Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

24 ஜனவரி 2009

75 ஓட்டங்களில் சுருண்டது பாகிஸ்தான்..! ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது....!

பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 : 1 அணி கைப்பற்றியது.
இன்று(24.01 .2009 ) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இந்தப் போட்டியில்234 ஓட்டங்களினால் இலகுவாக வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஜம்பது ஓவர்களில் ஜந்து விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய சனத் வேகமாக அடித்தாட முற்பட்ட போது பதினாறாவது ஓவரில் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.இதில் ஜந்து வுண்டரிகளும் ஒரு சிக்ஸ்சரும் அடங்கும்.அடுத்து வந்த சங்ககார டில்சனுடன் இணைந்து சிறப்பாக ஆடிய சங்ககரா 50 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்,அப்போது 33ஆவது ஓவரில் 182 ஓட்டங்களை இலங்கை பெற்றிருந்தது.பின்னர் வந்த வீரர் கண்டம்பியும் டில்சனுடன் இணைந்து வேகமாக ஓட்டங்களை பெறுகையில் கண்டம்பி32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் .இறுதி வரை ஆட்டமிழக்காத டில்ஷான் 137 ஓட்டங்களைப் பெற்றார்.இது இவரின் இரண்டாவது ஒருநாள் சதமாகும். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர் பார்ப்பை சிதறடித்து முதல் ஒன்பது ஓவரிலேயே வெறும் 22ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுக்களை இழந்தது.பின்னர் 7 & 8 ஆவது விக்கெட்68 ஓட்டங்களுக்கும் 9 ஆவது விக்கெட் 72 ஓட்டங்களைப் பெற்ற போதும் வீழ்த்தப்பட்டது.பாகிஸ்தான் அணியினர் 23 ஆவது ஓவரில் வெறும் 75ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் குலசேகர ,துசார ,ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் முரளி இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் பெற்ற இரண்டு விக்கெட்டுக்களுடன் ஒருநாள் போட்டியில் முரளிதரன்500 விக்கெட்டுக்களைப் பெற்றுள்ளார். ஆட்டநாயகனாகவும் போட்டித்தொடர் நாயகனாகவும் திலகரட்ன டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆஸ்கர்... உச்சபட்ச அங்கீகாரம் இல்லை : அமிதாப்

ஆஸ்கர் விருதுதான் சினிமா கலைஞர்களுக்கான உச்சபட்ச விருது இல்லை என்று இந்திய மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் கூறினார். ஜெய்ப்பூரில் 'பச்சனாலியா' புத்தக வெளியிட்டு விழாவில்
கலந்துகொண்ட அவர், பார்வையாளர்களின் சில கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, ஆஸ்கர் விருது பற்றி அவர் கூறியது: நம்மைப் பொறுத்தவரை ஆஸ்கார் தான் உச்சபட்ச அங்கீகாரம் என்று ஒருபோதும் கருதக் கூடாது. அங்கே அவர்கள் ஜாம்பவான்கள்... இங்கே நாம் ஜாம்பவான்கள்.
தங்களது வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைப்பை உருவாக்கிய வழங்கி வருவதே ஆஸ்கர் விருதுகள். அதில் ஒரு விருதை நமக்குக் கொடுத்தால், அதை உதாசீனப்படுத்தக் கூடாது. இந்திய சினிமா தான் எப்போதும் முன்னிலை வகிக்கிறது; சிறப்பிடம் பெறுகிறது.
ரஹ்மான், குல்ஸார் ஆகியோர் ஒருபுறமிருக்க, கேமராவுக்கு பின்னால் உழைக்கும் சவுண்ட் இயக்குனர் ரெசுல் பூக்குட்டிக்கும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆஸ்கருக்கு ரெசுல் பரிந்துரைக்கப்பட்டது, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவுக்கு பெருமைகள் பல சேர்த்துள்ள ரஹ்மான், கண்டிப்பாக இந்தியாவுக்காக ஆஸ்கர் பெற்று தருவார் என்று நம்புகிறேன், என்றார் அமிதாப் பச்சன்.

