Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

20 ஜனவரி 2009

கம்ப்யூட்டர் புலியா நீங்கள்? இந்தப் புதிர்களுக்கு விடை சொல்லுங்கள் பார்ப்போம்?

மைக்ரோசாப்ட் நிறுவத்தின் விண்டோஸ் மூலமே இன்று உலகின் பெரும்பாலான கணினிகள் இயங்கி வரும் சூழலில் விடை தெரியாத வினாக்கள் எத்தனயோ அந்த விண்டோசில் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் புதிர்களைப் பார்த்த போது எனக்கு ஆச்சர்யமாகவும் சுவையாகவும் இருந்தது. எத்தனை முறை சோதித்துப் பார்த்தாலும் இது போலவே நடந்தது. இதோ விண்டோசின் அந்தப் புதிர்களை உங்களுடன் பகிர்கிறேன், இந்தப் புதிர்களுக்கு உங்களுக்கு விடை தெரிகிறதா என்று பாருங்கள், புதிர் 1: கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் உள்ள ஏதாவதொரு டிரைவில் ஏதாவதொரு இடத்தில் "con" என்ற பெயரில் ஒரு போல்டர் உருவாக்க முடிகிறதா? என்று பாருங்கள். CON என்ற பெயர் அடைப்புக் குறிகள் எதுவும் இல்லாமல்? புதிர் 2: (1) நோட்பேட் ஒப்பன் செய்து கொள்ளுங்கள் (2) அதில் கீழே உள்ள இந்த டெக்ஸ்டை அப்படியே டைப் செய்யுங்கள். " bush hid the facts " ( வார்த்தைகளை அடைப்புக் குறிகள் இல்லாமல் ஆங்கில சிறிய எழுத்துகளில்(small letters) தட்டச்சு செய்யுங்கள். 3) பின்னர் அந்த டெக்ஸ்ட் பைலை நீங்கள் விரும்பும் எந்தப் பெயரிலும் எந்த இடத்திலும் சேவ் செய்து கொள்ளுங்கள். (3) நீங்கள் சேவ் செய்த அந்த பைலை ஒப்பன் செய்து பாருங்கள்.(4) நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட் என்ன ஆயிற்று? (5) எத்தனை முறை வேண்டுமானாலும் முயன்று பாருங்கள்!ஏன் இப்படி நடக்கிறது? புதிர் : 3 (1) மைக்ரோ சாப்ட் வேர்ட் ஒப்பன் செய்து கொள்ளுங்கள். (2) நியூ டாக்குமெண்ட் ஒப்பன் செய்து கொள்ளுங்கள் (3) அதில் கீழே உள்ள வார்த்தையை டைப் செய்யுங்கள்.=rand (200, 99) (4) பின்னர் என்டர் கீயைத் தட்டுங்கள் (5) என்ன நடக்கிறது என்று பாருங்கள் (6) கணினி ஹேங் ஆகிவிடவில்லை, அவசரப்படாமல் பொறுமையாகக் காத்திருங்கள், (7) கிட்டத்தட்ட 29 பக்ககளுக்கு தானாகவே சில வார்த்தைகள் டைப் செய்யப் பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறதா? (8) இப்போது உங்கள் பைலில் என்ன டைப் செய்யப் பட்டு உள்ளது என்று பாருங்கள். (9) இது ஏன் நடக்கிறது என்று யோசியுங்கள். இந்தப் புதிர்களுக்கான விடைகளை நான் யோசித்த போது, இணையத்தில் தேடிய போது எனக்கு மூன்றாவது புதிருக்கு மட்டும் விடை கிடைத்தது மைக்ரோசாப்ட் இணைய தளத்தில்.மற்றவற்றிற்கு உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் சொல்லுங்கள், எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com