16 ஏப்ரல் 2009
3வது முறையாக மாரடைப்பு - மருத்துவமனையில் மணிரத்தினம் அனுமதி
இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3வது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மணிரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை மேம்பட்ட நிலைக்கு உயர்த்தியவர்களில் ஒருவராகக் கருதப்படும் இயக்குநர் மணிரத்னம், இப்போது ராவண் எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் - அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வரும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மணிரத்னத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவரது மீடியா மேனேஜர் நிகில் முருகனிடம் தொடர்பு கொண்டோம்.
மணிரத்னம் இப்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் என்றும், தற்போது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறுவதாகவும் நிகில் தெரிவித்தார்.
3வது முறை..
மணிரத்னத்துக்கு இதற்கு முன்பு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஆய்த எழுத்து படப்பிடிப்பின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு ஓய்வு எடுத்து வந்த மணிரத்னம், சற்று இடைவெளி கொடுத்து குரு படத்தைத் தொடங்கினார்.
குரு படத்தின் ஷூட்டிங்குக்காக கொல்கத்தா சென்றிருந்தபோது அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்தது.
இந்த நிலையில் இப்போது ராவண் படத்தை இயக்கும் போது மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இச்செய்தி மணிரத்னம் மற்றும் சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மணிரத்னம் நலம்பெற்று வந்து நல்ல சினிமாக்கள் தர பிரார்த்திப்போம்!
நடிகைகளின் ஆடையும் போலி கலாச்சாரவாதிகளும்!
நடிகைகள் அளவிற்கு அவர்கள் அணியும் ஆடைகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. சரியாகச் சொல்வதென்றால், ஆடையை முன்னுறுத்தி சர்ச்சைக்குள்ளான நடிகைகளே அதிகம்.
ஆடைகள் என்று வரும்போது, திரையில் அவர்கள் அணிந்துவரும் ஆடைகளை விட, நிஜத்தில் அவர்கள் அணியும் ஆடைகளே பிரச்சனையின் ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது.
பொது நிகழ்ச்சியில் மினி ஸ்கர்ட்டில் வந்ததற்காக நமிதா, ஸ்ரேயா தொடங்கி மல்லிகா ஷெராவாத் வரை பலர் சர்ச்சைக்குள்ளாயினர். சிலர் மீது கலாச்சார மீறல் வழக்கும் தொடரப்பட்டது.
மேலோட்டமான பார்வையில் இது இயல்பான நிகழ்வாகத் தோன்றும். ஆனால், ஆடை குறித்த நமது சமூகப் பார்வை, அதன் பின்னுள்ள அரசியல் சிக்கலானது.
நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் அணிந்துவரும் உடை சிக்கனமாக, ஆபாசமாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதனை முன்வைப்பவர்கள் இரு வகையினர்.
முதல் வகையினர் நடிகைகளின் உடைகளில் மட்டும் கவனம் குவிப்பவர்கள் அல்லர். உலகமயமாக்கல் மற்றும் நுகர்வு கலாச்சாரத்தால் தமிழர்களின் அடைளாயங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் இன்னபிற அழிந்து வருவதில் நிஜமான கவலை கொண்டவர்கள். நடிகைகளின் ஆடை குறைப்பு இவர்களின் கலாச்சார மீட்பு அரசியலின் ஒரு பகுதி.
இரண்டாம் வகையினர், அழிந்துவரும் தமிழர் அடையாளங்கள் குறித்து எந்த கவலையும், புரிதலும் இல்லாதவர்கள். விளம்பரம் ஒன்றே இவர்களின் இலக்கு. நடிகைகளை விமர்சிப்பதன் மூலம் கிடைக்கும் விளம்பர வெளிச்சத்தில் உயிர் வளர்க்கும் கலாச்சார போலிகள் இவர்கள்.
திரையில் நடிகைகளின் அரைகுறை நிர்வாணத்தை ரசித்துக் கொண்டே, பொது இடங்களில் அவர்களின் கால்வாசி நிர்வாணத்துக்கு முதலைக் கண்ணீர் வடிப்பவர். தங்களை தமிழ் கலாச்சார காவலர்களாக காட்டிக் கொண்வதே இவர்களின் ஒரே நோக்கம்.
துரதிர்ஷ்டம் என்னவென்றால், இரண்டாம் வகையினரின் கூறுகள் இந்த சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் தோலிலும் மறைந்து கிடக்கிறது. இந்த ஆணாதிக்க கூறுகள் பெண்களிடத்தும் காணக்கிடப்பதை துரதிர்ஷ்டம் அன்றி வேறென்ன சொல்ல!
