23 மே 2009
விண்டோசில் Automatic Update மற்றும் Security Centre ஐ நீக்க ..,
நயனுக்கு என்ன ஆச்சு?
பிரபுதேவாவுடன் காதல் என கண்டபடி செய்திகள் வந்தவண்ணம் இருப்பதால், நயன் கலைச்சேவை போதுமப்பா... பிரஷ்ஷா யாரையாவது புக் பண்ணிக்கலாம் என இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கைவிடும் நிலைதான் இப்போது. இதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, உஷாராக தெலுங்கு மற்றும் மலையாள உலகில் வரும் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளத் துவங்கிவிட்டாராம். மலையாளத்தில் அவர் நடிக்கும் பாடிகார்ட் முடிந்த கையோடு இன்னொரு மலையாளப் படம் நடிக்க வந்த வாய்ப்பை, சம்பளம் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற படத்தில் நடிக்கும் அவர், ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் நடிக்க வலியப்போய் ஒப்புக் கொண்டாராம். 'சினிமா உலகில் தூங்கும்போதுகூட காலாட்டிகிட்டே இருக்கணும்' என்பதை சரியாகப் புரிந்து வைத்துள்ளார்!வால்மீகி மேடையில் இணையும் இசைஞானி-ஷங்கர்!

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!
21 மே 2009
How to find the Information about IP address?
   
  
ஆட்டம் போட்டவர்களை அடக்கிய ஐ.பி.எல்
 இந்த வருட ஐ.பி.எல் ஒரு வழியாக அரை இறுதி நிலையை எட்டியுள்ளது. சினிமாக்காரர்கள் கிரிகெட்டை குத்தகைக்கு எடுத்தால் கூத்திற்கு குறைவிருக்குமா? அப்படி கூத்து காட்டிய சினிமாக்காரர்கள் ஷில்பா,பிரீத்தி,ஷாரூக் ஆகிய மூவரின் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.பிரீத்தியின் அணிக்கு மட்டும் 10% வாய்ப்பு எஞ்சி உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கன் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் தோல்வி அடையும் அணியின் ஓட்ட விகிதம் குறைந்தால் பஞ்சாப்பிற்கு ஒருவேளை அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அது சாத்தியமல்லவேன்றே தோன்றுகிறது. பிரீத்தி ஸிந்தா அனைத்து ஆட்டங்களிலும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா? குறிப்பாக சென்னைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில்... சென்னையை 116 ஓட்டங்களுக்குள்ளாக கட்டுப்படுத்தி விட்டோம் என அப்படி குதிக்கிறார்.
 மறுபுறம் ஸ்ரீசாந்த்... தோனி விக்கெட்டை கைப்பற்றியதும் மைதானம் முழுதும் ஓடுகிறார்... காயத்திலிருந்து திரும்பிய பின்னரும் இன்னமும் அடக்கி வாசிக்க தெரியவில்லை. மற்றொரு ஆட்டத்திலும் ஆவேசப்பட்டதை காண நேர்ந்தது. சென்ற வருடம் ஹர்பஜனிடம் கன்னத்தில் வாங்கிய அறை மறந்து விட்டதோ என்னமோ?
 ஷில்பாவிற்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.இந்திய ஆடுகளத்தில் அதிரடி ஆடிய அஸ்நோத்கர் போன்ற வீரர்கள் தென்னாப்பிரிக்க களத்தில் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது. ஐ.பி.எல் துவங்கும் முன்னரே நான்கு அணித்தலைவர், கங்குலி நீக்கம் என அதிரடி செய்த கொல்கத்தா அணியினையும், பயிற்சியாளர் புக்கனனையும் அடையாளமே தெரியவில்லை. கவாஸ்கரை ஆரம்பத்தில் திட்டி விட்டு... பின்னர், நான் அவரைச் சொல்லவில்லை என சீன் போட்ட ஷாரூக் இப்போது சப்தமே இல்லாமல் இருக்கிறார்.
