02 மே 2009
உலகின் முதலாவது இணையத்தளம்
பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: குடும்ப கோர்ட் அதிரடி தீர்ப்பு
தமிழன் என்பது ஒரு தகுதியில்லை! - கமல்ஹாசன்
தமிழன் என்பது ஒரு தகுதியோ ஏணியோ அல்ல…அது ஜஸ்ட் ஒரு அடையாளம்தான். திறமை மட்டுமே பேசும். அடையாளம் திறமையோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடும், என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
தனது அடுத்த வெளியீடான உன்னைப்போல் ஒருவன் படத்தை யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் கமல். மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லாலுடன் முதல்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் கமல்.
இந்தப் படத்தின் முறையான அறிமுக விழாவை வெள்ளிக்கிழமை நடத்திய கமல், படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் இயக்குநர் சக்ரி, எழுத்தாளர் ஈரா முருகன் (திரைக்கதை - வசனம்), கவிஞர் மனுஷ்யபுத்திரன் (பாடலாசிரியர்) ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் கமல் பேசியதாவது:
இந்தப் படத்தின் கதை ‘எ வெட்னஸ்டே’ என்ற இந்திப் படத்தினுடையதுதான். ஆனால் நல்ல கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு மொழி கிடையாது.
இப்படத்தில் வசனகர்த்தாவாக இரா.முருகன், பாடல் ஆசிரியராக மனுஷ்யபுத்திரன் ஆகிய இரு இலக்கியவாதிகளை அறிமுகம் செய்கிறேன்.
இந்தப் படத்தின் இயக்குநர் சக்ரி, நான் நடித்த சலங்கை ஒலியில், தப்புத்தப்பாக போட்டோ எடுக்கும் ஒரு சிறுவனாக நடித்தார். பின்னர் ஹாலிவுட்டில் போய் சரியாக படமெடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டு வந்துவிட்டார் போலும்… என் படத்துக்கே இயக்குநர் ஆகியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் படத் தலைப்புதான் இது. அந்த மேதைக்கு என்னால் செலுத்த முடிந்த மரியாதையாக இநதப் படம் இருக்கட்டும் என்றுதான் இந்தத் தலைப்பைச் சூட்டினோம். தலைவன் இருக்கின்றான் என்ற டைட்டிலும் எங்களிடம்தான் உள்ளது. அப்பெயரில் வேறு படம் எடுப்போம்.
ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும்.
ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பதை நிருபர்களாகிய நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள்.
நான் தமிழன்தான். ஆனால் தமிழன் என்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழன் என்பது ஒரு அடையாளம். உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. தமிழனுக்கு மட்டுமல்ல… வேறு இனத்துக்கும்கூட அது பொருந்தும் என்றே நம்புகிறேன். திறமை இருந்து அந்தத் துறையில் ஒருவர் பளிச்சிட்டால், அடையாளம் கூடவே ஒட்டிக் கொள்ளும். நான் இதை எந்த மேடையிலும் சொல்வேன்.
இந்தக் கதையில் நடிக்க இரு பெரிய நட்சத்திரங்கள் எதற்கு என்று கேட்பதற்கு என்னிடம் பதில் இல்லை. காரணம், முதலில் நாங்கள் நடிகர்கள். உங்களால் நட்சத்திரங்களாக்கப்பட்டவர்கள். நட்சத்திரமானது எங்கள் தப்பா… நட்சத்திரங்கள் ஆகிவிட்டதால் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கக் கூடாதா?
பொன்விழா படமா?
நான் திரையுலகுக்கு நடிக்க வந்தது ஆகஸ்ட் 12, 1959-ல். இது என்னுடைய திரை வாழ்க்கையின் 50 வது வருடம். உன்னைப்போல் ஒருவன் படத்தில் நானும் மோகன்லாலும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. வரும் மே மாதத்துக்குள் முழுமையாக முடிந்துவிடும்.
ஜூலையில் வெளியிடும் திட்டம் உள்ளது. ஆனால் நண்பர்களும், ரசிகர்களும் இந்தப் படத்தை என்னுடைய பொன்விழாப் படமாக வெளியிட விரும்புகிறார்கள். எனவே ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடவும் ஒரு எண்ணம் உள்ளது… பார்க்கலாம்.
ஸ்ருதி ஏன்?
ஸ்ருதியின் இசையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் அவரை இசையமைப்பாளராக இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தோம். மகள் என்ற பாசத்தில் அல்ல. மூன்று பாடல்கள். மூன்றுமே சிறப்பாக வந்துள்ளன, என்றார் கமல்.
மோகன்லால் பெருமிதம்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படம் நடிக்கிறார் மோகன்லால். அவர் கடைசியாகத் தோன்றிய தமிழ்ப்படம் பாப்கார்ன். அதற்குப் பிறகு அரண் என்ற படத்தில் அவர் நடித்தார். ஆனால் அது முழுமையான தமிழ்ப் படமல்ல.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த மோகன்லால், பேசியதாவது:
கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான். இப்போது அவருடன் இணைந்து படம் செய்வது மிகப் பெரிய கவுரமாகக் கருதுகிறேன். அவருடன் இருக்கும்போது நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
நல்ல கதைகள் மொழிகளைத் தாண்டியவை, இந்தப் படம் கேரளாவில் தமிழ் படமாகவே ரிலீசாகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமிழ்ப் படங்களை மலையாளிகள் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். தமிழ்ப் படங்களில் உள்ள உணர்வுகள் அவர்களுக்கு நன்கு புரியும். அடிப்படையில் இரு மொழிகளும் ஒன்றுதான், என்றார்.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ஈநாடு எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
பழிக்குப் பழி... காமெடிகளின் வில்லத்தனம்!
ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியில் முக்கால் நிர்வாணம்; தெலுங்கில் முழு நிர்வாணம்!!
29 ஏப்ரல் 2009
நைட் ரைடர்ஸ் வெல்லும் வரை தென்னாப்ரிக்கா வர மாட்டேன்!- ஷாரூக் சபதம்
சீரியலுக்கு வருவாரா மாளவிகா?
ரசிகர்களை கவராத புதுப் படங்கள்!
மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் 2 வெளியீடு
தொழிலாளர்கள் கையில் அமெரிக்க கார் கம்பெனி?
கிரைசிலர் கார் கம்பெனி சில காலமாகவே அதிக நட்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. அமெரிக்க அரசின் நிதி உதவி இல்லாமல் அதை இயக்க முடியாது என்ற நிலை இருந்தது. அதற்கு முக்கிய காரணம் கார் விற்பனை சரிவு, மார்கெட்டுக்கு தேவையான காரை உற்பத்தி செய்யாமை,கடன் மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வேலை செய்யும் மற்றும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மருத்துவ காப்பீடு செலவு என்று கூறபட்டது. இந்நிலையில் ஒபாமாவின் உத்திரவு பேரில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வளர்ச்சி திட்டத்தை கம்பெனி தயாரித்தது. அமெரிக்க அரசும் முறையான திட்டங்கள் இல்லாமல் பணத்தை மேன் மேலும் கொடுக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டது. அதன் அடிப்படையில் புதிய திட்டம் வடிவமைக்க படுகிறது. இத்திட்டத்தின் முன்வரைவு இன்னும் வெளி வர இல்லை என்றாலும் அது பற்றிய செய்திகள் அனைத்து அமெரிக்க பத்திரிக்கைகளும் வெளியிட்டுள்ளது. அதன் படி தொழிற் சங்கத்துக்கு 55% சதவித பங்கு வழங்க படும் என்று தெரிகிறது. இதனால் தொழ்ற்சங்கத்துக்கு கம்பெனியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கிடைக்கும். ஆனால் இதற்கு அவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம்.இதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்க இருந்த மருத்துவ காப்பீடு மிக அதிக அளவில் குறைய வாய்ப்புள்ளது.அதே சமயம் இம்முடிவை தொழிலாளர்கள் யூனியன் ஒத்து கொள்ளாவிட்டால் அக்கம்பெனி ஒட்டு மொத்தமாக மூட படலாம். அதனால் இழப்பு மிக அதிகம் இருக்கும்.தற்போதைய திட்டத்தின் மூலம் கம்பெனி காப்பாற்ற பட்டால் பிற்கலத்தில் அதனால் கிடைக்கும் லாபம் கொண்டு தொழிலாளிகள் பயன் பெற வாய்ப்புள்ளது. இத்திட்டதினால் இழப்பு தொழிலளர்களுக்கு மட்டும் இல்லை. அக்கம்பெனிக்கு கடன் கொடுத்த வங்கி மற்றும் அக்கம்பெனியின் தற்போதயைய முதலீட்டளர்கள் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டும். மருத்துவ காப்பீடு செலவு என்பது கார் கம்பெனிகளுக்கு மட்டும் முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்க அரசுக்கே இது ஒரு பெரிய பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இப்பிரச்சனை தற்போதைய நிதி நெருக்கடி போன்று பெரிய நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
SWINE FLU பரவுகிறது ! கவனம்.
