Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

29 மே 2009

இரும்புக்கோட்டை.. முரட்டு சிங்கம்-ரூ.1 கோடி செட்!

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே ரூ. 1 கோடி செலவில் இரும்பு கோட்டை போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு படபிடிப்பு நடந்து வருகிறது. ராகவா லாரன்ஸ்- பத்மபிரியா- லட்சுமி ராய்- சந்தியா இணைந்து நடிக்கும் புதிய படம் இரும்புகோட்டை முரட்டுசிங்கம். சிம்புதேவன் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான இரும்பு கோட்டை போன்ற செட் போடப்பட்டுள்ளது. இந்த அரங்கில்தான் கடந்த நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தமிழில் ஜெய்சங்கர் காலத்துக்குப் பிறகு எடுக்கப்படும் முதல் கௌபாய் படம் என்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பைல்களை அழிக்க முடியவில்லையா!

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும். சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள். இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது. டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

தமிழக போலீஸ் படத்துக்கு ரஹ்மான் இசை!

காவல் துறையின் அருமை பெருமைகள், சவால்கள், அவர்கள் மக்களுக்கு எப்படியெல்லாம் நண்பர்களாக உதவுகிறார்கள் என்பதை விளக்கும் 'காவலர் நமது சேவகர்' என்ற படத்தை இரு ஆண்டுகளுக்கு முன் எடுத்தார் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன். இதில் பல நிஜ காவல் துறை உயர் அதிகாரிகளே நடித்திருந்தனர். மீண்டும் இதே போன்றதொரு படத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளது காவல் துறை. ஆனால் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தால் படம் பெறிய ஏளவில் பேசப்படும், இளைஞர்களைக் கவரும் என நம்பிய காவல்துறை உயர் அதிகாரிகள் பலர், சில தினங்களுக்கு முன் ரஹ்மானைச் சந்தித்து, தங்கள் படத்துக்கு இசையமைத்துத் தர முடியுமா என்று கேட்டார்கலாம். ரஹ்மானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம். நீங்கள் படத்தை எடுத்துவிட்டு சொல்லுங்கள்... நிச்சயம் நான் இசை அமைத்துத் தருகிறேன். பாடலும் அப்போதே கம்போஸ் செய்து கொள்ளலாம் என அவர் கூறிவிட, சந்தோஷத்துடன் தயாரிப்பாளரிடம் சீக்கிரம் வேலைகளை ஆரம்பிக்கச் சொல்லி வருகிறது சென்னை மாநகர போலீஸ்.

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள் என்று சில உண்டு. அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். இல்லாதவர்கள் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்தால் தரவிறக்கி நிறுவ வேண்டாம். அதற்குப்பதில் இதை கிளிக் செய்யுங்கள். சி சி கீளினர் (CCleaner) இந்த மென்பொருள் இருந்தால் உங்கள் தேவையில்லாத இண்டெர்நெட் குக்கீஸ், மற்றும் தற்காலிக கோப்புகள், தேவையில்லாத கோப்புகள் அனைத்தும் நீக்கி விடும். அதுமட்டும் அல்ல இதில் தேவையில்லாத ரெஜிஸ்டரி கீகளையும் நீக்கி தரும். உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்கள் நிறுவி இருந்தால் இதன் மூலம் நீக்க முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia) உங்கள் கணணியில் உள்ள டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற இது உதவும் சுட்டி ஆடாசிட்டி (AudaCity) இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள எம்பி3 இசைக்கோப்புகளை திறந்து இசையை நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்ய உதவுகிறது. சுட்டி அப்டேட் செக்கர் (Update Checker) நீங்கள் கணணியில் நிறுவி உள்ள அனைத்து மென்பொருட்களுக்கும் ஏதாவது புதிய பதிப்பு வெளியிடப்பட்டால் தானாகவே உங்களிடம் தெரிவித்து தரவிறக்கி தந்து நிறுவி விடும். சுட்டி லான்சி (Launchy) இந்த மென்பொருள் மூலம் பலதரப்பட்ட மென்பொருட்களை இயங்க வைக்க முடியும். சுட்டி விஎல்சி ப்ளேயர் (VLC Player) இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க முடியும். சுட்டி பிக்காஸா (Picasa) இந்த மென்பொருளை உருவாக்கியவர்கள் கூகிள் தேடல் நிறுவனத்தினர். இந்த மென்பொருள் மூலம் உங்கள் புகைப்படங்களை தனித்தனி தொகுப்புகளாக பதிந்து வைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லை உங்கள் புகைப்படங்கள் எடிட் செய்ய முடியும். சுட்டி யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader) இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும். இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது. சுட்டி டிபிராக்லர் (Defraggler) மாதம் ஒரு முறை இந்த மென்பொருள் மூலம் டிபிராகிங் செய்தால் உங்கள் கோப்புகள் உங்கள் வன்தட்டில் பல இடங்களில் பிரித்து பதியப்பட்ட கோப்புகள் ஒரே கோட்டில் வரிசையாக பதிக்கப்படும் இதனால் உங்கள் கணணியில் உள்ள கோப்புகளை கையாளும் வேகம் வெகுவாக அதிகரிக்கும். சுட்டி பதிவுகளை படித்து பயன் பெறும் நீங்கள் நாங்களும் பயன் பெற விளம்பரங்களை கிளிக் செய்யவும்.

நீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாதா சோனா...