ஆஸ்கர் விருது : ரஹ்மானுக்கு 3 பரிந்துரை!

ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான ஆஸ்கருக்கு, ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக, இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இரண்டு பிரிவுகளின் கீழ் மூன்று பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
ஏற்கெனவே ரஹ்மான் கோல்டன் குளோப் விருது பெற்ற நிலையில், ஆஸ்கர் பெறுவது உறுதி என்றே சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் மற்றும் இரண்டு பெஸ்ட் ஒரிஜினல் சாங் பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனர் படம்.. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் 81-வது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
ஸ்லம்டாக் மில்லியனர் : 10 பரிந்துரைகள்
1. பெஸ்ட் ஒரிஜனல் ஸ்கோர் - ஏ.ஆர்.ரஹ்மான்
2&3. ஒரிஜினல் சாங் "ஜெய் ஹோ..." பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான் "ஓ சாயா" பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான்
4. சிறந்த படம் - ஏ காலண்டர் பிலிம்ஸ் புரோடக் ஷன் - தயாரிப்பாளர் - கிறிஸ்டியன் கோல்சன்
5. சிறந்த இயக்குனர் - டானி போய்ல்6. சிறந்த ஒளிப்பதிவு - ஆன்டனி டோட் மென்டில்
7. சிறந்த அடாப்டட் திரைக்கதை - சைமன் பியூஃபோய்
8. சிறந்த திரைப்பட எடிட்டிங் - கிறிஸ் டிக்கென்ஸ்
9. சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரிச்சர்ட் பிரைகே மற்றும் ரேசுல் பூகுட்டி
10. சவுண்ட் எடிட்டிங் - டாம் சேயர்ஸ்

ஆஸ்கருக்கு செல்லும் மற்றொரு இந்திய படம்

ஸ்லம்டாக் மில்லியனர் மட்டுமல்ல. மற்றொரு இந்திய படமும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த பிங்கி என்ற 8 வயது சிறுமி நடித்த ‘ஸ்மைல் பிங்கி’ என்ற ஆவணப் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஸ்மைல் பிங்கி’ என்ற 39 நிமிட ஆவணப்படம் உதடு மற்றும் அண்ணப் பிளவு பாதிப்புடன் பிறந்த ஒரு குழந்தையை பற்றிய படமாகும். அசோசியேஷன் ஆப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் ஆர்ட் என்ற அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. தாம் பங்குபெற்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து சிறுமி பிங்கி மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுமி பிங்கி ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள போதிலும் அமெரிக்கா சென்று பங்கேற்க குடும்பத்தின் நிதி நிலைமை அனுமதிக்காது என்பதால் அவர் அமெரிக்கா செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு உதவுவதற்கான முயற்சியில் இந்தப் படத்தில் முக்கிய பங்காற்றிய பிளாஸ்டிக் சர்ஜன் சுபோத் குமார் சிங் .ஈடுபட்டுள்ளார்

