Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

06 ஆகஸ்ட் 2009

பேஸ்மேக்கர் கருவியை ஐ-பாட் பாதிக்காது

இருதயத்தில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியிருப்போர் ஐ-பாட் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹோவர்டு பாஸன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.பல்வேறு ஐ-பாட்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டதில், பேஸ்மேக்கர் கருவிகளை பாதிக்கக்கூடிய அளவு மின்காந்த அலைகளை அவை உற்பத்தி செய்யவில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.மனித உடலில் சலைன் நிரப்பப்பட்ட பை மூலம், காயில் மூலமாக மின்காந்த அலைகளை உருவாக்கி ஹோவர்டும், அவரது குழுவினரும் சோதனை நடத்தினர்.4ம் தலைமுறை ஐ-பாட், வீடியோவுடன் கூடிய ஐ-பாட், ஐ-பாட் நானோ உள்ளிட்ட மாடல்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்த ஆய்வுகள் மூலம் ஐ-பாட்களால், இருதய பேஸ்மேக்கர் கருவிகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.ஐ-பாட் தவிர வேறு இசை உபகரணங்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆல் ரவுண்ட்' பூனம்!

எனக்கென்று எந்த இமேஜும் வந்து விடக் கூடாது என்பதில் படு கவனமாக இருக்கிறேன். அதனால்தான் கிளாமர், சீரியஸ் ரோல், காமெடி என கலந்து கலந்து நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் பூனம் பாஜ்வா. தெனாவெட்டு படம் மூலம் தமிழில் ஹிட் ஆனவர் பூனம். அதன் பின்னர் மறுபடியும் ஜீவாவுடன் இணைந்து கச்சேரி ஆரம்பம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு விஷ்ணுவுடன் இணைந்து துரோகி படத்திலும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இரு படங்களையும் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். தெலுங்கில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாராம். அதேசமயம், தமிழில் எந்தவித இமேஜுக்குள்ளும் மாட்டாத வகையில் தனது கேரக்டர்களை செலக்ட் செய்கிறாராம். கவர்ச்சியும் இருக்கும், சீரியஸ் பாத்திரமும் இருக்கும், காமெடியும் இருக்கும். இப்படி கலந்து நடிப்பதையே தமிழில் விரும்புகிறேன். தமிழில் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று யாரும் எனக்கு முத்திரை குத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். எப்படிப்பட்ட கேரக்டரிலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறேன். அப்படித்தான் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சியமும் கூட என்கிறார் பூனம்.

மெல்லிய லேப்-டாப்: ஆப்பிள் திட்டம்

சர்வதேச சந்தையில் தற்போதுள்ள லேப்-டாப்களை விட மெல்லிய, எடைகுறைந்த நவீன லேப்-டாப் கணினியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த மடிக்கணினியில் ஹார்ட்-டிஸ்க் பகுதிக்கு பதிலாக, ஆப்பிள் ஐ-போன்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் எடை மற்றும் தடிமன் பாதியாக குறையும் என கணினி தயாரிப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மடிக்கணினி விற்பனையில் அதிக ஆர்வமும், தீவிரமும் காட்டி வரும் ஆப்பிள் நிறுவனம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் 1.34 மில்லியன் மடிக்கணினிகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மடிக் கணினிகளின் எண்ணிக்கையை விட 37 சதவீதம் அதிகம் என ஆப்பிள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிவகாசி பட வசனம் - வருத்தம் தெரிவித்தார் விஜய்

சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலான வசனங்கள் இடம் பெற்றதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சினிமா என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா என்று கேட்டிருந்தது. இந்த நிலையில் விஜய் சார்பில் வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நான் வழக்கறிஞர்களுக்கு எதிரானவன் அல்ல. சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தால், அது வழக்கறிஞர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.

அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal (இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது)

http://linoj.do.amபொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும் வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project Natal என்று பெயர்.
இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்கலையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.
நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது. உண்மையிலேயே நம்பவே முடியவில்லை.

எனது முன்னாள் காதலரை மன்னித்து விட்டேன் - அம்மாவை மன்னிக்கவே மாட்டேன்: ராக்கி

எனக்கும், நான் சுயம்வரம் மூலம் தேர்ந்தெடுத்த எலேஷ் பருஜன்வாலாவுக்கும் இடையே நடக்கும் திருமணத்திற்கு அனைவரையும் அழைக்கப் போகிறேன்.
எனது முன்னாள் காதலர் அபிஷேக் அவஸ்திக்கும் நிச்சயம் அழைப்புண்டு. ஆனால் எனது தாயாரை மட்டும் நான் அழைக்கப் போவதில்லை என்று கூறுகிறார் ராக்கி சாவந்த். இந்திய திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக, சுயம்வரம் நடத்தி தனது மணாளனை தேர்வு செய்துள்ளார் ராக்கி சாவந்த். படு கோலாகலமாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மாலை போட்டு எலேஷை தனது மணமகனாக தேர்வு செய்துள்ளார் ராக்கி. சுயம்வரம் முடிந்த அன்றே திருமணமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. திருமணத்தைக் காண ராக்கியின் முன்னாள் காதலர் அவஸ்தியும் வந்திருந்தார். ஆனால் எலேஷ் , ராக்கியுடன் நன்கு பழகிப் புரிந்து கொள்ள அவகாசம் கேட்டதால் நிச்சயதார்த்தத்தை மட்டும் முடித்துக் கொண்டு திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர். அவஸ்தியின் வருகை குறித்து ராக்கி கூறுகையில், நான் அவஸ்தியை முற்றிலும் மன்னித்து விட்டேன். அவர் வந்திருந்தார் என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டு போய் விட்டேன். அவர் வந்தது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் அவரை வரவேற்றிருப்பேன். நேற்று வரை அவர் எனது காதலர். இன்று அவர் எனது நல்ல நண்பர் என்றார் ராக்கி. ஆனால் தனது தாயாரை மட்டும் மன்னிக்கவே மாட்டாராம் ராக்கி. இதுகுறித்து கூறுகையில், எனது தாயாரைப் பற்றி மட்டும் கேட்காதீர்கள். அவரால் நான் நிறைய அவஸ்தைப்பட்டு விட்டேன். அவரால் ஏற்பட்ட வலியை மறக்க முயலுகிறேன். நிச்சயம் அவரை நான் திருமணத்திற்கு அழைக்கப் போவதில்ல என்றார் கோபமாக. திருமணத்திற்குப் பின்னர் கனடாவில் செட்டிலாகும் எண்ணம் ராக்கியிடம் இல்லையாம். எலேஷ் கனடாவில்தான் தொழில் புரிந்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம். எனக்கென்று இங்கு ஒரு தொழில் உள்ளது. அதை நான் பார்க்க வேண்டும். எனக்காக வாழ ஆர்வமாக உள்ளவர் எலேஷ். எனவே அவர்தான் எப்படி இதை மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும் என்கிறார் புன்னகையுடன். டோரன்டோவில் எலேஷின் சகோதரிக்கு கல்யாணம் நடைபெறவுள்ளதாம். அதற்கு எலேஷுடன் ஜோடியாக கலந்து கொள்ளப் போகிறாராம் ராக்கி.

தபு-ஸ்ரீதேவியை 'கேட்கும்' தனுஷ்!

மாப்பிள்ளை படத்தில் ரஜினியின் மாமியார் மற்றும் வில்லியாக வந்து நல்ல பெயரைத் தட்டிச் சென்றவர் காலம் சென்ற ஸ்ரீவித்யா. இப்போது அந்தப் படத்தை தனுஷ் ரீமேக் செய்கிறார் அல்லவா... அதில் ஸ்ரீவித்யா வேடத்தில் நடிக்க படா படா நடிகைகளுக்கு வலைவீசி வருகிறார்களாம் படக்குழுவினர். தனுஷுக்கு, இந்த வேடத்தில் முன்னாள் கவர்ச்சி ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என ஆசையாம். தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக் மூலம் ஸ்ரீதேவியை சம்மதிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் ஒப்புக் கொள்ளவில்லையாம். இதைத் தொடர்ந்து, தபுவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க பெரும் முயற்சி நடக்கிறது. முதிர்கன்னி தோற்றம் வந்துவிட்டாலும், நடித்தால் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் தபுவை ரொம்ப கஷ்டப்பட்டு ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்கள். 'படத்தில் கதாநாயகிகூட டம்மிதான்... நீங்கள்தான் மெயின்' என்றெல்லாம் பொய் சொல்ல வேண்டியதாகிவிட்டதாம் (விட்டால் தனுஷோடு டூயட் இருக்கு என்று கூட சொல்வார்கள் போல!). ஆனாலும், சம்பள விஷத்தில் அவர் கேட்ட தொகையைக் கேட்டு திக்கென்றாகிவிட்டதாம் ஜபக்குக்கு. 'போய் லட்டர் போடுகிறோம்' என்று பெண் வீட்டாரிடம் சொல்வதுபோல சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார்களாம். தனுஷ் மாமியாரா நடிக்கிறது ரொம்ப காஸ்லி சமாச்சாரம் போல!.

'தம்பி வைரமுத்து...' முக அழகிரி பாசம்!

மதுரை தமுக்கம் மைதானத்தில் வைரமுத்துவின் திரைப்பாட்டு திருவிழா எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் முக அழகிரி பங்கேற்றார். வைரமுத்துவைப் பாராட்டிப் பேசிய அவர் கூறியதாவது: சென்னையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்துவின் திரை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஒரு தம்பி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் இன்னொரு தம்பி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். நான் பழைய பாடல்களை விரும்பி கேட்பவன். புகழ் பெற்ற பழைய கவிஞர்கள் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், ஜி.ராமநாதன், கண்ணதாசன் போன்ற வர்களின் பாடல்களை ரசித்து கேட்பேன். இவர்களின் மொத்த உருவமாக வைரமுத்து இருக்கிறார். தமிழ்திரை உலகத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் சேவை தொடர்ந்து தேவை, என்று பாராட்டினார். வைரமுத்து பேசுகையில், அண்ணன் மு.க. அழகிரி மதுரைக்கு மட்டுமல்ல, மக்களுக்கே காவலன் என்று பாராட்டினார். தொடர்ந்து பேசுகையில், தன்னுடைய சின்னச் சின்ன ஆசைகள் பாடல்தான் ஏஆர் ரஹ்மானை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதாகக் குறிப்பிட்டார்.

04 ஆகஸ்ட் 2009

ஜகன்மோகினி ஆடியோ-மதுரையில் வெளியீடு!

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ஜகன்மோகின் படத்தின் ஆடியோவை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டார். நமீதா நடித்துள்ள இந்தப் படம் எண்பதுகளில் ஜெயமாலினி நடிப்பில் வெளியான ஜெகன்மோகனியின் ரீமேக். என் கே விஸ்வநாதன் இயக்கியுள்ளார். ராஜா, நிலா, வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு மதுரையில் நடந்தது. இதன் துவக்க விழாவையும் மதுரையில் வைத்து அழகிரிதான் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விஸ்வநாதன், தயாரிப்பாளர்கள் ராம நாராயணன், முரளி, சீனிவாசன், சித்ரா லட்சுமணன், சுரேஷ், நடிகர் வடிவேலு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சங்கடமான புகைப்படங்களின் தொகுப்பு

இண்டெர்நெட்டில் த‌டுக்கி விழுந்தால் அசாத‌ர‌ண‌மான‌ புகைப்ப‌ட‌ங்க‌ளின் தொகுப்புக‌ளை பார்க்க‌லாம்.வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்கும் இத்த‌கைய‌ புகைப்ப‌டங்க‌ளுக்கு இணைப்பு கொடுப்ப‌திலும் தொகுப்பாக‌ வெளியிடுவ‌திலும் பெரும் ஆர்வ‌ம் இருக்கிற‌து.அப்ப‌டியே இ‍ மெயில் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு த‌ட்டி விடுவ‌தும் ப‌ல‌ருக்கு வாடிக்கையாக‌ உள்ள‌து.

anonymous-awkwardfampho-730x1024

ஒரு ந‌ல்ல‌ புகைப்ப‌டத்தை ர‌சிப்ப‌து ம‌கிழ்ச்சிக்கு உரிய‌தாக‌வும் ப‌டிப்ப‌தைவிட‌ பார்த்து ர‌சிப்ப‌து சுல‌ப‌மாக‌ இருப்ப‌தாலும் புகைப்ப‌ட‌ங்க‌ளுக்கு எப்போதுமே அதிக‌ வ‌ர‌வேற்பு கிடைத்துவிடுகிற‌து.

புகைப்படங்கள் பல வகைப்பட்டதாக இருக்கின்றன.ஒரு சில படங்கள் பார்த்ததும் மெலிதாக புன்னகைக்க வைக்கலாம். இன்னும் சில விழுந்து விழுந்து சிரிக்க வைக்கலாம்.சில நினைத்து நினைத்து சிரிக்க வைக்கலாம்.இத்த‌கைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை சேக‌ரித்து வெளியிடும் வ‌லைப்ப‌திவு ஒன்று இணைய‌ உல‌கில் குறுகிய‌ கால‌த்தில் அமோக‌ வெற்றி பெற்று முன்ன‌ணி அந்தஸ்த்தை பெற்றுள்ள‌து.

ஆக்வ‌ர்டுபேமலிபோட்டோஸ் என்னும் அந்த‌ த‌ள‌ம் அடிப்ப‌டையில் ச‌ங்க‌ட‌ம் த‌ர‌க்கூடிய‌ வ‌கையான‌ புகைப்பங்க‌ளை வெளியிடுகின்ற‌து.

உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் சற்றே வயதான மணமகள் கையில் பூங்கொத்தோடு மணமகன் மீது அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.இன்னொரு படத்தில் மூன்று பெண்கள் மற்றவர்களின் பாக்கெட்டில் தங்கள் கையை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இப்ப‌டி எல்லா ப‌ட‌ங்க‌ளுமே புன்ன‌கைக்க‌வோ ,சிரிக்க‌வோ செய்ய‌க்கூடிய‌தாக‌ இருக்கின்ற‌ன‌. எல்லா ப‌ட‌ங்க‌ளுமே திட்ட‌மிட‌ப்ப‌ட‌மல் இய‌ல்பான‌ சூழ்நிலையில் எடுக்க‌ப்ப‌ட்டு தற்செய‌லாக இத்த‌ன்மையை பெற்ற‌வை.அனைத்தும் குடும்பம் சார்ந்தவை. இவை பெரும்பாலும் ச‌மம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ்ர்க‌ளாலேயே ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌ட்ட‌வை.