இசைஞானி இளையராஜாவின் அருமையான இசை, முதல்முறையாக ஒரு பாடலில் அவர் இசைஞானியாகவே தோன்றுவது, சின்ன இடைவெளிக்குப் பிறகு இணைந்திருக்கும் பானு, எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு அதிகபட்சம் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து காமெடியில் பின்னியெடுத்திருக்கும் வடிவேலு... இப்படி பல சிறப்புகள் கொண்ட அழகர் மலை படத்தில் இன்னொரு 'சிறப்பு'ம் இருக்கிறது. அது சோனாவின் ஜில் தோற்றம்! அட.. நிஜமாவே ஜில் தோன்றம்தாங்க... குசேலனுக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் ஜோடி போட்டிருக்கும் அவருக்கு, இந்தப் படத்தில் அதிகபட்ச காஸ்ட்யூமே பிகினி எனப்படும் நீச்சலுடைதான்! இந்தப் படத்துக்காக 6 நாட்கள் நடித்த அவர், அந்த 6 நாட்களும் நீச்சலுடையிலேயே வலம் வந்திருக்கிறார். படக்குழுவுக்கு தூக்கம் போயே போச்... வழக்கமாக பிரேக் கேட்கும் யூனிட் ஆட்கள் கூட, அதை மறந்து சோனாவையே 'பராக்' பார்த்துக் கொண்டிருந்தது தனிக் கதை! அழகை ஆபாசமில்லாமல் காட்டினால் சென்சாரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காட்சிகளை 'செம ஹாட் மச்சி' என சொல்லும் விதத்தில் சுட்டுத் தள்ளிவிட்டாராம் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார். படத்தில் நடித்த அனுபவம் குறித்து இப்படிச் சொல்கிறார் சோனா: "எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு... ரொம்ப சந்தோஷமா இருக்கு. வடிவேலு சார் கூட திரும்பவும் ஜோடியா நடிக்கிறேன். 6 நாட்கள் என்னோட கால்ஷீட்... 6 நாளும் என்னை நீச்சல் டிரஸ்லயே நடிக்க வச்சிட்டார் இயக்குநர். என்னைப் பொறுத்தவரை அதுவும் நடிப்பு... ஒரு நடிகையா என் வேலையை பக்காவா பண்ணியிருக்கேன். கிளாமர்னாலும் ரசிக்கிற மாதிரி அந்தக் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்துல நடிச்சது நிஜமாகவே ஒரு இனிய அனுபவம். மறக்க முடியாதது...", என்கிறார் சோனா. ஆர்கே நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை விஜயா மூவீஸுக்காக கருமாரி கந்தசாமி தயாரித்துள்ளார்.

27 மே 2009

2வது கணவரிடமிருந்தும் நந்திதா விவாகரத்து!

தனது இரண்டாவது கணவரிடமிருந்தும் விவாகரத்து பெற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை நந்திதா தாஸ். இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். 'பயர்' படம் மூலம் பரபரப்பான நடிகையான நந்திதா தாஸ், தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த அவர், கடந்த 2002-ல் சௌமியா சென் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணமும் அவருக்கு கசந்துவிட்டது. எனவே இருவரும் சுமூகமான முறையில் பிரிந்துவிடுவது என தீர்மானித்து டெல்லி கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று இந்த மனு நீதிபதி மித்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நந்திதா தாஸ் மற்றும் சவுமியா சென் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இருவரும் மனம் விரும்பி பிரிவதாக கூறினர். எனவே அவர்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாதங்களுக்கு அவகாசமளித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.

மலையாளத்தில் தமன்னா

தமன்னா முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு, அங்கிருந்து தமிழ் என மாறி வந்தவர் தமன்னா. தமிழுக்கு வந்த புதிதில் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால் இப்போது தமன்னாவின் கால்ஷீட்டைப் பெறுவது குதிரைக் கொம்பாகியுள்ளது. அந்த அளவுக்கு பிசியாகி விட்டார் தமன்னா. இந்தநிலையில் மலையாளப் பட இயக்குநர் லால், தமன்னாவை அணுகி ஒரு கதையைக் கூறி இதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும், வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். கதையைக் கேட்டதுமே நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் தமன்னா. அந்த அளவுக்கு கதை அவருக்குப் பிடித்துப் போய் விட்டதாம். லால், வழக்கமாக நடிகர், நடிகைகளுக்காக கதையை உருவாக்குபவர் இல்லை. கதையை உருவாக்கி விட்டு, அந்தக் கதைக்குப் பொருத்தமான கலைஞர்களைத் தேடுவதுதான் அவரது ஸ்டைல். ஆள் கிடைக்காவி்ட்டால் பொறுமையாக காத்திருந்து நடிக்க வைப்பார். அவரே தேடிப் போய் தமன்னாவை நாடியுள்ளதால், நிச்சயம் இது தனக்கான கதைதான் என்பதை உணர்ந்தே நடிக்க ஒப்புக் கொண்டாராம் தமன்னா. இந்தப் படத்தின் மூலம் 3வது தென்னிந்திய மொழிப் படத்தில் அறிமுகமாகிறார் தமன்னா.

