Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

17 ஜனவரி 2009

அறிவியல் வீடியோக்களை காண உதவும் இணையத்தளம்

அறிவியல் விஷயங்களை தெரிந்து கொள்வது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகும்.அறிவியலில் எந்த வகை பிரிவாக இருந்தாலும் அதனை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையே.ஆனால் இந்த தகவல்கள் வெறும் வரிகளாக,விரிவுரைகளாக இருந்தால் நமக்கெல்லாம் சற்று சலிப்பாக இருக்கும்.இதனை நீக்கி பல வகைகளில் அறிவியலின் அனைத்து பிரிவுகள் குறித்தும் கூறும் இணையத்தளம் ஒன்று http://sciencehack.com என்ற முகவரியில் உள்ளது.இதன் சிறப்பம்சம் என்னவெனில், அனைத்து விஷயங்களும் வீடியோக்காட்சிகளாக விளக்கப்படுவது தான்.இதன் பிரிவுகளை பட்டியலிட்டால் உங்களுக்கு நிச்சயம் ஆர்வம் ஏற்படும். அண்மைக்காலத்திய வீடியோக்கள் இயற்பியல், இரசாயனம், மனோதத்துவவியல், உயிரியல், றோபோட்டிக்ஸ், கணிதம், கணணிஅறிவியல், இயற்கையின் சக்தி போன்றவை இதில் அடங்கும்.உங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் தேடும் பிரிவைத் தேர்ந்த்தெடுத்து வீடியோக்களை ரசிக்கலாம்.நீங்கள் தேடும் விஷயம் எந்த பிரிவில் இருக்கிறது? என்று தெரியவில்லையெனில் கவலைப்படவேண்டாம்.உதாரணமாக மேகம் குறித்து அறிய விரும்புகிறீர்களா?அதற்கு வாய்ப்பு உள்ளது.இதில் சர்ச் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் Cloud என டைப் செய்து எண்டேர் தட்டினால்,உடனே அது எந்த பிரிவில் எங்கு இருக்கிறது என்று காட்டப்படும். இதில் காணப்படும் வீடியோக்கள் சாதாரணமாக தயாரிப்பட்டவை அல்ல.ஒவ்வொன்றும் ஒரு விஞ்ஞானியால் சரி பார்க்கப்பட்டு தகவல் துல்லியமாக இருக்கின்றனவா? எனச் சோதனை செய்யப்பட்டு தரப்படுகின்றன.

LG phone களின் Code எண்கள்..உங்களுக்காக...!

Phone இன் Test Mode க்குச் செல்ல — 2945#*# LG Phone இன் ரகசிய மெனுவினைக் கொண்டு வர - 2945*#01*# Mobile Phone இல் உள்ள Software தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய - *8375# I.M.E.I எண்ணை அறிய -*#06# (இது எந்த போனுக்கும் பொருந்தும்.) LG 7010 மற்றும் 7020 Phone களின் SIM Card Lock கினை Manage செய்திட- 2945#*70001# LG B 1200 போனின் SIM Lock Menu Manage செய்திட 1945#*5101# LG B 5200 மற்றும் 510 W போன்களின் SIM Lock Menu Manage செய்திட 2945#*5101# LG 500 மற்றும் 600 போன்களின் SIM Lock Menu Manage செய்திட 2947#*

16 ஜனவரி 2009

முத்தரப்பு ஒருநாள் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் வெற்றிக் கனவை கலைத்தார் முரளி..!

பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கிடையிலான இன்று நடை பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் ஆரம்பத்தில் வேகமாக வீழ்ந்தது ஒரு கட்டத்தில்5விக்கெட் இழப்புக்கு54 ஓட்டங்களை பெற்றிருந்தது.அதன் பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு நிதானத்துடன் ஆடினர்,ஆனால் 98ஓட்டங்களில் 6ஆவது விக்கெட்டும் 151ஓட்டங்களில் 7ஆவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது,அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்திலே பெவிலியன் திரும்பினர் இதனால் 152ஓட்டங்களுக்கு பங்களாதேஷ் அணி ஆட்டம் இழந்தது.