இந்த படங்களுடன் கொடுக்கப்படும் கிண்டலான புகைப்பட குறிப்புகள் அவற்றின் ரசிப்புத்தன்மையை பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.

அமெரிக்காவைச்சேர்ந்த மைக் பென்டர் மற்றும் டவுக் செர்னாக் ஆகிய இரண்டு நண்பர்களுமாக சேர்ந்து இந்த தளத்தை நடத்தி வருகின்றனர்.

ஒரு நாள் இருவ‌ரும் த‌ங்க‌ள் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள‌து க‌தைக‌ளை பேசிக்கொண்டிருந்த‌ன‌ர். இந்த‌ க‌தைக‌ளின் ந‌கைச்சுவை த‌ன்மை அவ‌ர்க‌ளை வ‌யிறு குலுங்க‌ சிரிக்க‌ வைத்த‌ன‌.அப்போது தான‌ குடும்ப‌ம் சார்ந்த‌ ந‌கைச்சுவையில் வைய‌ம் த‌ழுவிய‌ பொதுத‌ன்மை இருப்ப‌தை புரிந்துகொண்ட‌ன‌ர்.

இந்த‌ உண‌ர்வை புகைப்ப‌ட‌ங்க‌ள் மிக‌ அருமையாக‌ உண‌ர்த்த‌க்கூடும் என‌ நினைத்த‌ன‌ர்.இவ‌ற்றை ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு ப‌கிர்ந்துகொள்ள‌வும் விரும்பின‌ர். உட‌னே கூகுலில் இத்த‌கைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை தேடிப்பார்த்த‌ன‌ர்.ம‌ர‌த்தில் ஒரு குடும்ப‌ம் இருப்ப‌து போன்ற‌ ப‌ட‌ம் க‌ன்ணில் ப‌ட்ட‌து. அந்த‌ ப‌ட‌த்தின் விநோத‌ த‌ன்மை ம‌ற்றும் ந‌கைச்சுவை அம்ச‌ம் ப‌ளிச்சென‌ க‌வ‌ர்ந்த‌து.

அந்த நிமிட‌த்தில் இது போன்ற‌ ப‌ட‌ங்க‌ளை சேக‌ரித்து வெளியிட‌ ஒரு வ‌லைப்ப‌திவை துவ‌ங்க‌ முற்ப‌ட்ட‌ன‌ர்.இப்ப‌டி பிற‌ந்த‌து தான் ஆக்வ‌ர்டுபேமலிபோட்டோஸ் த‌ள‌ம்.

சங்க‌ட‌த்தை ப‌கிர்ந்து கொள்வோம் என்னும் வாசக‌த்தோடு விநோத‌மான‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌வும் அழைப்பு விடுத்த‌ன‌ர்.பல‌ரும் விரும்பி குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொண்ட‌தோடு ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் அதிக‌ அள‌வில் வ‌ந்து பார்த்து ர‌சித்த‌ன‌ர்.

விளைவு ஒரே மாத‌த்தில் தள‌த்திற்கு வ‌ருகை த‌ருப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை லட்ச‌க்கண‌க்கில் அதிக‌ரித்த‌து.

இதனிடையே வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இந்த தளம் பற்றி குறிப்பிடப்பட பார்வையாலர்கலின் எண்ணிக்கை மேலும் அதிகரித்த‌து.இத்தனை குறுகிய காலத்தில் ஒரு வலைப்பதிற்கு இத்த‌னை பெரிய வரவேற்பு கிடைப்பது பெரிய விஷயம் தான்.

இதில் இடம்பெற்றுள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் வந்துள்ள நநூற்றுக்கணக்கான பின்னுட்டங்க்களை பார்த்தாலே இவை எந்த அளவுக்கு ரசிக்கப்படுகின்றன என புரிந்துகொள்ளலாம்.

இதில் சமர்பிக்கப்படும் பட‌ங்கள் தொடர்பாகவும் சுவையான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளனவாம். ஒரு சிலர் பிரசவ காட்சிகளை எல்லாம் கூட சம்ர்பிக்கின்றனராம். ஒரு சிலர் சம‌ர்பித்துவிட்டு பின்னர் அதனை வில்ல்க்கிவிட கோருகின்றனராம்.ச‌மீபத்தில் ஒரு பெண்மணி தான் அனுப்பிய படம் குடிபோதையில் அனுப்பியது என கூறி அதை எடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டாராம்.

இப்ப‌டி நிறைய‌வே சுவையான‌ அனுப‌வ‌ங்க‌ள் இருப்ப‌தால் மைக் ம‌ற்றும் அவ‌ர‌து ந‌ண்ப‌ருக்கு இந்த‌ த‌ள‌ம் ப‌ற்றி புத்த்க‌ம் எழுதும் வாய்ப்பு தேடி வ‌ந்திருக்கிற‌து.

வலைப்பதிவு மூலம் புகழ்பெற்றதோடு புத்தகம் எழுதும் பெற்ற பதிவர்களின் பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ள‌னர். மைக் ஒரு திரைக்க‌தை ஆசிரிய‌ர் என்ப‌தால் இந்த‌ வாய்ப்பால் அக‌ம‌கிழ்ந்து போயிருக்கிறார்.

—-

link; http://awkwardfamilyphotos.com/

சங்கடமான புகைப்படங்களின் தொகுப்பு

இண்டெர்நெட்டில் த‌டுக்கி விழுந்தால் அசாத‌ர‌ண‌மான‌ புகைப்ப‌ட‌ங்க‌ளின் தொகுப்புக‌ளை பார்க்க‌லாம்.வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளுக்கும் இத்த‌கைய‌ புகைப்ப‌டங்க‌ளுக்கு இணைப்பு கொடுப்ப‌திலும் தொகுப்பாக‌ வெளியிடுவ‌திலும் பெரும் ஆர்வ‌ம் இருக்கிற‌து.அப்ப‌டியே இ‍ மெயில் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு த‌ட்டி விடுவ‌தும் ப‌ல‌ருக்கு வாடிக்கையாக‌ உள்ள‌து.

anonymous-awkwardfampho-730x1024

ஒரு ந‌ல்ல‌ புகைப்ப‌டத்தை ர‌சிப்ப‌து ம‌கிழ்ச்சிக்கு உரிய‌தாக‌வும் ப‌டிப்ப‌தைவிட‌ பார்த்து ர‌சிப்ப‌து சுல‌ப‌மாக‌ இருப்ப‌தாலும் புகைப்ப‌ட‌ங்க‌ளுக்கு எப்போதுமே அதிக‌ வ‌ர‌வேற்பு கிடைத்துவிடுகிற‌து.

புகைப்படங்கள் பல வகைப்பட்டதாக இருக்கின்றன.ஒரு சில படங்கள் பார்த்ததும் மெலிதாக புன்னகைக்க வைக்கலாம். இன்னும் சில விழுந்து விழுந்து சிரிக்க வைக்கலாம்.சில நினைத்து நினைத்து சிரிக்க வைக்கலாம்.இத்த‌கைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை சேக‌ரித்து வெளியிடும் வ‌லைப்ப‌திவு ஒன்று இணைய‌ உல‌கில் குறுகிய‌ கால‌த்தில் அமோக‌ வெற்றி பெற்று முன்ன‌ணி அந்தஸ்த்தை பெற்றுள்ள‌து.