தற்காலிக இமெயில் முகவரிகள்

நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது. அடிக்கடி இன்டர்நெட் சைட்டுகளில் உங்கள் இமெயில் முகவரிகளைத் தருகிறீர்களா? பொருட்கள் வாங்குகையில், ஏதேனும் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இறக்குகையில் அந்த செயல்பாட்டை முடித்துவைக்க நிச்சயமாய் உங்கள் இமெயில் முகவரி கேட்கப்படும். பின் அந்த முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டு அதனைப் பெற்று நீங்கள் கிளிக் செய்தாலே அப்போது மேற்கொண்ட செயல்பாடு முற்றுப் பெறும். எனவேதான் நாம் நம் இமெயில் முகவரிகளைத் தர வேண்டியுள்ளது. இதனால் நம்முடைய இமெயில் முகவரிகள் பல தளங்களில் பதியப்படுகிறது. ஒரு சிலர் இது போல இமெயில் முகவரிகளைப் பெற்று வர்த்தக ரீதியாகச் செயல்பட்டு ஸ்பேம் மெயில் அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர். இதனால் நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது. இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு? தற்காலிகமாக இமெயில் முகவரிகளை அமைத்துக் கொள்வதுதான். இதற்கென்றே சில தளங்கள் உள்ளன. இந்த தளங்களை கூகுள் சர்ச் இஞ்சின் மூலம் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் தேடிய போது சில தள முகவரிகள் கிடைத்தன. இவற்றில் ஒரு தளத்திற்குச் சென்றால் அவை தற்காலிக இமெயில் முகவரியைத்தரும். சிறிது காலம் பயன்படுத்திய பின்னர் விட்டுவிடலாம். அல்லது இந்த தளத்தில் இமெயில் முகவரியை உருவாக்கி அதற்கு வரும் மெயில்களை உங்கள் நிரந்தர இமெயில் முகவரிகளுக்கு பார்வேர்ட் செய்திடும் பணியையும் இந்த தளங்கள் மேற்கொள்கின்றன. இதனால் ஸ்பேம் போன்ற கூட்ட மெயில்களிலிருந்து நாம் தப்பிக்கலாம். அவற்றின் முகவரிகள் : 1. Mytrashmail 2. ExplodeMail 3. Mailinator 4. Temporaryinbox 5. Maileater

IPL பேசப்படாத பக்கங்கள்...

