Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

18 ஜூலை 2009

நடிகை அசின் பெறும் 150வது விருது!

நடிக்க வந்ததிலிருந்து விருதாக வாங்கிக் குவித்து வருகிறார் நடிகை அசின். இந்த ஆண்டு அவர் பெறவிருக்கும் கலைமாமணி, அவருக்கு 150 விருதாகும். கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது பெறுவோர் பட்டியலில் நடிகை அசின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உயர்ந்து விருது கலைமாமணி. முன்பெல்லாம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்து வந்த இந்த விருது, இப்போது ஆண்டுக்கு 100 பேருக்காவது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 70 பேருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் காரணமாக விருது வழங்கும் விழா தள்ளி வைக்கப்பட்டது. விருதுப்பட்டியலில் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளி்ட்டோர் இடம் பெற்றுள்ளனர். நடிகை அசினும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அசின் நடிக்க வந்து 5 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் இந்த குறுகிய காலத்துக்குள் தனது நடிப்புத் திறமைக்காக அவர் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 149. இந்த கலைமாமணி விருதினையும் சேர்த்தால் 150 விருதுகள் ஆகிவிட்டன. விரைவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விருதினை அசின் உள்பட 70 கலைஞர்களுக்கு வழங்குகிறார்.

நீண்ட தடங்கலின் பின் எண்டவர் விண்ணேகியது

lankasri.com நீண்ட பல தடங்கல்களின் பின் நாசா விண்ணோடமான எண்டவர் (Endeavour ) 15-07-2009 அன்று விண்வெளியில் சஞ்சரிக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பயணத்தைத் தொடங்கியது. 6 அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு கனடிய விண்வெளி வீராங்கணையையும் சுமந்து கொண்டு 11 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் எண்டவர் விண்ணேகி உள்ளது. இந்த விண்வெளி வீரர்களோடு ஐ எஸ் எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருக்கப் போகும் விண்வெளி வீரர்களின் மொத்த எண்ணிக்கை சாதனை அளவான 13 ஆக எட்ட இருக்கின்றமை இங்கு கூறிப்பிடத்தது. இந்தப் பயணித்தின் போது விண்வெளி வீரர்கள் 5 விண்வெளி நடைகளையும் மேற்கொண்டு சில கட்டுமானப்பணிகளில் ஈடுபட உள்ளனர். இது நாசாவின் விண்ணோடங்களின் விண்வெளிப் பயணங்களில் 127 வது பயணமாகவும், 23 வது விண்வெளிப் பயணமாக எண்டவருக்கும் அமைகிறது. ஐ எஸ் எஸ் பல நாடுகளின் கூட்டு முயற்சியால் நாலு படுக்கை அறை கொண்ட ஒரு வீடு அளவுக்கு விண்வெளியில் கட்டப்பட்டு வரும் ஒரு விண்வெளி ஆய்வு கூடமாகியுள்ளது..!