ஆக்வ‌ர்டுபேமலிபோட்டோஸ் என்னும் அந்த‌ த‌ள‌ம் அடிப்ப‌டையில் ச‌ங்க‌ட‌ம் த‌ர‌க்கூடிய‌ வ‌கையான‌ புகைப்பங்க‌ளை வெளியிடுகின்ற‌து.

உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் சற்றே வயதான மணமகள் கையில் பூங்கொத்தோடு மணமகன் மீது அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.இன்னொரு படத்தில் மூன்று பெண்கள் மற்றவர்களின் பாக்கெட்டில் தங்கள் கையை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இப்ப‌டி எல்லா ப‌ட‌ங்க‌ளுமே புன்ன‌கைக்க‌வோ ,சிரிக்க‌வோ செய்ய‌க்கூடிய‌தாக‌ இருக்கின்ற‌ன‌. எல்லா ப‌ட‌ங்க‌ளுமே திட்ட‌மிட‌ப்ப‌ட‌மல் இய‌ல்பான‌ சூழ்நிலையில் எடுக்க‌ப்ப‌ட்டு தற்செய‌லாக இத்த‌ன்மையை பெற்ற‌வை.அனைத்தும் குடும்பம் சார்ந்தவை. இவை பெரும்பாலும் ச‌மம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌வ்ர்க‌ளாலேயே ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌ட்ட‌வை.

இந்த படங்களுடன் கொடுக்கப்படும் கிண்டலான புகைப்பட குறிப்புகள் அவற்றின் ரசிப்புத்தன்மையை பல மடங்கு உயர்த்தி விடுகின்றன.

அமெரிக்காவைச்சேர்ந்த மைக் பென்டர் மற்றும் டவுக் செர்னாக் ஆகிய இரண்டு நண்பர்களுமாக சேர்ந்து இந்த தளத்தை நடத்தி வருகின்றனர்.

ஒரு நாள் இருவ‌ரும் த‌ங்க‌ள் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள‌து க‌தைக‌ளை பேசிக்கொண்டிருந்த‌ன‌ர். இந்த‌ க‌தைக‌ளின் ந‌கைச்சுவை த‌ன்மை அவ‌ர்க‌ளை வ‌யிறு குலுங்க‌ சிரிக்க‌ வைத்த‌ன‌.அப்போது தான‌ குடும்ப‌ம் சார்ந்த‌ ந‌கைச்சுவையில் வைய‌ம் த‌ழுவிய‌ பொதுத‌ன்மை இருப்ப‌தை புரிந்துகொண்ட‌ன‌ர்.

இந்த‌ உண‌ர்வை புகைப்ப‌ட‌ங்க‌ள் மிக‌ அருமையாக‌ உண‌ர்த்த‌க்கூடும் என‌ நினைத்த‌ன‌ர்.இவ‌ற்றை ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு ப‌கிர்ந்துகொள்ள‌வும் விரும்பின‌ர். உட‌னே கூகுலில் இத்த‌கைய‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை தேடிப்பார்த்த‌ன‌ர்.ம‌ர‌த்தில் ஒரு குடும்ப‌ம் இருப்ப‌து போன்ற‌ ப‌ட‌ம் க‌ன்ணில் ப‌ட்ட‌து. அந்த‌ ப‌ட‌த்தின் விநோத‌ த‌ன்மை ம‌ற்றும் ந‌கைச்சுவை அம்ச‌ம் ப‌ளிச்சென‌ க‌வ‌ர்ந்த‌து.

அந்த நிமிட‌த்தில் இது போன்ற‌ ப‌ட‌ங்க‌ளை சேக‌ரித்து வெளியிட‌ ஒரு வ‌லைப்ப‌திவை துவ‌ங்க‌ முற்ப‌ட்ட‌ன‌ர்.இப்ப‌டி பிற‌ந்த‌து தான் ஆக்வ‌ர்டுபேமலிபோட்டோஸ் த‌ள‌ம்.

சங்க‌ட‌த்தை ப‌கிர்ந்து கொள்வோம் என்னும் வாசக‌த்தோடு விநோத‌மான‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌வும் அழைப்பு விடுத்த‌ன‌ர்.பல‌ரும் விரும்பி குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொண்ட‌தோடு ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் அதிக‌ அள‌வில் வ‌ந்து பார்த்து ர‌சித்த‌ன‌ர்.

விளைவு ஒரே மாத‌த்தில் தள‌த்திற்கு வ‌ருகை த‌ருப‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை லட்ச‌க்கண‌க்கில் அதிக‌ரித்த‌து.

இதனிடையே வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இந்த தளம் பற்றி குறிப்பிடப்பட பார்வையாலர்கலின் எண்ணிக்கை மேலும் அதிகரித்த‌து.இத்தனை குறுகிய காலத்தில் ஒரு வலைப்பதிற்கு இத்த‌னை பெரிய வரவேற்பு கிடைப்பது பெரிய விஷயம் தான்.

இதில் இடம்பெற்றுள்ள படங்கள் ஒவ்வொன்றுக்கும் வந்துள்ள நநூற்றுக்கணக்கான பின்னுட்டங்க்களை பார்த்தாலே இவை எந்த அளவுக்கு ரசிக்கப்படுகின்றன என புரிந்துகொள்ளலாம்.

இதில் சமர்பிக்கப்படும் பட‌ங்கள் தொடர்பாகவும் சுவையான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளனவாம். ஒரு சிலர் பிரசவ காட்சிகளை எல்லாம் கூட சம்ர்பிக்கின்றனராம். ஒரு சிலர் சம‌ர்பித்துவிட்டு பின்னர் அதனை வில்ல்க்கிவிட கோருகின்றனராம்.ச‌மீபத்தில் ஒரு பெண்மணி தான் அனுப்பிய படம் குடிபோதையில் அனுப்பியது என கூறி அதை எடுத்துவிடுமாறு கேட்டுக்கொண்டாராம்.

இப்ப‌டி நிறைய‌வே சுவையான‌ அனுப‌வ‌ங்க‌ள் இருப்ப‌தால் மைக் ம‌ற்றும் அவ‌ர‌து ந‌ண்ப‌ருக்கு இந்த‌ த‌ள‌ம் ப‌ற்றி புத்த்க‌ம் எழுதும் வாய்ப்பு தேடி வ‌ந்திருக்கிற‌து.

வலைப்பதிவு மூலம் புகழ்பெற்றதோடு புத்தகம் எழுதும் பெற்ற பதிவர்களின் பட்டியலில் இவர்களும் சேர்ந்துள்ள‌னர். மைக் ஒரு திரைக்க‌தை ஆசிரிய‌ர் என்ப‌தால் இந்த‌ வாய்ப்பால் அக‌ம‌கிழ்ந்து போயிருக்கிறார்.