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கத்தின் அறிவிப்பு- கொண்டாட்டங்கள், இந்திய தேர்தல்கள், உலக பொருளாதார நெருக்கடி, வடகொரியா மற்றும் ஈரானின் ஏவுகணை பரிசோதனைகள், பன்றிக் காய்ச்சல் என்று வளர்ந்து கொண்டே செல்லும் சர்வதேச நிகழ்வுகளுக்கு மத்தியில் உலகின் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மணித்தியாலங்களை கட்டிப் போட்டிருந்தது IPL பருவம் 2. இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்து ஒலி ஊடகங்களிலும் IPL பருவம் 2 போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்த போதிலும், ஒளி ஊடகங்களில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் விளையாட்டுச் சேவையான செனல் ஐ மாத்திரமே போட்டிகளை ஒளிபரப்பியிருந்தது. எனினும், முதல் இரண்டு நாட்களுக்கு பின்னரே செனல் ஐயில் போட்டிகள் ஒளிபரப்பாகின. 50 நாட்களை கடந்து நடைபெற்ற போட்டிகளில் ஆரம்ப நாட்களில் எவ்விதமான விளம்பர இடைவேளையும் இன்றி ஒளிபரப்பாகிய போட்டிகள் இறுதி நாட்களில் அதிகப்படியான விளம்பரங்களால், போட்டிகளின் போது ஓட்டங்கள், பந்துவீச்சுப் பெறுதிகள் என்பன போடப்படும் சந்தர்ப்பங்களில் விளம்பரங்கள் வந்து குறுக்கிட்டமை சிறிது எரிச்சலை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், எல்லா ஊடகங்களும் IPL பருவம் 2 போட்டிகள் தொடர்பான விபரங்களை தெரிவித்து வந்த போதிலும், போட்டிகள் தவிர சிறப்பு கவனஞ் செலுத்தப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றே கூறவேண்டும். • தென்ஆபிரிக்க மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில். • பொலிவூட்டுக்கான தென் ஆபிரிக்க அழகி தெரிவு. உலக பொருளாதாரம் எதிர்கால ஸ்திரத் தன்மை தொடர்பில் பாரிய கேள்விக்குறியாக நிலவும் சந்தர்ப்பத்தில், IPL பருவம் 2 போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் விடுதல் நிகழ்வின் போது, இந்திய பொருளாதார சுட்டிகள் உயர்வை காட்டியிருந்தன. IPL பருவம் 2 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றால் பொருளாதார சுட்டிகளில் மேலும் உயர்வினை எதிர்பார்க்கலாம் என பல நிறுவனங்களும் ஆசையோடு இருந்தன. ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தேர்தல் காலம் என்ற காரணத்தைக் காட்டி போட்டிகளின் போது பாதுகாப்பு வழங்குவது சிரமம் என இந்திய பொலிஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போட்டிகள் தென் ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டன. மிகவும் குறுகிய காலப் பகுதிக்குள் IPL பருவம் 2 போட்டிகளை தென் ஆபிரிக்காவில் மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தமைக்கு நிச்சயமாக லலித் மோடி பாராட்டப்பட வேண்டியவரே. அதனையும் மீறி அவர் செய்த மற்றுமொரு விடயமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்லதொரு இடத்தை லலித் மோடிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதுதான் 8 மில்லியன் ரான்ட் பணத்தை தென்ஆபிரிக்காவின் கல்வி வளர்ச்சிக்காக இரண்டு கட்டங்களில் வழங்குவதற்கு IPL இணங்கியிருந்தமை. போட்டிகள் நடத்தப்படுவதற்கு தென் ஆபிரிக்க அரசினால் இது ஒரு நிபந்தனையாக விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எது, எப்படியிருந்தாலும் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கின்றது என்ற வகையில் திருப்தியடைந்து கொள்ள முடிகின்றது. 'Help Educate And Teach' (HEAT) என்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் 8 மில்லியன் ரான்ட், தென் ஆபிரிக்காவில் உள்ள பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 32 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சம் ரான்ட் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அப்பாடசாலைகளின் புலமைப்பரிசில் நிதிய கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணத்தை எந்த வகையில் புலமைப்பரிசில்களுக்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என்பது அப்பாடசாலையின் நிர்வாகக் குழுவையே சார்ந்துள்ளது. அடுத்து போட்டிகளையும் காண வருபவர்களில் ஒரு போட்டிக்கு தலா 5 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரான்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அவர்கள் பெயரில், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் பாடசாலை கட்டணமாக வைப்பிலிடப்பட்டுள்ளது. விளையாட்டு நிறுவனம் ஒன்று நாடொன்றின் கல்வித்துறைக்காக இவ்வளவு பெரிய நிதியை வழங்கியுள்ளமை இதுவே முதற்தடவையாகும். தென் ஆபிரிக்காவின் கல்வி முறை குறித்த ஒரு சுருக்கமான பார்வையும், இவ்வளவு பெரிய நிதி கல்வித்துறைக்காக வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். தென்ஆபிரிக்காவில் கல்வி. தென் ஆபிரிக்காவில் 12.3 மில்லியன் மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் 38600 ஆசிரியர்களின் கீழ் 26292 பாடசாலைகளில் கற்கின்றனர். அவற்றில் 1098 பாடசாலைகள் பதிவு செய்யப்பட்ட சுதந்திரமான தனியார் பாடசாலைகளும் இயங்கி வருகின்றன. கல்விக்கான தேசிய திணைக்களமே தென்ஆபிரிக்காவின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் கண்காணித்து வருகின்றது. அது தவிர்த்து தென்ஆபிரிக்காவின் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்து கல்வித் திணைக்களங்களும் இருக்கின்றன. தென்ஆபிரிக்க கல்வித் திட்டம் பொது, வேறு மற்றும் உயர் ஆகிய மூன்று பிரிவுகளாக காணப்படுகின்றது. உலகிலேயே கல்விக்காக அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் தென்ஆபிரிக்கா காணப்படுகின்றது. மிஸ். பொலிவூட் IPL 34வயதான மொடல் நடிகையான டூன் கொசட்ஸ், IPL பருவம் 2 போட்டிகளின் மிஸ்.பொலிவூட் அழகியாக தெரிவுசெய்யப்பட்டார். மிஸ்.பொலிவூட் பட்டத்திற்காக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டவர்களில் 48 அழகிகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்களிப்புக்களின் அடிப்படையிலேயே டூன் கொசட்ஸ், IPL பருவம் 2 போட்டிகளின் மிஸ்.பொலிவுட் அழகியாக தெரிவுசெய்யப்பட்டார். இந்த வாக்கெடுப்பு IPL T20 இணையத்தளத்தின் ஊடாக நடத்தப்பட்டது. 24 வயதான ஜினா க்ளவ்ட் இரண்டாவது இடத்தையும், டுனாய் னோர்ட்ஜே மூன்றாவது இடத்தையும் பெற்றனர். மிஸ். பொலிவுட்டாக தெரிவுசெய்யப்பட்ட டூன் கொசட்ஸ் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார். இந்த பட்டத்திற்கான பரிசாக, இலவச இந்திய சுற்றுப் பயணம் ஒன்றுக்கு டூன் கொசட்ஸ் தயாராகி வருகின்றார். இதில் வெற்றி பெறுபவர் பொலிவூட்டில் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உதிரிகள்: • அனைத்துப் போட்டிகளிலும் மொத்தமாக 16320 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுடன், 697 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. • வேகப்பந்துவீச்சாளர்கள் 388 விக்கெட்டுக்களையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 226 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். • டெக்கான் சார்ஜர்ஸ் அணி அதிக எண்ணிக்கையிலான(99) ஆறு ஒட்டங்களை பெற்றது. • அதிக ஆறு ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர்களாக முதலிடத்தை ராஜஸ்தான் ரோயல்ஸின் ஷேன் வோர்னும், பெங்களுர் ரோயல் செலன்ஜர்ஸின் பிரவீன் குமாரும் தலா 14 ஆறு ஓட்டங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். • ஓட்டமற்ற பந்துகளை வீசியவர்கள் வரிசையில் டெக்கான் சார்ஜர்ஸின் ஆர்.பி.சிங் 169 ஓட்டமற்ற பந்துவீச்சுக்களுடன் முதலிடத்தில் இருக்கின்றார். சென்னை சுப்பர் கிங்ஸின் முத்தையா முரளிதரன் 144 ஓட்டமற்ற பந்துவீச்சுக்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கின்றார். • அணியொன்றினால் வீசப்பட்ட செல்லுபடியாகாத பந்துவீச்சுக்களின் எண்ணிக்கை வரிசையில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 19 செல்லுபடியாகாத பந்துவீச்சுக்களுடன் முதலிடத்தில் உள்ளது. • அதிக அகலப்பந்துகளை வீசிய அணிகளின் வரிசையில் 68 அகலப் பந்துகளுடன் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. • அதிக முறை ஓடும் போது ஆட்டமிழப்பு செய்யப்பட்ட அணி வீரர்களின் வரிசையில் 22 ஆட்டமிழப்புக்களுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது. • 20க்கு20 போட்டிகளின் நிர்ணயமிக்க கடைசி 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 13 விக்கெட்டுக்களுடன், மும்பை இந்தியன்ஸின் லசித் மலிங்க முதலிடத்தில் உள்ளார். • 12 போட்டிகளில் 572 ஓட்டங்களைப் பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மெத்யூ ஹெய்டன் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • 16 போட்டிகளில் 23 விக்கெட்டுக்களை வீழ்த்திய டெக்கான் சார்ஜர்ஸின் ஆர்.பி.சிங், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • பெங்களுர் ரோயல் செலன்ஜர்ஸின் இளம் வீரரான மனிஷ் பான்டே ஆட்டமிழக்காத 114 ஓட்டங்களுடன், அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • அதிக பிடிகளை எடுத்த வீரர்கள் வரிசையில் டெல்லி டெயார் டெவில்ஸின் எபி. டிவிலியர்ஸ், 15 போட்டிகளில் 13 பிடிகளுடன் முதலிடத்தில் உள்ளார். • போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் 4 ஓவர்களில் 58 ஓட்டங்களை கொடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மஸ்ரபி மோர்டாசா முதலிடத்தில் உள்ளார். • அதிக 50 ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் மும்மை இந்தியன்ஸின் ஜே.பி. டும்னி மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸின் மெத்யு ஹெய்டன் ஆகியோர் 5 தடவைகள் 50 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர். • அதிக முறை ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தவர்கள் வரிசையில் டெக்கான் சார்ஜர்ஸின் ஹேர்சல் கிப்ஸ், 4 போட்டிகளில் ஓட்டம் எதனையும் பெறாது முதலிடத்தில் உள்ளார்.

