Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

19 ஜூன் 2009

நடிகை ஸ்ரீதேவி திருமணம் முடிந்தது - ரஜினி, கமல் நேரில் வாழ்த்து

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளாவின் இளைய மகள் ஸ்ரீதேவிக்கும், ஆந்திரா [^] மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த நரசிம்மராவ்-உமா தம்பதியரின் மகன் ராகுலுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் [^] நடந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்த இந்த திருமணத்துக்கு காலை 7.30 மணிக்கே மனைவி லதாவுடன் வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார். அதேபோல நடிகர் கமல்ஹாசனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் [^], நடிகர்கள் பிரபு, பாக்யராஜ், சத்யராஜ், ராதாரவி, தியாகு, சின்னி ஜெயந்த், வையாபுரி, விஜயக்குமார், நடிகைகள் மீனா, பூர்ணிமா, வாணிஸ்ரீ, சங்கவி, மகேஷ்வரி, தயாரிப்பாளர் அமுதா துரைராஜ், தொழிலதிபர் பழனி ஜி பெரியசாமி உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்திருந்து வாழ்த்தினார். நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் [^], ராதாரவி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி

இசையால் வசமாகா இதயமெது என்பார்கள் இல்லையா..? குறிப்பிட்ட காலப்பகுதியில், இவ்வுலகின் இசையுள்ளங்கள் பலவற்றைத் தன் இனிய இசைக்கோலங்களால் கட்டிப்போட்ட, உலகம் போற்றும் ஒரு மாபெரும் இசைக்கலைஞன் பிறந்தது இன்றைய நாளில். இதனைக் கெளரவிக்கும் வகையிலேயே கூகிள் இணையத்தளம் தன்னுடைய குறியீட்டு இலட்சினையை (logo) இன்று வெளியிட்டிருக்கிறது.

பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்து, இருபதாம்நூற்றாண்டில் மறைந்த இசைக்கலைஞனதான் இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி (Igor Fyodorovich Stravinsky). 1882ம் ஆண்டு, ஜுன் 17ந் திகதி, ரஷ்யாவில் பிறந்த இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி சிறந்தவொரு இசையமைப்பாளர் .

சென்ற நூற்றாண்டான 20 ஆம் நூற்றாண்டில், உலகில் மிகச் செல்வாக்குச் செலுத்திய இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க முதல் நூறு மனிதர்களுள் ஒருவாராக 'Time' சஞ்சிகை தெரிவு செய்து கெளரவித்திருக்கிறது. இசையமைப்பாளர் , பியானோக் கலைஞர், நிகழ்ச்சி இயக்குனர், என முப்பரிமானப் புகழ்மிமக்கவர் எனப்புகழப்படுமிவர், 1910ல் ஒரு பலே நடன நிகழ்ச்சிக்கு இசையமைத்ததன் மூலம் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் தொடச்சியாக "வசந்தத்தின் சடங்கு" ("The Rite of Spring") என்னும் நடன நிகழ்ச்சிக்காக அவர் வடிவமைத்த இசையமைப்பு, இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுவே அவரை இசைப் புரட்சியாளர் என அடையாளப்படுத்தியது.பின்னால் வந்த பல இசையமைப்பாளர்களின் ஆதர்சமாக விளங்கிய இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந்திகதி, தனது எண்பத்தியொன்பதாவது வயதில் மறைந்தார்.

அவரது இசைக்கோப்பு ஒன்றை பின்னாளில் மற்றுமொரு புகழ்மிகு கலைஞர் இசையமைத்த பதிவினைக் கீழே கேட்கலாம்.

அப்ரிதி அதிரடி ஆட்டத்தால் சுருண்டது தெ. ஆ. - இறுதிப் போட்டியில் பாக்.