—-

link; http://awkwardfamilyphotos.com/

பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற

நண்பர்களே தொடர்ந்து வேலைகள் அதிகரித்து வருவதால் முன்னெப்போதும் போல் தொடர்ந்து எழுத முடியவில்லை என்னை மன்னித்து உங்கள் ஆதரவை எப்போழுதும் தர வேண்டுகிறேன். ஹுலு என்ற இணையத்தளத்தை தெரியாதவர்கள் இணையத்தில் இருக்கவே முடியாது. தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். இந்த தளத்தில் யூட்யூப் போன்றே நிறைய வீடியோக்கள் உள்ளது. அது மட்டுமில்லை டிவியில் ஒளிபரப்பாகும் ஆங்கில சீரியல்கள் முழு திரைப்படங்கள் அனைத்தும் உயர்தரத்தில் உள்ளது.

இந்த தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதன் மென்பொருள் பெயர் ஹுலு வீடியோ டவுண்லோடர் இந்த மென்பொருள் மூலம் தரவிறக்கும் வீடியோக்களை எம்பெக் 2, ஏவிஐ (MPEG 2) AVI) போன்ற கோப்புகளாக மாற்றி தரக்கூடிய வல்லமையுடையது ஓலிகளை தேட உங்கள் பவர்பாயிண்ட் பிரசன்டேசன்களில் பின்புல இசை கொடுக்க நீங்கள் புதிய இசையை தேடுபவரா நீங்கள் இங்கே செல்லுங்கள். இந்த தளத்தில் எந்தவித இசையாக இருந்தாலும் சரி ஒலியாக இருந்தாலும் சரி இங்கு கட்டாயம் கிடைக்கும். எந்தவித ஒலிக்கள் இங்கு உள்ளன என்பதை இவர்கள் இங்கு வரிசைப்படுத்திருக்கிறார்கள் சுட்டி இணையத்தள சுட்டி
பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற
நீங்கள் வைத்திருக்கும் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றி யூட்யுபில் வெளியிட ஆசையா உங்களுக்கு இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றி தரும். பிறகு நேரடியாக யூட்யுப் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்து நீங்கள் மாற்றி வைத்திருக்கும் வீடியோ கோப்பை பதிவேற்றுங்கள் முடிந்தது. இனி உங்கள் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக யூட்யூபில் பார்க்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்.

எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது:சத்யராஜ்

புரட்சித்தமிழன் சத்யராஜ், ‘சினம்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக விழாவில், நடிகர் சத்யராஜ் பேசினார்.

’’எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் படத்தில் வரும் ’ஆடலுடன் பாடலைக்கேட்டு’ என்ற பாடலை, இந்த படத்துக்காக `ரீமிக்ஸ்' செய்து இருக்கிறார்கள்.

ரீமிக்ஸ் செய்வது தவறு அல்ல. அதன்மூலம் பழைய தலைமுறை நடிகர்களின் பாடலை, இப்போது உள்ள இளைய தலைமுறைகள் கேட்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

இளைய தலைமுறை ரசிகர்கள் மத்தியில், ரீமிக்ஸ் பாடல்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அதேபோல் பழைய படங்களை மீண்டும் தயாரிப்பதும் தவறான விஷயம் அல்ல. அந்த காலத்தில் பி.யு.சின்னப்பா நடித்த `உத்தம புத்திரன்' படத்தை மீண்டும் தயாரித்தபோது, சிவாஜி நடித்தார்.

பில்லா' படத்தை மீண்டும் தயாரித்தபோது, அஜீத் நடித்தார். இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.

நான், எம்.ஜி.ஆர். நடித்த பாடலுக்கு ஆடியிருப்பது, ஒரு ஆசைக்காகத்தான். அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வது மாதிரி. எம்.ஜி.ஆர். பாடலுக்கு ஆடுவதால், அவரைப்போல் ஆகிவிடமுடியாது. இந்த உலகத்துக்கு ஒரே சூரியன், ஒரே சந்திரன்.

அதேபோல் ஒரே எம்.ஜி.ஆர். இனிமேல் எந்த நடிகரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது’’என்று பேசினார்.

கோமா நிலையிலிருந்த பெண்ணை பிழைக்க வைத்தது என் காமெடி - வடிவேலு பேட்டி

சேலத்தில் விபத்தில் அடிபட்டு கோமா நிலையிலிருந்த ஒரு பெண்ணை எனது நகைச்சுவை காட்சிகள் சுயநினைவுக்கு திருப்பியிருக்கு...", என்கிறார் வைகைப் புயல் வடிவேலு. ஆர் கே நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் அழகர் மலை. இந்தப் படத்தில் நகைச்சுவையில் கலக்கியுள்ளாராம் வடிவேலு. ஒரு காட்சியில் அவர் டெர்மினேட்டர் படத்தில் வரும் அர்னால்டு கெட்டப்பிலும் வருகிறாராம். வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. அதையொட்டி சென்னையில் வடிவேலு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி (போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாக வந்தவர், அனைவரிமும் தனது பாணியில் வருத்தம் தெரிவித்துவிட்டு அளித்தது...): அழகர் மலையில் உங்கள் வேடம் பற்றிச் சொல்லுங்கள்... எல்லா படங்களுக்குமே நான் உதவியாக இருக்க வேண்டும் என்று தான் உழைக்கிறேன். சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு போய் எதையும் யோசிக்கிறேன் என்று சொல்லி தயாரிப்பாளர்களின் காசை விரயம் செய்வதில் எனக்கு சம்மதம் இல்லை. நாளைக்கு சுடுகின்ற தோசைக்கு முந்திய நாளே மாவை தயார் செய்து விட வேண்டும். அப்போது தான் தோசை `ருசியாக' இருக்கும். அது மாதிரி என் படங்களில் காமெடி சீனுக்காக முந்திய நாளே தயார் ஆகிறேன். அழகர்மலையில் எனக்கு தனியான காமெடி ட்ராக் கிடையாது. கதையோடு வரும் காமெடி இது. ஆர்கேவுக்கு நான்தான் இதில் தாய்மாமன். படம் முழுக்க வர்றேன். உங்க வயித்து வலிக்கு நான் கியாரண்டி. எல்லாம் அவன் செயல் படத்தை விட இரண்டு மடங்கு இந்தப் படத்தில் எங்க கூட்டணி ஒர்க் அவுட் ஆகும்... தொடர்ந்து அடிவாங்கும் நகைச்சுவை காட்சிகளிலேயே நடிக்கிறீர்களே? அடிவாங்குவது வடிவேலு இல்லை. வடிவேலை அடிக்க முடியாது. கதாபாத்திரம் தான் அடிவாங்குகிறது. நான் அடிவாங்குகிறேனா? இல்ல சாக்கடையில் விழுகிறேனா? என்பது முக்கியமல்ல. மக்கள் சிரிக்கிறார்களா? என்பதுதான் முக்கியம். அடிவாங்குகிற காட்சியாக இருந்தாலும், அதில் யாரும் யோசிக்காத விஷயங்களை கொண்டு வரவேண்டும். திரும்ப வருகிற மாதிரியான காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்பது தான் என் நோக்கம். புது அடிவாங்குகிற காட்சிக்காக `ரூம்' போட்டு யோசிக்கிறோம் அப்பு.... சும்மா இல்ல!! நகைச்சுவை நடிப்பில் தொடர்ந்து வித்தியாசம் காட்ட முடியுமா? நான் அரை 'டவுசர்' போட்டு நடித்தவன். இப்போது, அரசர் வேடம் வரைக்கும் வந்து விட்டேன். இதை விட வேறு என்ன வேண்டும். சொல்வதற்கு நிறைய காமெடி இருக்கிறது. எல்லாவற்றையும் மக்கள் கிட்டேயிருந்து தான் எடுக்கிறேன். அவர்களை விட்டு தள்ளிப்போயிட்டா வேறு எவனுக்கோ காமெடி பன்றாங்கண்னு சிரிக்காமல் இருந்துடுவாங்க... அதனாலதான் நீங்க பேச,சிரிக்க நினைக்கிற விஷயங்களை தேடிப்பிடிக்கிறேன். உங்களோட இருந்த சில நடிகர்கள் இப்போது உங்கள் பக்கம் இல்லை என்கிறார்களே? அவங்களும் வரணுமில்லை... இப்போ அவங்க தெரிஞ்ச முகமாகிட்டாங்க. வேற வேற படங்களில் நடிக்க வாய்ப்பு வருது, போய் பண்றாங்க. இப்போ நிறைய புதுமுகங்களோடும், புதிய நகைச்சுவை காட்சிகளோடும் நான் போய் கொண்டிருக்கிறேன். வெரைட்டி வேணும்ல... கதாநாயகனாக நடிக்க நிறையபேர் வருகிறார்கள். ஆனால், நகைச்சுவை நடிகராக ஆசைப்பட்டு அதிகமாக வருவது இல்லையே, ஏன்? கதாநாயகனாக அடி-தடி, காதல் காட்சிகளில் இறங்குவது ஈஸி. ஆனால், சிரிக்க வைக்கிறது கஷ்டம். காமெடியை நீங்கள், நான் யார் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால், காமெடி பண்றது கஷ்டம். அது கூட காரணமாக இருக்கலாம். அழகர் மலையில் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? அய்யா... என் காமெடிக்குன்னு ஒரு கூட்டம் இருக்கா இல்லியா... அந்தக் கூட்டம் வரணுமின்னு என்னோட போட்டோவப் போடறது ஒரு தப்பாய்யா... அழகர் மலையில் அதிரடி காமெடி தர்பார் நடத்தியிருக்கோம். சமீபத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவம்? சேலத்தைச் சோ்ந்த ஒரு குழந்தை விபத்தில் சிக்கி கோமா ஸ்டேஜிலிருந்துருக்கு. அப்போ என்னோட காமெடியை டிவில போட்டுக் காட்டி, குழந்தையை சுய நினைவுக்கு கொண்டு வந்து குணப்படுத்தினாங்களாம். உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போச்சுய்யா... அந்தப் பெண் இப்போ நல்லா இருக்காம். இதுக்குமேல நம்ம காமெடிக்கு வேற என்ன பெருமை வேணும்... காமெடிக்கு இப்போது முன்பை விட அதிக முக்கியத்துவம் உள்ளதே... தனி சேனல் ஆரம்பிக்கிற அளவுக்கு நகைச்சுவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. காமெடி இப்போது தேவையான மருந்து. காமெடி இல்லாமல் சினிமா இல்லை, என்றார் வடிவேலு. பேட்டியின்போது படத்தின் நாயகன் ஆர்கே, நாயகி பானு, மக்கள் தொடர்பாளர் ஜான் ஆகியோர் உடனிருந்தனர்.

தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் இந்திய செல்போன் நிறுவனங்கள்?

" வர மாமியா கழுத மாதிரி போன கதையா "இருக்கு இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தரும் சேவைகள். தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருகிறது என்று கடுப்பை கிளப்பும் செய்திகளை படிக்கும் போது நமக்கு கோபம் தான் வருகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சிறந்த சலுகைகளை அளிப்பதன் மூலமே அது மக்களை போய் முழுமையாக சேரும். ஆனால் இந்திய மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனங்களோ ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருந்த சேவைகளை முழுமையாக நிறுத்தி விட்டு வாடிக்கையாளர்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை புடுங்கும் வேலையில் முமுரமாக இறங்கி விட்டன. உதாரணமாக "ஜி.பி.ஆர்.எஸ்" சொல்லப்படுகிற மொபைல் வழியாக இணையதளப் பயன்பாட்டு சேவையில் இந்திய மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பயங்கரமாக கொள்ளையடித்து வருகின்றன. மிக அதிக வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு முதல் இடத்தில் இருந்து வரும் airtel நிறுவனம் தனது ஜி.பி.ஆர்.எஸ் சேவையில் முன்பு அளவற்ற பயன்பாட்டை தந்து வந்தது. அதாவது கட்டண திட்டம் இப்படி இருந்தது: 1 day gprs pack - 20 rupees (unlimited) 1 week gprs pack - 75 rupees (unlimited) 1 month gprs pack - 375 rupess (unlimited) என்று இருந்த பயன்பாட்டுக் கட்டணம் இப்போது இப்படி ஆகிவிட்டது: Daily rental basic pack @Rs.10/day & enjoy 3MB Free, post free usage charges are 20p/50KB. Daily rental premium pack @Rs.20/day & enjoy 8MB Free,post free usage charges are 20p/50KB zero rental GPRS facility with no rental,get charged for what you use. Charges 30p/50KB இந்த அடிப்படையில் பார்த்தால் அளவற்ற ஜி.பி.ஆர்.எஸ் பயன்பாட்டு சேவையை நிறுத்தி விட்டு இது வாடிக்கையார்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக காசை பிடுங்கும் வேலை என்பது அப்பட்டமாக தெரிகிறது. உதாரணமாக நீங்கள் yahoo இணையதளத்தை முகப்பு பக்கத்தை திறந்து பார்த்தாலே 2 ரூபாய் ஸ்வாகா செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் நாம் மொபைல் வழியாக இன்டர்நெட் பயன்பாட்டை முழுமையாகவும்,சுதந்திரமாகவும் பயன்படுத்தமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் உட்பட எல்லா நிறுவனங்களின் ஜி.பி.ஆர்.எஸ் சேவைக் கட்டணங்களும் இப்படித்தான் உள்ளது. இதில் ஏர்செல் நிறுவனம் சமீபத்தில் "பாக்கெட் இன்டர்நெட்(pocket internet)" என்ற பெயரில் தனது ஜி.பி.ஆர்.எஸ் சேவையை ஆரம்பித்தது.100 ரூபாய் கட்டணத்தில் ஒரு மாதத்திற்கு அளவற்ற ஜி.பி.ஆர்.எஸ் சேவையை நாம் பயன்படுத்த முடியும். இது சிறந்த கட்டணமாக இருந்தாலும் டேட்டாவின் வேகம் படுமோசமாக உள்ளது. 500 kb அளவுள்ள ஒரு பைலை தரவிறக்கம் செய்ய 5 நிமிடங்கள் ஆகிறது. ஆக இப்படி கட்டணங்கள் அநியாயமாக இருப்பதாலோ என்னவோ பி.எஸ்.என்.எல் நிறுவனம் 3g சேவையில் இதுவரை வெறும் 10,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். தொழில்நுட்பம் வளர வளர வாடிக்கையாளர்களை எப்படி ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்ற நுட்பமும் மொபைல் ஆப்பரேட்டர்களிடம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் அரசு சொல்வது போல் உண்மையிலேயே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வளர வேண்டுமென்றால் இது போன்ற விஷயங்களில் மத்திய அரசு மற்றும் ட்ராய் அமைப்பு தலையிட்டு வாடிக்கையாளர்களின் நலனைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுயம்வரம் நிகழ்ச்சியில் மணமகனை தேர்ந்தெடுத்தார் ராக்கி சவந்த்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி சுயம்வரம் நிகழ்ச்சி மூலம் நடிகை ராக்கி சவந்த் தனது மகனை தேர்ந்தெடுதுள்ளார்.
பிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த் சுயம்வரம் மூலம் தனது கணவரை தேர்ந்து எடுக்க முடிவு செய்தார். மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் டெலிவிஷன் சேனல் இதற்கான ஏற்பாடுகளை செய்தது. `ராக்கி கா சுயம்வர்' என்ற பெயரில் இந்த சுயம்வரம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ராக்கி சவந்தை மணக்க விரும்பி உலகம் முழுவதிலும் இருந்து 12 ஆயிரத்து 515 பேர் விண்ணப்பங்களை அனுப்பினர். அவர்களில் 16 பேரை தேர்வு செய்த ராக்கி சவந்த், பின்னர் அவர்களில் இருந்து எலேஷ், மானவ், சிட்டிஸ் ஆகிய 3 பேரை இறுதிப்போட்டிக்கு தேர்ந்து எடுத்தார். சுயம்வரத்தின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. அந்த 3 பேரில் யார் ராக்கி சவந்தை மணக்க போகும் அதிர்ஷ்டசாலி என்று எல்லோராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் 3 பேரும் மணமகன் போல் உடை அணிந்து முழு அலங்காரத்தில் வந்து இருந்தனர். ராக்கி சவந்தும் மணமகள் போல் உடை அணிந்து தேவதை போல் காட்சி அளித்தார். மன்னர் காலத்தில் நடந்த சுயம்வரம் நிகழ்ச்சி போல் எலேஷ், மானவ், சிட்டிஸ் ஆகிய 3 பேரும் மேடையில் நிற்க, ராக்கி சவந்த் கையில் மாலையுடன் வந்தார். அவர் யாருக்கு மாலை அணிவிக்கப்போகிறார்? என்று ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்து படபடப்புடன் காத்திருக்க, 3 பேரையும் உன்னிப்பாக பார்த்து சென்ற ராக்கி சவந்த், இறுதியில் எலேசின் கழுத்தில் மாலையை அணிவித்து, அவரை தனது மணமகனாக, அதாவது வருங்கால கணவராக தேர்ந்து எடுத்தார். எலேசும் ராக்கி சவந்தின் கழுத்தில் மாலை அணிவித்தார். அப்போது கூடி இருந்தவர்கள் அவர்கள் மீது மலர்களை தூவி வாழ்த்து தெரிவித்தனர். சுயம்வரத்தில் கலந்து கொண்டு வாய்ப்பை இழந்த மானவ், சிட்டிஸ் ஆகியோரும் ராக்கி சவந்துக்கும், எலேசுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ராக்கி சவந்த்-எலேஷ் திருமணம் பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தனது வருங்கால கணவராக ராக்கி சவந்த் தேர்ந்து எடுத்துள்ள எலேஷ் கனடா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆவார்.

02 ஆகஸ்ட் 2009

கலைஞர் டிவியின் சித்திரம்

கலைஞர் டிவி குழுமத்திலிருந்து குழந்தைகளுக்கான சானல் ஒன்று வெளி வருகிறது. அதற்கு சித்திரம் என்று பெயரிட்டுள்ளனர். சன் டிவி குழுமத்தின் சுட்டி டிவிக்கு கடும் போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் டிவி குழுமத்திலிருந்து ஏற்கனவே கலைஞர் டிவி, இசையருவி, செய்திகள், சிரி்ப்பொலி என நான்கு சானல்கள் உள்ளன. இந்த நிலையில் குழந்தைகளுக்கான சானலாக சித்திரம் மலருகிறது. இதுகுறித்து கலைஞர் டிவி தரப்பில் கூறுகையில், புதிய சானல் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும். ஏற்கனவே இதற்கான உரிமம் வாங்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்டது. கலைஞர் டிவி குழுமத்திலிருந்து ஏற்கனவே கலைஞர் ஏசியா என்ற சேனலும் புதிதாக வருகிறது. இது தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள நேயர்களுக்கானது. சென்னையிலிருந்து இயங்கவுள்ள இந்த சேனல் தாய்காம்-5 செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்படும். இதற்காக தனியாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட மாட்டாதாம். மாறாக கலைஞர் டிவி குழுமத்தில் உள்ள சிறந்த நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்தில் இதில் ஒளிபரப்பவுள்ளனர். குறிப்பாக தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறும். இந்திய நேரப்படி தினசரி காலை 3.30 மணிக்கு (தென் கிழக்கு ஆசிய நாடுகளில் அப்போது காலை 6 மணி) ஒளிபரப்பு தொடங்கும். கருத்து யுத்தம்.. இதற்கிடையே கலைஞர் டிவியில் கருத்து யுத்தம், பூவா தலையா என்ற இரண்டு புதிய ஷோக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடங்குகின்றன. பூவா தலையா நிகழ்ச்சியை ஸ்ரீபிரியா, குஷ்பு ஆகியோர் இணைந்து நடத்தவுள்ளனர். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இந்த நிகழ்ச்சியில் அலசவுள்ளனராம். கருத்து யுத்தம் ஒரு டாக் ஷோ ஆகும். சண்முகசுந்தரம் இதை தொகுத்து வழங்கவுள்ளார். பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்த கருத்துப் பரிமாற்றமே இது.

மிகக்கடினமான நானோ பிளாஸ்டிக் மூலப்பொருள் கண்டுபிடிப்பு - இந்திய விஞ்ஞானிகள் சாதனை

இந்தியப் பிரதமரின் விஞ்ஞான அறிவுரையாளரான Dr.CNR றாவோ தலைமையிலான 5 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று சமீபத்தில் மிகக்கடினமான பிளாஸ்டிக் மூலப்பொருளை நனோ தொழிநுட்ப முறையில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இம்மூலப்பொருள் ஏவுகணைகளிலும் விமானங்களிலும் உதிரிப் பாகங்களுக்குப் பாவிக்கப்படக்கூடியது.

ஒரு மில்லிமீட்டரின் மில்லியனில் ஒரு பங்குத் தடிப்பமே உடைய கார்பன் ஹனி கோம்ப் சிலிண்டர்களில் சாதாரண பிளாஸ்டிக்கை நானோ வைரங்களுடன் இட்டு இறுக்கப்படுவதன் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு பொதுவான பிளாஸ்டிக் பொலிமரை நானோ வைரத்துடன் கலந்து உருவாக்கப்பட்ட கிரபேன் grephene எனும் கார்பன் நானோ டியூப் மூலப்பொருளான இது மற்றைய மூலப்பொருட்களை விட 400 மடங்கு அதிகமான உறுதித்தன்மையும் நெகிழ்தன்மையும் உடையது. ஜவஹார்லால் நேரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக இந்த நானோ பிளாஸ்டிக் கம்போசிட்டை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளனர். Dr.CNR Rao வே JNCASR என சுருக்கமாக அழைக்கப்படும் இவ்வாய்வு கூடத்தின் தலைவர் ஆவார்.