வித்தியாசமான முறையில் Folder ஐ Hidden பண்ணுதல்

விண்டோஸில் போல்டர் ஒன்றுக்கு பொருத்தமான ஒரு பெயரை வழங்க வேண்டும். பெயரை வழங்காது விடின் New Folder எனும் பெயரை விண்டோஸ் டிபோலடாக போட்டுக் கொள்ளும். பெயர் ஏதும் வ்ழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். அப்போது பெயரில்லாமல் போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது. திரும்பத் திரும்ப ஸ்பேஸ் பாரையோ டெலீட் கீயையோ அழுத்தினாலும் நியூ போல்டர் எனனும் பெயரையே விண்டோஸ் எடுத்துக் கொள்ளும். அதற்க்கு ஒரு புதிய முறை ஒரு போல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள் அதை Rename செய்து Alt + 255 டைப் செய்து அதன் பெயரை இல்லாமல் செய்யுங்கள். இலக்கத்தை டைப் செய்ய கீபோர்டில் நியூமரிக் கீபேடையே பயன் படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடுத்து அந்த போல்டர் மேல் ரைட் க்ளிக் செய்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Customize டேபில் க்ளிக் செய்யுங்கள். அங்கு Folder Icons பகுதியின் கீழ் Change Icon பட்டனில் க்ளிக் செய்ய போல்டருக்குரிய ஏராளமான ஐக்கன்களைக் அங்கே காணலாம்.
அந்த பெட்டியில் ஸ்க்ரோல் செய்யும் போது ஐக்கன்களுக்கு நடுவே ஓரிடத்தில் வெற்றிடம் இருப்பதை அவதானிக்கலாம்.அதிலுள்ள ஒரு வெற்றிடத்தில் க்ளிக் செய்ய அந்த இடம் தெரிவு செய்யப்படும். அந்த வெற்றிடமே நாங்கள் உருவாக்க இருக்கும் போல்டருக்குரிய ஐக்கன். இப்போது ஓகே செய்து விடுங்கள். அவ்வளவுதான் இப்போது நீங்கள் உருவாக்கிய அந்த போல்டர் மறைந்து விடுவதைக் காணலாம்.
இந்த போல்டரில் உங்கள் ரகசிய ஆவணங்கள் மற்றும் பைல்களை இட்டு பாதுகாக்கலாம்.
யாருமே இலகுவில் கண்டுபிடிக்க மாட்டார்கள். இது வழமையாக போல்டர்களை மறைத்து (Hidden Folders) வைக்கும் முறையை விடவும் பாதுகாப்பானதாகும்

23 ஜனவரி 2009

உங்கள் இதயத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க டாக்டர்கள் தரும் 7 டிப்ஸ்.

1. தினந்தோறும் உடற்பயிற்சி என்பதை வழக்கமாக்குங்கள். ரொம்பக் கடினமான பயிற்சிகள் எல்லாம் வேண்டாம். 30லிருந்து 45 நிமிடங்கள் வரை நடை பயிற்சி (வாக்கிங்) செய்யுங்கள். அது போதும்.
2. உங்கள் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். அளவான எடை உள்ளவர்களுக்கு இதய நோய்கள் குறைவாகவே வருகிறது.
3. உணவுக் கட்டுப்பாடு அவசியம். கொழுப்புச் சத்துக் குறைந்த உணவுகளையே உண்ணுங்கள். உப்பைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள்.
4. கார்போஹைட்ரேட் கலோரியைக் கணக்கெடுங்கள். சர்க்கரை நோய் வராத அளவுக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். டயபடீஸ்காரர்களை இதய நோய்க்கு மிகவும் பிடிக்கும்.
5. ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்யுங்கள். 120/80 இருந்தால் சந்தோஷப்படுங்கள்.
6. இன்று முதல் சிகரெட்டை விட்டு விடுவதாக சத்தியம் செய்யுங்கள். அதிகமாக மது அருந்துபவர்களின் இதயம் சீக்கிரம் ரிப்பேராகி விடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
7. மிகவும் முக்கியக் காரணம் உங்கள் முன்னோர்களுக்கு இதய நோய் இருந்தால் உங்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். உங்கள் அப்பா, அம்மா, சகோதரர் யாருக்காவது இதய நோய் இருந்தாலும் நீங்களும் ஒழுங்காக அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இதய நோய்கள் இல்லாத அப்பா அம்மாவாக மாறுங்கள்.

மிகச்சுலபமான வழிமுறைகள்தான். சரியாக பின்பற்றினால் பெரிய ஆபத்தை தவிர்க்கலாம். அனைவரும் முயற்சி செய்வோம்.

ஒபமாவின் காரின் பெறுமதி...!

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள பராக் ஒபாமா பயன்படுத்தும் காரில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. அதன் விவரம்

18 அடி நீளமும், 5 அடி அங்குலம் உயரமும் கொண்ட இந்த கெடிலாக் நிறுவன சொகுசு காரின் விலை ரூ 2.2 கோடி(இந்திய மதிப்பில் ) அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகம் செல்லும் இந்த காரில் சக்தி வாய்ந்த டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது புறப்பட்ட 15 வது வினாடியில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பறக்கும்1லிட்டர் டீசலுக்கு 2.8 கி.மீ தூரம் தான் செல்லும்.

