20 ஆகஸ்ட் 2011
ஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய
ஆங்கிலத்தில் புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ள ஒக்ஸ்போர்ட் அகராதி!
"retweet", "sexting", and "cyberbullying" இதுபோன்ற 400 புதிய வார்த்தைகள் ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்றுள்ளன. அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வார்த்தைகளை மக்கள் இப்போது பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றையும் சேர்த்து ஒக்ஸ்போர்ட் அகராதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் அதிகமாக சேர்ந்துள்ளன.
குறிப்பாக "retweet" என்ற வார்த்தைக்கு, டிவிட்டர் குறுஞ்செய்திகளை மீண்டும் அனுப்பு அல்லது வேறு ஒருவருக்கு அனுப்பு என்று பொருள் தரப்பட்டுள்ளது.
அதேபோல், "sexting" என்ற வார்த்தைக்கு, ஆபாச மெசேஜ் அல்லது படங்களை அனுப்புதல் என்று பொருள் தரப்பட்டுள்ளது.
காலத்துக்கேற்ற வகையில் தன்னை மாற்றிக் கொள்ளும் ஒக்ஸ்போர்ட் அகராதிக்கு ஆங்கில புலமையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது! - நமீதா பேட்டி
ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. மாற்றம் மக்களிடமிருந்து வர வேண்டும், என்றார் நடிகை நமீதா. ஹஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், "அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள். ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும். ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும். நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது. இப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்," என்றார். ஹஸாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, "இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது," என்றார் நமீதா. இந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறித்து? "அது உண்மைதான். காரணம் இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹஸாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரச்சாரம் கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹஸாரே பார்க்கிறார். இதில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?" என்றார் நமீதா.
18 ஆகஸ்ட் 2011
வேலன்-புகைப்படங்களின் அளவினை மொத்தமாக குறைக்க
கூட்டமைப்பு முன்வைத்துள்ள மூன்று அம்சக் கோரிக்கை அநீதியானதாம்
"இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள மூன்று அம்சக் கோரிக்கை அநீதியானது. அந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித காலக்கெடுவும் விதிக்கவில்லை" - என்று நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். எனினும், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற 10ஆம் கட்டப் பேச்சின்போது இலங்கை அரசிடம் முன்வைக்கப்பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கான பதிலை அரசு இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு சாதகமான பதில் அறிவிக்கப்படாத பட்சத்தில் அரசுடனான பேச்சுகள் முறிவடையலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே பல தடவைகள் அறிவித்திருந்தது. அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய காலக்கெடு நாளை 18 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்த நிலையில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று இது தொடர்பாகக் கூறுகையில் தெரிவித்தவை வருமாறு: "இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் முன்வைத்துள்ள மூன்று அம்சக் கோரிக்கைகள் அநீதியானவை. இருந்தும், அந்தக் கோரிக்கைகளை அரசு முற்றாக நிராகரிக்கவும் இல்லை. அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று அம்சக் கோரிக்கைகளுக்குப் பதில் வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித காலக்கெடுவும் அரசுக்கு விதிக்கவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அறிந்தேன் என்றும், அவை குறித்து ஊடகங்களில் கூறினால் மட்டும் பயனில்லை. அரசுடன் தொடர்புகொள்ள வேண்டும்" - என்றார் ஸ்ரீலங்காவின் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா. இதேவேளை, இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய காலக்கெடு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை வந்ததும் கூடி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரன் இன்று தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: "இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான ஸ்ரீலங்கா அரசுடனான 10ஆம் கட்டப் பேச்சு கடந்த 4ஆம் திகதி நடைபெற்றபோது, கூட்டமைப்பு முன்வைத்த மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு காலக்கெடு விதித்தோம். அந்தக் காலக்கெடு நாளையுடன் நிறைவடைகின்ற நிலையில், அரசிடமிருந்து எந்தவொரு பதில் சமிக்ஞையும் இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன், இலங்கை அரசுடனான அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவும் இல்லை. எதுவித அழைப்பும் விடுக்கப்படவுமில்லை. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இதனால், அரசுடனான அடுத்தகட்டப் பேச்சு மற்றும் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அவர் இலங்கை வந்த பின்னர் கூடித் தீர்மானிக்கப்படும்" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.