வக்கீல்களை கிண்லடித்த சிவகாசி படம்- மன்னிப்பு கேட்கிறார் விஜய்

சென்னை: சிவகாசி படத்தில் வக்கீல்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதற்காக நடிகர் விஜய், இயக்குநர் பேரரசு மற்றும் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டால் ஏற்றுக் கொள்வோம் என வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரச்சினையை முடிக்க, விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்கும் சூழல் உருவாகியுள்ளது. பட அதிபர் ஏ.எம்.ரத்னம் தயாரித்த படம் சிவகாசி. பேரரசு இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய், காமெடி நடிகர் பாஸ்கர், நடிகை அசின் ஆகியோர் நடித்தனர். 2005-ம் ஆண்டு தீபாவளிக்கு ந்த படம் வெளிவந்தது. படத்தில் வக்கீல் வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்திருந்தார். அவர் வருகிற காட்சிகள் வக்கீல்களின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இருப்பதாக தமிழ்நாட்டில் உள்ள 13 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்தனர். வக்கீல்களை தாக்கும் வகையில் படம் எடுக்கப்படவில்லை என்றும் ஆகவே 13 கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பட அதிபர் ரத்னம், நடிகர் விஜய், இயக்குனர் பேரரசு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். விஜய் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்வீர்களா? இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விஜய் தரப்பில் வக்கீல் பீமனும், வக்கீல்கள் சார்பில் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரனும் ஆஜர் ஆகி வாதாடினார்கள். சிவகாசி படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கவில்லை. அதிலுள்ள கருத்துக்கள் அவதூறு என்ற பிரிவில் வராது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது, என்று விஜய்யின் வக்கீல் பீமன் வாதாடினார். ஆனால் பிரபாகரன் இதை மறுத்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆகியோர் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்படவில்லை. வர்த்தகத்துக்காக மலிவான காமெடிக்கு வக்கீல்களை இழுத்துள்ளனர். ஆகவே இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் [^] 499, 500 பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட்டு ரத்து செய்யக்கூடாது. ஏற்கனவே ஒரு புகைப்படத்தை விமர்சனம் செய்ததற்கே அவதூறு என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு கூறியுள்ளது, என்றார் அவர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு வேளை குற்றம் [^] சாட்டப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்று பிரபாகரனிடம் கேட்டார். "பட அதிபர் [^] ரத்னம், இயக்குனர் பேரரசு, நடிகர் விஜய் ஆகிய மூன்று பேரும் கோர்ட்டுக்கு வந்து எழுத்து மூலமாக மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்தால் அதை இக்கோர்ட்டு பரிசீலித்து எந்த உத்தரவை பிறப்பித்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு கோர்ட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்...", என்று பதிலளித்தார் பிரபாகரன். பின்னர் வழக்கு [^] விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார். இதற்கிடையில், விஜய்யை எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைக்குமாறு ஏஎம் ரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நீதிபதியே இந்த யோசனையைத் தெரிவித்திருப்பதால், விஜய் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அடுத்த விசாரணையின்போது விஜய் மன்னிப்புக் கேட்பார் எனத் தெரிகிறது.

'கிக்' தர வரும் ஹன்சிகா!

இந்தியிலிருந்து, தெலுங்குக்கு நடிக்க வந்த ஹன்சிகா மோத்வானி அடுத்ததாக தமிழுக்கும் வருகிறார். பாலிவுட்டிலிருந்து டோலிவுட்டிற்கு இடம் பெயர்ந்த நாயகி ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இப்போது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஹூண்டாய் சான்ட்ரோ விளம்பரத்தில் தோன்றி நடித்துள்ள ஹன்சிகா, தெலுங்கில், தேசமுத்ரு, காந்த்ரி, மஸ்கா, பில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் புனீத் ராஜ்குமாருடன் பிந்தாஸ் என்ற படத்தில் நடித்தார். இந்தியில், ஹிமேஷ் ரேஷ்மயாவின் ஆப் கா சுரூர் படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்தார். கோவிந்தாவுடன் மனி ஹே தோ மனி ஹை என்ற படத்தில் தலை காட்டினார். தற்போது கிக் மூலம் தமிழுக்கும் வருகிறார் ஹன்சிகா. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக், இப்போது ஜெயம் ராஜா [^] இயக்க, ஜெயம் ரவி நடிக்க தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். முன்பே தமிழில் ஹன்சிகாவுக்கு சில வாய்ப்புகள் வந்தபோது அவர் மறுதலித்து வந்தார். இந்த நிலையில் கிக் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவர் தட்டாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் மூலம் தமிழில் லேன்ட் ஆகி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் ஹன்சிகா. 'கிக்' ஹன்சிகாவுக்கு 'கிளிக்' ஆனா சரி..

சச்சினை பற்றி அப்படிக் கூறவில்லை! -பல்டி அடித்த வினோத் காம்ப்ளி .