27 ஏப்ரல் 2009
இணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோசனைகள் 1
முதலில் பொதுவான தமிழ் / பிறமொழி இணையத்தளமிருப்பின் அதன் மூலம் என்னென்ன செய்யலாமென பார்க்கலாம்.
எல்லாவிதமான விடயங்களையும் உங்கள் பதிவில் / வெப்பில் கவர் பண்ணுபவரா நீங்கள் ? உங்களுக்கு கூகிளிக் ஆட்சீன்ஸ்தான் முதல் தெரிவாகவிருக்கட்டும். மற்றயது Banner Ad போன்றவற்றையும் முயற்சிக்கலாம். பொதுவாக பதிவுகளில்Pay per clicks / Immpressions எல்லாம் பயன்படாது. மாதத்திற்கு இவ்வளவென விளம்பரப்படுத்தும் சேவைகளைத்தான் நம்பவேண்டும். அதுதான் அதிகமான வருவாயை தரும். தமிழில் இதுபோன்றதொரு தளம் இருக்கிறதாவென தெரியவில்லை. இல்லாவிட்டால் புதிதாக உருவாக்கலாம். தேவையான மென்பொருள் வசதியை என்னால் தர முடியும். ஆனால் பிரபலமாக வெகு நாளாகும். விகடன், தட்ஸ்தமிழ், தமிழிஷ், தமிழ்மணம் போன்ற பிரபலமாகவுள்ள தமிழ் இணையத்தளங்கள் இச்சேவையை செய்ய முன்வந்தால் மிக உச்ச பயன் கிடைக்கும். ஏனெனில் விளம்பரதாரர்களும் நம்பிக்கையுடன் விளம்பரம்தர ஒத்துழைப்பார்கள்.
——————————————————————————
இத்தளம் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும்?
விளம்பரம் வெளியிட விரும்புவோர் தங்கள் தளம் பற்றிய விபரங்களை தரவேண்டும். அத்தள Hits விடயங்கள் automatic script / Tamilish or smiler Tamil web sites- votes அடிப்படையிலே திரட்டப்படும். ( Alexa / Google page rank போன்றவை இங்க உதவாது. ) இவர்கள் எந்த வகை வியாபார விளம்பரங்கள் தங்கள் தளங்களில் வெளியிடலாமென தெரிவிக்க வேண்டும். மற்றும் எதிர்பார்க்கும் கட்டணத்தையும் தெரிவிக்கவேண்டும். இவையாவும் டேட்டாபேசில் ஒருமுகப்படுத்தப்பட்டு சேமிக்கப்படும்.
விளம்பரதாரர் தங்கள் விளம்பரங்கள் எந்த வகையான தளங்களில் வரவேண்டுமென நிர்ணயம் செய்து தங்கள் எதிர்பார்க்கும் அல்லது செலுத்தக்கூடிய உச்ச கட்டணத்தையும் தெரிவிப்பர்.
நமது Script ஆனது இவர்கள் இருவருக்கும் இணைந்தாற்போல வரும் விளம்பரதாரரையும் வெளியீட்டாளர்களையும் பட்டியல் போட்டு நொடியில் தந்துவிடும். பின்னர் இருவருக்கும் பிடித்திருந்தால் விளம்பரம் வெளியிடலாம். தரகாக இயைத்தளத்திற்கு ஒரு விகித அடிப்படையிலோ அல்லது fixed rate ஆகவோ பணம் செலுத்த இந்த தளத்திற்கும் வருமானம் பெருகும்.
