
பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 : 1 அணி கைப்பற்றியது.
இன்று(24.01 .2009 ) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி இந்தப் போட்டியில்234 ஓட்டங்களினால் இலகுவாக வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஜம்பது ஓவர்களில் ஜந்து விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய சனத் வேகமாக அடித்தாட முற்பட்ட போது பதினாறாவது ஓவரில் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.இதில் ஜந்து பவுண்டரிகளும் ஒரு சிக்ஸ்சரும் அடங்கும்.அடுத்து வந்த சங்ககார டில்சனுடன் இணைந்து சிறப்பாக ஆடிய சங்ககரா 50 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்,அப்போது 33ஆவது ஓவரில் 182 ஓட்டங்களை இலங்கை பெற்றிருந்தது.பின்னர் வந்த வீரர் கண்டம்பியும் டில்சனுடன் இணைந்து வேகமாக ஓட்டங்களை பெறுகையில் கண்டம்பி32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் .இறுதி வரை ஆட்டமிழக்காத டில்ஷான் 137 ஓட்டங்களைப் பெற்றார்.இது இவரின் இரண்டாவது ஒருநாள் சதமாகும்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர் பார்ப்பை சிதறடித்து முதல்
ஒன்பது ஓவரிலேயே வெறும்
22ஓட்டங்களுக்கு
ஆறு விக்கெட்டுக்களை இழந்தது.பின்னர்
7 &
8 ஆவது விக்கெட்
68 ஓட்டங்களுக்கும்
9 ஆவது விக்கெட்
72 ஓட்ட
ங்களைப் பெற்ற போதும் வீழ்த்தப்பட்டது.பாகிஸ்தான் அணியினர்
23 ஆவது ஓவரில் வெறும்
75ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் குலசேகர ,துசார ,ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் முரளி இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் பெற்ற இரண்டு விக்கெட்டுக்களுடன் ஒருநாள் போட்டியில் முரளிதரன்500 விக்கெட்டுக்களைப் பெற்றுள்ளார்.
ஆட்டநாயகனாகவும் போட்டித்தொடர் நாயகனாகவும் திலகரட்ன டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.