16 ஆகஸ்ட் 2011
உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்ப்பது யார்?
சேனல்மீ சேவை இணையதளத்தை வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது என்றால் ஹூ ஈஸ் லைவ் சேவை நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிறது.இதுவும் சுவாரஸ்யமான் சேவை தான்.
ஒரு சில வலைப்பதிவுகளில் எத்தனை பேர் ஆன்லைனில் இருக்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுவதை பார்க்க முடியும்.ஆனால் இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான்.அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவதற்கான் வாய்ப்பில்லை.அதாவது யாரெல்லாம் நாம் பார்க்கும் இணையபக்கத்தை பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வழியில்லை.
ஹூ ஈஸ் லைவ் சேவை இதை தான் சாத்தியமாக்குகிறது.பிரவுசர்களுக்கான விரிவாக்கமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை இணையவாசிகள் பார்த்து கொண்டிருக்கும் அதே இணையதளத்தை வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை காண்பிக்கிறது.
ஒத்த கருத்துள்ளவர்கள் பேசி மகிழ பல விஷயங்கள் இருக்கும் அல்லவா?அதே போல் ஒரே தளத்தை பார்ப்பாவ்ர்களின் ஆர்வமும் ஒத்து போகலாம்.எனவே அந்த தளத்தில் உள்ள மற்ற இணையவாசிகளோடு கருத்துக்களை பரிமாறி கொண்டு இணைய அரட்டையில் ஈடுபடலாம்.இணையதளத்தை பார்த்து கொண்டே அரட்டை அடிக்கலாம் .
இணையதளத்தின் உள்ளடக்கம் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.பார்த்து கொண்டிருப்பது இகாமர்ஸ் தளம் என்றால் குறிப்பிட்ட பொருளை வாங்குவதற்கு முன் அபிப்ராயம் கேட்கலாம்.இந்த பகிர்வு மூலமே புதிய இணைய நண்பர்கள் கிடைக்கலாம்.
பேச்புக் பயனாளிகள் தங்களின் பேஸ்புக் பகிர்வுகளை பார்த்து கொண்டிருப்பது யார் என்றும் தெரிந்து கொண்டு அவர்களோடு உரையாடலில் ஈடுபடலாம்.
இணைய அனுபவத்தை இன்னும் கொஞ்சம் செழுமையானதாக சுவையானதாக ஆக்க இந்த சேவை உதவும்.இந்த சேவையின் மூலம் ஒவ்வொரு இணையபக்கத்தையும் ஒரு அரட்டை அறையாக மாற்றி சக இணையவாசிகளொடு தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் ஒன்று இந்த சேவையில் உறுப்பினராக இருக்கும் இணையவாசிளை மட்டுமே பார்க்க முடியும்.பயர்பாக்ஸ் ,குரோம் மற்றும் ஐ ஆகிய பிரவுசர்களில் இந்த சேவை செல்லுபடியாகிறது.
இணையதள முகவரி;http://www.whoislive.com/index.html
கூகுள் Translate விட்ஜெட்டை தமிழ் வலைப்பூக்களில் இணைக்க #ட்ரிக்ஸ்
- கூகுள் இணைய தளங்களிலும், வலைப்பூக்களிலும் இந்த வசதியை கொண்டு வர Translate விட்ஜெட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் நம் வலைப்பக்கத்தின் மொழியை தேர்வு செய்யும் இடத்தில் தமிழ் மொழி இடம்பெற வில்லை.