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு வரும் .. ரஹ்மான் உருக்கம்

சென்னை: ஈழத் தமிழர்களின் துயர நிலையை எண்ணியே, நான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தேன். நிச்சயம் அவர்களுக்கு நல்ல தீர்வு வரும் என்று உருக்கமாக கூறியுள்ளார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. நிகழ்ச்சியில் ரஹ்மான் உருக்கமாக பேசினார். தனது பேச்சைத் தொடங்கியதும், இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் துயர நிலையை கருத்தில் கொண்டு, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்து அதன்படி தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தேன். நான் ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க என்னை தமிழகத்தில் அழைத்தனர். ஆனால் அவற்றை நான் தவிர்த்து வந்தேன். இலங்கைத் தமிழர்கள் துயரத்தில் இருக்கும்போது நாம் விழாவில் பங்கேற்க வேண்டாமே என்ற காரணத்தால்தான் இதைத் தவிர்த்தேன். ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வு வரும் என்று நம்புகிறேன். பலரது அழைப்புகளை நான் நிராகரித்தது அவர்களை வருத்தியிருந்தால், அதற்காக இப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் நான் தமிழகத்தில் கலந்து கொள்ளும் 2வது நிகழ்ச்சி இது. சில நாட்களுக்கு முன்பு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை தொடக்க விழாவில் கலந்து கொண்டேன் என்றார் ரஹ்மான். சமீபத்தில் நடிகர் ராதாரவி, தாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு ரஹ்மான் வர ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கும் சேர்த்தே நேற்றைய தனது பேச்சில் பதிலளித்துள்ளார் ரஹ்மான்.

வீடியோவைச் சுருக்கித் தரும் MPEG4

Picture திரைப்படங்களைக் கூட சிறிய சிப்களில் சுருக்கி எடுத்துச் செல்லும் வசதியை எம்பி4 என்னும் தொழில் நுட்பத்தில் அமைந்த கோப்புக்கள் நமக்குத் தருகின்றன. பாடல்களை எங்கும் எதிலும் எடுத்துச் சென்று கேட்பதற்கு நமக்கு எம்பி3 கோப்புக்கள் உதவுகின்றன. நக அளவு சிப்பில் நம்மால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பதிந்து எடுத்துச் சென்று கேட்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ஓடியோ கோப்புக்களை சுருக்கித் தரும் எம்பி3 என்ற தொழில் நுட்பம் தான் காரணம். ஆனால் வீடியோ கோப்புக்கள் எப்போதும் அளவு கூடியவையாகவே இருந்து வருகின்றன. இவற்றை எப்படி ஓடியோ கோப்புக்கள் போலவே சுருக்கிப் பதியலாம் என்ற ஆவலில் நமக்குக் கிடைத்த கோப்புக்களே எம்பி4 பைல்களாகும். எம்பி4 கோப்புக்கள் என்பவை சுருக்கப்பட்ட வீடியோ கோப்புக்களாகும். வீடியோ கோப்புக்கள் அளவில் பெரியவை. இதனால் எடுத்துச் செல்வதில் பிரச்னை மட்டுமின்றி அவற்றை இயக்குவதிலும் பிரச்னை ஏற்படு கிறது. ஆனால் எம்பி4 வடிவில் அவை சுருக்கப்பட்டு எளிதாக்கப்படுகின்றன. எம்பி3 கோப்புக்கள(Files) போலவே எம்பி4 பைல்களும் சுருக்கப்பட்டவையாகும். இதனால் ஒளிக் காட்சி மற்றும் ஒலியின் தரத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.. எம்பி 4 என்பதனை ஆங்கிலத்தில் MPEG4 AVC என அழைக்கின்றனர். இதில் AVC என்பது Advanced Video Codingஎன்பதன் சுருக்கம். எம்பி 3 பிளேயர் இருப்பது போல எம்பி 4 பிளேயர் இருக்கிறதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆம், இருக்கிறது. மற்ற மீடியா பிளேயர்களைப் போலவே அதுவும் செயல்படுகிறது. மேலும் எம்பி4 பிளேயரில் பழைய எம்பி3 பைல்களையும் மற்ற வீடியோ பைல்களையும் இயக்கலாம்.. எம்பி4 தொழில் நுட்பம் பல சிறப்புகளையும் சில உறுத்தல்களையும் கொண்டுள்ளது. சிறப்பு என்று கூறுகையில் அதன் தன்மைதான் முதலில் வருகிறது. எம்பி4, 1Mbps வேகத்தில் சிறந்த டிவிடி தன்மையுடன் கூடிய எம்பி4 டிவிடிக்களை உருவாக்க முடியும். இணைய(இன்டர்நெட்) இணைப்பு இருந்தால் இந்த வேகத்தில் இவற்றை பதிவிறக்கம்(டவுண்லோட்) செய்திட முடியும். ஒரு சி.டி யில் 150 இற்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை எம்பி4 வடிவில் சேமிக்கலாம் என்றால் நம்புவீர்களா?. உறுத்தல்கள் என்று எடுத்துக் கொண்டால் எம்பி4 தொழில் நுட்பத்திலேயே பல காப்புரிமை பிரச்சனைகள் இருக்கின்றன. இப்போது இணையத்திலேயே திருட்டுத்தனமாகக் பிரதி செய்யப்பட்ட திரைப்படங்கள் கிடைக்கின்றன. எம்பி4 தொழில் நுட்பம் பரவலாகும்போது விரைவாக பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதால் இந்த வகை திருட்டுத்தனம் இன்னும் அதிகமாகும். பொறுத்திருந்துதான் இதனைப் பார்க்க வேண்டும்.

பிலிம்பேர் விருது: சூர்யா சிறந்த நடிகர் - சசிக்குமார் சிறந்த இயக்குநர்

சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியதற்காக சசிகுமாருக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதும் கூட கிடைத்துள்ளது. நடிகர் சூர்யா சிறந்த நடிகராகவும்,பூ பட நாயகி பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. பிராந்திய மொழித் திரைப்படங்களுக்கான 56வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு குஷ்புவும், சிறந்த படத்துக்கான விருதினை சசிக்குமாரிடம் ரீமா சென், தேவிஸ்ரீ பிரசாத்தும், சூரியாவுக்கான விருதினை தபுவும், சசிக்குமாருக்கான விருதினை இலியானாவும், பார்வதிக்கான விருதினை ஜோதிகாவும் வழங்கினர். இந்த விழாவில் தமிழில் விருது பெற்றோர் விபரம்: சிறந்த படம்: சுப்பிரமணியபுரம் சிறந்த இயக்குநர்: சசிகுமார் (சுப்பிரமணியபுரம்) சிறந்த நடிகர்: சூர்யா (வாரணம் ஆயிரம்) சிறந்த நடிகை: பார்வதி (பூ) சிறந்த துணை நடிகை: சிம்ரன் (வாரணம் ஆயிரம்) சிறந்த துணை நடிகர்: அஜ்மல் (அஞ்சாதே) சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம்) சிறந்த பாடகர்: நரேஷ் (வாரணம் ஆயிரம்) சிறந்த பாடகி: தீபா மரியம் (சுப்பிரமணியபுரம்) சிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்) சிறந்த அறிமுக நாயகன்: சாந்தனு (சக்கரகட்டி) வெட்டூரி சுந்தரராம மூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com