Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

22 ஆகஸ்ட் 2009

கந்தசாமி - பட விமர்சனம்

நடிப்பு: விக்ரம், வடிவேலு, ஸ்ரேயா, பிரபு, ஆசிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணா இசை: தேவி ஸ்ரீபிரசாத் ஒளிப்பதிவு: என் கே ஏகாம்பரம் இயக்கம்: சுசி கணேசன் தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு மக்கள் தொடர்பாளர்: டைமண்ட் பாபு ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிரான சூப்பர் ஹீரோவின் போராட்டம் என்ற 'எவர்கிரீன் சப்ஜெக்ட்'தான் மீண்டும் ஒரு முறை கந்தசாமி எனும் பிரமாண்ட திரை வடிவாய் விரிந்திருக்கிறது. ஒரு வரியில் படிக்கும்போது இந்தக் கதை பழக்கமான ஒன்றாகத் தெரிந்தாலும், அதை எடுத்துள்ள விதம், கதையின் பின்னணி, நிகழ்விடம், டெக்னிகல் சமாச்சாரங்கள் எல்லாமே சேர்ந்து அதை வெற்றிப் படமாக்கியிருக்கின்றன. இருப்பவனிடம் பிடுங்கி இல்லாதவனுக்குத் தரும் ராபின் ஹூட்தான் கதையின் மையப் புள்ளி. திருப்போரூர் கந்தசாமி கோயில் மரத்தில் மக்கள் [^] தங்கள் குறைகளை, கோரிக்கைகளாக பேப்பரில் எழுதிக் கட்டி வைத்துவிட்டால் போதும், உடனே அவர்களுக்கு கேட்ட உதவி கிடைக்கும். காரணம் கோயிலில் உள்ள சாமி அல்ல... ஒரு ஆசாமி. அவர் பெயரும் கந்தசாமிதான் (விக்ரம்). சேவல் வேடமிட்ட கந்தசாமி இவர். கொஞ்ச நாளிலேயே, அந்த கிராமமும் சுற்றுப் பகுதியும் 'ப வைட்டமின்' புண்ணியத்தில் பசுமையாகிவிட, போலீசுக்கு மூக்கில் வேர்க்கிறது. 'ஏதோ கோக்கு மாக்கு நடக்குதுடோய்!' என்ற உள்ளுணர்வில், விசாரணையை ஆரம்பிக்கிறார் உள்ளூர் டிஐஜி பிரபு.
Vikram with Shreya Saran in Kandasamy
அடுத்த சில காட்சிகளில் நேர்மை, புஜ பல பராக்கிரமம் கொண்ட சிபிஐ பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரி கந்தசாமி (விக்ரம்தான்... ஆனால் இரட்டை வேடமல்ல!) அறிமுகமாகிறார். நாட்டில் நிலவும் அனைத்து குற்றங்களின் அடிப்படையும் பணம், லஞ்சம்தான் என்பதை ஆணித்தரமாக நம்பும் அவர் கறுப்புப் பணத்தை வெளிக் கொணரும் முயற்சிகளில் தீவிரமாகிறார்... அதில் பெரும் பணக்கார தொழிலதிபர் ஆசிஷ் வித்யார்த்தியுடன் மோதுகிறார். அவரது 1000 கோடி கறுப்புப் பணம், அதனுடன் மெக்ஸிகோ வரை நீளும் அந்நியத் தொடர்புகளைக் கண்டுபிடிக்கிறார். இதற்கிடையே ஆசிஷ் வித்யார்த்தியின் மகள் சுப்புலட்சுமி (ஸ்ரேயா)... தந்தைக்காக கந்தசாமியை பழிவாங்கப் புறப்படுகிறார். காதலிப்பது போல் நடிக்கத் துவங்கி காதலிக்கிறார்... எனப் போகிறது படம். கொஞ்சம் அந்நியன், கொஞ்சம் சிவாஜி என ஏற்கெனவே நாம் பார்த்துப் பழகிய அதே கதைதான். ஆனால் இந்தக் கதைக்காக விக்ரம் ரொம்பவே மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக அந்தப் பெண் வேட விக்ரமும், அவரிடம் மாட்டிக் கொள்ளும் மயில்சாமி, சார்லியும் வெடிச் சிரிப்புக்கு உத்தரவாதம். சூப்பர் ஹீரோவாக விக்ரம் கச்சிமாகப் பொருந்துகிறார். சேவல் வேடத்தில் அவர் பறக்கும் காட்சியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மெக்ஸிகோ சண்டைக் காட்சியில் லாஜிக் மீறல் நிகழாமல் பார்த்துக் கொண்டிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். படத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் தேங்காய்கடை தேனப்பனாக வரும் வடிவேலு. வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் மனிதர். ஸ்ரேயா கிட்டத்தட்ட அரை அல்லது முக்கால் நிர்வாணத்தில்தான் வருகிறார். ஆனாலும், அதைக் கவர்ச்சி [^] என்றோ, கிளுகிளு தோற்றம் என்றோ கூட சொல்ல முடியவில்லை. ஒரு ஆண்பிள்ளை கணக்காகவே திரிகிறார் படம் முழுக்க. உடம்பைத் தேத்துங்க அம்மணி! போலீஸ் ஆபீஸர் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் பிரபு. சுசி கணேசனும் ஒரு காட்சியில் வந்துபோகிறார். படத்தில் நம்மை மகா எரிச்சலுக்குள்ளாக்குவது தேவையற்ற நீளம். 3.15 மணிநேரப் படம் இது. நியாயமாக இரண்டு இடைவேளை விட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் இத்தனை நீளமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. அதேபோல காட்சியமைப்புகளில் எந்த சஸ்பென்ஸும் இல்லாத தன்மையை ஆரம்பத்திலிருந்தே தொடர்வதைத் தவிர்த்திருக்கலாம் சுசி கணேசன். சீட் நுனிக்கு ரசிகனை வரவழைக்கும் விறுவிறுப்புத் தன்மை இல்லாததும் ஒரு குறைதான். மற்றபடி, ஒளிப்பதிவு, ஒலித் துல்லியம், வித்தியாசமான லொக்கேஷன்கள், இசை [^] என தொழில்நுட்ப ரீதியில் ஏ கிளாஸ் இந்தப் படம் என்றால் மிகையல்ல. தொடர்ந்து இலக்கில்லாமல் வந்து கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல செய்தியோடு வந்திருக்கிற இந்த கலர்புல் 'கருத்து' கந்தசாமியை வரவேற்கலாம். கந்தசாமி - பொழுதுபோக்குக்கு உத்தரவாதம்!

