கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பூசல் குறித்த கதைதான் கண்ணுக்குள்ளே. ஆனால் இந்தக் கதையில் வரும் பூசலுக்கான காரணம் வேறு, அதன் கதைக்களம் வேறு என்கிறார் படத்தின் இயக்குநர்
மூவேந்தன்.
எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் மூவேந்தன் இயக்கும் படம்தான் கண்ணுக்குள்ளே. மிதுன்தான் நாயகன். அவருக்கு ஜோடியாக அபர்ணா மற்றும் அனு ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.
இவர்களில் அபர்ணா, புதுக்கோட்டை சரவணன் படத்தில் அறிமுகமானவர். இடையில் காணாமல் போயிருந்த அபர்மா மீண்டும் திரும்பி வருகிறார். அனு புதுமுகம்.
இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் இப்படம்
இசையைப் பின்னணியாகக் கொண்டதாம்.
படத்தின் கதை குறித்து மூவேந்தன் கூறுகையில், கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்படும்போது 2 மணி நேரம் பேசாமல் இருக்கலாம், அதுவே 2 வருடமாக இருந்தால் என்னாகும். அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது எனது படம்
என்கிறார்.
மூவேந்தன் டிவி
சீரியலை இயக்கிய அனுபவம் கொண்டவர். ஆனால் படம்
சீரியல் ரேஞ்சுக்கு இருக்காது என்று உறுதியளிக்கிறார்.
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)

![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)