

விக்ரம் நடிப்பில் கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள கந்தசாமி திரைப்படம் விரைவில் திரையைத் தொடவிருக்கிறது.
ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தப் படம் 900 திரையரங்குகளில் ரிலீசாவதால், அந்த தேதியில் வெளியாகவிருந்த கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படமே தள்ளிப் போடப்படுகிறது.
ஆனாலும் ஒரே ஒரு படைப்பாளி தனது படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக கந்தசாமியுடன் மோதத் தயாராக உள்ளார். அவர் சேரன்!
அவரது பொக்கிஷம் படம் நாளை சென்சார் சான்றிதழ் பெறுகிறது.
கந்தசாமி வெளியாகும் அதே தேதியில் பொக்கிஷமும் உலகமெங்கும் வெளியாகிறது.
'நான் எந்தப் படத்தையும் போட்டியாக நினைப்பதில்லை. காரணம் நான் போட்டிக்குப் போவதில்லை. இந்தப் படம் இதயப்பூர்வமான காதல் கதை. இளைஞர்கள் விரும்பும் படமாக இருக்கும். ஜெயிக்கும்', என்கிறார் சேரன்.
கந்தசாமி 'மாஸ்' படம், பொக்கிஷம் 'க்ளாஸ்' படம்... ஜெயிக்கப் போவது யார் என்று பார்க்கலாம்.