இதில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்துதேவையான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படம் தேர்வு செய்தவுடன் அதன் பிரிவியு பார்க்க அந்த புகைப்படத்தை தேர்வு செய்ய அதன் ப்ரிவியு கீழே தெரியும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போழுது புகைப்படம் எந்த பார்மெட்டுக்கு வரவேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். அதைப்போலவே புகைப்பட டைட்டிலுக்கு எந்த பெயர் வைக்க வேண்டுமோ அந்த பெயரை தட்டச்சு செய்யுங்கள். புகைப்படத்திலும் வாட்டர்மார்க் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போழுது புகைப்படம் எந்த அளவில் வேண்டுமோ அந்த அளவினை தேர்வு செய்துகொள்ளுங்கள். மேலும் தம்ப்நெயில் வேண்டுமானாலும் அதனையும்தேர்வு செய்துகொள்ளலாம்.தம்ப்நெயில்படத்திற்கும் வாட்டர்மார்க் அமைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தவுடன் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இறுதியில் நீங்கள் எங்கு சேமித்து வைத்துள்ளீர்களோ அங்கு சென்று பார்த்தீர்களேயானால் அங்கு அளவு குறைக்கப்பட்ட உங்கள் புகைப்படங்கள் இருக்கும்.போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள நண்பர்களுக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்அளிக்கும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
Thanks-
வேலன்.