அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தனது புதிய உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்தார்.இதன் பிரகாரம் www.whitehouse.gov இணையத்தளமானது அரசாங்கத்தில் புதிய சகாப்தம் ஒன்று ஏற்படுவதற்கான ஓர் அடையாளமாக மீள வடிவமைக்கப்பட்டுள்ளது.இது வாராந்த வீடியோ உரைகள், புகைப்படங்கள், நிறைவேற்றதிகார ஆணைகள், நியமனங்கள் தொடர்பான செய்திகளை உள்ளடக்கியுள்ளது.மேலும் இது ஜனாதிபதிக்கும் பொதுமக்களுக்குமிடையிலான உறவுகளை கட்டியெழுப்பும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவிலே மிகவும் இலகுவில் திறந்ததும் இலகுவில் அணுகக்கூடியதுமான நிர்வாகமொன்றை உருவாக்கப்போவதாக ஒபாமா வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக