Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

04 ஆகஸ்ட் 2009

தொழில்நுட்பத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் இந்திய செல்போன் நிறுவனங்கள்?

" வர மாமியா கழுத மாதிரி போன கதையா "இருக்கு இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தரும் சேவைகள். தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா அபார வளர்ச்சி கண்டு வருகிறது என்று கடுப்பை கிளப்பும் செய்திகளை படிக்கும் போது நமக்கு கோபம் தான் வருகிறது. புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சிறந்த சலுகைகளை அளிப்பதன் மூலமே அது மக்களை போய் முழுமையாக சேரும். ஆனால் இந்திய மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனங்களோ ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருந்த சேவைகளை முழுமையாக நிறுத்தி விட்டு வாடிக்கையாளர்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை புடுங்கும் வேலையில் முமுரமாக இறங்கி விட்டன. உதாரணமாக "ஜி.பி.ஆர்.எஸ்" சொல்லப்படுகிற மொபைல் வழியாக இணையதளப் பயன்பாட்டு சேவையில் இந்திய மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பயங்கரமாக கொள்ளையடித்து வருகின்றன. மிக அதிக வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டு முதல் இடத்தில் இருந்து வரும் airtel நிறுவனம் தனது ஜி.பி.ஆர்.எஸ் சேவையில் முன்பு அளவற்ற பயன்பாட்டை தந்து வந்தது. அதாவது கட்டண திட்டம் இப்படி இருந்தது: 1 day gprs pack - 20 rupees (unlimited) 1 week gprs pack - 75 rupees (unlimited) 1 month gprs pack - 375 rupess (unlimited) என்று இருந்த பயன்பாட்டுக் கட்டணம் இப்போது இப்படி ஆகிவிட்டது: Daily rental basic pack @Rs.10/day & enjoy 3MB Free, post free usage charges are 20p/50KB. Daily rental premium pack @Rs.20/day & enjoy 8MB Free,post free usage charges are 20p/50KB zero rental GPRS facility with no rental,get charged for what you use. Charges 30p/50KB இந்த அடிப்படையில் பார்த்தால் அளவற்ற ஜி.பி.ஆர்.எஸ் பயன்பாட்டு சேவையை நிறுத்தி விட்டு இது வாடிக்கையார்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக காசை பிடுங்கும் வேலை என்பது அப்பட்டமாக தெரிகிறது. உதாரணமாக நீங்கள் yahoo இணையதளத்தை முகப்பு பக்கத்தை திறந்து பார்த்தாலே 2 ரூபாய் ஸ்வாகா செய்யப்பட்டுவிடும். இதன் மூலம் நாம் மொபைல் வழியாக இன்டர்நெட் பயன்பாட்டை முழுமையாகவும்,சுதந்திரமாகவும் பயன்படுத்தமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் உட்பட எல்லா நிறுவனங்களின் ஜி.பி.ஆர்.எஸ் சேவைக் கட்டணங்களும் இப்படித்தான் உள்ளது. இதில் ஏர்செல் நிறுவனம் சமீபத்தில் "பாக்கெட் இன்டர்நெட்(pocket internet)" என்ற பெயரில் தனது ஜி.பி.ஆர்.எஸ் சேவையை ஆரம்பித்தது.100 ரூபாய் கட்டணத்தில் ஒரு மாதத்திற்கு அளவற்ற ஜி.பி.ஆர்.எஸ் சேவையை நாம் பயன்படுத்த முடியும். இது சிறந்த கட்டணமாக இருந்தாலும் டேட்டாவின் வேகம் படுமோசமாக உள்ளது. 500 kb அளவுள்ள ஒரு பைலை தரவிறக்கம் செய்ய 5 நிமிடங்கள் ஆகிறது. ஆக இப்படி கட்டணங்கள் அநியாயமாக இருப்பதாலோ என்னவோ பி.எஸ்.என்.எல் நிறுவனம் 3g சேவையில் இதுவரை வெறும் 10,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். தொழில்நுட்பம் வளர வளர வாடிக்கையாளர்களை எப்படி ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்ற நுட்பமும் மொபைல் ஆப்பரேட்டர்களிடம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் அரசு சொல்வது போல் உண்மையிலேயே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வளர வேண்டுமென்றால் இது போன்ற விஷயங்களில் மத்திய அரசு மற்றும் ட்ராய் அமைப்பு தலையிட்டு வாடிக்கையாளர்களின் நலனைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com