ஷெரீன் அக்கா ஆகிறார்

தமன்னாவின் அக்கா கேரக்டரில் நடிக்கப் போகிறார் முன்னாள் நாயகி ஷெரீன். துள்ளுவதோ இளமை - இது மட்டும்தான் ஷெரீன் என்றால் ரசிகர்களுக்கு வரும் நினைவு. அந்தப் படத்துக்குப் பிறகு பெரிய இடத்திற்குப் போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் தேக்கத்தை சந்தித்தார் ஷெரீன். இப்போது ஷெரீன் என்ற பெயரையே கிட்டத்தட்ட ரசிகர்கள் மறந்து போய் விட்டார்கள். இந்த நிலையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார் ஷெரீன். ஆனால் இந்த முறை நாயகியாக அல்ல - சூப்பர் நாயகி ஒருவரின் அக்காவாக. தமன்னா, பரத்துடன் இணைந்து நடிக்கும் படம் கண்டேன் காதலை. ஜப் வி மெட் இந்திப் படத்தின் ரீமேக் இது. இதில் தமன்னாவின் அக்காவாக நடிக்கப் போகிறார் ஷெரீன். ஜப் வி மெட் படத்தில் நாயகி கரீனா கபூருக்கு தங்கை கேரக்டர்தான் படத்தில் உள்ளது. ஆனால் தமிழுக்காக இதை அக்காவாக மாற்றி விட்டனர். காரணம், வயதில் ஷெரீனை விட தமன்னா இளையவர் என்பதால். இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஷெரீன் சற்று தயங்கியுள்ளார். இருப்பினும் கேரக்டர் தனது கேரியருக்கும் உதவலாம் என்பதால் ஒப்புக் கொண்டாராம்.

25 மே 2009

ஈழத் தமிழர்களுக்கு என்றும் துணையாக இருப்போம் - நடிகர் சங்கம்

ஈழத் தமிழர்களுக்கு என்றென்றும் துணையாக இருப்போம் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் ஜெயம் ரவி, நெப்போலியன், விஜயகுமார், பாண்டியராஜன், செந்தில், சார்லி, மன்சூர்அலிகான், எஸ்.வி. சேகர், ஜே.கே.ரித்தீஷ் எம்.பி.. ஜே.கே.ரித்தீஷ், கே.ராஜன், குண்டு கல்யாணம், கஞ்சா கருப்பு, சின்னி ஜெயந்த், ரியாஸ் கான், ஜெயகோவிந்தன், அஸ்வின் சேகர், சின்னையன், நடிகைகள், மும்தாஜ், சத்யபிரியா, பத்மபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் பொதுக்குழுவில் தவறாது பங்கேற்குமாறு ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, நயன்தாரா, திரிஷா, அசின், பாவனா, பிரியாமணி உள்பட சங்க உறுப்பினர்கள் 2500 பேருக்கு சரத்குமார், ராதாரவி கடிதம் அனுப்பியிருந்தனர். தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால இவர்களில் ஒருவர் கூட தலை காட்டவில்லை. இதைக் குறிப்பிட்டு ராதாரவி கண்டித்துப் பேசினார். அவர் பேசுகையில், நடிகர் நடிகைகளுக்கு பிரச்சினைகள் வந்தால் சங்கம் தலையிட்டு தீர்த்து வைக்கிறது. ஆனால் பெரிய நடிகர் நடிகைகள் பலர் சங்க நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. நடிகர் சங்கம் எங்கே இருக்கிறது என்று கூட சிலருக்கு தெரியாது. இப்படி ஒத்துழைக்காமல் இருப்பது சரியல்ல. சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், அப்போது தான் உங்களை நாங்கள் காப்பாற்ற முடியும் என்றார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல், தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் உடனடியாக நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். - அனைத்து நடிகர் நடிகைகளும் தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளருடன் கண்டிப்பாக எழுத்து மூலம் ஒப்பந்தம் போட வேண்டும். ஒப்பந்தம் போடாத உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சினையில் சங்கம் தலையிடாது. - பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்கள் வாழ்வு மலர தென்னிந்திய நடிகர் சங்கம் என்றும் உறு துணையாக நிற்கும். - இலங்கை தமிழர்கள் நிதிக்கு 62 லட்சத்து 69 ஆயிரத்து 8 ரூபாயை நிதியாக அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி. ஜூலை 12ல் தேர்தல்... - 2009 2012 ம் ஆண்டிற்கான நடிகர் சங்க தேர்தல் ஜூலை 12 ந் தேதி நடைபெறும். - வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளில் மதுரை, சேலம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை துணை நடிகர்களாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். - பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நெப்போலியன், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோரை பொதுக்குழு வாழ்த்துகிறது. - நடிகர் சங்கதுக்கு ஊதியத்தில் இருந்து 2.5 சதவீதம் தொகையை அளித்த ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கருக்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

IPL 2009 - கோப்பையை வென்றது டெக்கான் அணி

_______________________________________________________________________________________________________ இறுதிப் போட்டியின் இறுதி ஓவர். 15 ரன் எடுக்க வேண்டும். பெங்களூர் கேப்டன் அனில் கும்ப்ளேயும் ராபின் உத்தப்பாவும் களத்தில் இருக்கிறார்கள். அணியின் கடைசி ஜோடி இது. ஆர்.பி. சிங் பந்து வீசுகிறார். முதல் பந்தில் கும்ப்ளே ஒரு ரன் எடுக்கிறார். அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்திலும் ரன் இல்லை. அடுத்த மூன்று பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. அற்புதமான பந்து வீச்சு, அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றால் டெக்கான் வெற்றி வாகை சூடியது. 2008 ஐ.பி.எல். போட்டிகளில் கடைசி இடத்தில் இருந்த டெக்கான் அணி இரண்டாம் ஆண்டில் சாம்பியனாகத் தலை நிமிர்ந்தது. கடந்த 40 நாட்களாக நடந்துவந்த பரபரப்பான போட்டிகள் முடிவுக்கு வந்தன. கடைநிலையில் இருந்த இரண்டு அணிகள் கடுமையாகப் போராடி உச்சத்தை அடைந்து சிகரத்தைத் தொடுவதற்கான இறுதிப் போட்டியில் இன்று களம் கண்டன. டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்த அனில் கும்ப்ளே முதல் ஓவரைத் தானே வீசினார். ஆடம் கில் கிறிஸ்டை மூன்றாவது பந்திலேயே அவுட் ஆக்கினார். அதன் பிறகு திருமலசெட்டி சுமன் வினய் குமார் பந்தில் வீழ்ந்தாலும் ஆன்ட்ரூ சைமன்ட்ஸும் ஹர்ஷல் கிப்ஸும் அணியை நிலைப்படுத்தத் தொடங்கினார்கள். சைமன்ட்ஸை அவுட் ஆக்கி அணியின் நம்பிக்கையைப் புதுப்பித்தார் கும்ப்ளே. ரோஹித் ஷர்மாவும் கிப்ஸும் மெதுவாகத் தொடங்கிச் சீராக வேகம் பெற்று ஆடினார்கள்.ரன் வேகம் ஏறத் தொடங்கியது. 17ஆம் ஓவரை வீசிய கும்ப்ளே மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். ஷர்மாவையும் வேணுகோபால் ராவையும் அவுட் ஆக்கினார். டெக்கானின் வேகம் தடைப்பட்டது. கேப்டன் கும்ப்ளே இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 4 ஓவர்களில் 16 ரன் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். டெக்கான் 143 ரன்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. டெக்கான் அணி அவ்வளவு சுலபமாகப் பணிந்துவிடத் தயாராக இல்லை. ரையான் ஹாரிஸ் ரன்களை அதிகம் கொடுத்தாலும் ஆர்.பி. சிங்கும் பிரக்யான் ஓஜாவும் சிக்கனமாகப் போட்டதுடன் முக்கியமான விக்கெட்களையும் வீழ்த்தினார்கள். சிங் ஜேக் காலிஸை அவுட் ஆக்கினார். ஓஜா கடந்த இரு ஆட்டங்களின் ஹீரோவான மனீஷ் பாண்டேயையும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த மெர்வையும் அவுட் ஆக்கினார். 57-3 என்னும் நிலையில் 9ஆம் ஓவரில் ஜோடி சேர்ந்த திராவிடும் ரோஸ் டெய்லரும் அணியை மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். ஆட்டம் பெங்களூருக்குச் சாதகமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஹர்மீத் சிங்கின் பந்தில் திராவிட் வீழ்ந்தார். டெய்லரையும் விராட் கோஹ்லியையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கித் திருப்பத்தை ஏற்படுத்தினார் சைமன்ட்ஸ்.பிறகு மார்க் பவுச்சரை ஹம்ரீத் சிங்கும் பிரவீண் குமாரை ஓஜாவும் அவுட் ஆக்கியதில் ஆட்டம் பெங்களூரின் கையை விட்டு நழுவியது. 113-8 என்று தள்ளாடியது. இன்னும் 18 பந்துகளில் 31 ரன் எடுக்க வேண்டும் என்னும் நிலையில் ராபின் உத்தப்பாவால் சாதிக்க முடியவில்லை. பெங்களூர் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்றைய ஆடுகளம் மட்டை வீச்சுக்குச் சாதகமானது இல்லைதான். ஆனால் ரன்கள் குறைவாக இருந்ததால் சற்றுக் கவனமாக ஆடியிருந்தால் பெங்களூர் வென்றிருக்கலாம். காலிஸ்,பாண்டே, திராவிட், கோஹ்லி, பவுச்சர் ஆகிய மட்டையாளர்கள் நின்று ஆடத் தவறியதால் கோப்பை கை நழுவியது. குறைவான ரன் எடுத்தாலும் கட்டுப்பாடான பந்து வீச்சு, நல்லஃபீல்டிங் ஆகியவற்றின் மூலம் வெற்றி பெறலாம் என்று டெக்கான் உணர்த்தியது. தான்தலைமை ஏற்ற 9 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்ற அனில் கும்ப்ளே அரை இறுதிப்போட்டி முடிந்ததும் நாளை இரவு மேலும் ஒரு வெற்றி கிடைத்தால் நன்றாகஇருக்கும் என்று சொன்னார். அவர் ஆசை நிரைவேறவில்லை என்றாலும் இறுதிப் போட்டிக்கு வந்த பெங்களூர் அணியின் அபாரமான முயற்சியையும்கும்ப்ளேயின் சிறப்பான தலைமையையும் பங்களிப்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகக் குறுகிய காலத்தில் தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்தியக் கிரிக்கெட் வாரியத்தைப் பாராட்டாமல்இருக்க முடியாது. பல திறமைசாலிகளை அடையாளம் காட்டிப் பல துடிப்பான மேட்சுகளைஅரங்கேற்றிய ஐ.பி.எல். 2009 போட்டித் தொடர் அற்புதமான ஒரு மேட்சுடன் முடிவுக்கு வந்தது.