இந்த காரில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. காரை குண்டு துளைக்காமல் இருக்க ஸ்டீல், அலுமினியம், டைட்டானியம் கலந்த தகடு பொருத்தப்பட்டுள்ளதுகண்ணி வெடி வெடித்தாலும் சேதம் ஏற்படாமல் தடுக்க 12 செ.மீ கனமான தகடு காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. கார் கதவுகள் முக்கால் அடி கனத்தில் அமைக்கப்பட்டுள்ளன.ஏவுகனை வீசி தாக்கினாலும் சேதமடையாத டீசல் டேங்க் காரில் பொருத்தப்பட்டுள்ளதுதீயணைப்பு கருவிகள், துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டுகள் காரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுல்லானடயர்கள் வெடித்தாலும் தொடர்ந்து காரை ஓட்டலாம்ட்ரைவர் சி.ஐ.ஏ வால் பயிற்சி அளிக்கப்பட்டவர்.

தீவிரவாத தாக்குதல் உட்பட எந்த ஒரு அபாயகரமான சூழ்நிலையிலும் வேகமாக வண்டியை ஓட்ட அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுநம்பர் பிளேட் பகுதியிலும், பக்கவாட்டிலும் இரவிலும் தெளிவாக படம் எடுக்க கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனகாரில் உள்ள ஜி.பி.எஸ் கருவியின் உதவியுடன் கார் எங்கு இருக்கிறது என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்கலாம்பின் பகுதியில் உள்ள இருக்கையில் ஒபாமா உட்கார்ந்து இருப்பார். அவருக்கு முன் இன்டெர்நெட் வசதியுடன் ஒரு கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. மேலும் ஒரு செயற்கைகோள் தொலைபேசியும், துணை ஜனாதிபதி மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகனுடன் உடனடியாக பேச தொலைபேசிகளும் வைக்கப்பட்டுள்ளதுஆபத்து காலத்தில் உதவுவதற்காக ஒபாமாவின் ரத்த வகையை சேர்ந்த ரத்தமும் ஆக்சிஜன் சிலிண்டரும் காரில் வைக்கப்பட்டிருக்கும் (நன்றி: சங்கமம் )

புதிய ஜனாதிபதிக்கான இணையத்தளம் பராக் ஒபாமாவால் திறந்து வைப்பு.

அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தனது புதிய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார்.இதன் பிரகாரம் www.whitehouse.gov இணையத்தளமானது அரசாங்கத்தில் புதிய சகாப்தம் ஒன்று ஏற்படுவதற்கான ஓர் அடையாளமாக மீள வடிவமைக்கப்பட்டுள்ளது.இது வாராந்த வீடியோ உரைகள், புகைப்படங்கள், நிறைவேற்றதிகார ஆணைகள், நியமனங்கள் தொடர்பான செய்திகளை உள்ளடக்கியுள்ளது.மேலும் இது ஜனாதிபதிக்கும் பொதுமக்களுக்குமிடையிலான உறவுகளை கட்டியெழுப்பும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவிலே மிகவும் இலகுவில் திறந்ததும் இலகுவில் அணுகக்கூடியதுமான நிர்வாகமொன்றை உருவாக்கப்போவதாக ஒபாமா வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வில்லு பார்த்த அஜீத்தும், விஜயும் என்ன பேசி இருப்பார்கள்?

நம்ம தல, நம்ம இளைய தளபதி படமான 'வில்லு' பார்த்தாராம். பார்த்த பிறகு என்ன பேசி இருப்பாங்க? அப்படின்னு நீங்க ஒண்ணும் மண்டைய பிச்சுக்க வேணாம். ஏற்கனவே படம் பார்த்து மண்டைய பிச்சுருப்பீங்க. அதனால உங்களோட சுமையா குறைக்க நாங்க அந்த தகவலை உங்களுக்கு தருகிறோம் . (நகைச்சுவையாக)

22 ஜனவரி 2009

கூகுளில் கணக்கு பண்ண முடியுமா ?