பழைய Widget களை இழக்காமல் டெம்பிளேட் மாற்றுவது எப்படி ?

பிளாக்கர் டேம்பிலேட்டுகளில் மேலும் மேலும் அழகு படுத்தும் வண்ணமாக நாம் பல side bar widget கள் வைத்திருப்போம் . இப்படி நாம் நமது டேம்பிலேட்டுகளை அழகு படுத்தி வரும் போது புதிய பிளாக்கர் டேம்பிலேட்டு மாற்ற தோன்றும் . அப்படி மற்ற தோன்றும் போது புதிய டெம்பிளேட்டை தரவிறக்கி நமது பிளாக்கில் தரவேற்றும் போது நாம் ஏற்கனவே வைத்திருந்த Side bar widget கள் HTMl codes போன்றவற்றை இழக்க வேண்டியது வரும் . இதை இழக்காமல் நாம் எப்படி டெம்பிளேட்டை மாற்றுவது என்பதை பாப்போம் .
  1. முதலில் உங்களுக்கு பிடித்த டெம்பிளேட்டை அந்த தளத்திலிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் .
  2. பின்னர் உங்கள் பிளாக்கர் கணக்கின் உள் நுழைந்து Layout ----> Edit HTML பகுதிக்கு சென்று Download Full Template என்ற இணைப்பை கிளிக் செய்து ஏற்கனவே இருக்கும் உங்கள் டெம்பிளேட்டை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் .
  3. புதிதாக தரவிறக்கிய டேம்பிலேட்டையும் , ஏற்கனவே இருக்கும் உங்கள் டேம்பிலேட்டையும் நோட் பதில் Open செய்து கொள்ளுங்கள் .
  4. பின்னர் ஏற்கனவே நீங்கள் பயன் படுத்தி வரும் டெம்பிளேட்டில் இருக்கும் Side bar HTML codes எது எல்லாம் உங்களுக்கு தேவையோ அதை வெட்டி புதிய டேம்பிலேட்டு பைலில் அதில் வருகிற Side bar Widget -க்கு கீழே ஒட்டி விடுங்கள் .
  5. பின்னர் அதை XML file ஆக Save கொள்ளுங்கள் .
  6. மீண்டும் உங்கள் பிளாக்கர் கணக்கிற்கு சென்று Edit HTML பகுதியில் சென்று Upload a template from a file on your hard drive என்று இருக்கும் அதன் மூலம் நீங்கள் Save செய்து வைத்துள்ள டெம்பிளேட் Upload செய்து கொள்ளுங்கள் .
  7. Conform and Save என்று கேட்கும் நீங்கள் அதை கிளிக்கி Save செய்து கொள்ளுங்கள் . புதிய நீங்கள் விரும்பிய டெம்பிளேட் கிடைக்கும் .
  8. இவ்வாறு செய்ய கடினமாக இருந்தால் நீங்கள் புதிய டெம்பிளேட் தரவேற்றுவதர்கு முன்னர் உங்கள் Side bar இல் உள்ள HTML Code -களை Note pad -இல் Save செய்து கொள்ளுங்கள் . மற்றும் தேவையான அனைத்து கோடுகளையும் save செய்து விட்டு புதிய டெம்பிளேட்டை தரவேற்றுங்கள் .\
  9. தரவேற்றிய பின்னர் ஏற்கனவே save செய்து வைத்துள்ள HTML code களை தேவையான இடங்களில் ஒட்டி விடுங்கள் . இது மிகவும் இலகுவானது .
மேலும் Note pad இல்லாதவர்கள் லேட்டஸ்ட் வெர்சன் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள் இத வெர்சன் எடிட் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . அதற்கான சுட்டி Down Load Notepad latest version

டேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’. இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது. பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும். எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

செல்வா - ஆண்ட்ரியா: 'கோயிங் ஸ்டெடி'!

செல்வராகவனிடமிருந்து சோனியா அகர்வால் விவாகரத்து கேட்கக் காரணமானவர் எனக் கூறப்பட்ட, ஆண்ட்ரியாவை வைத்து தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் செல்வராகவன்.
Andrea Jeremiah
இது மாலை நேரத்து மயக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் நாயகன் தனுஷ். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கார்த்தி - சந்தியா நடிப்பார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் திடீரென்று அந்தப் படம் கைவிடப்படுவதாக அறிவித்த செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் துவங்கினார். கிட்டத்தட்ட 3 வருடங்களையும் 35 கோடிகளையும் விழுங்கிய பின்னும் இன்னும் படப்பிடிப்பு [^], கிராபிக்ஸ் என இழுத்துக் கொண்டிருக்கிறது அந்தப் படம். இந்த நிலையில் தனது அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார் செல்வராகவன். இந்தப் படத்தின் நாயகன் செல்வாவின் தம்பி தனுஷ் [^]. நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். விவாகரத்து, சோனியா [^]வின் குற்றச்சாட்டு என எத்தனை தடங்கல் வந்தாலும் ஆண்ட்ரியா விஷயத்தில் செல்வராகவன் உறுதியாக இருப்பதையே இது காட்டுவதாகக் கூறுகிறார்கள் கோடம்பாக்கவாசிகள். இதுவரை திரையில் சொல்லப்படாத ரொமான்டிக் கதை இது என்று படம் [^] குறித்த அறிமுக பேட்டியில் கூறியுள்ளார் செல்வராகவன். பார்க்கத்தானே போகிறோம்!

நமது பிளாக்கிற்கு வருகை தந்தவர்களுக்கு -அவர் பார்த்த நாள் , நேரம், தெரிய, ஒரு எளிய வழி

இது இன்னாபா !! புத்சா கீது ? இன்னு நெனைக்கரவங்கோ,

இத்த ரவ பாருங்கோ !!
இத்த பத்தி தெரிஞ்சவங்கோ !! எஸ்காப்பு, அப்பால , டவுசரு
மேல கோச்சிக்க கூடாது , அக்காங் !!
செரி , மேட்டருக்கு வருவோம் , இந்த பொட்டில கீற, script -
எட்து, யூஸ் பண்ணி பாருங்கோ, தலைவா !!


வயக்கம் போல ,
Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,
நம்ப பிளாக்குக்கு வர்றவங்கோ ரொம்ப குஜாலா , பீல்
பண்ணுவாங்கோ , அக்காங் !!
மொதல், தபா வரும் போது "தங்களின் முதல் வருகைக்கு நன்றி "
இன்னு தெரியும் , அதுக்கு அத்த தபா வரும் போது , கட்சீயா
அவுங்கோ என்னிக்கி வந்தாங்கோ , வந்த நாளு அப்பால ,
அது இன்னா நேரம் இன்னு கூட தெரியும் , அக்காங் !!
நம்ப பிளாக்குல கீற கேஜட்டுல இந்த கோடிங்க சேத்துட்டா,
போதும் , இன்னா ஒன்னு , நடுவுல வரமேரி பண்ணால் சூப்பர்,
ஆ இருக்கும் ,