நாட்டிங்காம்: டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் படு ஸ்டைலாக கைப்பற்றியது. நடப்புச் சாம்பியன் இந்தியா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் நேற்று முதல் அரை இறுதி ஆட்டம் நாட்டிங்காமில் நடந்தது. இதில் வலுவான தென் ஆப்பிரிக்காவும், சற்று பலவீனமானது என்று கருதப்பட்ட பாகிஸ்தானும் மோதின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் படு கலக்கலாக ஆடி தென் ஆப்பிரிக்காவை துரத்தி விட்டது. ஷாஹித் அப்ரிதி பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலித்ததால் பாகிஸ்தான் எளிதாக வெல்ல முடிந்தது. முதலில், பேட்டிங்கில் 34 பந்துகளில் 51 ரன்களைக் குவித்த அபிர்தி, பின்னர் பந்து வீச்சின்போது, 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்து தான் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்தார். முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. கம்ரன் அக்மல் 23 ரன்களும், சோயப் மாலிக் 34, யூனிஸ்கான் 24 எடுத்தனர். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்காவால், பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாததால், 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கேப்டன் ஸ்மித் வெறும் 10 ரன்களுடன் அவுட் ஆனார். ஆனால் ஆல் ரவுண்டர் கல்லிஸ் சிறப்பாக ஆடி 64 ரன்களைக் குவித்தார். இவர் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியில் பெரிய ஸ்கோரை எட்டியவர். டுமினி தன் பங்குக்கு 44 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களி்ல நடையைக் கட்டினர். இதனால் 142 ரன்களில் ஆட்டத்தை இழந்தது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான். ஆட்ட நாயகனாக அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2வது முறையாக முன்னேறியுள்ளது பாக். கடந்த முறை அது இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் 2வது முறையாக முன்னேறியுள்ள பாக். நிச்சயம் கோப்பையைக் கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. சுருக்கமான ஸ்கோர்.. பாக். கம்ரன் அக்மல் - 23, அப்ரிதி -51, சோயப் மாலிக் - 34, யூனிஸ்கான் -24 (149-4). தென் ஆப்பிரிக்கா கல்லிஸ் - 64, டுமினி -44, ஸ்மித் - 10. இன்று இலங்கை - வெஸ்ட் இன்டீஸ் மோதல் [^] இன்று நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில், இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளன.

உங்கள் கணினிக்கான சிறந்த "ஆண்டி வைரஸ்" எது?

ம் கணினியில் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்களை ஆய்வு செய்து தரவரிசை கொடுத்துவரும் "www.av-comparatives" நிறுவனம் சமீபத்தில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதில் ஆண்டி வைரஸ் மென்பொருட்களை தயாரிக்கும் 16 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் முடிவின்படிசிறந்த வேலை செய்யும் ஆண்டி வைரஸாக GDATA முதலிடத்திலும் AVIRA இரண்டாவது இடத்திலும் McAfee மூன்றாவது இடத்திலும் உள்ளன. இவைகள் எல்லாமே காசுகொடுத்து வாங்கி பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்களின் தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது. தர விபரங்களை "பி.டி.எப்" பார்மட்டில் தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ள கீழே உள்ள "லிங்கை" கிளிக் செய்யுங்கள். தேங்க்ஸ்-தமிழ்மணம்

ஐஸ்லாந்தில் நயனதாரா!

ஆதவன் படப்பிடிப்புக்காக சூர்யாவும், நயனதாராவும் ஐஸ்லாந்து போய் வந்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஆதவன். ரெட் ஜயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, நயனதாரா இணைந்து நடிக்கின்றனர். கஜினிக்குப் பின்னர் நயனதாராவுடன், சூர்யா இணைவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பாடலுக்காக ஐஸ்லாந்து போய் திரும்பியுள்ளது ஆதவன் படக்குழு. ஐஸ்லாந்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது. காரணம், இதுவரை எந்தத் தமிழ்ப் படக் குழுவும் ஐஸ்லாந்துக்குப் போனதே இல்லையாம். தாமரை எழுதிய ஏனோ ஏனோ பனித்துளி என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலுக்கு ஆடிப் பாடத்தான் சூர்யா, நயனதாரா ஐஸ்லாந்து போனார்களாம். இன்னொரு பாடலை டார்ஜிலிங்கில் வைத்து ஷூட் செய்தனராம்.