 வீட்டில் அல்லது பயிற்சி மைதானத்தில் நிம்மதியாக இருந்திருக்க வேண்டிய சச்சின் வீணாக தன்னை அலைக்கழித்திருக்கிறார். அணித்தலைவராக சச்சின் எடுத்த சில தவறான முடிவுகள் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு பாதகமானது. ஒரு சில ஆட்டங்களில் நான்கு ஓவர்கள் முழுமையாக பந்து வீச வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற சின்ன விஷயத்திற்கு … அணியில் எனது இடம் என்னவென்று விளங்கவில்லை என கூக்குரலிட்ட ஹர்பஜனுக்கு ஹெய்டனும்,தோனியும் ஐ.பி.எல்லின் 47 ஆவது ஆட்டத்தில் 18 ஆவது (அவருக்கு அது 3 ஆவது)ஓவரை வீசுகையில் தக்க அடி கொடுத்தனர். அந்த ஓவரில் மட்டும் 17 ஓட்டங்கள் எடுத்து மும்பையை ஐ.பி.எல் தொடரிலிருந்தே வெளியேற்றினார்கள். இப்படியாக ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கி விட, வெற்றியிலும் வீம்பு பேசாத டெல்லி,சென்னை,ஹைதராபாத்,பெங்களூர் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்திருப்பது நல்ல விஷயம். இந்த நான்கு அணிகளின் உரிமையாளர்களும் மற்ற அணிகளின் உரிமையாளர்களைப் போல அலட்டுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
'ஜிப்' அவிழ்த்த விவகாரம்: அக்ஷய் குமார் கைதாகி விடுதலை!
நிகழ்ச்சியை நேரில் மற்றும் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, பொது நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, அனில் நாயர் என்பவர் தான் சார்ந்த பொது நல சங்கம் சார்பில் போலீசில் புகார் கொடுத்தார். வகோலா போலீசார் அக்ஷய் குமார் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் அவரை உடனடியாக போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. காரணம் வெளிநாட்டுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தார் அக்ஷய். நேற்றுதான் விமானம் மூலம் மும்பை வந்தார். வழக்கு குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது வக்கீலுடன் சென்று போலீசிடம் சரண் அடைந்தார்.
உடனே அவரை போலீசார் கைது செய்து, ஜாமீனில் விட்டனர். அக்ஷய் குமாரின் மனைவி டுவிங்கிளும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டார்.
“கன்னிமை” விற்பனைக்கு !: இளம் பெண்களின் புது டிரெண்ட்.
பாத்திரம் பண்டத்தை அடகு வைத்து பள்ளிக்குப் போனதெல்லாம் பழைய கதை. இப்போது அடகு வைக்கத் துவங்கியிருப்பது கன்னித் தன்மையை.
மேலை நாடுகளில் இப்போதெல்லாம் பரவலாக அடிபடும் பேச்சு “கன்னித் தன்மை விற்பனைக்கு” விளம்பரங்கள் தான்.
படிப்பதற்குப் பணமில்லை எனவே எனது கன்னித் தன்மையை நல்ல விலைக்கு விற்கலாம் என இருக்கிறேன். ஏலத்தில் அதிக தொகைக்குக் கேட்பவர்களுடன் நான் “ஒரு நாள் முதல்வி” யாக உல்லாசமாய் இருக்க சம்மதிக்கிறேன் என சமீபத்தில் ஒரு இளம்பெண் இணையத்தில் தனது கற்பை ஏலமிட்டிருக்கிறாள்.
போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டு தோற்றுப் போனவர்களைத் தாண்டி சுமார் 6.4 இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு தொழிலதிபர் அவளை ஏலமெடுத்து அவளுக்கு “உதவி”யிருக்கிறார்.
பதினெட்டு வயதான எலீனா பெர்சியா எனும் இந்த ரொமானியன் பெண் தற்போது வசிப்பது ஜெர்மனியில்.
இவளை ஏலமெடுத்தவர் இவளை விமானத்தில் வெனிஸ் நகருக்கு வரவைத்து, கன்னித் தன்மை குறித்த மருத்துவ 
சான்றிதழ்களைச் சரிபார்த்து, விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொழுதைக் கழித்திருக்கிறார்
ஒரு முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் வெறும் ஆறு இலட்ச ரூபாய்க்கு ஏலம் போனதில் வருத்தம் தான் (!!??) என்கிறார் இந்த மாணவி. எனினும் இந்தப் பணத்தை வைத்து படிக்க முடியும் எனும் நம்பிக்கையும் இருக்கிறது என்கிறார் நல்ல பிள்ளையாட்டம்.
சினிமாவில் வரும் கதாநாயகன் போல ஒருவரை எதிர்பார்த்தேன் ஆனால் கிடைத்த நபர் 46 வயதான குள்ளமான ஒரு தொழிலதிபர். என்ன செய்வது இருந்தாலும் … என விவரிக்கிறார் தனது அனுபவங்களை.
கல்வி என்பது ஒழுக்கத்தையும், அறிவையும் போதிப்பது. அதை அடையவே இப்படிப்பட்ட ஒழுங்கற்ற வழிகளை நாடவேண்டியிருக்கிறதே எனும் அதிர்ச்சி ஒருபுறம் எழ, மேலை நாடுகளின் வால் பிடிப்பதை பெருமையாய் கருதும் நம் நாட்டு மக்கள் இதை ஒரு முன்னுதாரணமாய் கொண்டு விடுவார்களோ எனும் பயம் இன்னொரு பக்கம் எழுகிறது !
இவளுடைய பெற்றோருக்கு விஷயம் தெரியுமா ? சட்டத்தில் இதற்கெல்லாம் இடமுண்டா ? இப்படி உலகுக்கெல்லாம் மேடை போட்டுச் சொல்கிறாளே இதனால் எதிர்காலம் பாதிக்காதா ? போன்ற உங்களுடைய கேள்விகளை எலீனா பெர்சியாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளவும் ( அதற்குரிய கட்டணம் எத்தனை என்பது உட்பட )
19 மே 2009
ஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் ! (18+)
திருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை. தற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை. ஆனால் 18+ வயது வந்தவர்கள் மாத்திரை பயன்படுத்துவது ரிஸ்க் தான். :) தகவல் இங்கே, Published in : ஆரோக்கியம், உடலே நலமா? மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் படிக்க... பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)
விண்டோஸ் விஸ்டா சிஸ்டம் : சில டிப்ஸ்
விஸ்டாவில் ஏரோ கிளாஸ்
பின் இது சார்ந்த டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ‘Windows Color and Appearance’ என இருக்கும் இடத்தைக் காணவும். இது மேலாக இருக்கும். இந்த லிங்க்கைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் ‘Enable Transparency’ என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்தால் விஸ்டாவில் ஏரோ கிளாஸ் ட்ரான்ஸ்பரன்சி எபக்ட் இருக்காது.
ஹார்ட் டிஸ்க் பிரித்தல்
விஸ்டா இயக்கம் ஹார்ட் டிஸ்க்கை இரண்டு அல்லது கூடுதலான பிரிவில் அமைக்க உதவிடுகிறது. இதனால் விஸ்டா ஒவ்வொரு பிரிவினையும் தனித்தனி ஹார்ட் டிஸ்க்காகக் கருதிச் செயல்படும். இதன் மூலம் டாகுமெண்ட்களையும், புரோகிராம்களையும் மற்றும் சில பைல்களையும் நம்மால் பிரித்து வைத்து சேவ் செய்து பயன்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க்கில் புதிய பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும் என்றால் Start கிளிக் செய்து My computer என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக் கும் விண்டோவில்   Manage  என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
இடது பக்கம் உள்ள பிரிவில் (Left Pane) எந்த டிஸ்க்கில் புதிய பிரிவு ஏற்படுத்த வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் Shrink Volume என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து சிறிய அளவில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அளவினை உருவாக்கவும். பின் Shrink என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டிரைவ் ஸ்பேஸில் Unallocated என்று இருப்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New Simple Volume என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் விஸார்டில் கேட்கும் கேள்விகளுக்கான உங்கள் ஆப்ஷன்களை அமைக்கவும்.
முடிவில் தேர்ந்தெடுத்த டிரைவில் பயன்படுத்தாத இடத்தைப் பிரித்து நீங்கள் குறிப் பிட்ட அளவில் புதிய டிஸ்க் பிரிவு ஒன்று கிடைக்கும்.
