Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

25 மே 2009

சென்னை அணியின் தோல்விக்கு காரணம

இட்லிவடையில் தொடர்ந்து வரும் சூடான அரசியல் பதிவுகளுக்கு இடையே அரைகுறையாய் ஆடினாலும் அரையிறுதிவரை சென்று பெங்களுரு அணியிடம் உதைவாங்கி திரும்பியிருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் பற்றிய விமர்சனம். ஹைய்டன் : வெல்டன் என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் அரையிறுதியை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் ஆடிய இவரை. ரைனா : 'ரன் ரெயினா' என்று சில போட்டிகளில் மட்டும் சொல்லவைத்தார். முக்கால்வாசி போட்டிகளில் கோடை 'ரெயின்' ஆனார் பாலாஜி : வேகமாக ஓடிவந்து, நிதானமாக 'பேட்டை' நோக்கி பந்து விசினார். தோல்விக்கு இவர் முக்கிய பங்கு வகித்தார். பெயரில் 'லட்சுமி(!) ' இருப்பதாலோ என்னவோ தோனி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து எரிச்சல் மூட்டினார். ஜேகப் ஓரம் : ஜேகப் 'ஓரம்போ' என்று இவருக்கு பெயர் வைத்திருக்கலாம். எதற்கு அணியில் இருக்கிறோம் என்று இவருக்கு கடைசி வரை தெரியவில்லை. இவரை தேர்வு செய்தவர்களுக்கும் தெரியவில்லை. ஜகாதி : ஆடிய முதல் போட்டியில் 'ஜிகாதி' போன்று செயல்பட்டவர் பின் சதாம் போன்று எதிரணியிடம் சரண் அடைந்துவிட்டார். முரளிதரன் : முரளி 'தரம்' . அணியில் இருந்த ஒரே ஒரு பௌலர். தியாகி : சரியான பெயர் வைத்திருகிறார்கள் என்பதுபோல துவக்க ஓவர்களில் ரன்களை 'தியாகம்' செய்தார். ஆல்பி மோர்கல் : காலை 'வாருகல்' . ஒரு நல்ல ஆல் ரௌண்டர் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர் கடைசியில் 'வைகோ' பணியில் பார்ம் அவுட் ஆகி கவுத்துவிட்டார். பத்ரிநாத் : சரியான 'உதிரி'நாத். ஓடி ஓடியே ரன் எடுக்கும் இவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் லாயக்கு. பர்திவ்படேல் : வேகபந்து வீசும்போது மட்டும் 'பளார்' படேல் ஆகி, சுழல் பந்து வரும்போது 'பரிதாப' படேல் ஆகிவிடுகிறார். மகேந்திர சிங்க் தோனி : சரியான திட்டமிடல் இல்லாதது, சூழ்நிலைக்கு ஏற்றதுபோல அணியை தேர்வு செய்யாதது, தன் பலம, பலவீனம் அறியாதது, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை போன்ற காரணங்களால் 'கேப்டன்' தோற்றுவிட்டார். (கவனிக்க இரண்டு 'கேப்டன்'களும் ). அரையிறுதியில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல், ஐந்து ஓவர்களை வீணடித்தார். வெற்றிகோப்பை 'மிஸ்' ஆனதற்கு அடிப்படை காரணம தோனியின் சென்னை 'மிஸ்' ஸிங்தான்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com