Web 3.0

Web 3.0 டெக்னாலஜியாம் விரைவில் இணைய உலகை ஆளப்போகிறதாம். இதற்கு முன்னாடி அதாவது தற்போது Web 2.0 அதற்கு முன்னாடி Web 1.0 எனும் தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவாம், இருந்ததாம். இப்படி அள்ளி விட்டுக்கொண்டு Web 3.0 எனும் புதிய தொழில்நுட்பத்தை பற்றி கொள்கை ரீதியாக(theoritically) பேசிக்கொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். உண்மையில் Web 1.0, Web 2.0 என்ற தொழில்நுட்பங்கள் இருக்கின்றனவா என பார்த்தால் இவையெல்லாம் வியாபார உத்திகள் போன்றே தோன்றுகிறது. காரணம் தற்போது இணையம் பாவித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படும் Web 2.0 தொழில்நுட்பம் தனது தனித்துவமான இயல்புகளாலேயே அதாவது முக்கியமாக comments, feedback என்ற இரு இயல்புகளாலேயே அடையாளம் காணப்பட்டது. Web 2.0 கண்டுபிடிக்கபட்டதும் அதற்கு முன்னால் இருந்த தொழில்நுட்பம் அதாவது இணையத்தில் publishing only என்ற தொழில்நுட்பம் Web 1.0 என சொல்லப்பட்டது. எல்லாம் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் அல்லது கொட்டுவதற்கு தயாரக இருக்கும் பணத்துக்காகவே இந்த புதிய புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள். ஒரு புதிய தொழில்நுட்பம் என்றவுடன் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு பலபேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த Web 3.0. இணையமானது இதுவரை இரு தொழில்நுட்பங்களை கண்டுள்ளது. நான் முன்பு சொன்னது போல் Web 1.0, Web 2.0 என்பன தான் அவை. இதில் Web 1.0 என்ன செய்ததென்றால் இணையத்தில் பதிக்க மட்டுமே வழி செய்தது அதாவது இணையத்தில் நீங்கள் தேடும் தகவல்கள் விதவிதமான தளங்களில் கொட்டிக்கிடக்கும் நீங்கள் அவற்றை தேடி படித்தீர்கள். அவை சரியா, தவறா என சொல்லக்கூட உங்களுக்கு வழி இருக்கவில்லை. அடுத்து வந்த Web 2.0 தொழில்நுட்பம் இந்த குறையை தீர்த்தது இப்போது நீங்கள் ஒரு தகவலை பார்த்தால் அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்கிறீர்கள். முன்பு இருந்த Web 1.0 ல் குறிப்பிட்ட காரை வாங்க வேண்டுமென்றால் அது தொடர்பான தளங்களை தேடி தேடி அந்த கார் உங்களது தேவையை தீர்க்குமா என்று தெரியாமலேயே வாங்க வேண்டியிருக்கும், ஆனால் Web 2.0 ல் உடனே facebook, Twitter போன்ற சமூக வலைதளங்களுக்கோ அல்லது வலைப்பூக்களுக்கோ செல்கிறீர்கள் அங்கே நீங்கள் இப்படி ஒரு காரை வாங்க விரும்புவதாக சொல்கிறீர்கள் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு தேவையான அந்த காரைப் பற்றிய சகல விடயங்களையும் டீடெய்லாக சொல்வார்கள். எப்படியான இடத்தில் எவ்வளவு பெற்றோல் குடிக்கும் என்பது வரையிலான தகவல்களை தெரிந்து கொண்டு நீங்கள் காரை வாங்கலாம். Web 2.0 வின் மிக மிக லேட்டஸ்ட்டான வடிவமே இந்த Facebook போன்ற சமூகவலைத்தளங்களும் tweetter ம். இந்த வடிவங்கள் நம்மை முழுதாக வந்தடையாத. அலுத்துவிடாத நிலையிலேயே அடுத்த இணைய தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சு அடிபடுகின்றது. Web 3.0 ல் முக்கியமான இயல்பாக சொல்லப்படுவது அதன் intelligent ஆன தேடும் முறை தான். இந்த தொழில்நுட்பத்தில் அமைந்த இணையமானது உங்களது தனிப்பட்ட உதவியாளர் போன்று