Hitachi Global Storage Technologies நிறுவனம் 2 TB கொள்ளளவுடைய வன்தட்டுக்களை(Hard Disc) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வன்தட்டுக்கள் 7200 RPM வேகத்தில் இயங்கக்கூடியவை. இந்த வன்பொருளின் பெயர் Deskstar 7K2000 . இது தான் உலகின் அதிகபட்ச கொள்ளளவுடைய வன்தட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 32 MB cache மெமரியும் உள்ளது. 2007 ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகின் முதல் 1 TB கொள்ளளவுடைய Deskstar 7K1000 என்ற வன்தட்டை வெளியிட்டதும் இந்த நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த பவரை உபயோகித்து அதிக performance சை கொடுப்பது இந்த வன்தட்டின் சிறப்பம்சமாகும் . இதன் விலையை இன்னும் இந்நிறுவனத்தினர் வெளியிடவில்லை.