16 ஆகஸ்ட் 2009
சோனியா விவாகரத்து-காரணம் ஆண்ட்ரியா?
இன்று கோடம்பாக்கம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோர் வாயிலும் மெல்லப்படும் விஷயமாக இயக்குநர் செல்வராகவன்- சோனியா அகர்வால் விவாகரத்து விவகாரம் மாறியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், நடிகை ஆண்ட்ரியா தான் என்கிறார்கள்.
இவர்தான் சோனியா - செல்வராகவன் தாம்பத்தியத்துக்கு உலை வைத்தவர் என்ற சாபத்துக்கு உள்ளாகியுள்ளார்.
என்ன நடந்தது?
ஆயிரத்தில் ஒருவன் எனும் படத்தை செல்வராகவன் ஆரம்பிக்கும் வரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. இந்தப் படம் ஆரம்பித்த பிறகுதான் பல சிக்கல்கள், மனத்தாங்கல்கள் உருவாகின.
இந்தப் படத்தின் நாயகியாக ரீமா சென் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் திடீரென்று இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்தார் செல்வராகவன். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் அறிமுகமான நடிகை இவர்.
படப்பிடிப்பின்போது செல்வராகவனுடன் ஆன்ட்ரியா மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தார். இது, மெதுவாக புகைய ஆரம்பித்தது. சோனியா அகர்வாலின் காதுக்கு எட்டியபோது, முதலில் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் மிக நம்பகமான ஒருவர் மூலம் விஷயம் உறுதிப்படுத்தப்பட, ஒருநாள் எந்த அறிவிப்பும் இல்லாமல், 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றார். அங்கே கணவர் செல்வராகவனும் ஆன்ட்ரியாவும் நெருக்கமாக இருந்ததைக் கண்டதும் எரிமலையானார்.
அந்த இடத்திலேயே ஆன்ட்ரியாவைக் கடுமையாகத் திட்டிய சோனியா அகர்வால், அவரை ஓங்கி ஒரு அறை விட்டுவிட்டு வெளியேறினார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
செல்வராகவன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில் வசித்து வந்தார். சோனியா அகர்வால் தியாகராய நகரில் உள்ள தனது சகோதரரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் மாறினார்.
இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் சமரசம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் சோனியா அகர்வால், தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஒப்புக் கொள்ள ஆரம்பித்தார் சோனியா.
இந் நிலையில் விவாகரத்து கோரி இருவரும் சேர்ந்து குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி ராமலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை 6 மாதம் தள்ளி வைப்பதாக அறிவித்த நீதிபதி அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி மீண்டும் விசாரணை நடக்கும் என்று அறிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி செல்வராகவன், சோனியா அகர்வால் இருவருக்கும் 6 மாத அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்து திருமணச் சட்டம் 13 (பி) பிரிவின் கீழ் இருவரும் சேர்ந்து விவாகரத்து கேட்டுள்ளதால் பிப்ரவரி மாதம் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.