கூகுளுக்கு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆல்பா!!

நமக்கு ஏதாவது ஒரு பொருளைப்பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ உடனடியாகத் தெரிந்து கொள்ள என்ன செய்கிறோம்? விக்கிபீடியா, கூகுள் போன்ற வலைத்தளங்களில் தேடுகிறோம். கூகுள் என்றால் தேடிய விஷயம் சார்ந்த வலைத்தளத்தையும், விக்கிபீடியா என்றால் அந்த தளத்திலேயே நொடிப்பொழுதில் தேடித்தருகின்றன.. இவை இரண்டும் நமக்கு அருமையான சேவை தருகிறது என்பதில் வேறு கருத்தில்லை... ஆனால், நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கணித்தும், சம்பந்தப்படுத்தியும் பார்க்க வேண்டுமென்றால் இந்த சேவைகளால் முடிகிறதா? உதாரணத்திற்கு "இன்று காலை நான் உண்ட வாழைப்பழத்தில் எத்தனை காலோரி சக்தி உள்ளது, நமக்கு அது எந்த அளவிற்குப் போதுமானது" என்று பார்க்க, கூகுளில் தேடினால் வேறோரு தளத்தில் மீண்டும் தேட வேண்டும். இன்னொரு தேடல், "நம்ம ஊர் உடுமலைப்பேட்டையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம்?" என்று தேடினால், பதில் கிடைக்க குறைந்தது 10 நிமிடம் ஆகும்.. இது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் வேண்டுமா? கவலை வேண்டாம்.. புதிதாக வந்திருக்கிறது "வொல்ஃப்ரம் ஆல்பா" ஓரிரு உதாரணங்களைப் பார்க்கலாமா? முதலில் உடுமலைப்பேட்டை டு நியூயார்க் - உடுமலையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம், இரண்டு ஊர்லயும் மக்கள் தொகை எவ்வளவு, இரண்டு ஊர்களைப் பற்றியும் மேலும் சில தகவல்கள் அங்கேயே!! http://www40.wolframalpha.com/input/?i=udumalpet+to+Newyork இன்னொரு உதாரணம்.. ஆப்பிள் நிறுவனத்தையும், கூகுள் நிறுவனத்தையும் நொடியில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா? இதோ... http://www40.wolframalpha.com/input/?i=Apple+Google உங்கள் தங்கைக்கு அல்லது மகளுக்கு ஒரு புள்ளியியல் கணக்குப் போடனுமா? இதோ... http://www40.wolframalpha.com/input/?i=SD+of+55%2C35%2C78%2C50%2C68%2C70%2C48 நம்ம நாட்டோட தனி நபர் வருமானத்தை வேற ஏதாவது ஒரு நாட்டோட ஒப்பிடனுமா கவலை வேண்டாம் இதோ... http://www40.wolframalpha.com/input/?i=India+China+per+capita+income இது மட்டும் இல்லை.. கணிதம், புள்ளியியல், புவியியல், சமூக பொருளாதார தகவல்கள், வானிலை, மொழிகள், வானிலை, பொருட்கள், பொருளாதாரம், புத்தகங்கள், மருத்துவத் தகவல்கள் என அனைத்து துறைகள் சார்ந்த ஒப்பீடுகளையும் கணிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமா இதோ இருக்கிறதே வொல்ஃப்ரம் ஆல்பா.. http://www40.wolframalpha.com/examples/ வொல்ஃப்ரம் ஆல்பா.. - மே 18ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒரு தேடல் சேவை நிறுவனம். எந்த வகையான கேள்வியையும், கணிப்புகளையும் தர "வொல்ஃப்ரம்" எனபவர் ஆரம்பித்த நிறுவனம் தான் வொல்ஃப்ரம் ஆல்பா. என்ன? இப்ப சொல்லுங்க வொல்ஃப்ரம் ஆல்பா.. கூகுளுக்கு சவால் தானே? ..