வெற்றி பெற 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுபெடுத்தடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே ஜெயசூரிய எந்த பந்தையும் எதிர் கொள்ளாமலேயே RUN OUT முறையில் ஆட்டம் இழந்தார்,தொடர்ந்து வந்த வீரர்களும் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்,ஒரு கட்டத்தில் 8ஓவர்களில் 6ஓட்டங்களுக்கு ஜந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது,பின்னர் வந்த முபாரக்,சங்கக்கராவுடன் இணைந்து 51ஓட்டங்கள் வரை பெற்றனர்,இந்த நிலையில் முபாரக் ஆட்டமிழந்தார்,பின்னர் வந்த பெர்வீஸ் சங்கக்கராவுடன் 7ஆவது விக்கெட்டுக்காக 63ஓட்டங்களை பெற்றவேளை(மொத்தம் 114)சங்கக்கரா 59ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார், அதனைத் தொடர்ந்து வந்த குலசேகரவும் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டம் இழந்த பின் பங்களாதேஷ் அணியே வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கப்பட்டது,ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்காக பெர்வீஸ் உடன் சேர்ந்த முரளிதரன் வெறும் பதினாறு பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு 33 ஓட்டங்களை பெற்று (நான்கு நான்கு ஓட்டங்களையும் இரண்டு ஆறு ஓட்டங்களையும்)48.1ஓவர்களில் 153ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு வெற்றியினை உறிதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகனாக குமார் சங்கக்கராவும் ,போட்டி தொடர் நாயகனாக சாகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டனர்.

15 ஜனவரி 2009

எந்திரன் -த ரோபோ திரை விமர்சனம்...???

தலைவர் மீண்டும் ஜெயித்து விட்டார், சந்திரமுகி குதிரைன்னா, இயந்திரன் பறக்கும் குதிரை, குசேலனுக்காக ரஜினிக்கு எதிரா கொடி பிடிச்ச எல்லோரும், அதை கொடியிலே பணத்தை அள்ளுவாங்க. படி சூப்பர் ஸ்டார் ரஜினி அமெரிக்கா நாசாவிலே விண்வெளி ஆராட்சியாளர் பணியை செய்து கொண்டு வரும் அவர்,செவ்வாய் கிரகத்திற்கு சென்ற பீனிக்ஸ் விண்கலத்தை வடிவமைத்த குழுவில் பணி ஆற்றுகிறார் விண்கலம் மேலே செல்லும் பொது அதிலே தொழில் நுட்ப கோளாறு ஏற்படுகிறது, அதை சரி செய்யும் முயற்சியில் அவருக்கும் ரஷ்யா ஆரட்சியாளருக்கும் தீர்வு கொடுப்பதில் தகராறு, அவன் இந்தியாவையும்,இந்தியர்களையும் தரக்குறைவாக பேசி விட, அதற்க்கு தீர்வு கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்கிறார்.இந்தியாவை பற்றி பேசிய பேச்சிலே பாதித்த சூப்பர் ஸ்டார், விடுமுறை எடுத்து விட்டு சென்னைக்கு வருகிறார், வரும் பொது தன் சொந்த படைப்பான ரோபோவையும் எடுத்து கொண்டு வருகிறார்.வருகிற தலைவர் சென்னை திருவேல்லிகேணியிலே தங்குகிறார். ஆத்து மாமியின் மகளாக ஐஸ்வர்யாராய், அவளின் அக்காள் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் குடும்பமே தற்கொலை முடிவு எடுக்கிறார்கள், அவர்கள் உணவில் எடுத்து கலந்து இருப்பதை ரோபோவின் மூலம் அறிந்து அவர்களை காப்பாற்றுகிறார்.அவர்களின் பிரச்சனைகளை ரோபோவின் உதவியுடன் தீர்த்து வைக்கிறார். இப்படி எல்லாம் எந்த படத்திலும் வந்ததா ஞாபகம் இல்லைஐஸ்வர்யா ராயின் ஊனமுற்ற சகோதரனுக்காக பெட்ரோல் இல்லாத தானியங்கி வண்டி ஒன்றை தயாரித்து கொண்டுகிறார், அது மிகவும் பிரபலமடைய தலைவரிடம் நிறைய பேர் வருகிறார்கள்,அவர்களுக்கு இலவசமாக அந்த தொழில் நுட்பத்தை கொடுக்கிறார். தலைவரின் புகழ்அமெரிக்க அதிபரை விட வேகமாக வளர்கிறது.ஐஸ்வர்யாராய் தலைவர் மீது காதல் வயப்படுகிறாள்,அப்படி வரலைன்னா தமிழ் சினிமாவிற்கே களங்கம்.இந்த நிலையில் தலைவரின் வளர்ச்சி பிடிக்காத உள்ளூர் மோட்டார் வாகன தாயாரிப்பாளர்கள் அவரை தீர்த்து கட்ட ரவுடிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.வில்லன் இல்லன்னா படம் எப்படி நகர முடியும். தலைவர் படத்திலே சண்டை இல்லன்னா சக்கரை பொங்கலுக்கு உப்பு வச்சி சாப்பிடுற மாதிரி இருக்கும், ரவுடிகளுக்கு ஒரு காட்டு காட்டுகிறார் ரோபோவின் உதவியோடு, கொஞ்ச நாள்ல சண்டை காட்சி திருட்டு தனமா வெளியே வரும் அதனாலே அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லைஇதற்கிடையில் நாசாவின் அணு ரகசியங்கள் திருட்டு போகின்றது, அந்த பழி தலைவர் மேலே விழுகிறது,தலைவர் விடுமுறையில் சென்னையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரை கைது செய்ய அமெரிக்கா துப்பறியும் அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள். மத்திய அரசாங்கத்திலே வேலை பார்க்கும் அதிகாரி,உள்ளூர் வாகன தயாரிப்பாளரிடம் மத்திய அரசுக்கு வந்த ரகசிய உத்தரவை தெரிவிக்கிறார். சந்தப்பத்தை பயன் படுத்தி உள்ளூர் வில்லன், உள்ளூர் பத்திரிக்கைகள்,தொலை காட்சி நிறுவனங்கள் மூலமாக அந்த செய்தியை பிரபலப்படுத்துகிறார், செய்திகளில் அவர் சர்வதேச குற்றவாளியாக சித்தர்க்கப்படுகிறது.உண்மை என நம்பிய ஐஸ்வர்யாராய் வழக்கம் போல எல்லா கதாநாயகிகளும் செய்வது போலே அவரை விட்டு பிரிந்து விடுகிறார். மத்திய அரசாங்கம், சர்வதேச போலீஸ், அமெரிக்கா எப்.பி.ஐ தேடுவதோடு இடைவேளை. டீ,காபி குடிக்க போறவங்க போயிட்டு வாங்க.இரண்டாவது பாதியில் தனக்கு எதிரான சதியை முறி அடித்து, ஐஸ்வர்யாராயும் கை பிடிப்பதே( படத்துக்காக) மீதி கதை இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலே முதலில் ரஜினியை இழிவு படுத்திய தன் சக நண்பரிடன் இருந்து மின்-அஞ்சல் வருகிறது, அவன் விடுமுறைக்காக மேக்ஸ்சிகோ சொன்று இருப்பதாகவும், அவனை உடனடியாக வந்து பார்க்கும் படி மெக்சிகோ விலாசத்தை அனுப்புகிறார், அவனை தேடி மெக்சிகோ செல்கிறார் ரஜினி, ரோபோவின் உதவியுடன் சென்னை விமான நிலையத்தில் நுழைந்து மெக்சிகோ சொல்கிறார் அவரை தேடி அங்கு செல்லும் ரஜினி, அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள், அவர் இறக்கும் தரு வாயில் அவரிடம் இருந்து சில உண்மைகளை தெரிந்து கொள்கிறார், இந்த கொலை பழியும் தலைவர் மீது விழுகிறது. இது வரையில் வில்லன்களுக்கு ஓடி ஒழிந்த ரஜினி உண்மையை தெரிந்து கொண்டதால், அவனை தேடி செல்ல முடிவு எடுக்கிறார், முதலில் வில்லன் இருப்பிடம் தேடும் தலைவர் அவன் இந்தியாவிலே இருப்பது தெரிய வருகிறது, மீண்டும் ரோபோவின் உதவியால் சென்னைக்கு வருகிறார். சென்னையில் பழைய எதிரியும், புதிய எதிரியும் ஓன்று சேருகிறார்கள்(பழசு உள்ளுறு, புதுசு வெளியூரு).இருவரின் சதி திட்டங்களை முறியடித்து வெற்றி பெறுவதே இறுதி கட்டம்பாடல்கள் இன்னும் கொஞ்ச நாள்ல இணைய தளத்திலே வலம் வரும், அதனாலே அதை பத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம் படத்திலே ரோபோ பேசுகிற எல்லாமே குத்து வசனம் தான், ஒன்னு இப்ப சொல்லுறேன், மீதி படம் பார்த்து தெரிந்து கொள்ளவும். தூங்கும் போது அடிச்சா கேடி, தூங்கிட்டே அடிச்சா கில்லாடி பிரமாண்டம், பிரமிப்பு, திகைப்பு, விறுவிறுப்பு, ரஜினி கலந்து தரப்பட்ட உலகத்தரம் வாய்ந்த தமிழ் படம் இயந்திரன். (படம் வெளியான பின்னர் தான் கதை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் )