- ஆதலால் தமிழ் மொழி வலைதளங்கள் இந்த வசதியை பெற முடியாமல் இருந்தது.
- ஆனால் கோடிங்கில் சிறு மாற்றம் செய்தால் போதும் எந்த பிரச்சினையுமின்றி தமிழ் வலை தளங்களிலும் இந்த விட்ஜெட்டை இணைத்து கொள்ளலாம்.
- முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- Design-Add Gadget -Html JavaScript - சென்று மாற்றம் செய்யப்பட்டிருக்கும் கோடிங்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.
- அவ்வளவு தான் கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தி விட்டால் போதும் கூகுளின் Translate விட்ஜெட் உங்கள் பிளாக்கில் இனைந்து விடும். வாசகர்கள் அவர்களுக்கு தேவையான மொழிகளில் நம் பிளாக்கை மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம்.
15 ஆகஸ்ட் 2011
இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் ?:ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ., முடிவு
லண்டன்: டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் வீழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 3 டெஸ்டில் தோல்வி அடைந்து, "நம்பர்-1' இடத்தை இழந்ததற்கு மோசமான பேட்டிங்கே காரணம் என தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அடித்துச் சொல்கிறார். தேசத்தை மறந்து பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே தோல்விக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது. தவறான வீரர்கள் தேர்வு மற்றும் அளவுக்கு அதிகமான கிரிக்கெட் போட்டிகளே வீழ்ச்சிக்கு காரணம் என, இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,)மீதும் பழி சுமத்துகின்றனர். இது பற்றி விரிவாக ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. இங்கிலாந்துடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. இதையடுத்து டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தை பறிகொடுத்தது. முதலிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியது.
ஓய்வில்லாத போட்டி: இந்த வீழ்ச்சிக்கு ஓய்வில்லாத போட்டிகளே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில், ஆஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் இந்திய அணி இரண்டு மடங்கு போட்டிகளில் பங்கேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கணக்கிட்டால், இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலியாவோ 7 டெஸ்டில் தான் பங்கேற்றுள்ளது. இதே போல இந்தியா 29 ஒரு நாள் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 23 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளன. இப்படி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் பெரும்பாலான இந்திய வீரர்கள் சோர்வடைந்தனர். இதனால் தான் இங்கிலாந்து மண்ணில் சோபிக்க முடியவில்லை என கூறப்படுகிறது
. இதை மறுத்த தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது: இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் தான் முக்கிய காரணம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளும் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தான் இருக்கின்றன. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, "டுவென்டி-20' என ஏதாவது ஒரு வகையிலான போட்டிகளில் பங்கேற்கின்றன. எனவே, இந்தியா மட்டும் அதிக போட்டிகளில் விளையாடவில்லை. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியதால், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங் "கிளிக்' ஆகவில்லை. "டாப்-5' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். "பவுலிங்', "பீல்டிங்கிலும்' நம்மவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட தவறினர். தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து "வேகங்கள்' அசத்தினர். ஜாகிர் கான் காயம் பற்றி அதிகம் விவாதிக்க தேவையில்லை. தோல்விக்கு வீரர்கள் அல்லது பி.சி.சி.ஐ., அல்லது நிர்வாகிகள் மீது பழி சுமத்தும் பணியில் ஈடுபட வேண்டாம். தற்போது இந்திய அணி மோசமான காலக்கட்டத்தை நோக்கி செல்கிறது. நமது வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிந்து விரைவில் முதலிடத்தை மீண்டும் பிடிப்போம். தற்போது இந்திய வீரர்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். ரசிகர்கள் தான் அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
ஐ.பி.எல்., பாதிப்பு: அடுத்து, பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால், நம்மவர்கள் டெஸ்ட் போட்டிக்கான அணுகுமுறையை மறந்து விட்டனர். டிராவிட்டை தவிர மற்றவர்கள் "டுவென்டி-20' போன்று அதிரடியாக "ஷாட்' அடித்து அவுட்டாகினர். தவிர, அதிமான ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்றதால் சோர்ந்து விட்டனர். ஜாகிர், காம்பிர், சேவக் போன்றவர்களுக்கு காயமும் ஏற்பட்டது.