சிவாஜி படவிழாவில் குட்டைப் பாவாடை (ஸ்க்ரிட்) அணிந்து வந்த ஸ்ரேயா, கால்மேல் கால்போட்டு அமர, பார்வையாளர் பகுதியிலிருந்து பெரும் கூச்சல் கிளம்பியது. முதல்வர், சூப்பர் ஸ்டார் போன்றவர்களின் முன்னால் ஒரு நடிகை கால் மேல் கால் போட்டு அமர்வதா?
ஸ்ரேயாவின் சின்ன உடையை இயக்குனர் ஷங்கர் கண்டித்ததாக மறுநாள் பத்திரிக்கைகள் எழுதின.
என்ன வேடிக்கை! ஸ்ரேயா என்ற நடிகைக்கு ஜாக்கெட் கூட தராமல், உள்ளாடையுடன் ஒரு பாடல் முழுக்க ஆடவிட்டவர் ஷங்கர். அதைவிட நாகரிகமான உடையில்தான் விழாவுக்கு வந்திருந்தார் ஸ்ரேயா. பிறகு ஏன் கண்டிப்பு?
இதற்கு இரண்டு காரணங்கள் கூறமுடியும். நடிகை என்பவள் கேளிக்கை பொருள். திரையில் அவள் எந்தவிதமான ஆடையும் அணியலாம், ஆடிப்பாடலாம், ஆண்களை மகிழ்விக்கலாம். திரையைவிட்டு வெளிவரும் போது அவள் பெண்.
இரண்டாவது காரணம் வியாபாரம். ஸ்ரேயா அரைகுறை உடையில் திரைப்படத்தில் தோன்றினால் நாலு பேர் பார்க்க வருவாக்ரள், கல்லாவில் காசு நிறையும். அதே அரைகுறை உடையில் பொது நிகழ்ச்சியில் தோன்றில் 'ரசிகன்' இலவசமாகவே பார்த்து ரசிப்பான். இலவசமாக கிடைக்கும்போது அவன் ஏன் காசு கொடுத்து திரையரங்குக்கு வரவேண்டும். இவர்கள் படத்தை பார்க்க வேண்டும்!
ஆக, என்னுடைய படத்தில் நான் சொல்லும் காட்சியில் நான் சொல்லும் உடையில் நடிப்பதே உன் வேலை. பொது இடங்களில் ஆச்சாரமாகவே வரவேண்டும்.
நடிகைகள் அணிந்துவரும் உடைக்கும் இதுபோன்ற கலை வியாபாரிகளும், நுகர்வு (விளம்பர) உலகின் வணிக நோக்கமே காரணம்.
மல்லிகா ஷெராவாத்துக்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க மூன்று கோடி கொட்டி கொடுத்ததும், நமிதா முன்னணி நடிகைகளின் படங்களில் எல்லாம் நடிப்பதற்கும் அவர்கள் திறமையா காரணம்? கவர்ச்சியான உடம்பு. அந்த உடம்பே காரணம்! உடலே உனக்கு மூலதனம் என மல்லிகா ஷெராவத்துக்கும், நமிதாவுக்கும், இன்னபிற நடிகைகளுக்கும் கற்றுக் கொடுத்தது நாம் மேலே பார்த்த வியாபாரிகளும், நுகர்வு கலாச்சாரமும்தான்.
நடிகைகளின் உடைகள் குறித்து கவலைப்படும், வழக்கு தொடரும் கலாச்சாரவாதிகள் உண்மையில் போர் தொடுக்க வேண்டியது இந்த வியாபாரிகளுக்கு எதிராகத்தான்.
என்ன செய்வது... அதற்கான திராணி இந்த போலி கலாச்சாரவாதிகளுக்கு இல்லாததோடு, அவர்களின் நோக்கமும் அதுவல்ல என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய பிரச்சனை! பிளாக்கர் டெம்பிளேட் - Lifestyle
கமல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்
கமல், அசின் நடிக்கும் 19 ஸ்டெப்ஸ் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அவருடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரும் பணிபுரிவதாக தகவல்.
ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கியவர் பரத்பாலா. இவர் 19 ஸ்டெப்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். சரித்திர காலத்து கதை இந்த 19 ஸ்டெப்ஸ்.
இந்தப் படத்தில் கேரளாவைச் சேர்ந்த குறுநில மன்னரின் மகளாக நடிக்கிறார் அசின். இவருக்கு களரி சண்டை கற்றுக் கொடுக்கும் ஆசானாக கமல். கமலிடம் களரி படிக்கும் ஜப்பானைச் சேர்ந்த இளைஞனுக்கும் அசினுக்கும் காதல்.