16 ஜூன் 2009

டோணிக்கு செய்த தவறுகள் என்ன?-ரசிகர்கள் குமுறல்

ராஞ்சி: டுவென்டி 20 உலகக் கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் மோசமாக ஆடி வெளியேறியதால் கேப்டன் டோணி மீது ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். சொந்த ஊரான ராஞ்சியில் டோணியின் கொடும்பாவியை எரித்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர் ரசிகர்கள். வெறும் 3 ரன்களில் சூப்பர் எட்டு ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்தியா. நடப்புச் சாம்பியனான இந்தியா இந்த முறை, அரை இறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் முடங்கிப் போனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஏமாற்றத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கேப்டன் டோணியின் சில தவறான முடிவுகளால்தான் தோல்வி அடைய நேரிட்டதாக ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருதுகின்றனர். டோணி மூன்று தவறுகளை செய்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அது - 1. பவுன்சர்களை சந்திக்கவே பயந்த ரவீந்திர ஜடேஜாவை 4வது வீரராக இறக்கியது மாபெரும் தவறு. அவருக்குப் பதில் யூசுப் பதானையோ அல்லது யுவராஜ் சிங்கையோ இறக்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு விதமாக இருந்திருக்கும். 2. சிறப்பாக பந்து வீசி வந்த ஆர்.பி.சிங்கையும், அனுபவம் வாய்ந்த ஜாகிர்கானையும் தொடர்ந்து பந்து வீசச் செய்யாமல், இஷாந்த் சர்மாவை கூப்பிட்டது 2வது தவறு. சிங்கும், கானும் பந்து வீசியிருந்தால் இங்கிலாந்தின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம். 3. முக்கியமான கட்டத்தில், கையில் ஐந்து விக்கெட்கள் இருந்த நிலையிலும் அடித்து ஆடாமல் சிங்கிள் சிங்கிள் ரன்னாக டோணி எடுத்ததை ரசிகர்கள் படு கோபத்துடன் விமர்சிக்கின்றனர். இதை கருத்தைத்தான் பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் கூறியுள்ளனர். டோணியின் தவறுகள்தான் ஆட்டத்தின் போக்கை குளறுபடியாக காரணம் என்கிறார்கள் அவர்கள். இந்த நிலையில், டோணிக்கு எதிராக ஆங்காங்கே ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவரது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ரசிகர்கள் டோணிக்கு எதிராக கோஷமிட்டு அவரது கொடும்பாவியை எரித்தனர். இதேபோல உ.பியிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களும் சிச்சுவேசன் சாங்ஸ்சும்!

பரீட்சைக்குத் தயாராகும் மாணவன் ஒருவன் ஒவ்வொரு காலத்திலும் பாடும் சிச்சுவேசன் சாங்ஸ் இவை. சில இடங்களில் சில பாடல் வரிகளை மாற்றியுள்ளேன். எல்லாம் ஒரு அனுபவம்தான்.
  • செமிஸ்டர் ஆரம்பத்தில்..
காலேஜூக்குப் போவோம், கட்டடிக்க மாட்டோம்…
  • பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்..
கொப்பியிருக்குது, புக்குமிருக்குது, திறந்துபாக்க நேரம் வந்தது இப்போது….
  • பரீட்சைக்கு ஒரு வாரம் முன்..
ஊருசனம் தூங்கிருச்சு, ஊத காத்தும் அடிச்சிரிச்சு, பாவிப்பய தூங்கலியே, படிப்பும் இன்னும் முடியலியே.
  • பரீட்சைக்கு சில மணி நேரங்களே இருக்கையில்..
நாடகம்விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா ...
  • பரீட்சையின் போது…
ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.
  • பரீட்சைப் புள்ளிகள் அறிவிக்கப்பட..
பத்துக்குள்ளே நம்பர் ஒண்டு சொல்லு..
  • இறுதியில்..
வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்

Task Manager -இன் பயன்பாடுகள்.