உங்களின் விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படும். Web 1.0 ல் இணையம் ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவையான தகவலை நீங்களே தேடி எடுத்து கொள்ள வேண்டும். Web 2.0 ல் இணையம் உங்களது நண்பர் கூட்டம் போன்றது உங்களுக்கு தேவையான தகவலை உங்களுக்கு தேவையான வடிவத்தில் நண்பர்கள் தேடி தருவார்கள். Web 3.0 ல் இணையமே உங்களுக்கு தேவையான தகவலை தேடி எடுத்து தரும். Web 3.0 கால இணையம் SEMANTIC WEB என சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க metadata எனப்படும் தகவல்களின் தகவல்களால் ஆனது. உதாரணமாக ஒரு கைக்குட்டையை பார்க்கிறீர்கள் அது நீங்கள் உங்கள் காதலிக்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை போன்ற ஒன்று அதை பார்த்ததும் உங்களுக்கு உங்களின் காதலியின் ஞாபகம் வரலாம் உடனே நேற்று காதலிக்கு தெரியாமல் கடலை போட்ட காதலியின் நண்பியின் ஞாபகமும் வரலாம் நீங்களும் அந்த கைக்குட்டையை படமெடுத்து facebook ல் போட்டு உங்கள் காதலியின் பெயரை tag ம் பண்ணுகிறீர்கள். அதே போல்தான் இணையமும், இப்போ உங்கள் காதலி உங்களை அல்லது உங்கள் Facebook profile ஐ இணையத்தில் தேடினால் உங்கள் facebook profilம் அந்த கைக்குட்டை படமும் காதலியின் நண்பியின் facebook profile ம் முடிவாக வரலாம். உங்களுக்கு பிடித்த, தேவையான தகவல்களை மட்டுமே தந்து நேரத்தை மீதப்படுத்துவதே Web 3.0 இன் முக்கியமான நோக்கம். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல்களின் மூலம் இணையம் உங்களை பற்றி அறிந்துக் கொள்ளும். RSS எனப்படும் இணைய செயலி மூலமாக இப்போது உங்களுக்கு பிடித்த தளங்களில் இருந்து புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது இதே RSS, Web 3.0 ல் உங்களுக்கு பிடித்த தளத்தில் உங்களுக்கு பிடித்த தேவையான தகவலை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கும். உங்களது தொடர்ச்சியான இணைய தேடல் இதை சாத்தியமாக்கும். ஒருவரின் Search history ஐ கொண்டு அவரை பற்றியே தெரிந்து கொள்ளும் இந்த தொழில்நுட்பம் பாவனைக்கு வந்தால் எதிர்காலத்தில் திருமண பொருத்தங்கள், வேலைக்கு ஆள் தேடுதல் என்பன இணையத்திலேயே முடிந்துவிடும் அதே நேரம் நீங்கள் ஷகிலாவை பற்றி தேடியிருந்தால் அதுவும் உங்களை பற்றிய தகவலாக, நீங்கள் ஷகிலா ரசிகர் என்று தேடலில் தெரிவிக்கப்படும். முழுக்க முழுக்க Web 1.0 போன்று தகவல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருக்கும் நிலையில் இப்போதே Web 4.0 க்கான குறிசொல்லல்கள் தொடங்கிவிட்டன. அதாவது Web 1.0 தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கியனிலையில் Web 2.0 ஆனது தகவல்களை சிறப்பாக பெற்றுக்கொள்ளும் web applications களுக்கு வழிசமைத்தது தற்போது Web 3.0 ஆனது தகவல்களை சிறப்பன வடிவத்தில் சேமிக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவும் என சொல்லப்படும் நிலையில் Web 4.0 ஆனது தற்போது இருக்கும் Facebook, Tweetter தளங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை தரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொது கொள்கை அளவிலேயே இருக்கும் இத்தொழில்நுட்பம் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும் போலத்தான் தெரிகிறது.

