Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

14 ஆகஸ்ட் 2011

இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து

பர்மிங்ஹாம்: இந்திய அணிக்கு பெரும் அவமானம். மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. இதையடுத்து டெஸ்ட் அரங்கில் இந்திய அணி "நம்பர்-1' இடத்தை இழந்துள்ளது. தொடரை 3-0 என வென்ற இங்கிலாந்து அணி, புதிய "நம்பர்-1' அணியாக மகுடம் சூடியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டனில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களுக்கு சுருண்டது. குக் 294, மார்கன் 104 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில், 7 விக்கெட்டுக்கு 710 ரன்கள் குவித்து "டிக்ளேர்' செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் (14), டிராவிட் (18) அவுட்டாகாமல் இருந்தனர். காம்பிர் அதிர்ச்சி: நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சுவான் வீசினார். இந்த ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. அடுத்து ஆண்டர்சன் வீசய ஓவரில் முதல் பந்தில், முந்தைய நாள் ஸ்கோருடன் காம்பிர் (14), பெவிலியன் திரும்பி அதிர்ச்சி கொடுத்தார். டிராவிட் சொதப்பல்: பின் இணைந்த டிராவிட், சச்சின் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "அனுபவ' டிராவிட்டும் (18), மேலும் ரன் எதுவும் எடுக்காமல், ஆண்டர்சன் வேகத்தில் சிக்கினார். அடுத்து வந்த லட்சுமண், தன்பங்கிற்கு 21 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து, பெவிலியன் திரும்பினார். சச்சின் ஆறுதல்: இம்முறை சற்று நம்பிக்கையுடன் காணப்பட்ட சச்சின், ஆண்டர்சன் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதேபோல பிரஸ்னன் ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். இவருடன் இணைந்த ரெய்னா, சுவான் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்த போதும், 10 ரன்கள் எடுத்த நிலையில், இவரிடமே சிக்கினார். அடுத்து சச்சினுடன், கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் கேப்டன் தோனி அடித்த பந்து, எதிர்முனையில் சுவானின் கைவிரலில் பட்டு, "ஸ்டம்சை' தகர்க்க, சச்சின் (40) பரிதாபமாக ரன் அவுட்டானார். இதையடுத்து இந்திய அணி 89 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தோனி ஆறுதல்: பீட்டர்சன் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த அமித் மிஸ்ரா, 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்நிலையில் தோனியுடன் இணைந்த பிரவீண் குமார் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். சுவானின் ஓவரில் தொடர்ந்து ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் அடித்த அசத்தினார். 18 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 40 ரன்கள் எடுத்தநிலையில், பிரவீண் குமார், பிராட்டின் "ஷார்ட் பிட்ச்' பந்தில் வீழ்ந்தார். ஆண்டர்சன் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய தோனி, டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதம் கடந்தார். அம்பயரின் தவறான தீர்ப்பில் இஷாந்த் சர்மா, "டக்' அவுட்டானார். கடைசியில் ஸ்ரீசாந்த்தும் (5) அவுட்டாக, இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி (74) அவுட்டாகாமல் இருந்தார்.வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஆண்டர்சன் 4, பிராட், சுவான் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். "நம்பர்-1' உறுதி: இதையடுத்து ஒரு டெஸ்ட் மீதமுள்ள நிலையில், 3-0 என்று தொடரை வென்றுள்ள இங்கிலாந்து அணி, விரைவில் அறிவிக்கப்படும் புதிய "ரேங்கிங்' பட்டியலில், 134 கால டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் முதன் முறையாக, "நம்பர்-1' இடத்தை பெறுகிறது. இரு அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் ஆக. 19ல் ஓவலில் துவங்குகிறது. --- பள்ளி அணி? மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வீரர் குக் மட்டும், தனி நபராக 294 ரன்கள் குவிக்கும் நிலையில், இந்திய வீரர்கள் பள்ளி, "கிளப்' அளவிலான போட்டிகளில் போல, விளையாடியது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ------ வீணாக வெளியேறிய டிராவிட் ஆண்டர்சன் ஓவரில் டிராவிட் அடித்த பந்தை, விக்கெட் கீப்பர் பிரையர் "கேட்ச்' செய்ததாக அம்பயர் சைமன் டபல் (ஆஸி.,) அறிவித்தார். ஆனால், "டிவி ரீப்ளேயில்' பந்து பேட்டில் படவில்லை எனத்தெரிந்தது. "ஹாட் ஸ்பாட்', "ஸ்னிக்கோ மீட்டர்' தொழில் நுட்பத்திலும், இது உறுதியானது. அம்பயர் தீர்ப்பை எதிர்த்து முறையிட வாய்ப்புள்ள நிலையில், "ரிவியூ' கேட்காமால், டிராவிட் உடனடியாக வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. --- அதல பாதாளத்தில்... கடந்த 2009, டிசம்பர் மாதம் சர்வதேச தரவரிசையில், இந்திய அணி "நம்பர்-1' இடத்தை பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்கும் முன், இந்தியா (125), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (117) அணிகள், தரவரிசையில் முதல் மூன்று இடத்தில் இருந்தன. தற்போதைய தோல்வியை அடுத்து (0-3) இந்திய அணி, முதலிடத்தை இழந்துள்ளது. * இப்போதுள்ள நிலையில், அடுத்த போட்டி "டிரா' ஆனாலும், முதலிடத்தில் இங்கிலாந்தும் (124), அடுத்த இரு இடங்களில் இந்தியா (119), தென் ஆப்ரிக்கா (118) இருக்கும். * ஒருவேளை 4வது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்தால், மூன்றாவது (117) இடத்துக்கு தள்ளப்படும். இங்கிலாந்து (125), தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா (117) முதல் இரண்டு இடத்தில் இருக்கும். --- முதல் தோல்வி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், 11 தொடர்களில் பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 2, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு வெற்றி என மொத்தம் 8 தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2, இலங்கைக்கு எதிராக ஒன்று என, மூன்று தொடர் "டிரா' ஆனது. இப்போதுதான் முதன் முறையாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வி கிடைத்துள்ளது.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com