பி.சி.சி.ஐ., நடவடிக்கை: டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வீரர்களை பி.சி.சி.ஐ., தேர்வு செய்யாததே தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து பி.சி.சி.ஐ., செயலவர் சீனிவாசன் கூறுகையில்,""ஜாகிர், சேவக், காம்பிர் ஆகியோருக்கு காயம் ஏற்பட, ஒரு போட்டியில் கூட இந்தியா முழு பலத்துடன் பங்கேற்க இயலவில்லை. சுமார் 2 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த போது யாரும் விமர்சிக்கவில்லை. ஒரு தொடரில் தோற்றவுடன் அனைத்து தரப்பிலும் இருந்து புகார் கூறப்படுகிறது. தேசத்துக்காக விளையாடுவதை தான் வீரர்கள் விரும்புகின்றனர். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடாத வீரர்களுக்கு ஐ.பி.எல்., தொடரில் மவுசு இருக்காது. இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் நமது வீரர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். பின் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.
முன்னாள் வீரர்கள் பாய்ச்சல் தோனி தலைமையிலான அணியின் மோசமான ஆட்டத்தை, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர். அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமென வலியுறுத்தினர். "சீனியர்' வீரர்களுக்கு விடைகொடுத்து விட்டு விராத் கோஹ்லி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
கங்குலி: டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவது சகஜம். ஆனால், வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி, மிகப் பெரும் ஸ்கோரை எட்ட முடியாதது வருத்தம் அளிக்கிறது. இது, இத்தொடருடன் முடிந்து விடுமா அல்லது வீழ்ச்சியின் துவக்கமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கும்ளே: அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோரது ஓய்வுக்கு பின் டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமடையும். எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, தற்போதே நான்கு அல்லது ஐந்து இளம் வீரர்களை கண்டறிய வேண்டும். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா போன்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.
அருண் லால்: இங்கிலாந்து மண்ணில் சந்தித்த தோல்வி, இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. 35 அல்லது 38 வயதான வீரர்களுடன் இனியும் விளையாடுவதில் அர்த்தமில்லை. இவர்களுக்கு கண் பார்வை குறைவு, உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு பதில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
வினோத் காம்ப்ளி: இங்கிலாந்தின் ஸ்டிராசுடன் ஒப்பிடுகையில் கேப்டனாக தோனியின் வியூகம் எடுபடவில்லை. தவறான திட்டங்களை வகுத்தார். சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையில், இத்தொடர் தான் மிக மோசமானதாக அமைந்தது.
வெங்கசர்க்கார்: முன்னணி பவுலர்களுக்கு காயம், எளிய "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டது போன்றவை சிக்கலை ஏற்படுத்தியது. லார்ட்ஸ் டெஸ்டில் கேப்டன் தோனியே "பவுலிங்' செய்ய வேண்டிய பரிதாப நிலைமையை காண முடிந்தது. வீரர்கள் மத்தியில் வெற்றி தாகம், போராடும் குணம் இல்லாததே தோல்விக்கு காரணம்.
குழந்தை மொழியில் குழையும் லக்ஷ்மி ராய் !
நடிக்க வந்து இத்தனை வருடம் ஆகிவிட்டது. இருந்தாலும் தமிழில் தான் பெற்ற முதல் வெற்றிக்குநன்றி சொல்ல கிளம்பியிருக்கிறார் லட்சுமிராய்.நன்றிக்குரியவர் லாரன்ஸ் என்றாலும், அவரையும் தாண்டி ஆசீர்வதித்தது ஆண்டவர்தானே என்கிற அசையாத நம்பிக்கையோடு லட்சுமி போன இடம் ஆஜ்மீர் தர்கா.
லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை ஸ்தலமான இந்த தர்கா தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு புதுசல்ல. பலமுறை இங்கு சென்று வந்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவ்வப்போது சென்று அருள் வாங்கி வருவார் நடிகர் ராஜ்கிரண்.
ஒருமுறை இவர் அங்கு போனபோது ஒரு முதியவர் இவரை பெயர் சொல்லி அழைத்து ஒரு சாய்பாபா போட்டோவை கொடுத்து ஆசீர்வதித்தாராம். அதை இன்னும் தன் வீட்டில் மாட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.
இது ஒருபுறம் இருக்கட்டும் எங்கெங்கோ போய் வழிபடுகிற லட்சுமிராய் இன்னும் தான் கட்டிய கோவிலுக்கு வரவில்லையே என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது லாரன்சுக்கு. அதையும் சீக்கிரம் போக்குவார் போலிருக்கிறது லட்சுமிராய்.
முன்பெல்லாம் லாரன்சை விட்டு சற்றே ஒதுங்கியிருந்தவர், ரொம்ப குழைகிறாராம் இப்போது. எல்லாம் வெற்றி தந்த வீராப்பு. அதுமட்டுமல்ல, முனி-3யிலும் தன்னையே ஹீரோயினா போடும்படி நச்சரிக்கிறாராம்
நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் வெட்டிப்பயல்கள் செய்யும் வேலை!
நடிகர், நடிகையர் மீது அன்பு இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு.நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர், இதுபோன்ற செயல்களை விடுத்து அவரவர் வேலையில் கவனம் செலுத்தினாலே போதுமானது என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திற்குள் நம்பர்-1 நடிகை ரேஞ்சுக்கு உயர்ந்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஹன்சிகா மோத்வானி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானேன். அடுத்து எங்கேயும் காதல் படத்தில் நடித்தேன். இப்போது விஜய்யுடன் வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்து வருகிறேன். இதுதவிர தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறேன்.
தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறேன். எல்லோரும் என்னை சின்ன குஷ்பூ என்று அழைக்கிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. குஷ்பு என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும்படி அறிவுரை கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை.
நீச்சல் உடையிலோ, முத்தக் காட்சியிலோ நடிக்க மாட்டேன். இரவு விருந்துகளுக்கு போகும் பழக்கம் இல்லை. நடிப்பு, ஜிம், வீட்டில் ஓய்வு என்று நல்ல பெண்ணாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள், நடிகைகளுக்கு கோயில் எல்லாம் கட்டுவதாக சொன்னார்கள். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
அந்த அளவுக்கு நடிகைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற செயல்களை விடுத்து, அவரவர் வேலையில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேறுங்கள். தமிழ்க்குழந்தையை தத்தெடுக்க இருப்பதாக ஹன்சிகா மோத்வானி தெரிவித்தார்.
இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுப்பது என் அம்மாவின் வழக்கம். இப்போது 20-வது வயதில் 20-வது குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். இந்தக் குழந்தைகள் அவரவர் வீட்டில் வளர்வார்கள்.
அது தன் சொந்தக் காலில் நிற்கும்வரை அவர்களுக்கான செலவு எங்களுடையது. இதுவரை மும்பை குழந்தைகளை தத்தெடுத்தோம். அடுத்து தமிழ்நாட்டுக் குழந்தை. டிரஸ்ட் தொடங்கி நிறைய குழந்தைகளை பராமரிக்கும் எண்ணம் இருக்கிறது.