நாளை இரவு 58-வது உலக அழகிப் போட்டி

“மிஸ் யுனிவர்ஸ்” பட்டத்துக்கான உலக அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 58-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி பகாமஸ் நாட்டில் உள்ள அட்லாண்டிஸ் பாரடைஸ் தீவில் நாளை (ஞாயிறு) இரவு நடைபெற உள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து 84 நாடுகளைச்சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஏக்தா சவுத்திரி இதில் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான முதல் சுற்று தேர்வுகள் நடந்தன. நீச்சல் உடை போட்டி, அறிவுசார் போட்டி, இரவு நேர உடை போட்டி என்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. இணையத்தளம் மூலமாகவும் அழகிகளுக்கு வெற்றிப்புள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதிச்சுற்றுப்போட்டி நாளை (ஞாயிறு) இரவு நடக்கிறது. முதல் கட்டமாக அழகிகளின் ஒய்யார அணிவகுப்பு நடை பெறும். பிறகு 10 அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெறுவார்கள். அவர்களிடம் நடுவர்கள் கேள்வி கேட்பார்கள். சிறப்பாக பதில் சொல்லும் அழகிக்கு “மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் கிடைக்கும். 2009-ம் ஆண்டுக்கான இந்த பட்டத்தை இந்திய அழகி ஏக்தா சவுத்திரி வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நீச்சல் உடை போட்டி, நடுவர்களின் கணிப்பு ஆகிய தேர்வுச்சுற்றுக்களில் ஏக்தா மிக, மிக சிறப்பாக முத்திரை பதித்துள்ளார். எனவே பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அழகிகளில் ஒருவராக ஏக்தா கருதப்படுகிறார்.

வித்தியாசமான முயற்சிகளில் தொடர்ந்து ஜெயிக்கும் சூர்யா இன்றைக்கு டாப் கியரில் போகிறார் என நடிகர் விஜய் பாராட்டியுள்ளார். சூர்யா நடிக்கும் ஆதவன் பட பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய் பேசியதாவது: படத்துக்கு படம் வித்தியாசமாக ஏதோ ஒன்றை முயற்சி செய்கிறார் சூர்யா. அதில் ஜெயிக்கவும் செய்கிறார். வெளிப்படையா சொல்லணும்னா இப்போது அவர் சூர்யா டாப் கியரில் போகிறார். இந்தப் படம் கே.எஸ். ரவிக்குமார் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அவர் எந்த படத்தை இயக்கினாலும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமா இருக்கும்.தசாவதாரம் படத்தில் சில காட்சிகளை எப்படி எடுத்தார் என்பது எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. பல விஷயங்களை பிரமாண்டமா, வித்தியாசமா யோசிக்கலாம். ஆனால் சில விஷயங்களைக் காட்சியாகக் கொண்டு வருவது கஷ்டம்.அவருக்கு ஒத்துவராத ஒரே நடிகர் நான்தான் என்று நினைக்கிறேன். மறுபடியும் என்னை நடிக்க வைத்து ஒரு ஹிட் படம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

16 ஆகஸ்ட் 2009

ஸ்னேகாவுக்கு எஸ்எம்எஸ் மூலம் திருமண தொல்லை-பெங்களூர் நபர் கைது

சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ஸ்னேகாவுக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை தந்து வந்த பெங்களூர் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரில் இருந்து ஸ்னேகாவின் செல்போன்களுக்கு கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து ஒரு நபர் எஸ்எம்எஸ்கள் அனுப்பி வந்தார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்னேகாவை நச்சரித்து வந்தார். ஆரம்பத்தில் இதை ஸ்னேகா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரோ ரசிகர் தொல்லை தருகிறார் என்று விட்டுவிட்டார். ஆனால், கடந்த சில வாரங்களாக இரவு-பகலாக இடைவிடாமல் எஸ்எம்எஸ்களை அனுப்பியபடியே இருந்தார் அந்த நபர். இதையடுத்து மன உலைச்சல் ஏற்பட்டதால் இது குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னரை சந்தித்து புகார் தந்தார் ஸ்னேகா. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தயபோது இந்த எஸ்எம்எஸ்களை அனுப்பியது பெங்களூரைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று தெரியவந்தது.
Sneha
இதைத் தொடர்ந்து பெங்களூர் சென்ற தனிப்படை போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது பெண்கள் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மனித அறிவை மிஞ்சும் கணணி 2020ற்குள் வரும்

மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்., 'அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' (law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார். தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார். மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்திரன் பாட்டு லீக்?