வழக்கமாக விண்டோஸ் எக்ஸ்பியில் Task Manager ஐ நாம் 'Not Responding' என பிழைச் செய்தி வரும்பொழுது, 'End Task' செய்வதற்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறோம். அதன் இன்னும் சில அவசியமான பயன்பாடுகளை இங்கு பார்க்கலாம். டாஸ்க் மேனேஜருக்கு செல்ல கீழ்கண்ட வழிகள் உள்ளன. 1. Ctrl + Alt + Del. 2. Ctrl + Shift + Esc 3. Task Bar-ல் காலியாக உள்ள இடத்தில் மௌசின் வலது பொத்தானை அழுத்துவதன் மூலம். டாஸ்க் மேனேஜரில் 'Applications, Processes, Perfomance, Networking' மற்றும் 'Users' டேபுகள் உள்ளன. Applications:- நமது கணினியில் தற்பொழுது இயங்க்கிக்கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும். சில சமயங்களில் ஒருசில அப்ளிகேஷன்கள் 'Not Responding' என வரும்பொழுது, இங்குள்ள பட்டியலில் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனில் வலது கிளிக் செய்து End Task செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை ஷிப்ட் கீயை அழுத்தி தேர்ந்தெடுத்து பின் வலது கிளிக் செய்து End Task செய்யலாம். இந்தப் பட்டியலில் ஏதாவது ஒரு அப்ளிகேஷனை வலது கிளிக் செய்து அதில் Go to Process கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனின் EXE file -இன் மெமரி உபயோகத்தை அறிந்து கொள்ளலாம். அப்ளிகேஷன் பெயரும் exe பைலின் பெயரும் மாறுபடலாம். ஒரு ஃபோல்டரிலிருந்து மற்றொரு ஃபோல்டருக்கு கோப்புகளை டிராக்(Drag) செய்யும் பொழுது, அந்த இரு விண்டோக்களும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஓவர்லேப் ஆகாமல் சரியாக Tile மோடில் arrange செய்யப்பட்டிரா விட்டால் சிரமமாக இருக்கும். அதற்கு ஒரு எளிய வழி விண்டோஸில் இங்கு மட்டுமே உண்டு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விண்டோக்களை ஒன்றின்மீது மற்றொன்று வராமல் திரையில் ஒரே அளவில் வரிசைப்படுத்த, அந்த அப்ளிகேஷன்களை, Applications tab- ல் தேர்ந்தெடுத்து வலது கிளிக் செய்து 'Tile Horizontally / Vertically' என்பதை தேர்வு செய்யலாம். Processes:- இந்த டேபில், நம் கணினியின் பிராசஸரையும், மெமரியையும் எந்த பிராசஸ் எவ்வளவு உபயோகிக்கிறது என்பது இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும். CPU / Mem usage - Tiltle லில் கிளிக் செய்வதன் மூலம் அஸென்டிங்/டெஸென்டிங் மாறிக்கொள்ளலாம். தேவையில்லாத அல்லது அதிக மெமரியை உபயோகிக்கும் எந்த ப்ராசஸையும் வலது கிளிக் செய்து End Process செய்யலாம். தற்பொழுது வரும் சில வைரஸ் மற்றும் வெர்ம்கள் ஒரு ப்ராசஸ் ஆகவே அமர்ந்து கணினியின் வேகத்தை குறைத்துவிடுகிறது. இதுபோன்ற ப்ராசஸ்களையும் இனம் கண்டு End Process செய்து விடலாம். (உதாரணம்: Svcchost, msblast.exe, Wowexec.) வழக்கமாக நாம் மினிமைஸ் செய்யும் அப்ளிகேஷன்கள் சில சமயங்களில் RAM இல் சிறிதும் மற்றவை Virtual memory க்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. virtual memory யில் எவ்வளவு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் மற்றும் CPU, Mem usage தவிர பிற உபயோகங்களை டேபில் சேர்க்க View menu விற்கு சென்று Select Column கிளிக் செய்து சேர்த்துக் கொள்ளலாம். Performance:- இந்த டேபில் CPU/ Memory usage ஆகியவற்றை வரைபடம் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். டிப்ஸ்:- தற்சமயம் உபயோகிக்காத அப்ளிகேஷன்களை மினிமைஸ் செய்வதன் மூலம் மெமெரி உபயோகத்தை கணிசமான அளவில் குறைக்க முடியும். Options menu -வில் Hide when minimized கிளிக் செய்து மினிமைஸ் செய்துவிட்டால், டாஸ்க் மேனேஜர் ஒரு சிறிய பச்சை நிற ஐகானாக உங்கள் சிஸ்டம் ட்ரேயில் தெரியும். அதில் கர்சரை கொண்டுபோனால் சிபியு உபயோக சதவீதத்தை அறிந்து கொள்ளலாம்.

ஸ்டைல்! ஸ்டைலஸ்டைல்...!

