Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

05 மே 2009

அப்படியா பழகினாரு சிம்பு....?

சிம்புவை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை! ஏன்னா, 'எத்திசையும் இன்பமுற' அவரது புகழ் ஒலிப்பதால், துபாய் மேட்டரை மட்டும் சொல்லிவிட்டு 'ஜுட்' விடுவது உத்தமம்! "டேய் மச்சி, டேய் மாமூ"ன்னுதான் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாங்க. "இவ்ளோ து£ரம் திக் பிரண்ட்ஸா இருக்காங்களே, அத்தனை பேரும் ஒரு படத்திலே நடிக்கிறேன்னு சம்மதிச்சு ஒருநாள் டேட்ஸ் கொடுத்தா கூட போதும். நான் கோடீஸ்வரன்"னாரு கூட வந்த ஒருத்தர். "வென்னீரை குடிச்சமா, விரதத்தை முடிச்சமான்னு இல்லாம இதென்ன வெட்டிப்பேச்சு? ஆடப் போறது அவங்க வேலை. கூடப் போறது நம்ம வேலை. இதுல எதுக்கு புரட்யூசர் கனவு காண்றீங்க. இந்த குரூப் இப்படியே சந்தோசமா திரும்பி வந்தா, தெரு முனை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயே ஒடைக்கலாம். வேணும்னா பாருங்க" என்றேன் என் ஞான திருஷ்டிய நம்பி! சென்னையிலேர்ந்து புறப்படுற கடைசி நிமிஷம் வரைக்கும் அருண் விஜய்க்கு விசா கிடைக்கலே. அதனால் அவரை அடுத்த பிளைட்ல வரச்சொல்லிட்டு எங்களை ஏத்தினாங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மறுநாள் காலை துபாய் வந்த அருண் விஜய்க்கு விசா ஏற்பாடு செஞ்சு வெளியே கொண்டு வருவதில் தொடர் சிக்கல். அதனால விமான நிலையத்திற்குள்ளேயே உட்கார வச்சு, வெளியே விசாவுக்கு துரிதப்படுத்திக்கிட்டு இருந்தாங்க. காலையிலிருந்து குளிக்காம, சாப்பிடாம கடும் கோபத்திலிருந்தாரு அருண். ஒருவழியா அவரை வெளியே கொண்டு வர இரவு எட்டாயிருச்சு. அப்படியே மறுநாள் கிரிக்கெட் கிரவுண்டுக்கு போயாச்சு எல்லாரும். ஆட்டம் துவங்கியது. சினிமாவிலேதான் பறப்பதும், பாயறதும்! நிஜத்தில் ஒரு பந்தை அடிப்பதற்குள் டவுசராகிப் போனார்கள் நம்ம ஸ்டார்கள். சென்னையிலே தோற்றுப் போன வெறியிலே நல்லாவே பிராக்டீஸ் பண்ணிட்டு வந்திருந்தாங்க தெலுங்கு நடிகருங்க. ஒவ்வொரு பந்தும், ஸ்கார்பியோ வேகத்திலே பறக்க, தடுக்கவும் முடியாம, பிடிக்கவும் முடியாம ஒவ்வொருத்தர் மூக்கும் கோவத்தில் கிரிக்கெட் பால் கலருக்கு போயிருச்சு. இந்த கேப்லதான் சாத்தான் சட்னு நுழைச்சிருப்பான் போல. ஒரு கேட்சை விட்டுட்டாரு அருண் விஜய். பக்கத்திலே நின்ன சிம்பு, "ங்கோ..." ன்னு அவரை பார்த்து கோவப்பட, அடுத்த சில மணி நேரத்தில் அதற்கான பலனை அத்தனை பேருமே அறுவடை செஞ்சோம். மேட்சில் படுதோல்வி. இடையில் ஒருமுறை ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கேப்டன் அப்பாஸ் (தலைவா கோவிச்சுக்காதீங்க. இவரு ஒரு நாள் முதல்வர் மாதிரி 'ஒருநாள் கேப்டன்') சரியா விளையாடலேன்னு எல்லாரையும் தாறுமாறா திட்ட, "நானே போனாப் போவுதுன்னு வந்திருக்கேன். இந்த திட்ற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்"னு எகிறினார் சிம்பு. அதை தொடர்ந்துதான் இந்த ங்கோ... சமாச்சாரம். தோற்றுப்போன