கூகுள் தேடு பொறி என்றாலும், அதன் மேம்பட்ட திறனால் தேடு பொறிகளில் முன்னனியில் இருக்கிறது, உடனடியாக கணக்கு போட, அளவை மாற்றி (Unit Conversion), பண மாற்றி என உடனடி தேவைகளுக்கு பயன்படுகிறது. இணையத்தில் இருந்து கொண்டே, வேறொரு மென்பொருளை நாடாமல் சிறு சிறு கணக்குகளை செய்துவிட முடியும். கூகுள் கணக்கு:
யாகூவில் அந்த திறன் இல்லை.
பணம் மாற்றி:
அளவை மாற்றி:
நகர வரைபடம்:
கோடிட்ட இடங்களை நிரப்ப...:

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா நேற்று பதவியேற்பு...!

அமெரிக்காவின் 44-வது அதிபராக பராக் ஒபாமா நேற்று பதவியேற்றார்.அந்நாட்டின் வரலாற்றில் வெள்ளை மாளிகைக்கு முதன்முறையாகச் செல்லும் கறுப்பின அதிபர் என்ற சரித்திரத்தைப் படைத்தார், ஒபாமா!
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் லிங்கன் மாளிகைக்கு எதிரே அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்ச்சி, இலங்கை நேரப்படி இரவு 10.10 தொடங்கியது.

பராக் ஒபாமா கூற்றில் உண்மையாளரா..(இருக்கமுடியுமா)..?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஒபாமா “ஈராக்கிலிருந்து படைகளை நான் வாபஸ் பெறுவேன் என்றும் அமெரிக்க மக்கள் முஸ்லிம் மக்களை எதிரிகளாக பார்க்கக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஒபாமா “ஈராக்கிலிருந்து படைகளை நான் வாபஸ் பெறுவேன் என்றும் அமெரிக்க மக்கள் முஸ்லிம் மக்களை எதிரிகளாக பார்க்கக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஒபாமா “ஈராக்கிலிருந்து படைகளை நான் வாபஸ் பெறுவேன் என்றும் அமெரிக்க மக்கள் முஸ்லிம் மக்களை எதிரிகளாக பார்க்கக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் எனும் பெயரில் குறித்த அறிஞர் கடுமையாக இச்சிறைச்சாலையில் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.தடுத்து வைக்கப்பட்ட கைதிகளிடத்தில் விசாரணைகளை நிறுத்துமாறு இராணுவ அதிகாரிகளுக்குக் கட்டளையிட்ட அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதி ஒபாமாதான்.
ஒபாமாவின் இப்போக்கானது நிச்சயமாக அவரை அமெரிக்கா அரசியலில் ஒரு ஜனநாயகவாதியாக சித்தரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.பொதுவாக அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகக் கொடூரமான முறையில் ஆட்சிபுரிந்த ஆட்சியாளர்களே அதிகம். அந்த வரிசையில் அயோக்கியனாக ஜோர் புஷ் மிகக் கொடூரமானவராக அவதானிகளால் நோக்கப்படுகின்றார்.இவரின் தவறான அரசியல் முன்னெடுப்புக்களால் அமெரிக்கா தலைகுனிவையும் அவப்பெயரையும் உலக மக்களிடம் பெற்றுக்கொண்டது.
இக்களங்கத்தை தன்னால் துடைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஆட்சிபீடமேறியிருக்கும் ஒபாமா இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தேர்தலின் போது வாக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா? அல்லது தனக்கு முன்னால் சென்ற அயோக்கியனின் வழிமுறையைப் பின்பற்றுவாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எது எவ்வாறிருந்தாலும் ஒபாமா ஈராக்கிலுள்ள அமெரிக்கப்படைகளை வாபஸ் பெறுமாறு அறிக்கை விட்டதானது அவர் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவரல்ல என்பதை படம் பிடித்துக்காட்டுகின்றது.இன்ஷாஅல்லாஹ் பொருத்திருந்து பார்ப்போம்.

