Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 மே 2009

மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே... பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு. க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன. 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com