜமே. ஆனால் எனக்கும் IPL போன்ற போட்டிகளில் வீரர்கள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதால் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. கிரிக்கெட் என்பதை பணம் சம்பாதிக்கும் தொழிலாக இந்தியாவில் அறிவித்து!! விட்டதால் இனி என்னத்தை பேசி என்ன பயன்? ரசிகர்கள் வழக்கம் போல இதற்க்கு புலம்பி விட்டு அடுத்த போட்டியில் இந்திய அணி ஜெயிக்கும் போது சூப்பர்! சூப்பர்!! னு சொல்லிட்டு வழக்கம் போல பிழைப்பை! பார்க்க வேண்டியது தான்.
நம்ம நிலைமை ஆஸ்திரேலியாவை ஒப்பிடும் போதும் பரவாயில்லை :-) அவர்கள் கேவலமாக தோற்று விட்டார்கள், அதற்க்கு சைமண்ட்ஸ் இல்லாததே காரணம் என்று ஒரு சப்பை காரணம் கூறி இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் சிறப்பாக விளையாடின இருந்தாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி விட்டு இறுதி போட்டியில் சொதப்பி விட்டார்கள். போட்டி நடத்தும் இங்கிலாந்து, மானம் காக்க கடுமையாக போராடியும் ஒன்றும் வேலைக்காகவில்லை.
ஆடவர் போட்டி பற்றி தானே பேசிட்டு இருக்கோம் பெண்களும் Twenty-20 போட்டியில் கலக்கி உள்ளனர், ஆமாங்க! நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே நடந்த முதல் Twenty-20 உலககோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்தை ஆண்கள் அணி கை விட்டாலும் பெண்கள் அணி கோப்பை கைப்பற்றி நிம்மதி அடைய வைத்துள்ளது.
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு இந்த வருடம் அமர்க்களமான வருடம். இந்த வருடம் தான் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் (இதிலும் நியுசிலாந்துடன் இறுதி போட்டி) வெற்றி பெற்றார்கள், தற்போது Twenty-20 முதல் உலக கோப்பை போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறார்கள், அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com