கிரிக்கெட் உலகில் இந்த காலகட்டம் பரபரப்புக்கு குறைவில்லை.ஆஷசின் முதல் போட்டியில் இங்கிலாந்து வேண்டுமென தாமதப்படுத்தியதாக பாண்டிங் குற்றம் சுமத்த நாங்கள் அப்படி வேண்டுமென செய்யவில்லை என இங்கிலாந்து கப்டன் மறுபக்கம். அதன் பின் பிளிண்டோபின் ஓய்வு என தேவையற்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் இதெல்லாம் தேவையா என கேட்கவைத்த நிகழ்வு தான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி உலகக்கிரிக்கெட்டின் இன்றைய கடவுளாக போற்றப்படும் சச்சினை பற்றி கூறிய சில கருத்துக்கள்.
அண்மைக்காலங்களில் தொலைக்காட்சிகளில் Reality Show என்னும் ஒரு கருமாந்திரம்(இதை விட எனக்கு இந்த நிகழ்ச்சியை திட்ட வேறு வார்த்தை தெரியவில்லை) எல்லா பிரபலங்களையும் போட்டு வாட்டுவதோடு ஒரு சில பிரபலமில்லாதவர்களையும் பிரபலமாக்கி விட்டிருக்கின்றது. இப்படிப்பட நிகழ்ச்சிகள் தேவையா? அந்தரங்கங்களை போட்டு உடைக்கும் ஒரு நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்க்கின்றார்கள். இது எங்கே போய் முடியப்போகின்றதோ? (அதெல்லாம் இருக்கட்டும் நீ சொல்ல வந்ததை சொல் அதுக்கெதுக்கு இவ்வளவு என்கிறது புரிது. என்ன செய்றது பழகிப்போச்சு..) சச்சின்-வினோத் காம்ப்ளி பாடசாலை காலத்தில் ஆடிய ஆட்டம் அனைவருக்கும் அத்துப்படி. அதன் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டுபேர் செய்த சேவையும்(காம்ப்ளி என்னதான் குழப்படி செய்தாலும் டெஸ்டில் ஆயிரம் ஓட்டத்தை விரைவாக கடந்த இந்தியர் என்ற சாதனை இன்னும் அவர் வசமே.) வரலாறுகளே. இந்த நேரத்தில் சச்சின் என்ற நாமம் ஒரு தசாப்தத்தை கடந்து பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருக்க இரண்டாயிரமாம் ஆண்டோடு கிரிக்கெட்டில் அஸ்தமனமாகிப் போய், பலரால் மறந்து போன வினோத் காம்ப்ளி இப்போது தானும் இருக்கின்றேன் என சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்.
அந்த showவில் காம்ப்ளி சச்சினை பற்றி சொன்னதை எப்படி ஏற்க முடியும். எத்தனை தடவை காம்ப்ளி இந்திய அணிக்குள் மீள வர சச்சின் காரணமாக இருந்தார் என்பது கிரிக்கெட்டை தெரிந்த அனைவருக்கிம் தெரியும்.(இதேபோலத்தான் தினேஷ் மொங்கியா, அஜித் அகார்கர் போன்றவர்களுக்கும் சச்சின் ஆதரவு வழங்கி இருக்கின்றார்.) அப்படி இருக்கும் போது கேவலம் ஒரு கோடி ரூபாவிற்காக (அந்த நிகழ்ச்சியில் உண்மையை பேசி வெற்றி பெற்றால் வழங்கும் பரிசுத்தொகையாம் அது.) தன் உயிர் நண்பனாக பள்ளிக்காலம் முதல் இருந்து வந்தவரை பற்றி எதுவெல்லாம் சொல்லக்கூடாதா அதை எல்லாம் சொல்லி முடித்து விட்டார்.
சரி அவர் மனதில் இருக்கும் ஆதங்கத்தை ஏதோ கொட்டி விட்டார். என்று அந்த பிரச்னையை ஓரளவிற்கு ஒரு சிலர் அதை ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்கும் போது நேற்று முன்தினம் காம்ப்ளி வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னால் சச்சினுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றார். அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் நடிகர்களையே விஞ்சி நிற்க்கின்றது. அதாவது சச்சினைப் பற்றி தான் அப்படி எதுவும் சொல்லவில்லையாம். அது முற்றிலும் தவறான செய்தியாம். தனக்கும் சச்சினுக்கும் கடந்த 26ஆண்டுகளாக நல்ல நட்பு இருந்து வருகின்றது. மிக விரைவில் அவரை சந்தித்து இதை பற்றி விளக்கப்போவதாக சொல்லி இருக்கின்றார். இவை எல்லாவற்றுக்கும் சச்சின் தன் வழக்கமான அமைதியை காத்துக்கொண்டிருப்பதே அவரின் பெருந்தன்மை தான்.

சென்னையில் செட்டிலான சுதா சந்திரன்!

மயூரி புகழ் சுதா சந்திரன் சென்னையிலேயே செட்டிலாகி விட்டார். ஆந்திராவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் சுதா சந்திரன். 80களில் அவர் நடித்து வெளியான மயூரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் ஒரு காலை இழந்த சுதா சந்திரன், செயற்கைக் காலுடன் அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், நடனமும் ஆடி அனைவரையும் வியப்படைய வைத்தார். அப்போது செயற்கைக் கால்கள் அவ்வளவாக பிரபலமாக இல்லாத நேரம் என்பதால் சுதா சந்திரனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சின்னத் தம்பி பெரிய தம்பி, தாயே நீயே துணை, வசந்தராகம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தார் சுத. இதையடுத்து மும்பைக்கு சென்ற அவர் அங்கு ரவி என்பவரை மணந்து கொண்டு செட்டிலாகி விட்டார். இதையடுத்து அவர் இந்தி டிவி தொடர்களில் நடித்துப் பிரபலமானார். இப்போது மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார் - ஆனால் டிவி தொடர்கள் மூலமாக. குட்டி பத்மினியின் கலசம் தொடரில் இவரது வில்லத்தனமான நடிப்பு, அத்தொடரின் நாயகி ரம்யா கிருஷ்ணனை விட பிரபலமாகி விட்டது. இதையடுத்து தற்போது ராதிகாவின் அரசி தொடரிலும் வில்லத்தனத்தில் கலக்கி வருகிறார். இடையில் விஷால் நடித்த சத்யம் படத்திலும் நடித்திருந்தார் சுதா சந்திரன். இப்போது ஏகப்பட்ட தமிழ் தொடர்கள் வருவதால் சென்னையிலேயே செட்டிலாகி விட முடிவெடுத்த அவர் சட்டுப் புட்டென்று ஒரு வீட்டை வாங்கி வந்து விட்டாராம். இனிமேல் அதிக தமிழ்த் தொடர்களில் நடிப்பேன் என்கிறார் புன்னகையுடன்.

15 ஜூலை 2009

'அரைகுறை' பூர்ணா!

நான் தமிழில் அரைகுறையாகத்தான் பேசுகிறேன். இது வருத்தமாக இருக்கிறது. இனிமேல் முழுமையாக தமிழைக் கற்றுக் கொண்டு எனக்கு நானே டப்பிங் பேசப் போகிறேன் என்கிறார் தலையிலடித்து சத்தியம் செய்யாத குறையாக பூர்ணா. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் தமிழுக்கு வந்த கேரளத்து கதகளி பூர்ணா. அசப்பி்ல் அப்படியே ஆசினைப் போல இருக்கிறார் என்று விஜய் சொல்லியதால் உச்சி குளிர்ந்து போன பூர்ணா, ஆசினைப் போலவே சிரிக்கிறார், தலையை அசைக்கிறார். இப்போது பார்த்திபனுடன் வித்தகன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கை நிறையப் படங்கள் இருப்பதால் வாய் நிறைய சிரிப்பும் இருக்கிறது பூர்ணாவிடம். உங்க குரல் நன்றாக உள்ளதே, ஏன் டப்பிங் பேசப்படாது என்று யாராவது பூர்ணாவிடம் கேட்டால், உட்கார வைத்து ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்து விடுகிறார். எனக்கு நல்ல குரல்தான். ஆனால தமிழ் அரைகுறையா இருக்கே. அதனால்தான் தமிழ் நன்றாக கற்றுக் கொண்டு நானே டப்பிங் பேச உறுதி பூண்டுள்ளேன் என்கிறார். அது சரி பூர்ணா, வித்தகன் படத்துக்கு பூர்ணாதான் வேண்டும் என்று விடாப்படியாக கூறி புக் செய்தாராமே பார்த்திபன், மெய்யாலுமா..?

காயத்ரி ரகுராமின் நடனப் பள்ளி!