ஆத்திரத்தில் உள்ளே வந்த சிம்புவை ஜன்னல் ஓரமாக நின்ற ரசிகர் ஒருத்தரு, "தலைவா... இப்பிடி தமிழன் மானத்தையே வாங்கிட்டீங்களே"ன்னாரு. அவ்வளவுதான், "டேய்... ங்கொ----ள... யாருகிட்டே? புட்றா அவனை"ன்னு விரட்டினாரு சிம்பு. அதற்குள்ளே ரசிகன் எஸ்கேப். ரசிகன் ஓடினாலும், அவன் வேலையை இப்போ அருண் விஜய் எடுத்துகிட்டாரு. சிம்புவிடம் வந்து, "டேய், என்னடா சொன்ன என்னைய பார்த்து? யாரை பார்த்து ங்கே... ங்கற? அடிச்சு மூஞ்சை பேத்துருவேன்"னு கையை து£க்கிக் கொண்டு பாய, "டேய் ஆம்பிளையா இருந்தா கைய வச்சு பாருடா"ன்னு துள்ள ஆரம்பிச்சாரு சிம்பு. வார்த்தை தடித்தது. விலக்க வேண்டிய நடிகருங்க என்ன காரணத்தாலோ சற்று பின்வாங்கினாங்க. நல்லவேளையாக ஸ்ரீகாந்த் ஓடிவந்து "மாப்ளே, ஏண்டா இப்படி சண்டை போடுறீங்க? விடுங்கடா"ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. இப்போ இன்னும் வேகமாக ரெண்டு பேரும் எகிற, எல்லாரும் சேர்ந்து ஒருவழியா புடிச்சு அமுக்கினாங்க இரண்டு பேரையும். அப்போதான் சிம்பு அந்த தன்னம்பிக்கை ஸ்லோகத்தை எடுத்துவிட்டாரு. "டேய், நான் ஒரு சூப்பர் ஸ்டாருங்கறதையும் மறந்து உங்களோட ஆட வந்தேன்ல. என் புத்திய..." என்று ஆவேசப்பட்டார். "போடாங்... சினிமாங்கிறது யாரை வேணும்னாலும் மேலே து£க்கும். கீழே இறக்கும். நானும் மேலே வருவேண்டா. இப்பிடியே இருப்பேன்னு பார்க்காதே"ன்னு எகிற ஆரம்பிச்சாரு அருண். இடையிலே தடால்னு குறுக்கே விழுந்த ஆர்யா, "டேய் மச்சான் விடுங்கடா"ன்னு கெஞ்ச, "இல்லடா. நான் ஒரு சூப்பர் ஸ்டாருன்னு நினைச்சாடா உங்க கூடெல்லாம் பழகுறேன்? எவ்வளவு எளிமையா பாகுபாடு பார்க்காம பழகுறேன். அவன் அப்படி சொல்றானே"ன்னாரு மறுபடியும். ஒருவழியா அழுகையும் ஆத்திரமுமா அங்கிருந்து வேன்லே ரூமுக்கு கிளம்பினாங்க நம்ம ஸ்டார்ஸ். வண்டி போயிட்டு இருக்கும்போதே விஷால் அருணிடமும், ஆர்யா சிம்புவிடமும் சமாதானம் பேசினாங்க. அவங்க ரெண்டு பேரோட நோக்கமும் ஹோட்டலுக்கு போறதுக்குள்ளே இவங்களை சமாதானப்படுத்திடனும். முதலில் "விடுங்கடா..."ன்னு ஒதுங்கிப் போன ரெண்டு பேரும் கை குலுக்க சம்மதிச்சாங்க. "என்னை மன்னிச்சிருடா மாப்ளே. நான்தான் தப்பா பேசிட்டேன்"னாரு சிம்பு. "சரி, விட்றா. நான் கூட அவ்வளவு கோவப்பட்டு ஒன்னை அடிக்க வந்திருக்க கூடாது"ன்னாரு அருண் விஜய். சண்டை முடிஞ்சுதுன்னு எல்லாரும் நிம்மதியாக சிரிக்க ஆரம்பிச்சோம். வண்டி போய் கொண்டிருக்க திடீர்னு அருணிடம், "மாப்ளே... என்னைக்காவது நான் சூப்பர் ஸ்டாரு, நீ சாதாரண நடிகன்னு நினைச்சு பழகியிருக்கேனா?"ன்னு மறுபடியும் ஆரம்பிச்சாரு சிம்பு. "டேய் ஆரம்பிச்சுட்டாண்டா"ன்னு ஆர்யா, பரத் ரெண்டு பேரும் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிக்க, கூடவே சிம்புவும் அருணும் சிரிச்சாங்களே பார்க்கலாம்! அதுக்கு முன்னாடி அப்பிடி ஒரு சண்டை அங்கே நடந்திச்சு...?
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com