இந்த பதிவு யூத் களுக்கு மட்டுமே இருந்தாலும் யூத் மாதிரி இருக்கிறவங்க (நடிக்கிறவங்க) முயற்சித்து பார்க்கலாம் (முடி இருந்தால்). ;-)
எனக்கு பொதுவாக லேட்டஸ்ட் ட்ரெண்ட்களில் ரொம்ப ஆர்வம், உடை தேர்விலும் எனக்கு நல்ல ரசனை. என் நண்பர்களுக்கு நான் தான் உடை தேர்வாளர், உடை எடுக்க வேண்டும் என்றால் அனைவரும் என்னை அழைத்து செல்வார்கள் அவர்கள் மனைவி மற்றும் அம்மாவிற்கு என்றால் கூட.
பெண்களுக்கும் உடை தேர்வு செய்வதில் சிறப்பாகவே தேர்வு செய்வேன், என் மனைவி அக்கா மற்றும் அம்மாவிற்கு அவர்களின் வயதிற்கு தகுந்தமாதிரி தேர்வு செய்வேன், அதனால் அவர்கள் திருமணங்களில் இதை அணிந்து சென்றால் யாரும் கேட்கும் போது இதை தம்பி தான் எடுத்துக்கொடுத்தான் என்றால் அவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். இதை அவர்கள் என்னிடம் கூறுவார்கள், நிறைய பேர் நல்லா இருக்குன்னு சொன்னாங்க என்று. ஆஹா! நம் தேர்வுக்கு இத்தனை ரசிகர்களா என்று கொஞ்சம் பெருமையாக தான் இருக்கும்.
நான் இப்போது கூறப்போவது உடை பற்றி அல்ல ஹேர் ஸ்டைல் பற்றி. ஜெய்ஹிந்த் படத்துல செந்தில் ஒரு ஸ்டைல் ல வருவாரு, கவுண்டர் அதை பார்த்து விட்டு டேய்! என்னடா தலை மேல கீரி புள்ளை படுத்துட்டு இருக்கு என்று நக்கல் செய்வார். அப்போது அது கிண்டலாக தெரிந்து இருந்தாலும் தற்போது மேலை நாடுகளில் அது தான் தற்போதைய லேட்டஸ்ட் ஃபாஷன். எனக்கும் சிங்கப்பூர் ல் வந்த புதிதில் என்னடா! இப்படி முடிய வெட்டிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க என்று சிரிப்பாக இருந்து. தற்போது அதை பார்த்து பழக பழக அதுவும் நன்றாகவே உள்ளது. இதை நம்மில் பலரால் ஏற்று கொள்ள முடியாது, காரணம் நாம் இன்னும் அந்த அளவிற்கு மனதளவில் தயாராகவில்லை.
இங்கே நாம் சில ஹேர் ஸ்டைல் பற்றி பார்ப்போம், இது தற்போது படித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு கிண்டலாகவும் நக்கலாகவும் தெரிந்தாலும் விரைவில் நம் ஊரிலும் இதை போல ஹேர் ஸ்டைல் வரப்போகிறது, ஏற்கனவே ஒரு சிலர் "இப்படி" இருக்கிறார்கள். இத்தகைய ஹேர் ஸ்டைல் க்கு ஒரு பிரச்சனை கொஞ்சம் கலராகவும் முடி ஸில்க்கியாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் ஒரு செக்ஸி லுக் கிடைக்கும் (நாம் என்ன பெண்களா! செக்ஸி லுக் வர என்று கேட்டால் உங்களுக்கு ரொம்ப வயதாகி விட்டதாக அர்த்தம்).
ஸ்டைல் என்றவுடன் நினைவிற்கு வருவது சூப்பர் ஸ்டார் தான். ரஜினியின் ஹேர் ஸ்டைல் (தற்போது காலி ஆகி விட்டது) பலரால் விரும்பப்பட்டது, ஆனால் இந்தியாவில் நடிகர்களில் ஹேர் ஸ்டைல் என்றால் நம் அனைவரின் நினைவிற்கு வருவது அமீர் கான் தான். பல வித விதமான ஹேர் ஸ்டைல்களை தனது படங்களில் அறிமுகப்படுத்தி இருப்பார். கவனிக்க தக்க முதல் படம் என்றால் "தில் சாத்தா ஹை" பற்றி குறிப்பிடலாம். கஜினி தமிழில் ஏற்கனவே சூர்யா மொட்டை முறையில் ஹேர் கட் செய்து இருந்தாலும், அதை அமீர் கான் செய்த போது கிடைத்த வரவேற்பு அனைவரும் அறிந்தது.
மேலை நாடுகளில் ஹேர் ஸ்டைல் பலரால் விளம்பரப்படுத்தப்பட்டாலும் கால்பந்து விளையாட்டு மன்னன் டேவிட் பெக்காம் குறிப்பிடத்தக்கவர், இவருடைய ஹேர் ஸ்டைல் உலக அளவில் பிரபலம். கால்பந்து விளையாட்டில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை போல இவரது ஹேர் ஸ்டைல் க்கும் உலகளவில் பல ரசிகர்கள், இவரது ஸ்டைல் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.