நடிகை காயத்ரி ரகுராம் இப்போது புதிதாக நடனப்பள்ளி ஒன்றைத் துவக்கியுள்ளார். இந்தப் பள்ளியைத் துவக்கி வைத்து வாழ்த்தினார் கலைஞானி கமல்ஹாசன். நடிகர்கள் பிரபுதேவா உள்ளிட்ட திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர். விசில் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். நடன இயக்குநர் ரகுராமின் மகள் இவர். சார்லி சாப்ளின், பரசுராம், ஸ்டைல், விகடன் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இப்போது நடன இயக்குநராக மாறியுள்ளார் காயத்ரி. விக்ரம் நடித்துள்ள 'கந்தசாமி' படத்தில் இடம்பெற்றுள்ள 'எக்ஸ்கியூஸ் மீ கந்தசாமி' என்ற பாடலுக்கு, இவர்தான் நடன இயக்குநர். காயத்ரி ரகுராம், சென்னை காம்தார் நகரில், 'நர்த்தனசாலா' என்ற பெயரில், ஒரு நடனப் பள்ளி துவங்கியுள்ளார். இந்த நடன பள்ளியில் பரத நாட்டியம், கதகளி, மற்றும் மேற்கத்திய நடனங்களை கற்றுத் தருகிறார் காயத்ரி. இந்த நடன பள்ளியின் துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. நடிகர்கள் கமல்ஹாசன், பிரபுதேவா ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி, நடனப் பள்ளியை தொடங்கி வைத்தார்கள். 2 பேரும் காயத்ரி ரகுராமுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். "படங்களில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். அதே நேரம் நடன இயக்குநராக பணியாற்றுவதில்தான் அதிக ஆர்வம் உள்ளது. இந்த நர்த்தனாசாலா ஏற்கெனவே வெற்றிகரமாக நடந்து வரும் ஒரு அமைப்பு. இங்கும் வெற்றி பெறும் என நம்புகிறேன்", என்றார் காயத்ரி ரகுராம்.

வால் பேப்பர்களை மாற்றும் இலவச மென்பொருள்

நம்மில் பலர் அழகிய படங்களை டெஸ்க்டாப் வால்பேப்பர்களாக கணினியில் வைத்து கொள்வர்.ஒவ்வொரு முறையும் நாமே அவற்றை மாற்றாமல் வால்பாபா(Wallpapa)என்னும் மென்பொருள்(விண்டோஸ் மட்டும்)நமது கணினியின் வால்பேப்பர்களை மேலாண்மை செய்கிறது.நம்மிடம் உள்ள அழகிய படங்களை ஒரு போல்டர் இல் சேமித்து இந்த மென்பொருள் மூலம் அனைத்தையும் தேர்ந்தெடுத்தால் நாம் விரும்பிய கால அளவுகளில் வால்பாபா மென்பொருள் வால்பேப்பர்களை மாற்றும். இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு,மேலே உள்ள "ADD" என்னும் பொத்தானை சொடுக்கி ஏற்கனவே வால்பேப்பர்களை சேமித்து வைத்துள்ள போல்டரை தேர்ந்தெடுக்கவும்.இந்த மென்பொருளை தரவிறக்க http://www.phoeniixz.net/software.html தளத்திற்கு செல்லவும்

You might also like:

'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு

சான்பிரான்ஸிஸ்கோ: முன்பு எதற்கெடுத்தாலும் மைக்ரோசாப்டையே நிறுவனங்கள் நம்பிக் கொண்டிருந்தது ஒரு காலம். ஆனால் இப்போது போட்டிக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதன் விளைவு, விஸ்டாவுக்குப் பிறகு மைக்ரோசாப்ட் புதிதாக அறிமுகப்படுத்திய 'விண்டோஸ் 7' ஆபரேடிங் சிஸ்டத்தை பெரும்பாலான நிறுவனங்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டன. 10க்கு 7 நிறுவனங்கள் விண்டோஸ் 7 வேண்டவே வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது. அதிக செலவு, மேம்படுத்த நேரமின்மை போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த சிஸ்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளன. விஸ்டாவுக்கு மாறிய பல நிறுவனங்கள் அதையும் வேண்டாம் என்று கூறிவிட்டு மீண்டும் விண்டோஸ் எக்ஸ்பிக்கே திரும்பிவிட்டதும் நடக்கிறது. மைக்ரோசாப்டின் நீண்ட நாள் வர்த்தக பங்காளியான இன்டல் நிறுவனம் கூட விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 நிலையற்றதன்மை கொண்டிருப்பதாகக் கூறி, மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பிவிட்டது. இன்னொரு பக்கம் கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்கு மென்பொருளான ஓ.எஸ். பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் பயனாளர்கள்.

அம்பிகாவின் மறைமுகமான மகள்தான் மீரா ஜாஸ்மின்!

தன் ஆஸ்தான இயக்குனர் லோகிததாஸ் சமீபத்தில் மாரடைப்பால் காலமான அதிர்ச்சியில் இருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு, அதற்கு முன்பே காதலர் மாண்டலின் ராஜூவுடனான பிரிவு சோகத்தை தந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நடிகை அம்பிகாவின் மறைமுகமான மகள்தான் மீரா என மீடியாக்கள் ஒரு குண்டு தூக்கி போட்டுள்ளது. இதை கேட்ட மீரா, அப்படி என்றால் இப்போது உள்ள பெற்றோருக்கு தத்து பிள்ளையா நான் என கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.

13 ஜூலை 2009

இனிமே "கணினி-டிவி" எல்லாமே ஒன்னுதான்..?

மாங்க..,இனிமே கணினிக்கென்று தனியாக ஒரு எல்.சி.டி மானிட்டர், டி.வி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கென்று ஒரு. எல்.சி.டி டி.வி என்று இரண்டு சமாச்சாரங்கள் நமக்கு தேவை இல்லை. மாறாக கணினி மானிட்டராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் எல்.சி.டி டி.வி யாகவும் செயல்படக்கூடிய எல்.சி.டி மானிட்டர்கள் சந்தையில் அறிமுகமாகி விட்டன.இந்த வகை எல்.சி.டிக்கு "எல்.சி.டி மானிட்டர் டி.வி என்று" பெயர். இந்த வகை மானிட்டர்களை டி.வியாகவும்,கணினி மானிட்டராகவும் பயன்படுத்தி கணினி வேலைகளையும் செய்ய முடியும், டி.வி நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும். இந்த வகை டி.வி களை முதல் முறையாக சந்தையில் "எல்.ஜி" நிறுவனம் தான் அறிமுகப்படுத்தி உள்ளது.இதில் ஆச்சரியம் என்னவென்றால் எல்.சி.டி டி.வி களின் விலையை விட இந்த வகை எல்.சி.டிகள் விலை குறைவாக உள்ளது. எல்.ஜி நிறுவனம் 18.5” Wide என்ற அளவில் அறிமுகப்படுத்தி உள்ள எல்.சி.டி யின் விலை MRP: Rs 12990 தான்.ஆனால் இதை கடைகளில் போய் வாங்கும் போதும் இன்னும் குறைவாக இருக்கும். இதே அளவில் உள்ள எல்.சி டி டிவி யின் விலை MRP: Rs 14000 ரூபாய் என்ற விலையில் உள்ளது. D-Sub,DVI-D PC Audio I/P,Composite, S-Video என்று டி.வி மற்றும் கணினிக்குரிய எல்லா அம்சங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதனால் நம் வீட்டில் தனித்தனியாக மானிட்டர்களை வைத்து இடத்தையும் அடைத்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எல்.ஜி.நிறுவனத்தை தொடர்ந்து benq,samsung உட்பட பல நிறுவனங்கள் இந்த வகை எல்.சி.டி களை தயாரித்து சந்தையில் களமிறக்க தயாராகி வருகின்றன. இதனால் எல்.சி டி டி.விக்களின் விற்பனை கணிசமாக குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நடிகை மீனா - வித்யாசாகர் கல்யாணம் முடிந்தது

நடிகை மீனாவுக்கும், சாப்ட்வேர் என்ஜீனியர் வித்யாசாகருக்கும் இன்று திருப்பதியில் கோலாகலமாக கல்யாணம் நடந்து முடிந்தது. நடிகை மீனாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் வித்யாசாகருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது திருமணம் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடந்தது. இரு வீட்டார், உறவினர்கள், கலந்து கொண்டனர். திரையுலகம் சார்பில் நடிகை சங்கவி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமணத்தின்போது புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. அதையும் மீறி சில பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க முயன்றபோது மீனாவின் குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்கள் புகுந்து அவர்களை தடுத்தனர். அதில் ஒரு புகைப்படக்காரர் தாக்கப்பட்டார். இதையடுத்து புகைப்படக்காரர்கள் திருப்பதி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து 3 புகைப்படக்காரர்களை போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. திருப்பதியில் திருமணத்தை முடித்துக் கொண்ட மீனாவுக்கு, சென்னை மற்றும் பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வாயை மூடு..நீ முதல்ல வாயை மூடு:எகிறிக்கொண்ட விஷால்-செல்வராகவன்

விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.

இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.

படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.

சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.

