Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

18 ஆகஸ்ட் 2011

கூட்டமைப்பு முன்வைத்துள்ள மூன்று அம்சக் கோரிக்கை அநீதியானதாம்

"இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள மூன்று அம்சக் கோரிக்கை அநீதியானது. அந்தக் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித காலக்கெடுவும் விதிக்கவில்லை" - என்று நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்துள்ளார். எனினும், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற 10ஆம் கட்டப் பேச்சின்போது இலங்கை அரசிடம் முன்வைக்கப்பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கான பதிலை அரசு இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு சாதகமான பதில் அறிவிக்கப்படாத பட்சத்தில் அரசுடனான பேச்சுகள் முறிவடையலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே பல தடவைகள் அறிவித்திருந்தது. அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய காலக்கெடு நாளை 18 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்த நிலையில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று இது தொடர்பாகக் கூறுகையில் தெரிவித்தவை வருமாறு: "இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் முன்வைத்துள்ள மூன்று அம்சக் கோரிக்கைகள் அநீதியானவை. இருந்தும், அந்தக் கோரிக்கைகளை அரசு முற்றாக நிராகரிக்கவும் இல்லை. அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று அம்சக் கோரிக்கைகளுக்குப் பதில் வழங்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவித காலக்கெடுவும் அரசுக்கு விதிக்கவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அறிந்தேன் என்றும், அவை குறித்து ஊடகங்களில் கூறினால் மட்டும் பயனில்லை. அரசுடன் தொடர்புகொள்ள வேண்டும்" - என்றார் ஸ்ரீலங்காவின் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா. இதேவேளை, இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய காலக்கெடு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை வந்ததும் கூடி முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரன் இன்று தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: "இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான ஸ்ரீலங்கா அரசுடனான 10ஆம் கட்டப் பேச்சு கடந்த 4ஆம் திகதி நடைபெற்றபோது, கூட்டமைப்பு முன்வைத்த மூன்று அம்சக் கோரிக்கைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு காலக்கெடு விதித்தோம். அந்தக் காலக்கெடு நாளையுடன் நிறைவடைகின்ற நிலையில், அரசிடமிருந்து எந்தவொரு பதில் சமிக்ஞையும் இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன், இலங்கை அரசுடனான அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவும் இல்லை. எதுவித அழைப்பும் விடுக்கப்படவுமில்லை. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இதனால், அரசுடனான அடுத்தகட்டப் பேச்சு மற்றும் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அவர் இலங்கை வந்த பின்னர் கூடித் தீர்மானிக்கப்படும்" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச் சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com