20 ஜனவரி 2009

இப்படியும் குளியலறைகளா?

கம்ப்யூட்டர் புலியா நீங்கள்? இந்தப் புதிர்களுக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்?

மைக்ரோசாப்ட் நிறுவத்தின் விண்டோஸ் மூலமே இன்று உலகின் பெரும்பாலான கணினிகள் இயங்கி வரும் சூழலில் விடை தெரியாத வினாக்கள் எத்தனயோ அந்த விண்டோசில் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் புதிர்களைப் பார்த்த போது எனக்கு ஆச்சர்யமாகவும் சுவையாகவும் இருந்தது. எத்தனை முறை சோதித்துப் பார்த்தாலும் இது போலவே நடந்தது. இதோ விண்டோசின் அந்தப் புதிர்களை உங்களுடன் பகிர்கிறேன், இந்தப் புதிர்களுக்கு உங்களுக்கு விடை தெரிகிறதா என்று பாருங்கள், புதிர் 1: கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் உள்ள ஏதாவதொரு டிரைவில் ஏதாவதொரு இடத்தில் "con" என்ற பெயரில் ஒரு போல்டர் உருவாக்க முடிகிறதா? என்று பாருங்கள். CON என்ற பெயர் அடைப்புக் குறிகள் எதுவும் இல்லாமல்? புதிர் 2: (1) நோட்பேட் ஒப்பன் செய்து கொள்ளுங்கள் (2) அதில் கீழே உள்ள இந்த டெக்ஸ்டை அப்படியே டைப் செய்யுங்கள். " bush hid the facts " ( வார்த்தைகளை அடைப்புக் குறிகள் இல்லாமல் ஆங்கில சிறிய எழுத்துகளில்(small letters) தட்டச்சு செய்யுங்கள். 3) பின்னர் அந்த டெக்ஸ்ட் பைலை நீங்கள் விரும்பும் எந்தப் பெயரிலும் எந்த இடத்திலும் சேவ் செய்து கொள்ளுங்கள். (3) நீங்கள் சேவ் செய்த அந்த பைலை ஒப்பன் செய்து பாருங்கள்.(4) நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட் என்ன ஆயிற்று? (5) எத்தனை முறை வேண்டுமானாலும் முயன்று பாருங்கள்!ஏன் இப்படி நடக்கிறது? புதிர் : 3 (1) மைக்ரோ சாப்ட் வேர்ட் ஒப்பன் செய்து கொள்ளுங்கள். (2) நியூ டாக்குமெண்ட் ஒப்பன் செய்து கொள்ளுங்கள் (3) அதில் கீழே உள்ள வார்த்தையை டைப் செய்யுங்கள்.=rand (200, 99) (4) பின்னர் என்டர் கீயைத் தட்டுங்கள் (5) என்ன நடக்கிறது என்று பாருங்கள் (6) கணினி ஹேங் ஆகிவிடவில்லை, அவசரப்படாமல் பொறுமையாகக் காத்திருங்கள், (7) கிட்டத்தட்ட 29 பக்ககளுக்கு தானாகவே சில வார்த்தைகள் டைப் செய்யப் பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறதா? (8) இப்போது உங்கள் பைலில் என்ன டைப் செய்யப் பட்டு உள்ளது என்று பாருங்கள். (9) இது ஏன் நடக்கிறது என்று யோசியுங்கள். இந்தப் புதிர்களுக்கான விடைகளை நான் யோசித்த போது, இணையத்தில் தேடிய போது எனக்கு மூன்றாவது புதிருக்கு மட்டும் விடை கிடைத்தது மைக்ரோசாப்ட் இணைய தளத்தில்.மற்றவற்றிற்கு உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் சொல்லுங்கள், எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

19 ஜனவரி 2009

2008 இன் சிறத்த மென்பொருட்கள்......