எக்குதப்பா மாட்டிக்கிட்டோமேன்னு புலம்பினாலும் சட்டுன்னு அந்த இடத்தை விட்டு எகிறிட்டாராம் புரடியூசர்.

ஒரே நேரத்தில் விண்டோசையும் லினக்ஸ்சையும் இயக்க வேண்டிய வழிமுறைகள்

ஒரே நேரத்தில் இரண்டு OS-களும் இணையாக இயக்க முடிந்தால் நமக்கு நன்றாக இருக்கும். இதற்கு Virtual Machine என்று பெயர். Ulteo Virtual Desktop - இதனை www.ulteo.com என்ற வலைபூவில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். Download செய்யும் பொழுது நமது short questionnaire - ய் தெரிவுபடுத்த வேண்டும். இந்த www.ulteo.com வலைபூவில் சென்று நாம் exe File ய் Download செய்து கொள்ளவேண்டும். Download செய்யும் வழிமுறைகள் 1. Documentation - ய் படித்து உங்கள் கணினி இதை இயக்க Support செய்யுமா மற்றும் System Requirements- ய் பார்த்து கொள்ளுங்கள். Documentation -ய் நன்றாக படித்து அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை Follow செயுங்கள். Download செய்த பின்பு அதனை Instal செய்யவும். இதில் User Name : me password : me root user password : root Default ஆக இருக்கும். உங்களுடைய கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் Windows மற்றும் Linux OS-களை இணையாக இயக்கி கொள்ளலாம். add/remove program சென்று இந்த பயன்பாடினை தேவை என்றால் நீக்கி கொள்ளலாம்.

தமிழ்மகன்

1 Response to "ஒரே நேரத்தில் விண்டோசையும் லினக்ஸ்சையும் இயக்க வேண்டிய வழிமுறைகள்"

ஆசினை அரட்டிய அனாமதேயப் பேர்வழி!

சிங்கப்பூர் சென்றிருந்த ஆசினை ஒரு மர்ம நபர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்ததால் ஆசின் பெரும் பீதியடைந்து விட்டாராம். சமீபத்தில் ஆசின் சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது 20 வயதுக்குள்ளிருக்கும் ஒரு நபர் ஆசினை பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆசின் எங்கு போனாலும் இந்த நபரும் போய் அங்கு நின்றிருக்கிறார். ஆசினுக்கு இது பெரும் குழப்பமாக இருந்திருக்கிறது. சரி, தீவிர ரசிகர் போலும் என விட்டு விட்டார் ஆசின். ஆனால் ஆசின் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் வந்து விட்டார் அந்த மர்ம நபர். ஆசினை நெருங்கிய அவர், அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலக்கி விட்டார். பின்னர் ஆசினை அவரது அனுமதியில்லாமலேயே போட்டோ எடுக்க ஆரம்பித்து விட்டார். இதைத் தடுக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்திய அவர், நான் ஆசினின் பாடிகார்டு, யாரும் வராதீர்கள் என்று அவர்களையே விலக்கி விட்டுள்ளார். குழம்பிப் போன ஆசின் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். அடுத்த நாள் ஆசின் கலந்து கொண்ட நிகழ்ச்சி அரங்கத்திற்குள் வந்த அந்த நபர், அங்கிருந்து பாதுகாப்பாளர்களை அணுகி, தான் இந்தூரிலிருந்து வந்துள்ளதாகவும், முக்கிய விஷயமாக ஆசினைப் பார்கக வேண்டும் என்று டுபாக்கூர் விட்டு ஆசின் சாப்பிட்டுக் கொண்டிருந்த டைனிங் டேபிளுக்கே வந்து விட்டாராம். அதேபோல, ஷாப்பிங் போன இடத்திலும் ஆசினைப் பின் தொடர்ந்து வந்துள்ளார். அடுத்த நாள் காலை ஹோட்டலைக் காலி செய்து விட்டு ஆசின் ஊருக்குக் கிளம்பியுள்ளார். போகும் வழியெல்லாம், ஏர்போர்ட்டிலும் அந்தப் பார்ட்டி இருந்து விடக் கூடாதே என்று பயந்து கொண்டே போனாராம் ஆசின். நல்ல வேளையாக அந்த நபர் அங்கு வரவில்லையாம். இது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார் ஆசினின் மேனேஜர். தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளாராம் ஆசின்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com