14 ஆகஸ்ட் 2011
இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து
பர்மிங்ஹாம்: இந்திய அணிக்கு பெரும் அவமானம். மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. இதையடுத்து டெஸ்ட் அரங்கில் இந்திய அணி "நம்பர்-1' இடத்தை இழந்துள்ளது. தொடரை 3-0 என வென்ற இங்கிலாந்து அணி, புதிய "நம்பர்-1' அணியாக மகுடம் சூடியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டனில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களுக்கு சுருண்டது. குக் 294, மார்கன் 104 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில், 7 விக்கெட்டுக்கு 710 ரன்கள் குவித்து "டிக்ளேர்' செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் (14), டிராவிட் (18) அவுட்டாகாமல் இருந்தனர். காம்பிர் அதிர்ச்சி: நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சுவான் வீசினார். இந்த ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. அடுத்து ஆண்டர்சன் வீசய ஓவரில் முதல் பந்தில், முந்தைய நாள் ஸ்கோருடன் காம்பிர் (14), பெவிலியன் திரும்பி அதிர்ச்சி கொடுத்தார். டிராவிட் சொதப்பல்: பின் இணைந்த டிராவிட், சச்சின் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "அனுபவ' டிராவிட்டும் (18), மேலும் ரன் எதுவும் எடுக்காமல், ஆண்டர்சன் வேகத்தில் சிக்கினார். அடுத்து வந்த லட்சுமண், தன்பங்கிற்கு 21 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து, பெவிலியன் திரும்பினார். சச்சின் ஆறுதல்: இம்முறை சற்று நம்பிக்கையுடன் காணப்பட்ட சச்சின், ஆண்டர்சன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதேபோல பிரஸ்னன் ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவருடன் இணைந்த ரெய்னா, சுவான் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்த போதும், 10 ரன்கள் எடுத்த நிலையில், இவரிடமே சிக்கினார். அடுத்து சச்சினுடன், கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் கேப்டன் தோனி அடித்த பந்து, எதிர்முனையில் சுவானின் கைவிரலில் பட்டு, "ஸ்டம்சை' தகர்க்க, சச்சின் (40) பரிதாபமாக ரன் அவுட்டானார். இதையடுத்து இந்திய அணி 89 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தோனி ஆறுதல்: பீட்டர்சன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த அமித் மிஸ்ரா, 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்நிலையில் தோனியுடன் இணைந்த பிரவீண் குமார் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். சுவானின் ஓவரில் தொடர்ந்து ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் அடித்த அசத்தினார். 18 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்தநிலையில், பிரவீண் குமார், பிராட்டின் "ஷார்ட் பிட்ச்' பந்தில் வீழ்ந்தார். ஆண்டர்சன் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதம் கடந்தார். அம்பயரின் தவறான தீர்ப்பில் இஷாந்த் சர்மா, "டக்' அவுட்டானார். கடைசியில் ஸ்ரீசாந்த்தும் (5) அவுட்டாக, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி (74) அவுட்டாகாமல் இருந்தார்.வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஆண்டர்சன் 4, பிராட், சுவான் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். "நம்பர்-1' உறுதி: இதையடுத்து ஒரு டெஸ்ட் மீதமுள்ள நிலையில், 3-0 என்று தொடரை வென்றுள்ள இங்கிலாந்து அணி, விரைவில் அறிவிக்கப்படும் புதிய "ரேங்கிங்' பட்டியலில், 134 கால டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் முதன் முறையாக, "நம்பர்-1' இடத்தை பெறுகிறது. இரு அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் ஆக. 19ல் ஓவலில் துவங்குகிறது. --- பள்ளி அணி? மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வீரர் குக் மட்டும், தனி நபராக 294 ரன்கள் குவிக்கும் நிலையில், இந்திய வீரர்கள் பள்ளி, "கிளப்' அளவிலான போட்டிகளில் போல, விளையாடியது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ------ வீணாக வெளியேறிய டிராவிட் ஆண்டர்சன் ஓவரில் டிராவிட் அடித்த பந்தை, விக்கெட் கீப்பர் பிரையர் "கேட்ச்' செய்ததாக அம்பயர் சைமன் டபல் (ஆஸி.,) அறிவித்தார். ஆனால், "டிவி ரீப்ளேயில்' பந்து பேட்டில் படவில்லை எனத்தெரிந்தது. "ஹாட் ஸ்பாட்', "ஸ்னிக்கோ மீட்டர்' தொழில் நுட்பத்திலும், இது உறுதியானது. அம்பயர் தீர்ப்பை எதிர்த்து முறையிட வாய்ப்புள்ள நிலையில், "ரிவியூ' கேட்காமால், டிராவிட் உடனடியாக வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. --- அதல பாதாளத்தில்... கடந்த 2009, டிசம்பர் மாதம் சர்வதேச தரவரிசையில், இந்திய அணி "நம்பர்-1' இடத்தை பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்கும் முன், இந்தியா (125), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (117) அணிகள், தரவரிசையில் முதல் மூன்று இடத்தில் இருந்தன. தற்போதைய தோல்வியை அடுத்து (0-3) இந்திய அணி, முதலிடத்தை இழந்துள்ளது. * இப்போதுள்ள நிலையில், அடுத்த போட்டி "டிரா' ஆனாலும், முதலிடத்தில் இங்கிலாந்தும் (124), அடுத்த இரு இடங்களில் இந்தியா (119), தென் ஆப்ரிக்கா (118) இருக்கும். * ஒருவேளை 4வது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தால், மூன்றாவது (117) இடத்துக்கு தள்ளப்படும். இங்கிலாந்து (125), தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா (117) முதல் இரண்டு இடத்தில் இருக்கும். --- முதல் தோல்வி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், 11 தொடர்களில் பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 2, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு வெற்றி என மொத்தம் 8 தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2, இலங்கைக்கு எதிராக ஒன்று என, மூன்று தொடர் "டிரா' ஆனது. இப்போதுதான் முதன் முறையாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வி கிடைத்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து செய்திகளை (Birthday Messages) அள்ளி கொடுக்கும் பிரத்யேகமான தளம்.
பிறந்தநாள் வாழ்த்துச்செய்திகளை கொடுக்க பல இணையதளங்கள் இருந்தாலும் இத்தளத்தில் ஒரு புதுமை இருக்கிறது அது என்னவென்றால் நண்பருக்கு சொல்லும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி எப்படி இருக்க வேண்டும் , அலுவகத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி எப்படி இருக்க வேண்டும், மனைவி அல்லது நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாழ்த்துச்செய்தி எப்படி அனுப்ப வேண்டும் என்று துல்லியமாக பட்டியலிடுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வருடா வருடம் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை தான் அனுப்புகிறோம் அதுவும் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான், பல தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தியை என்று சென்று விளம்பரங்களை தான் பார்க்க முடிகிறது என்று சொல்லும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச்செய்திகளை அள்ளி கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.freebirthdaymessages.com
”இலவச பிறந்தநாள் செய்திகள் “ இணையதளப் பெயரை ஞாபகம் வைப்பதும் எளிது தான். இத்தளத்திற்கு சென்று நாம் Birthday Card Messages,Love Birthday Messages,Holiday Birthday Messages Teenage Birthday Messages,Pets Birthday Messages,Co-Worker Birthday Messages போன்ற எந்த வகையில் நாம் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டுமோ அதை சொடுக்கி அடுத்து வரும் திரையில் இருந்து நமக்கு பிடித்தமான வாழ்த்துச்செய்தியை எடுத்து இமெயில் அல்லது SMS வழியே அனுப்பலாம். தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் நபர்களுக்கு மட்டும் வாழ்த்துச்செய்தி SMS வழியே அனுப்பும் வசதி இருக்கிறது. 85 -க்கும் அதிகமான வகையில் கிரியேட்டிவான( Creative) வாழ்த்துச் செய்தி இத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. புதுமை விரும்பிகளுக்கும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி அனுப்ப வேண்டும் என்று எண்ணும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை போன் மூலம் இலவசமாக கூறலாம்.
