போன வருடம் குசேலன் , சத்யம் , ஏகன், வில்லு என ஏகப்பட்ட படங்களில் அதுவும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தவர் நயன்தாராதான். எல்லாமே சூப்பர் ப்ளாப் படங்கள். விளைவு, இந்த ஆண்டு அவருக்கு தமிழில் ஒரேயொரு படம்தான். சூர்யாவுடன் நடிக்கும் ஆதவன் தவிர வேறு படங்களே அவருக்கு இல்லை. போதாக்குறைக்கு லிங்குசாமியுடன் கசமுசா,
பிரபுதேவாவுடன் காதல் என கண்டபடி செய்திகள் வந்தவண்ணம் இருப்பதால், நயன் கலைச்சேவை போதுமப்பா... பிரஷ்ஷா யாரையாவது புக் பண்ணிக்கலாம் என இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கைவிடும் நிலைதான் இப்போது. இதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, உஷாராக தெலுங்கு மற்றும் மலையாள உலகில் வரும் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளத் துவங்கிவிட்டாராம். மலையாளத்தில் அவர் நடிக்கும் பாடிகார்ட் முடிந்த கையோடு இன்னொரு மலையாளப் படம் நடிக்க வந்த வாய்ப்பை, சம்பளம் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற படத்தில் நடிக்கும் அவர், ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் நடிக்க வலியப்போய் ஒப்புக் கொண்டாராம். 'சினிமா உலகில் தூங்கும்போதுகூட காலாட்டிகிட்டே இருக்கணும்' என்பதை சரியாகப் புரிந்து வைத்துள்ளார்!