PC magazine னால் வருடம் தோறும் வெளியிடப்படும் வரிசைப்படுதலின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த மென்பொருட்களாக தெரிவு செய்யப்பட்ட மென்பொருட்களில் முதல் 10 இடங்களையும் பிடித்த மென்பொருட்களின் பட்டியலே இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. பிட்க்ட்பிக் Adobe Reader www.adobe.com pdf ன் ஆக்கிரமிப்பு கணணி உலகில் பிரமிக்கத்தக்கது .Adobe reader தொடர்ந்து பலவருட்களாக முதல் 10 இடங்களுக்குள் தனது இருப்பிடத்தை தக்கவைதுள்ளது.2009 இலும் இதன் தானம் நிலைக்கும் என்பதில் ஜயம் இல்லை. google கூட pdf reader ஜ புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. AIM www.aim.COM AIM messenger சட்டிங்கில் இந்த ஆண்டு பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது.google கூட தனது messenger ஊடாக AIM ல் login பண்ணக்கூடிய வசதியை செய்துகொடுத்துள்ளது. Audacity audacity.sourceforge.net இது ஒரு open source software. இலவசமாக தரையிக்ககூடிய audio recording மற்றும் editing மென்பொருள்.இந்த மென்பொருளும் பல தரப்பட்ட பாவனையாளர்களால் அதிகம் தரையிறக்கப்பட்ட மென்பொருள். Firefox www.mozilla.com எல்லோராலும் அறியப்பட்ட browser.அறிமுகமான நாளில் இருந்ந்து முதல் 10 இடங்களை விட்டு நகருவதாக தெரியவில்லை.firefox download day ல் அதிகமாக தரையிறக்கம் செய்யப்பட்டு உலக சாதனை புரிந்த ஒரு மென்பொருள். GIMP www.gimp.org இது ஒரு image editing open source software.இது photoshop செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்வதாலும் இலவசமாக கிடைப்பதாலும் முதல் 10 இடங்களில் அரியாசன்ம் இட்டு அமர்ந்துள்ளது. iTunes www.apple.com/itunesஅப்பிளின் முன்னனி மென்பொருள். அப்பிள் iphone ஜ அறிமுகப்படுத்திய பின்பு இதன் மவுசு இன்னும் கூடிவிட்டது. OpenOffice.or gwww.openoffice.org openoffice sum micro system த்தால் வெளியிடப்பட்ட ஒரு open source software. windows office இல் செய்யக்கூடிய அனைத்தையும் இதில் செய்யக்கூடியதாக உள்ளமையாலும் இலவசமாக கிடைப்பதாலும் தொடர்ந்து பல வருடங்களாக முதல் 10 இடங்களில் தனது இடதை தக்கவைத்துள்ளது. Skype www.skype.com உலகில் அதிகமானவர்களால் பாவிக்கப்படும் ஒரு messenger மென்பொருள். PC to Phone என்னும் இந்த மென்பொருளின் தாரக மந்ந்திரம் பலரயும் கட்டிப்போட்டுள்ளது. Thunderbird www.mozilla.com/thunderbird இது ஒரு movable email client software.mozilla வின் மற்றுமொரு வெளியீடு.தொடர்ந்து இந்தப்பட்டியலில் இருந்துவரும் மற்றுமொரு மென்பபொருள் Ubuntu www.ubuntu.com Windows தனது பாவனையாளர் அனுமதியை கிடுக்கு பிடி பிடித்ததால் அடித்தது லாபம் Ubuntu க்கு. பல வருடங்களாக இந்தப்பட்டியலில் இருந்தாலும் தற்போது இதற்க்கு கிராக்கி கூடியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.முக்கியமாக windows vista மிரள வைக்கும் graphics. WinAmp www.winamp.com சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக இப்பட்டியலில் தனது இருப்பிடதை தக்கவைத்துள்ள ஒரே ஒரு மென்பொருள்.