அழிந்த ரீசைக்கிள் பின்னை மீட்க
விஸ்டாவில் ரீ சைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் அதனை அழித்துவிட Delete என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். சிலர் இதனை அறியாமல் கிளிக் செய்து அழித்துவிடுகிறார்கள். எப்படி அழிப் பது எளிதாக உள்ளதோ அதே போல் இதனை மீண்டும் பெறுவது விஸ்டாவில் எளிதான ஒரு செயல்பாடாக உள்ளது. அழித் ததை மீண்டும் பெற டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் Personalise என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் Change Desktop Icons என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதில் Recycle Bin என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்தால் மீண்டும் ரீசைக்கிள் பின் ஐகான் திரையில் தோன்றும்.
விஸ்டாவில் ரன்
விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் பட்டனை இயக்கினால் கிடைக்கும் மெனுவில் கீதண என்று ஒரு பிரிவு இருக்கும். இதனை இயக்கினால் புரோகிராம்களின் பெயரை நேரடியாக டைப் செய்து இயக்கலாம். ஆனால் விஸ்டாவில் இந்த செயல்பாட்டிற்கான கீதண கட்டம் இல்லை. இருப்பினும் இதனை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Start பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனு செல்லவும். இங்கு ஸ்குரோல் செய்து கீழே சென்றால் Run Command என்று ஒரு பாக்ஸ் கிடைக்கும். இதில் ஓகே கிளிக் செய்தால் ரன் பாக்ஸ் உங்களுக்கு ஸ்டார்ட் பட்டன் மெனுவில் கிடைக்கும்.
பைல்களை எளிமையாகத் தேர்ந்தெடுக்க
பைல் டைரக்டரியில் இருந்து பைல்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. தொடர்ந்து இருக்கும் பைல்களைத் தேர்ந்தெடுக்க முதல் பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின் இறுதி பைலை ஷிப்ட் கீ அழுத்தித் தேர்ந்தெடுத்தால் இரண்டிற்கும் இடையே உள்ள பைல்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்.
பைல்களை விட்டு விட்டு குறிப்பிட்டவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறு பைல்களைத் தேர்ந்தெடுத்தால் தேர்ந்தெடுக்கும் பைல்கள் வரிசையாக இல்லாதபோதும் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
பின் இவற்றை என்ன செய்திட வேண்டுமோ செய்து கொள்ளலாம்.இது போல ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளை அழுத்தி பைல்களைத் தேர்ந்தெடுக்காமல் அந்த பைல்களுக்குப் பக்கத்தில் சிறிய கட்டங்களை ஏற்படுத்தி அந்த கட்டங்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பைல்களை செலக்ட் செய்யக் கூடிய வசதி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா?
இதற்கான வசதியை விஸ்டா கொண்டுள்ளது. ஏதேனும் ஒரு போல்டரைக் கிளிக் செய்து Organize என்பதில் கிளிக் செய்திடவும். பின் அதில் Folder and search Options’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு View டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Use check boxes to select item’ என்பதில் டிக் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்திடவும். பின் போல்டரைத் திறந்தால் பைல்களின் பெயருக்கு எதிரே சிறிய கட்டங் கள் கிடைக்கும். இதில் கிளிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
சென்ட் டூ மெனுவை நீட்டலாம்
Send To மெனுவில் கூடுதலாக பைல்களை பதிப்பதில், விஸ்டா இயக்கம் எக்ஸ்பி இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. விஸ்டாவில் Control Panel ஐத் திறக்கவும். அதன்பின் Folder Options பிரிவைத்தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் திறக்கவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Show hidden Files and Folders என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி ஸ்டார்ட் – கம்ப்யூட்டர் எனக் கிளிக் செய்து சி டிரைவினைத் திறக்கவும். இதில் யூசர்ஸ் என்னும் போல்டரைத் திறக்கவும்.
இதில் உங்களுடைய பெயரை யூசர் நேமாக உள்ளதைத் தேர்தெடுக்கவும். அடுத்து App Data, Roaming, Microsoft Windows, Send To என வரிசையாகச் செல்லவும். போல்டரைக் காண முடியாவிட்டால் %AppData%\ Microsoft Windows\Send To என அட்ரஸ் பாரில் டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்த பின் Send To மெனுவில் நீங்கள் உங்களுக்குத் தேவையானதை இணைக்கலாம்.
குயிக் லாஞ்ச் கீ போர்ட் ஷார்ட் கட்
அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை உடனுக்குடன் விரைவாக இயக்க நமக்கு Quick Launch பார் பயன்படுகிறது. இந்த பாரில் உள்ள புரோகிராம்களை ஷார்ட் கட் கீகளைக் கொண்டும் இயக்கலாம். இதற்கு விண் டோஸ் கீ அழுத்தவும்.