டேவிட் பெக்காமின் இந்த ஹேர் ஸ்டைல் ற்கு ஏகப்பட்ட ரசிகர்கள், குறிப்பாக பெண்கள். பல பெண்கள் இவர் மேல் பைத்தியமாக இருக்கிறார்கள், அதற்க்கு இதை போன்ற செக்ஸி ஹேர் ஸ்டைல் முக்கிய காரணம். ஆளும் பெர்சனாலிட்டியாக இருக்கிறார் என்பது வேறு விஷயம்.
இந்த ஸ்டைல் தான் எனக்கு ரொம்ப பிடித்த ஸ்டைல், ஸ்பைக் ஸ்டைல் னு சொல்லுவாங்க இதை. இதை நம்ம ஊர்ல மேல் தட்டு மக்கள் ஒரு சிலர் வைத்து இருக்கிறார்கள், ரொம்ப casual ஆக இருக்கும்.
எனக்கு விதவிதமா ஹேர் ஸ்டைல் எல்லாம் வைத்துக்கணும் என்று ரொம்ப ஆசைங்க ஆனால் அந்த அளவிற்கு அடர்த்தியா முடி இல்லைன்னு வருத்தபடுகிறவங்க இந்த மாதிரி ஷார்ட்டா வைத்துக்கொள்ளலாம். இந்த ஹேர் ஸ்டைல் கருப்பா ஒல்லியா இருக்கிறவங்க வைக்க முடியாது, நன்றாக இருக்காது. அதையும் மீறி வைத்தால் காதல் படத்தில் ஹீரோ வாய்ப்பு கேட்டு வருவாரே ஒருத்தர் அவரை போல இருக்கும் :-) தேவையா! மனதை தேத்திக்குங்க ;-)
இது தாங்க நம்ம கவுண்டர் கிண்டல் செய்த ஹேர் ஸ்டைல். இதை போல சிங்கப்பூர் ல பல பேர் வைத்து இருக்காங்க, முதலில் என்னவோ போன்று தெரிந்தாலும் இப்போது இது பிடித்து விட்டது. நம்ம ஊர்ல இதை போல வர ரொம்ப காலம் ஆகும், இதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இன்னும் மக்களிடையே மன பக்குவம் இல்லை.
இந்த ஹேர் ஸ்டைல் வைக்க உங்களுக்கு உங்க முடி ஸில்க்கியாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம், அப்புறம் கொஞ்சம் கலராக இருக்க வேண்டும் அப்போது தான் ஒரு ரிச் லுக் இருக்கும். இதை போல ஹேர் ஸ்டைல் பெண்களை (girls) கவரும்.
இந்த வகை ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்ள நம்ம ஊரில் எந்த தடையும் இல்லை, யாரும் எதுவும் கூற மாட்டார்கள். எனவே தாராளமாக வைத்துக்கொள்ளலாம். வெய்யில் காலங்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல். உடற்பயிற்சி உடம்பாக இருந்தால் ஸ்மார்ட்டாக இருக்கும்.
குழந்தைகளுக்கும் தற்போது வித விதமா அவர்களது பெற்றோர்கள் ஹேர் ஸ்டைல் பண்ணுறாங்க, ஒருவேளை தங்களால் முடியாததை தங்கள் குழந்தைகள் மூலம் செய்து கொள்கிறார்களோ என்னவோ. ஹி ஹி என் பையன் நிலைமைய நினைத்தால் தான் பாவமா இருக்கு..:-)) தற்போது சலூன் களில் குழந்தைகளுக்கு என்றே பலவிதமாக ஹேர் ஸ்டைல் உண்டு. குழந்தைகளுக்கு எந்த மாதிரி முடி வெட்டினாலும் அழகு தான், அதுவும் ஸில்க்கியான முடியாக இருந்து விட்டால் சொல்லவே தேவையில்லை.
இந்த ஹேர் ஸ்டைல் குழந்தைகளுக்கு ரொம்ப அழகா இருக்கும், நம் ஊர் வெய்யில் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு தலை விரைவில் வேர்த்து சளி பிடித்துக்கொள்ளும். எனவே அதிகளவில் முடி வைக்க முடியாது.
என் பையனுக்கு முடி இன்னும் வெட்ட ஆரம்பிக்கவில்லை, வெட்டினால் இப்படி தான் கத்துவான் ஹா ஹா ஹா.
டிஸ்கி
நமக்கு பிடித்த எந்த ஹேர் ஸ்டைல் ம் வைக்கலாம், அதெல்லாம் வைக்கும் முன்பு நம் உடலுக்கும் நம் கலருக்கும் உயரத்திற்கும் ஏற்றதா எனபதை ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது. ஆசை படுவதில் தவறில்லை ஆனால் அதற்க்கு பொருத்தமானவரா நாம் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்.