அடுத்து 3ம் தரப்பாக இணையத்திற்கு சம்பந்தமில்லாதவர்களாகவிருப்பவருக்கும் இவ்விணையம் மூலம் வருமானமீட்டலாம். அதாவது உங்களின் ஏரியாவிலுள்ள வியாபா நிலையங்களிலிருந்து விளம்பரங்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இடைத்தரகாக ஒரு வருமானத்தையும் பெறலாம். ஆக 4 தரப்பினருக்கும் வருமானம் கிடைக்கும்.
சாதாரண Banner ad management script இனை சிறிது மேம்படுத்துவதன் மூலம் இவ்வசதிகள் கொண்ட ஒரு இணையத்தளமிருப்பின் வருமானம் பெருகும். ஆங்கில தளங்களுக்கு இவ்வாறெரு தளம் முற்றாக வடிவமைத்துக்கொடுத்திருக்கிறேன். இதைப்பற்றி வேறு தகவல் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும். ( தெழில் காரணமாக என்னால் Script தரமுடியாது. என் பிழைப்பே இதுதான். ஆனால் என்னாலான யோசனைகளை தயங்காமல் தருவேன் )
——————————————————————————————
அடுத்து Google Adsense களை நம்பி ஆங்கிலத்தளங்களை வைத்திருக்கிறீர்களா?
உங்களின் தளம் கண்டிப்பாக ஏதாவதொரு குறித்த விடயத்ததை மட்டுமே விவாதிப்பதாகவோ வெளியிடுவதாகவோ இருக்கட்டும்.
அதாவது Google Adsense ல் Finance, Economics, debt, Loan போன்ற key words வரும் விடயங்களை உள்ளடக்கிய தளங்களில் வெளியிடப்படும் adsense ஆட்களை யாராவது கிளிக்கினால் இதற்கு அதிக பணம் தருவார்கள். ஏனெனில் இந்த கீ வேர்ட்ஸ்சுக்கு இருக்கும் மவுசு அப்படி. ஆக நீங்களும் இது சம்பந்தமான பதிவுகளை இட்டு அதை விளம்பரப்படுத்தி ஹிட் சேர்த்தீர்களெனில் உங்கள் வெப்பிலிருந்து வரும் கிளிக்ககளுக்கு அதிக பணம் கிடைக்கும். 1st year படிக்கும்போது Adsense அறிமுகம் கிடைத்தது(2005/2006 ). அப்போது 4 பதிவுகளை ஆரம்பித்தேன். 3 மாதத்திற்குப்பின்னர் ஒரு மாதத்திற்கு $80-100 வரை கிடைத்தது. 4 வாரங்களுக்கொருதரம் செக் வரும். பின்னர் இந்த சில்லரை வேலையை விட்டுவிட்டு Software development ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை நன்றாக நடக்கிறது. விரைவில் 3வருட நிறைவு வர இருக்கிறது:) .
பல ஐடியாக்களை நீண்ட நாட்களாகவே பதிவிடும் எண்ணம் இருந்தது. இன்றுதா கொஞ்சமாவது தட்டச்சு செய்திருக்கிறேன். எனது அறிவுக்கெட்டிய சில சில்லறை யோசனைகளைத்தான் சொல்லப்போகிறேன். உபயோகப்படுத்தலாமென நினைத்தால் விடாமுயற்சியாக முயன்றுபாருங்கள். யாருக்கும் ஐடியா சொல்லும் வயதில் நான் இல்லை. தவறாக நினைக்காமல் இருந்தால் சரிதான். இந்த ஐடியாக்கள் படிக்கும்பொது இருந்தது. இப்போது இல்லை. உங்களுக்கு ஏதாவது பொறி தட்டினால் தாமதிக்காமல் செயல்படுத்திவிடுங்கள். ( அதுதான் எல்லாவற்றிற்கும் மிக முக்கியம்.)
பின்னர், குறிப்பிட்ட விடயங்களை மட்டும் எழுதும் பதிவர்களுக்காக சில ஐடியாக்களை தருகிறேன். நீங்கள் திட்டாமல் ஆதரித்தால் மட்டும்.