Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 மே 2009

உலகின் முதலாவது இணையத்தளம்

உலகின் முதலாவது இணையத்தளம் தோன்றி நேற்றோடு பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி உலகின் மிகப்பெரிய பௌதிக ஆய்வுகூடமான CERN இலேயே இந்த உலகின் முதலாவது இணையப்பக்கம் தோற்றம் பெற்றது.
இதுதான் அந்த இணையப் பக்கம்
இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு மார்ச் மாதத்தில் கணினி விற்பனரான Tim Berners-Lee என்பவரது முயற்சியில் இதற்கான முயற்சிகள் ஆரம்பமானது. ஒரு கிறிஸ்மஸ் தினத்தில் அதன் முதற்கட்ட வெற்றியாக ஒரு Web server உடனான முதலாவது தொடர்பாடல் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடுத்தடுத்த வளற்சிகளால் 1993 ஏப்ரல் இறுதியில் உதயமானது உலகின் முதலாவது இணையப்பக்கம். அது இன்னமும் W3C யில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இங்கே போய் அதைப் பார்த்து ஒரு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு வாங்களேன்.
டிஸ்கி 1:- இப் பதிவை நேற்றே இடவேண்டும் என்று நினைத்திருந்தாலும் நேரம் கிடைக்காத காரணத்தால்(ஆமா பெரிய கலெக்டர் உத்தியோகம்) இட முடியவில்லை.
டிஸ்கி 2:- கூகில் ஆண்டவரின் புண்ணியத்தில் எனது Adsence கணக்கு அப்ரூவ் ஆகிவிட்டது. ஆனால் அதில் பொதுசேவை விளம்பரங்கள் மட்டுமே தெரிகின்றன. விளம்பரங்கள் தெரியச் செய்வது எப்படி என யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலினூடு (subankanb@gmail.com) தெரியப்படுத்தி என்னையும் ஒரு சில லட்சங்கள் இல்லாவிட்டாலும் சில ஆயிரங்கள், அட சில நூறுக்களாவது சம்பாதிக்க வையுங்களேன்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com