காபி் கடை' திறந்த முன்னா!

இரு படங்களில் நடித்துள்ள முன்னா, சென்னையில் ஒரு காபி ஷாப்பைத் திறந்துள்ளார். சிலந்தி படத்தில் மோனிகாவுடன் இணைந்து நடித்தவர் முன்னா. அப்படத்தில் நடித்தபோது மோனிகாவை கண்ட இடத்திலும் கிள்ளியதாக புகாருக்குள்ளாகி மீண்டவர். இப்போது மணிரத்தினத்தின் ராவணா படத்திலும் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார் முன்னா. அந்த மெய் சிலிர்ப்பிலிருந்து இன்னும் மீளவில்லையாம் முன்னா. இந்த நிலையில் திடீரென சென்னையில் ஒரு காபி ஷாப்பை தொடங்கியுள்ளார் முன்னா. என்ன இந்த திடீர் முடிவு முன்னா என்று கேட்டால், இது ஹாபிக்காக என்கிறாராம். திறந்ததோடு நிற்காமல் அதை திறம்படவும் நடத்தப் போகிறாராம். கையில் இப்போது முன்னாவிடம் புதுப் படம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. வரும் வரை காபி கடையைப் பார்க்கும் ஐடியாவில் இருக்கிறாராம். பரவாயில்லை, சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம் விவரமாகத்தான் இருக்கிறார்கள்.

சென்னை அணியின் தோல்விக்கு காரணம

இட்லிவடையில் தொடர்ந்து வரும் சூடான அரசியல் பதிவுகளுக்கு இடையே அரைகுறையாய் ஆடினாலும் அரையிறுதிவரை சென்று பெங்களுரு அணியிடம் உதைவாங்கி திரும்பியிருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் பற்றிய விமர்சனம். ஹைய்டன் : வெல்டன் என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் அரையிறுதியை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் ஆடிய இவரை. ரைனா : 'ரன் ரெயினா' என்று சில போட்டிகளில் மட்டும் சொல்லவைத்தார். முக்கால்வாசி போட்டிகளில் கோடை 'ரெயின்' ஆனார் பாலாஜி : வேகமாக ஓடிவந்து, நிதானமாக 'பேட்டை' நோக்கி பந்து விசினார். தோல்விக்கு இவர் முக்கிய பங்கு வகித்தார். பெயரில் 'லட்சுமி(!) ' இருப்பதாலோ என்னவோ தோனி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து எரிச்சல் மூட்டினார். ஜேகப் ஓரம் : ஜேகப் 'ஓரம்போ' என்று இவருக்கு பெயர் வைத்திருக்கலாம். எதற்கு அணியில் இருக்கிறோம் என்று இவருக்கு கடைசி வரை தெரியவில்லை. இவரை தேர்வு செய்தவர்களுக்கும் தெரியவில்லை. ஜகாதி : ஆடிய முதல் போட்டியில் 'ஜிகாதி' போன்று செயல்பட்டவர் பின் சதாம் போன்று எதிரணியிடம் சரண் அடைந்துவிட்டார். முரளிதரன் : முரளி 'தரம்' . அணியில் இருந்த ஒரே ஒரு பௌலர். தியாகி : சரியான பெயர் வைத்திருகிறார்கள் என்பதுபோல துவக்க ஓவர்களில் ரன்களை 'தியாகம்' செய்தார். ஆல்பி மோர்கல் : காலை 'வாருகல்' . ஒரு நல்ல ஆல் ரௌண்டர் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர் கடைசியில் 'வைகோ' பணியில் பார்ம் அவுட் ஆகி கவுத்துவிட்டார். பத்ரிநாத் : சரியான 'உதிரி'நாத். ஓடி ஓடியே ரன் எடுக்கும் இவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் லாயக்கு. பர்திவ்படேல் : வேகபந்து வீசும்போது மட்டும் 'பளார்' படேல் ஆகி, சுழல் பந்து வரும்போது 'பரிதாப' படேல் ஆகிவிடுகிறார். மகேந்திர சிங்க் தோனி : சரியான திட்டமிடல் இல்லாதது, சூழ்நிலைக்கு ஏற்றதுபோல அணியை தேர்வு செய்யாதது, தன் பலம, பலவீனம் அறியாதது, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை போன்ற காரணங்களால் 'கேப்டன்' தோற்றுவிட்டார். (கவனிக்க இரண்டு 'கேப்டன்'களும் ). அரையிறுதியில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல், ஐந்து ஓவர்களை வீணடித்தார். வெற்றிகோப்பை 'மிஸ்' ஆனதற்கு அடிப்படை காரணம தோனியின் சென்னை 'மிஸ்' ஸிங்தான்.

சுறா வேட்டை - திகைப்பூட்டும் படங்கள்

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com