இ-கார்டு வாழ்த்து எந்த கணக்கும் இல்லாமல் ஆன்லைன் மூலம் எளிதாக உருவாக்கலாம்
உங்கள் வாழ்வின் இலக்கை அடைய திட்டங்களை வகுத்துத் தரும் இணையதளம்
நம் முகத்துடன் அனிமேசனில் வாழ்த்து சொல்ல புதுமையான இணையதளம்.
எரியும் மாடியிலிருந்து குதித்த பெண்ணின் முதல் படம்!
லண்டனில் நிகழ்ந்த பயங்கர கலவரத்தின் போது எரியும் வீட்டு மாடியிலிருந்து தைரியத்துடன் குதித்த பெண்ணின் முதல் படம் இன்று வெளியாகியுள்ளது. கலவரத்தின் கோரத்தை கண் முன் கொண்டுவந்து விளக்கிய படம் அது.
தீ விபத்து ஏற்பட்டு அருகிலுள்ள மரத்தளபாடங்களை விற்பனை செய்யும் கடைக்கும் வேகமாகப் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
அப்போது எந்தப் பயமும் இல்லாமல் துணிச்சலுடன் கீழே குதித்தார் 32 வயதான Monika Konczyk என்ற பெண்.
அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கொழுந்து விட்டு எரியும் தீயிலிருந்து தப்பிக்க வேறு வழி தெரியவில்லை. அதனால் 14 அடி உயரமான முதலாவது மாடியின் ஜன்னலினூடாக குதித்தேன்.
நல்ல வேளையாக கலகத் தடுப்புப் பொலிஸார் கைகளில் ஏந்தியதால் தப்பித்தேன்.
குறுகிய நேரத்தில் உயிருடன் தப்பித்தமையானது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தீ பரவிய வேளை நான் எரிந்தே இறந்து விடுவேன் என நினைத்தேன்.
மோனிக்காவின் சகோதரி தீ விபத்து தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
மரணத்திலிருந்து குறுகிய நேரத்தில் தப்பித்தமையால் அவள் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கிறாள். தற்போது அவள் என்னுடன் தான் தங்கியுள்ளாள். நானே அவளைப் பார்த்துக் கொள்கிறேன்.
சகோதரிகள் Croydon Whitgift shopping centre என்ற இடத்தில் பணி புரிகின்றனர். ஆனால் மோனிகா அதிர்ச்சியிலிருந்து விலகாததால் இன்னும் வேலைக்குத் திரும்பவில்லை.
மோசமான கார் விபத்தால் மூளை சேதமாகியும் டிகிரியைப் பூர்த்தி செய்த மாணவி!
மிக மோசமான இரண்டு கார் விபத்துக்களில் சிக்கி மூளை பலத்த சேதமாகியும் தான் படித்த டிகிரிப் படிப்பை பூர்த்தி செய்துள்ளார் ஒரு மாணவி. இரண்டு வாரங்களாக கோமாவில் இருந்து கண் விழித்த போது எதிர்காலமே இருண்டதாக உணர்ந்தார்.
22 வயதான Lisa Watt என்ற மாணவிக்கு விபத்தினால் இடுப்பு எலும்புகள் உடைந்து முதுகெலும்பும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பின்னர் மாணவியின் எலும்புகள் குணமான பிறகு அவளின் மூளை நினைவிழப்பு, சேதமடைந்ததாக காணப்பட்டது. இந்த நிலையிலிருந்து அவர் மீள்வாரா என்று சந்தேகம் நிலவியது.
ஆனால் அவர் எதிர்பாராத விதமாக பல்கலைக்கழகம் சென்று படித்து சமூக சேவையில் பட்டமும் பெற்று விட்டார்.
அவள் பெருமையுடன் ராபர்ட் கார்டன் பல்கலையில் பட்டம் பெற்றபோது அவளது காதலனான கிறிஸ் டேவிட்சன் மற்றும் அவரது மூன்று மாதக் குழந்தையும் பார்த்தது.