தமிழ், தெலுங்கில்தான் அதிகம் நடிக்க ஆசைப்படுகிறேன். தற்போது கைவசம் இந்திப் படம் எதுவும் இல்லை என்கிறார் ஷ்ரியா.
கந்தசாமியில் கலக்கல் கிளாமரில் வலம் வந்த ஷ்ரியா தற்போது டோரண்டோவில் மையம் கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பட விழாவில், ஷ்ரியா நடித்த திலீப் மேத்தா இயக்கத்தில் உருவான குக்கிங் வித் ஸ்டெல்லா என்ற படம் திரையிடப்படுகிறது.
தனது தாயுடன் டோரண்டோ போயுள்ளார் ஷ்ரியா. இது ஷ்ரியாவுக்கு முதல் கனடா பயணமாம்.
தற்போது தமிழில் இரு பெரிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ஷ்ரியா. இரண்டுமே தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஒரு படத்தில் ஜோடி
தனுஷ் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
. இன்னொரு படத்தில் ஜோடி
சரத்குமார் ![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
.
தனுஷுடன் குட்டி படத்தில் நடித்துள்ளேன். சரத்குமாருடன் ஜக்குபாயில் நடித்துள்ளேன். இரண்டு படங்களும் எனக்குப் பெயர் வாங்கித் தரும்.
தற்போது எந்த இந்திப் படத்திலும் நான் நடிக்கவில்லை. தமிழ், தெலுங்குதான் எனக்கு எப்போதுமே பேவரைட். எனவே அதில்தான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன் என்கிறார் ஷ்ரியா.