விண் கற்கள் பூமியின் மீது மோதக் கூடிய அபாயம் நிலவுவதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

விண் கற்கள் பூமியின் மீது மோதக் கூடிய அபாயம் நிலவுவதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆயிரம் வருடங்களுக்கு சில தடவைகள் பூமி மீது விண் கற்கள் மோதுவது வழமையானதொன்றன ஆய்வாளர்கள் சுட்க்காட்டுகின்றனர்.
பிரபஞ்சத்திலிருந்து பூமி மீது மோதவரும் விண் கற்கள் தொடர்பில் ஆய்வு நடாத்துவதற்கு வருடாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் பாரிய பொருட்கள் பூமி மீது மோதுண்டதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடும் எனவும் பேர்ன் வானசாஸ்திர நிபுணர் இன்கோ லியா தெரிவித்துள்ளார்.எமது வாழ் காலத்தில் இவ்வாறானதோர் அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் சர்வதேச வானவியல் தினம் அனுஸ்டிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(நன்றி -swissinfo.ch)

பணவீக்கம் - நகைச்சுவைப் படங்கள்...

பணவீக்கம் ஏறிக்கொண்டே போகும் இந்த காலத்துக்கு ஏற்ற படங்கள் இவை...சற்று நகைச்சுவையாக இருக்கும். பார்த்து மகிழுங்கள் !!!

சாஃப்ட்வேர் துறையும்...வீட்டுக் கடன்களும்..

ரியல் எஸ்டேட் ஏற்றத்திற்கு சாஃப்ட்வேர் துறைதான் காரணம் என குற்றம் சாட்டப்படுவதுண்டு. லட்சக்கணக்கில் சம்பளம்..மாதத்தவணைப் பற்றி..கவலையில்லை என்பதால்..வங்கிகளும் கடனை வாரி வழங்கின.700 சதுர அடி வீடுகள் கட்டிய வீடுகட்டும் நிறுவனங்கள் மத்தியதரத்தினரை மறந்து..1000 சதுர அடிகளுக்கு மேல் ..கார் நிறுத்தும் வசதியுடன் அடுக்ககங்கள் கட்டின.ஒரு சதுர அடி 7000,8000 என விலை நிர்ணயித்தன.சாமான்யனுக்கு சொந்த வீடு என்பது கனவாய் போயிற்று. சரி..வாடகைக்கு வீடு..என்றாலும்..அவர்கள் எவ்வளவு வாடகை கொடுக்கவும் தயாராய் இருந்தனர்.சாதாரணமாக 3000 வாடகை இருந்த அதே இடம்..6000/7000 என வாடகைக் கேட்கப்பட்டது. ஆனால் இன்று...செய்துக்கொண்டிருக்கும் வேலை நம்பிக்கையானதாக இல்லை.பொருளாதார நெருக்கடி... பாதுகாப்பு இல்லை.,இன்று சம்பாதிக்கிறோம்..நாளை நிலை என்ன..என உறுதியாக கூறமுடியவில்லை. அமெரிக்காவில் வீட்டுக்கடன் வாங்கி..திருப்பச் செலுத்த முடியாதவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்...ரியல் எஸ்டேட் துறை..அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. நம் நாட்டில் என்ன நடக்கும் எனத் தெரியாது.ஆகவே நண்பர்களே...இன்று உங்களுக்கு சம்பளம் வருகிறது...அமைதியாக உட்கார்ந்து யோசியுங்கள். நாளை வேலை போனாலும்..இன்றியமையா தேவைகளான உணவுக்கு..சேமியுங்கள்..உடைக்கு சேமியுங்கள்.உறையுள் வேண்டாமா எனக் கேட்காதீர்கள்.அதுவும் அவசியம்..அதற்கு கணிசமாக..திட்டம் போட்டு சேமியுங்கள். வீட்டுக் கடன் வாங்காதீர்கள் இப்போது.நிலமை மாறும்..அப்போது அதில் நுழையலாம்.மீனுக்காக காத்திருக்கும் கொக்காய் இருங்கள்..சமயம் வரும்போது..மீனை கொத்தலாம். ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை..போகாறு அகலாக் கடை..என்ற வள்ளுவன் வாக்கின் படி நடங்கள்.நாளை நமதே..!!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com