எந்த இணையத்தைத் திறந்தாலும் 'எந்திரன் பாட்டு லீக்காயிடுச்சாமே?' என்பதுதான் செய்தியாக இருக்கிறது. கூடவே ஒரு யு ட்யூப்வீடியோவையும் இணைத்து வைத்துள்ளனர். உண்மையில் பாடல்கள் எதுவும் லீக் ஆகவில்லை. காரணம் ஏஆர் ரஹ்மான் இன்னும் எந்தப் பாடலையும் மாஸ்டரிங் பண்ணவில்லை. பெரு நாட்டில் நடந்த படப்பிடிப்பின்போது, ஒரு பாடல்காட்சிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஐஸ்வர்யாவும் நடன ஒத்திகை பார்ப்பதை செல்போனில் சிலபேர் படமாக்கி அதை யுட்யூபில் உலவ விட்டிருக்கிறார்கள். தெளிவில்லாத அந்த வீடியோவில், நாகராவில் லேசாக பாடல் ஒலிக்கிறது. ஆனால் அது என்ன பாட்டு என்று கண்டுபிடிக்கும் முன்பே நின்றுபோய், ஒன் டூ த்ரீ சத்தம் மட்டும் வருகிறது. வேறு காட்சிகளோ, பாடல்களோ வெளியாகவில்லை. இந்தக் காட்சி கடந்த ஆண்டிலிருந்தே இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
Aishwarya Rai with Rajini in Enthiran
இதுகுறித்து எந்திரன் படக்குழுவின் முக்கிய டெக்னீஷியன் ஒருவர் நம்மிடம் கூறியதாவது: "பாடல்களை இணையத்தில் கோட்டைவிடும் அளவுக்கு எந்திரன் படக்குழு வீக்கானது அல்ல. மீடியா உலகின் ஜாம்பவான்கள் தயாரிக்கும் படம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்றார். எதுக்கு வம்பு...!

ட்விட்டரில் என் பெயரில் மோசடி...அசின் புகார்!

இன்டர்நெட்டில் யாரோ தன்பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடி வேலையில் இறங்கிவிட்டதாகப் புலம்பியபடி, புகார் எழுதுவோர் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு அசின்.
Asin
இவரே் பெயரைப் பயன்படுத்தி யாரோ ட்விட்டரில் 'மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கப் போவதாக' ஒரு 'கெட்ட' செய்தியை எழுதிவிட்டார்களாம். கஷ்டப்பட்டு பாலிவுட் போனவரை, மீண்டும் கோலிவுட்டுக்கு இழுத்தால் சும்மா இருப்பாரா... "நான் தமிழ்ப் படங்களில் இப்போதைக்கு நடிக்கும் ஐடியாவிலேயே இல்லை. ஆனால் யாரோ தேவையில்லாமல் என் பெயரைப் பயன்படுத்தி நான் எழுதியதைப் போல கதைவிட்டிருக்கிறார்கள்.என் பெயரில் ஒரு போலி முகவரியை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன். விரைவில் போலீஸ் கமிஷனரை சந்திக்கவிருக்கிறேன்", என்றார். மும்பையிலா... சென்னையிலான்னு சொல்லவே இல்லையே!

லேப்டாப் தயாரிக்க மூங்கில் மரம் பயன்படுகிறது

பிளாஸ்டிக், உலோகத்திற்கு பதிலாக மூங்கிலை பயன்படுத்தி மடிக்கணினிகள் (லேப்டாப்) தயாரிக்க தைவான் நாட்டு கம்பயூட்டர் உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய மூங்கில் மடிக்கணினியை உருவாக்கியுள்ள அசுஸ்டெக் நிறுவனம், அதற்கு அசுஸ் ஈகோ புக் (Asus Eco Book) என பெயரிட்டுள்ளது. மடிக்கணினி திரை மற்றும் மைக்ரோ பிராசசரில் ஏற்படும் வெப்பத்தை தங்கக் கூடிய தன்மை மூங்கில்-க்கு உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இது முற்றிலுமான வெற்றியடைந்த பின்னரே வர்த்தக ரீதியாக மூங்கில் மடிக்கணினிகள் விற்பனைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மடிக்கணினிகள் மற்றும் கணினி தொடர்பான உபகரணங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் நிலையில், மூங்கிலை கொண்டு மடிக்கணினி தயாரிக்கும் பணியை அசுஸ்டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபிகாவுடன் மீண்டும் காதலா?- டோணி மழுப்பல்