அரசியல் பிரவேசம் - முடிவை ஒத்தி வைக்கிறார் விஜய்?

தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை இன்னும் ஆறுமாதம் கழித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் நடிகர் விஜய். விஜய்யின் பிறந்தநாளன்று ரசிகர்கள் [^] அனைவரையும் கூட்டி தனி மாநாடு [^] நடத்தவும், அன்றே புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் துவங்கவும் திட்டமிட்டிருந்தனர் விஜய்யும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனும். உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம். இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர். ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் [^] வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம், இப்போதைய அரசியல் சூழல் நடிகர்களுக்குச் சாதகமாக இல்லாமலிருப்பதும், விஜய்யால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாத நிலையும்தான் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் ரசிகர்களில் பலருக்கும், புதுக் கட்சிக்கு தலைவராக எஸ் ஏ சந்திரசேகரனை ஏற்றுக் கொள்வதில் விருப்பமில்லையாம். மாவட்ட அளவில் பொறுப்புகளைப் பெறுவதில் சிலர் கடுமையாக மோதிக் கொண்டாலும், சென்னை போன்ற பகுதிகளில் அரசியல் [^] கட்சிக்கு கைக்காசை செலவழிக்க யாருமே தயாராக இல்லையாம். இதையெல்லாம் சரிப்படுத்தி, 6 மாதங்களுக்குப் பின்னர், விஜய் வெற்றிப் படம் கொடுத்த பிறகு கட்சி பற்றி தீவுத் திடலில் கூட்டம் கூட்டி அறிவிக்கப் போவதாக நிர்வாகிகளிடம் உறுதி கூறியுள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகரன்.

14 ஜூன் 2009

PC 2 Phone for Free - Evaphone

PC 2 Phone free
Do you want to make call to a telephone using your PC for free? Evaphone provides free service to make PC 2 Phone calls absolutely free. It is called Internet telephony. It uses VoIP technology. This free service comes with advertisements. You may also go for paid service from Evaphone. It wont show any advertisement. We do not need to download any special software from the internet to use this service. We can directly make calls using our favourite browser. Mic, Headset is the essential equipments needed to make calls. That site has all the details about free calls. Check it out there : http://www.evaphone.com/

தமன்னா...முத்தம்னா 'தகராறுன்னா!'

எங்க படத்தில நீங்கதான் மேடம் கதாநாயகி... அதுவும் ஸோலோவா...' என்றதும் காதைத் தொடும் தாராள சிரிப்பு காட்டும் தமன்னா... 'அதுல ஒரு முத்தக் காட்சி இருக்குது மேடம்' என்றதும் அந்த சிரிப்பை ஸ்லோவாக மறைத்துவிட்டு முகத்தை உர்ரென்று வைத்துக் கொள்கிறாராம். அரைக்கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்கும் தமன்னா, ஆடைத் தள்ளுபடியில் 50 சதத்தை தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிப்பதாக கோலிவுட் படைப்பாளிகளுக்கு ஒரே குறை. அதேபோல என்னதான் அதிக சம்பளம் கொடுப்பேன் என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆசை காட்டினாலும், திரையில் லிப் லாக்குக்கும் நோ சொல்லிவிடுகிறாராம். அது என்ன அவ்வளவு கறார்...? 'நான் முதலில் நடிக்க வந்தது தமிழில்தான் என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவே திகழந்தேன். ஆனால் அங்கும் கூட என் கொள்கையில் உறுதியாகவே இருந்தேன். முத்தக் காட்சியில் நடிப்பது தேவையற்றது. அன்பைக் காட்ட, அல்லது காதலின் தீவிரத்தைக் காட்ட முத்தம் ஒன்றுதானா வழி...?', என்று அசரடிக்கிறார் தமன்னா. ஒருவேளை பாலிவுட் வாய்ப்புகளுக்காக அதை ரிசர்வ்ல வைத்திருப்பாரோ!

