இருதயத்தில் பேஸ்மேக்கர் கருவியை பொருத்தியிருப்போர் ஐ-பாட் பயன்படுத்தும் போது, அதிலிருந்து வரும் மின்காந்த அலைகளால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹோவர்டு பாஸன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.பல்வேறு ஐ-பாட்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டதில், பேஸ்மேக்கர் கருவிகளை பாதிக்கக்கூடிய அளவு மின்காந்த அலைகளை அவை உற்பத்தி செய்யவில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.மனித உடலில் சலைன் நிரப்பப்பட்ட பை மூலம், காயில் மூலமாக மின்காந்த அலைகளை உருவாக்கி ஹோவர்டும், அவரது குழுவினரும் சோதனை நடத்தினர்.4ம் தலைமுறை ஐ-பாட், வீடியோவுடன் கூடிய ஐ-பாட், ஐ-பாட் நானோ உள்ளிட்ட மாடல்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்த ஆய்வுகள் மூலம் ஐ-பாட்களால், இருதய பேஸ்மேக்கர் கருவிகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிய வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.ஐ-பாட் தவிர வேறு இசை உபகரணங்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது