Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

26 செப்டம்பர் 2009

சினேகாவால் அடிவாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர்!

சினேகாவைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர் திருச்சிக்கு வந்த நடிகை சினேகாவை பார்க்க தனது மனைவி விரும்பியதால், சாலையோரம் வண்டியை நிறுத்தி சினேகாவைப் பார்க்கப் போய், சினேகா கலந்து கொண்ட நகைக் கடை பாதுகாவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர். திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடையின் 2 -ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் நடிகை சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சினோகாவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் [^] குழுமியிருந்தனர். அப்போது, அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் முண்டியடித்தது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நடிகை சினேகாவின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடிகை சினேகா கடையின் நிறுவன அதிபரிடம் புகார் செய்தார். நீல நிற சட்டை போட்டிருந்த ஒருவர் தனது இடுப்பைக் கிள்ளியதாக கூறியுள்ளார் சினேகா. இதனையடுத்து, கடை காவலாளிகள் கும்பலில் உள்ள நீல நிற சட்டை அணிந்த நபரை தேடி அடித்து உதைத்தனர். அப்போது அங்கு, பாதுகாப்புக்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவராமனும், மற்றும் போலீசார் அந்த வாலிபரை அடிப்பதை தடுக்க முயன்றனர். ஆனால் அதையும் மீறி அந்த நபருக்கு அடி உதை விழுந்தது. இதனையடுத்து, சினேகா அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய கடைக் காவலாளிகள் மூன்று பேரையும், அடிபட்டவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் அடிபட்ட நபர் பெயர் சுரேஷ் குமார் என்பதும், திருச்சி காவேரி நகரைச் சேர்ந்தவர் என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமாருடன் வந்திருந்த அவரது மனைவி சர்மிளா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், நான் எனது கணவருடன் 24-9-2009 அன்று காலை சின்னக்கடை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தோம். அப்போது அங்கு நடிகை சினேகா வந்து இருப்பதாக சொன்னார்கள். அவரை பார்க்கலாம் என்று நான் சொன்னதால் எனது கணவர் வண்டியை ஓரமாக நிறுத்தினார். நாங்கள் ரோட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது நகைக்கடையில் வேலை பார்க்கும் 3 பேர் வேகமாக ஓடி வந்து எனது கணவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தார்கள். உடனே நான் சத்தம் போட்டேன். அதன் பிறகு எனது கணவரை விட்டு விட்டனர். எனது கணவரை தாக்கிய 3 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்ஸ என்று கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் காவலாளிகள் சார்லஸ் (37) அலங்கராஜ் (27) சரவணன் (31) ஆகிய 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சர்மிளா குமுறலுடன் கூறுகையில், இச்சம்பவத்தால் எனது கணவர் சுரேஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தவறு செய்யாத என் கணவர் மீது தாக்குதல் நடத்த காரணமான, நடிகை சினேகா மீது தக்க நடவடிக்கை [^] எடுக்க வேண்டும்.
Sneha
மன உளைச்சலால் என் கணவர் ஏதாவது செய்து கொண்டால், அதற்கு சினேகா தான் பொறுப்பு. என் கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் [^] குறித்து சினேகா மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் என்றார் ஆவேசமாக. நடிகையை வேடிக்கைப் பார்க்கப் போய் தேவையில்லாமல் அடி வாங்கிய சுரேஷ்குமாரால் திருச்சி [^]யில் பரபரப்பு ஏற்பட்டது.

கணிணிக்கு தேவையான அனைத்து வன்பொருள் ட்ரைவர்களை பதிவிறக்கிட

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மெழுகுச் சிலை

இரட்டை ஆஸ்கர் விருது பெற்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மெழுகுச் சிலையை உருவாக்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த கலைஞர் [^] சுனில். அதேபோல ஆஸ்கர் விருது [^] பெற்ற கேரள சவுண்ட் என்ஜீனியர் ரெசூல் பூக்குட்டியின் மெழுகுச் சிலையையும் வடித்துள்ளார் சுனில்.
AR Rahman
இதேபோல புகழ் பெற்ற 35 பேரின் சிலைகளை உருவாக்கி வரும் அவர், இவற்றை மும்பையில் ஒரு இடத்தில் மியூசியத்தை உருவாக்கி அங்கே வைக்கப் போகிறாராம். இந்த சிலைகளை வடித்து வருபவரான சுனில் கூறுகையில், மு்ம்பையில் நான் வருகிற டிசம்பர் மாதம் சர்வதேச பிரபலங்களின் மெழுகுச் சிலை மியூசியத்தைத் தொடங்கப் போகிறேன். அங்கு இந்த சிலைகள் வைக்கப்படும். முதலில் ரெசூல் பூக்குட்டியின் சிலை வைக்கப்படும். கன்னியாகுமரியில் உள்ள பே வாட்ச் மெழுகுச் சிலை மி்யூசியத்துடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என்றார் அவர்.

எளிதாய் சம்பாதிக்க 7 வழிகள்

இன்றைய சூழ்நிலையில் எளிய முறையில் சம்பாதிக்க பைனான்ஸ் கம்பெனி தான் சிறந்த வழி. ஒரு பைனான்ஸ் கம்பெனி தொடங்குவது முதல் மொத்த காசையும் ஆட்டயப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆவது வரை ஏதோ என்னால் முடிந்த யோசனைகள்

தேவையான பொருட்கள்: நல்ல கட்டிடம் : 1 இணையதளம்: 1 மேனேஜர்: 2 அல்ல்து 3 ரிசப்சனிஸ்ட் :2 (அழகாக இருப்பது அவசியம்) தொலைபேசி இணைப்புகள் : 3 அல்லது 4 செக்யூரிட்டிகள் : 2 மேசை நாற்காலிகள்: தேவையான அளவு லர்விளக்குகள் : தேவையான அளவு

செய்முறை :

1) முதலில் நகர்புறத்தின் அல்லது ஒதுக்குப் புறமாக எவ்வளவு கேட்டாலும் ட்வான்ஸ் கொடுத்து ஒரு பிரம்மாண்டக் கட்டிடத்தை வாடகைகுப் பிடித்துக் கொள்ளவும்.அதன்பிறகு கொஞ்சம் செலவுசெய்து கட்டிடத்தின் வெளியே ஸ்டீல் மோல்டிங் செய்து கொள்ளவும்

2) மேஜை நாற்காலிகள் நாள் வாடகைக்குப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அதற்கும் வாடகை கொடுக்கத் தேவையிருக்காது. எஸ்கேப் ஆகி போகும் போது அதை வைத்துவிட்டுப் போவதால் ஏமாந்தவர்கள் அதைத்தூக்கி அடித்து விளையாட வசதிப்படும்.

3)சாப்ட்வேர் படித்தவர்கள் புதிய நபர்கள் தேவை என பேப்பரில் விளம்பரம் செய்து அவர்களில்நல்லதாகப் 10 பேரை செகச்ட் செய்து பின்னர் அவர்களிடம் நமது ஜில்பான்சி கம்பெனிக்கு ஒரு நல்ல இணையத் தளம் வடிவமைத்துத் தருமாறும் அதை வைத்துத் தான் அவர்களின் திறனை கண்டு பின்னர் அப்பாயின்மென்ட் லட்டர் தருவதாகவும் சொல்லி நல்ல கலர்கலராக வெப்சைட் ஓப்பன்செய்துகொள்ளவும்.அவர்களுக்கும் அல்வா தான். அதேபோல நல்ல அடிவாங்கும் திறன் கொண்ட அப்பாவிகள் சிலரை ஆபீஸ் பணியாளர்களாக அமர்த்த வேண்டும்.கடைசியில் அவர்கள் தான் மாட்டிக் கொண்டு முழிப்பார்கள்.

4) நமீதா, நயன்தாரா போன்ற நல்ல கலர் பிகர்களைத் தேர்வு செய்து அவர்களை ரிசப்சனிஸ்ட் வேலைக்கு அமர்த்த வேண்டும்.அவர்களுக்கு எதிராக ரிசப்சனில் சோபா செட்டுகளைப் போட்டுவிட்டால் போதும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரிக்கும்.

5)பிரைவேட் செக்யூரிட்டி சென்டரில் நல்ல ஆஜானுபாகுவான 2 பேரை கேட்டு வாங்கி அருகிலேயே வைத்துக் கொள்ளவும். இதன் மூலம் பணத்தை திருப்பிக்கேட்டு சண்டை போட நினைத்துக் கொண்டு வருபவர்கள் ஜம்ப் ஆகிவிடுவார்கள்.

6)முதலில் வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதாமாதம் ரூபாய் 25 ஆயிரம், வாரம் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ஹோண்டா சிட்டி கார் என 10 மாதங்களுக்குத் தரப்படும் என டிவி,பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யலாம். இலவசம் என்றாலே போதும் நம் மக்கள் எதைப் பத்தியும் கண்டுகொள்ளாமல் தங்கள் காசுகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டி விடுவார்கள்.

7) செலவைக் கணக்கில் கொள்ளாமல் விளம்பரங்களையும் ஸ்பான்சர்களை அள்ளி இறைக்கவும்.அது மட்டுமின்றி ஒரு நபர் மற்றொரு நபரை சேர்த்துவிட்டால் ஒரு தங்க நாணயம் எனஅள்ளிவிட வேண்டும் . நமது ஆட்களில் ஒரு 10 பேருக்கு தங்க நாணயக் கொடுப்பது போல போட்டோ எடுத்து அதை ரிசப்சனில் மாட்டி வைத்தால் போதும். இதனால் நமது ஜில்பான்சிகம்பெனியின் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குபுகுபுவென உயர்ந்துவிடும்.

இது போல செய்தால் ஒரு 2 மாதத்தில் எப்படியும் 100 கோடியை எட்டிவிடலாம். அத்தோடு அதை தூக்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடலாம். இதற்குப் பிறகு மட்டுமே சுதாரிக்கும் நம் தமிழக மக்கள் பின்னர் வாயிலும் வயித்திலும் அடித்துக் கொண்டு டிவியில் பேட்டி கொடுப்பார்கள். பிறகு ஏமாந்தோர் அசோசியேசன் அமைத்துப் புகார் கொடுப்பார்கள். பின்னர் காவல்துறை வலைவீசித் தேடும்.எனவே நாம் குளங்களிலும் கடல்களிலும் குளிக்காமல் இருப்பது நலம்.

ஆயிரம் கலைமகள் சபா, ஆயிரம் அனுபவ் குரூப் என கோடி கோடியாய் சுருட்டி பாடம்புகட்டினாலும் நம் தமிழ்மக்களுக்கு அறிவே வராது. நாளைக்கே நீங்கள் ஒரு பைனான்ஸ் கம்பெனிஆரம்பித்து டபுள் வட்டி தருவதாய் சொன்னால் கூட அதற்கென ஒரு கூட்டம் இருக்கிறது.ஆலோசனை மட்டும் தான் நான் சொல்ல முடியும், மத்தத நீங்க தான் செய்யனும். அப்படி யாராவதுஇதை பாலோ செய்து ஒரு நல்ல தொகை அடித்தால் தயவுசெய்து எனக்கும் ஒரு ஷேர் தருமாறுபணிவோடு வேண்டுகிறேன். பணம் கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன், வேறு ஏதாவதுகிடைத்தால்?? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.., விடு ஜூட்!!!!!!!!!!

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com