இந்தப் படததை ஜப்பான் மொழியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார் பரத்பாலா. காரணம், ஜப்பான் இளைஞராக இந்தப் படத்தில் நடிப்பவர் பிரபல ஜப்பானிய நடிகர் தடானாபோ அசானா.
19 ஸ்டெப்ஸில் ஜப்பான் பாணி இசையும் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக ஜப்பானின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜொய் ஹிசய்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கமலின் மர்மயோகி படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. அந்தப் படம் தற்காலிகமாக கைவிடப்பட்டது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. 19 ஸ்டெப்ஸ் அந்த ஏமாற்றத்தை ஓரளவு குறைத்துள்ளது.
13 ஏப்ரல் 2009
'பேவாட்ச்' பமீலாவுக்கு நான்காவது திருமணம்
'பேவாட்ச்' தொடர் புகழ் பமீலா ஆண்டர்சன் விரைவில் நான்காவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.கனடாவில் பிறந்த நடிகை பமீலா ஆண்டர்சன் துவக்கத்தில் ஹாலிவுட்டில் தான் நடித்தார் என்றாலும் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது 1992ல் வெளிவந்த 'பேவாட்ச்' டிவி தொடர் தான்.இதை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் வெற்றிகள் குவி்ந்தன. ஆனால், சினமா வாழ்க்கைக்கு நேர் மாறாக இவரது திருமண வாழ்க்கை தொடர்ந்து தோல்வியை சந்தித்து. ஒரு முறை, இரு முறை அல்ல மூன்று முறை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவகாரத்து பெற்றார்.இவரது முதல் கணவர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் மோட்லே டாமி லீ. இவர்களுக்கு பிரான்டன் (12), டைலன் (11) என இரண்டு குழந்தகள் பிறந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார். இவரை தொடர்ந்து ராப் பாடகர் கிட் ராக் மற்றும் சமூக சேவகர் ரிக் சாலமன் ஆகியோர் மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார்.தற்போது 41 வயதான நிலையில் பமீலா நான்காவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த ரகசியத்தை முதலில் கசியவிட்டவர், பமீலாவின் உடை தயாரிப்பளரும், பிரபல பேஷன் டிசைனரான ரிச்சி ரிச் தான். மியாமியில் நடந்த பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற ரிச்சி சக விருந்துனர்களிடம் பமீலாவுக்கு தான் புதிய திருமண உடைகளை டிசைன் செய்து வருவதை போட்டு உடைத்துள்ளார். பமீலா ஆழ்கடல் நீச்சல்வீரரான ஜேமி பட்கெட் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதை அடுத்து அவரை தான் திருமணம் செய்ய போகிறார் என கூறியுள்ளார். இது குறித்து பமீலா கூறுகையில், எனது இரண்டு மகன்களுக்கு ஜேமியை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் தான் இந்த திருமண ஏற்பாடு என்றார்.
கோலிவுட் துணை நடிகை கடத்தல்?
சினிமா படப்பிடிப்புக்கு சென்ற துணை நடிகை மாயமானார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த காமாட்சியின் மகள் பூஜா என்ற யோகேஸ்வரி (21). சினிமா துணை நடிகையான இவர் தெனாவட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் கல்கி, மகள் உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.கடந்த 30ம் தேதி தனக்கு சினிமா படப்பிடிப்பு உள்ளது என்றும், வர இரண்டு நாட்கள் ஆகும் என்றும் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.ஆனால், வீடு திரும்பாததால் இவரது தாயார் காமாட்சி செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதையடு்த்து காமாட்சி தனது மகளின் நண்பர்கள், படப்பிடிப்புக் குழு ஆகியோரிடம் விசாரித்தும் பலனில்லை.இதற்கிடையே, பூஜாவிடமிருந்து அவரது தாயக்கு போன் வந்துது. அதில் பேசிய பூஜா, தன்னை சிலர் பிடித்து வைத்து இருப்பதாகக் கூறிவிட்டு விவரம் சொல்வதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.இதையடுத்து வளசரவாக்கம் போலீசில் கமாட்சி புகார் செய்தார்.பூஜாவுக்கு சினிமா பட வாய்ப்பு வாங்கித் தரும் ஏஜெண்டிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நான் பூஜாவை எங்கும் அழைத்துச் செல்லவில்லை என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் பூஜா தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், பகல் முழுவதும் இருந்துவிட்டு மாலையில் சென்று விட்டதாக ஏஜெண்டின் மனைவி போலீசாரிடம் கூறியுள்ளார்.பூஜா கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடக்கிறது
கணினிக்கான இலவசஆன்டி வைரஸ்களில் எது சிறந்தது?
காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் தங்கள் கணினியில் பல நிறுவனங்கள் வழங்கும் "இலவச ஆன்டிவைரஸ்" தொகுப்புகளை உபயோகிப்பார்கள் .ALWIL(avast! home edition) GRISOFT(avg free edition),BID DEFENDER,AVIRA( anti vire personal) CLAMWIN உட்பட பல நிறுவனங்கள் "இலவச ஆன்டி வைரஸ்" தொகுப்புகளை தந்து வருகிறது.இந்த "ஆன்டி வைரஸ்"களில் எது சிறந்தது?.என்று உங்களுக்கே ஒரு குழப்பம் வரும், அல்லது வந்திருக்கலாம். பல கணினி சம்பந்தமான நிறுவனங்கள் "AVG" நிறுவனம் வழங்கும் இலவச " ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்" தொகுப்பை தான் சிறந்தது என்று நமக்கு பரிந்துரைக்கின்றன.
ஆனால் நான் உபயோகித்து பார்த்த வகையில் "AVIRA" நிறுவனம் வழங்கும் "இலவச ஆன்டி வைரஸ் தொகுப்பு" தான் மிகச்சிறந்தது என்று சொல்ல முடியும்.ஐந்துமுறை "AVG" நிறுவனம் வழங்கிய "இலவச ஆன்டி வைரஸ்" தொகுப்பை பயன்படுத்தி பார்த்தேன்.அதன் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை. "www.katz.cd,www.seriels.ws" போன்ற தளங்களில் நாம் எதாவது டவுன்லோட் செய்தால் கூடவே வைரஸ்களும் சேர்ந்து வந்துவிடும். அவைகளை நீக்குவதற்கான வேலைகளை "AVG" தொகுப்பு சரியாக செய்வதில்லை, அந்த இணைய தளத்திற்கு செல்லும் முன்னால் எச்சரிக்கை மட்டுமே செய்கிறது. வைரஸ்களை நீக்குவதில் "AVG" ஆன்டி வைரஸ் சிறப்பாக செயல்படுவதில்லை . ஆனால் "AVIRA" வழங்கும் இலவச தொகுப்பு மிகச்சிறப்பாக வேலை செய்கிறது. அதை நமது கணினியில் வைத்துகொண்டால் நாம் காசு கொடுத்து தனியாக ஒரு "ANDIVAIRAS" தொகுப்பை வாங்கவேண்டிய அவசியம் இருக்காது ."ILEGAL WEBSITE" களிலும் , "USB PEN DRIVE " களிலும், "CD,DVD" களிலும் "AVIRA" வழங்கும் இலவச ஆன்டிவைரஸின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளது.அந்த ஆன்டிவைரஸை http://www.free-av.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.நீங்களும் பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்.
அழகிகளுடன் ரஹ்மான் .....!
ஆஸ்கர் நாயகன் யார் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று நிரூபித்துவிட்ட இசைப்புயல் அடுத்து POP உலகிற்குள்ளும் நுழைந்துவிட்டார். Pussicat Dolls அழகிகளுடன் ரஹ்மான் Jai ho என்று பாடியிருக்கிறார். இது ரிமிக்ஸ் வெர்சன் என்றாலும் ரஹ்மானின் அடுத்த கட்ட உயர்வுக்கு இது உறுதுணையாக இருக்கும்!!Pussicat Dolls ஏற்கனவே Stick with you, Don't cha, போன்ற பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்த அழகிகளின் குழு!!
அவர்களுக்கு ஏற்கனவே இந்தியா மேல் ஒரு கண்... பத்தாகுறைக்கு இசைப்புயலின் தொடர் அவார்ட்கள்.. இப்போ இந்த பாடல்தான் ஹாட்...... இப்பாடலில் நிகோல் இந்தியப் பெண்மணியைப் போல பொட்டு வைத்துக் கொண்டு வருவது குதூகலமாக இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறார்... கீழே ஒரு லுக் விடுங்களேன்...இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!!!Pussycat Dolls இன் முன்னணி பாடகியான Nicole Scherzinger உடன் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பாடும் ரிமிக்ஸ் பாடல் Jai ho (You Are My Destiny)யூ ட்யூபில்...
இந்த பாடலை இலவசமாக டவுன்லோடு செய்யவேண்டுமா? இங்கே..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)