இந்தி நடிகை தீபிகா படுகோனும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியும் மீண்டும் நெருக்கமாகிவிட்டதாக பாலிவுட்டில் பரபர செய்திகள் உலா வருகின்றன. டோனியும், தீபிகா படுகோனேயும் முன்பு நெருக்கமாக இருந்தனர். இருவரும் தீவிரமாக காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் டோனியுடன் நடிகை லட்சுமி ராய் நெருக்கமாகிவிட, இருவரும் காதலிப்பதாக புதிய செய்தி உலா வந்தது. அடுத்து கல்லூரி மாணவி ஒருவருடன் டோணி சுற்றுவதாகவும் தகவல் வந்தது.
Deepika Padukone
டோணியின் காதலி யார் என்பதைக் கண்டுபிடுப்பதையே ஒரு பெரிய போட்டியாகக் கூட வைத்தது ஒரு வட இந்தியப் பத்திரிகை. இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் டோனி கலந்து கொண்டார். அவருடன் நடிகை தீபிகா படுகோனேயும் பங்கேற்றதுடன், நவீன ஆடைகள் அணிந்து மேடையில் ஒன்றாகத் தோன்றினார்கள். பேஷன் ஷோ முடிவில் இருவருக்குமிடையிலான நெருக்கம் குறித்துக் கேட்டதறகு டோணி பதில் கூறவில்லை. மீண்டும் பேஷன் ஷோவில் பங்கேற்பீர்களா? என்றதற்கு, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன் என்றார். அடுத்து ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர்.

எழுத்துக்கள் விட்டு விட்டு துள்ளுவதை எப்படி உருவாக்கி பிளாக்கரில் போடுவது எப்படி

இது உருவாக்குவது மிகவும் சுலபம் நான் கொடுக்கும் முறை பின்பற்றவும்
Your Text Here
மேலே உள்ள CODEஐ கொப்பி செய்து உங்களுக்கு விருப்பமான இடத்தில் போட்டு உங்கள் பிளாக்கை அழகுபடுத்துங்கள் YOU TEXT HERE என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான சொல்லை இடுதல் உதாரணத்திற்கு என்னுடுய எழுத்தை பார்க்கவும் சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்

சோனியா விவாகரத்து-காரணம் ஆண்ட்ரியா?

இன்று கோடம்பாக்கம் மட்டுமின்றி தமிழ் சினிமா [^] ரசிகர்கள் [^] எல்லோர் வாயிலும் மெல்லப்படும் விஷயமாக இயக்குநர் [^] செல்வராகவன்- சோனியா அகர்வால் விவாகரத்து விவகாரம் மாறியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், நடிகை ஆண்ட்ரியா தான் என்கிறார்கள்.
Sonia Agarwal with Selvaraghavan  and Rajini
இவர்தான் சோனியா - செல்வராகவன் தாம்பத்தியத்துக்கு உலை வைத்தவர் என்ற சாபத்துக்கு உள்ளாகியுள்ளார். என்ன நடந்தது? ஆயிரத்தில் ஒருவன் எனும் படத்தை செல்வராகவன் ஆரம்பிக்கும் வரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இந்தப் படம் ஆரம்பித்த பிறகுதான் பல சிக்கல்கள், மனத்தாங்கல்கள் உருவாகின. இந்தப் படத்தின் நாயகியாக ரீமா சென் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் திடீரென்று இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்தார் செல்வராகவன். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான நடிகை இவர். படப்பிடிப்பின்போது செல்வராகவனுடன் ஆன்ட்ரியா மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தார். இது, மெதுவாக புகைய ஆரம்பித்தது. சோனியா அகர்வாலின் காதுக்கு எட்டியபோது, முதலில் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மிக நம்பகமான ஒருவர் மூலம் விஷயம் உறுதிப்படுத்தப்பட, ஒருநாள் எந்த அறிவிப்பும் இல்லாமல், 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றார். அங்கே கணவர் செல்வராகவனும் ஆன்ட்ரியாவும் நெருக்கமாக இருந்ததைக் கண்டதும் எரிமலையானார். அந்த இடத்திலேயே ஆன்ட்ரியாவைக் கடுமையாகத் திட்டிய சோனியா அகர்வால், அவரை ஓங்கி ஒரு அறை விட்டுவிட்டு வெளியேறினார். சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். செல்வராகவன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் வசித்து வந்தார். சோனியா அகர்வால் தியாகராய நகரில் உள்ள தனது சகோதரரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் மாறினார். இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் சோனியா அகர்வால், தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஒப்புக் கொள்ள ஆரம்பித்தார் சோனியா. இந் நிலையில் விவாகரத்து கோரி இருவரும் சேர்ந்து குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி ராமலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை 6 மாதம் தள்ளி வைப்பதாக அறிவித்த நீதிபதி அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி மீண்டும் விசாரணை [^] நடக்கும் என்று அறிவித்தார். நீதிமன்ற உத்தரவுபடி செல்வராகவன், சோனியா [^] அகர்வால் இருவருக்கும் 6 மாத அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டம் 13 (பி) பிரிவின் கீழ் இருவரும் சேர்ந்து விவாகரத்து கேட்டுள்ளதால் பிப்ரவரி மாதம் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com