அதன் பின் குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகான் எத்தனாவதாக உள்ளதோ அந்த எண்ணை அழுத்தவும். எடுத்துக் காட்டாக குயிக் லாஞ்ச் பாரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூன்றாவதாக அமைக்கப்பட்டிருந் தால் விண்டோஸ் கீயுடன் 3 என்ற எண்ணை அழுத்தினால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கப்படும். இரண்டு கீகளையும் சேர்த்து இயக்க வேண்டும்.
நிரந்தரமாக மெனு பார்
விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் அடூt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும்படியும் இதனை அமைக்கலாம்.
போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Always show menus’ என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
விண்டோஸ் பார்டர்களைக் குறைக்க: விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டுகின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும். இதற்கு வழிகளைத் தருகிறது விஸ்டா. இந்த பார்டர்களை அளவோடு வைத்திட டெஸ்க்டாப்பில் கிளிக் செய்திடவும்.
பின் பெர்சனலைஸ் என் பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண் டோவில் Windows Color and Appearance என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது செட் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்க வேண்டும். இது கிடைக்காவிட்டால் ‘Open classic appearance properties for more color options’ என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் மெனுவில் Border Padding என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சைஸ் செட்டிங் அளவை 4 க்கும் குறைவாக அமைக்கவும். அதன்பின் ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை விண்டோக்கள் திறந்தாலும் பார்டர்கள் எடுக்கும் இடம் குறைவாகவே இருக்கும்.அசல் பாட்டும் 'அவுட்'?
இப்படி ஆடியோ-வீடியோ இணையத்தில் வெளியாவதால் ஏற்படும் பரபரப்பு ப்ளஸ் பப்ளிசிட்டியைப் பார்த்த சிலர், தாங்களே அதுபோன்ற வேலைகளில் இறங்கியதும் உண்டு.
சிம்புவின் சிலம்பாட்டம் லீக் ஆகிவிட்டது, விஜய்யின் வில்லு காட்சிகள் கசிந்துவிட்டன, விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு அவுட்... என்றெல்லாம் வந்த செய்திகளின் பின்னணி பற்றி ஆராய்ச்சி செய்தால், நிறைய சுவாரஸ்யமான கதைகள் வெளிவரக்கூடும்!
சில தினங்களுக்கு முன் விஜய்யின் வேட்டைக்காரன் அறிமுகப் பாட்டு என்ற பெயரில் ஒரு பாடல் இணையத்தில் வெளியானது. ஆனால் அதுபற்றி, கூறிய தயாரிப்பாளர் பாலசுப்பிரமணியன் 'அது ஒரிஜினல் பாடல் இல்லை' என்று கூறிவிட்டார்.
இப்போது அஜீத்தின் அசல் பாடலும் இணையத்தில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாடல் வரிகளைக் கூட வெளியிட்டுள்ளனர் இணையதளங்களில்.
இதுகுறித்து படத்தின் பிஆர்ஓ டைமண்ட் பாபுவிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது:
"இதெல்லாம் சும்மா. இன்னும் படத்துக்கு பாடல்பதிவே நடக்கவில்லை. படத்துக்கான பாடல்களை எழுதுபவர் கவிப்பேரரசு வைரமுத்து. அனைத்தும் பாடல்களையும் எழுதுபவர் அவர். வெறும் 12 வரிகளை அசல் பாடல் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதை நம்ப வேண்டாம். பரபரப்புக்கா சிலர் ஏதாவது செய்திகளைக் கிளப்பிவிடுகின்றனர்" என்றார்.
சிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்
வைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன.
எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் . சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர்.
இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது.
ஆண்டிவைரஸ்  2
1. பெயர்: Avast! AVG Antivirus 8 Free Edition
2. நிறுவனம் :  Grisoft Inc  
3. பைல் அளவு:  47924 கே.பி
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே.
ஆண்டிவைரஸ்  3
1. பெயர்: Avira Anti Personal Edition
2. நிறுவனம் :  Avira GmbH
3. பைல் அளவு:  24462 kb
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது.

