ஹிஸ்டரி ரிபீட் ஆகுமா ? - வலைமனை கற்பனை கலாட்டா

என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை தமிலிஷ், தமிழ்மணம் மற்ற சின்னங்களிலும் குத்துங்க சாமி குத்துங்க.....!!!இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!

மிஷ்கின் - நரேன் லடாய்!

மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த இயக்குநர் மிஷ்கினும் நடிகர் நரேனும் பிரிந்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் துவங்கிவிட்டனர். மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி மூலம்தான் நரேன் அறிமுகமானார். அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் நரேனை மிகச் சிறந்த நடிகராகக் காட்டின. இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவார்கள் என்று பேசப்பட்டது. அதற்குள் மிஷ்கினே நாயகனாக மாறிவிட்டார் நந்தலாலா மூலம். ஆனால் அந்தப் படம் எப்போது வரும் என்பது தெரியவில்லை. இதற்கிடையே, மிஷ்கினுக்கும் நரேனுக்கும் தனித்தனியாக வெற்றிப் படங்களைத் தரவேண்டும் என்ற ஈகோ மோதல் வந்துவிட்டதாம். அதன் விளைவு, நரேன் இரு மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட, நந்தலாலாவுக்கு அடுத்து தான் இயக்கும் புதிய படத்தில் நரேனை நாயகனாகப் போடாமல் விட்டுவிட்டார். யுத்தம் செய் என்ற தலைப்பில் இந்தப் படம் தயாராகிறது. நாயகன் சேரன்! சூழ்நிலைக் கேற்ற தலைப்போ!

அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் (Rs.1.35/Min) இந்திய தொலைபேசிக்கு பேசுவது எப்படி?

குறிப்பாக அமிரகத்தில் என்ன பிரச்சினை என்றால் இங்க இருக்குற தொலைதொடர்பு நிறுவனம் (etisalat) பெருபாண்மையான voip தலங்களுக்கு தடை விதித்து இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பெருபாண்மையானோர் வீட்டில் கனினீ மற்றும் இணைய வசதி/விவரம் இல்லாததால் இந்த தகவல் ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதற்க்கு தேவையானவை:
01. Computer with internet, mic and headphone/speakers (இல்லாதவங்க நெட் சென்டர்ல இருந்தும் பேசலாம்)
02. gmail account with gtalk software.
03. பேசபோகும் நபரின் தொலைபேசி/கைபேசி எண்.
04. credit card/debit card. (கடன் அட்டை/ வங்கி அட்டை)
அதெல்லாம் சரி இதுல இந்தியாவுக்கு அழைப்பதால் எவ்வளவு கட்டணம் தெரியுமா - $0.029(அதாவது நிமிடத்திற்க்கு இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் முப்பதி ஏழு காசுகள்)
முதலில் gtalkல் sign-in ஆக வேண்டும்.
அடுத்து gtalkல் உள்ள +Add யை கிளிக் செய்து service@gtalk2voip.com என்ற முகவரியை சேர்கவும்.
service@gtalk2voip.com add செய்த உடன் அதன் chat windowல் mypage என்பதை டைப் செய்து enter-யை அழுத்தவும்.
அதில் வரும் லிங்கை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போன்ற விண்டோ வரும்.
அதில் buy credit யை கிளிக் செய்யவும் அதன் பின் எவ்வளவுக்கு வேண்டுமோ சார்ஜ் செய்து கொள்ளவும்.
உங்கள் வங்கி/கடன் அட்டை மூலம் பணம் செலுத்தவும்.
பிறகு மீண்டும் +add பொத்தானை அழுத்தி நீங்கள் அழைக்கவிருக்கும் தொலைபேசி/கைபேசி எண் @gtalk2voip.com என்பதை add செய்யவும்.
உதரணம்: உங்களுடைய எண் 00919952439355 என்றால் நீங்கள் 00919952439355@gtalk2voip.com என்ற முகவரியை உங்கள் லிஸ்டில் add செய்து கொள்ளவேண்டும்.
பிறகு gtalkல் அழைப்பது போல் அழைக்கலாம் (பி.கு: நீங்கள் அழைக்க விரும்பும் ஒவ்வொரு எண்ணையும் அட்ரஸ் புக்கில் add செய்ய வேண்டும்)
ஏதாவது சந்தேகம் இருந்தால் அழைக்கவும்/பின்னூடம் இடவும்.
நன்றி வணக்கம்.
அப்படியே இந்த பதிவுகளையும் படிச்சுடுங்க.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com