ரஜனியின் எந்திரனில் ஒரு புதிய வில்லன்...!

சூப்பர் ஸ்டாரின் படங்களில் வரும் வில்லன் பாத்திரத்துக்கு எப்போதுமே மிகுந்த முக்கியத்தவம் அளிக்கப்படுவது வழக்கம். என்னதான் படம் தனக்காக ஒடினாலும், படத்தில் ஒரு பலமான வில்லன் இருப்பது கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் என நம்புபவர் சூப்பர்ஸ்டார்.
இதற்காகவே, பல படங்களில் வில்லனுக்கு தன்னைவிட கூடுதல் முக்கியத்துவம் தரச் சொல்லியிருப்பார்.முரட்டுக் காளையில் ஜெய்சங்கரை வில்லனாக சிபாரிசு செய்தவர் ரஜினிதான்.மிஸ்டர் பாரத்தில் சத்யராஜ்தான் அந்த வேடத்தைச் செய்ய வேண்டும் என முடிவு செய்தவரும் ரஜினிதான்.
லேட்டஸ்ட் பிளாக் பஸ்டர் சிவாஜியில், சுமனை வில்லனாக நடிக்க வைத்தது வரை, தனது வில்லனாக யார் வரவேண்டும் என்பதை ரஜினியே தீர்மானிக்கிறார்.
இப்போது எந்திரன் படத்திலும் பாலிவுட்டில் புகழ் பெற்ற ஒரு வில்லனை அறிமுகப்படுத்துகிறார்கள்.
டேனி டெங்ஸோங்பா…
குர்பானி, குதா கவா, அஜ்நபி போன்ற படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர் மூலம் மிகப் பிரபலமான நடிகர் இவர்.அமிதாப் போன்ற ஜாம்பவான்களுக்கு நிகராக பேசப்பட்டவர். இவர்தான் இப்போது எந்திரன் பட வில்லன்.
இவருக்குமுன் தெலுங்கு நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவர் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.டேனியின் சேர்க்கை படத்துக்கு நிச்சயம் பலம்தான். காரணம் இந்திப் படவுலகில் டேனியின் நடிப்புக்கென்று தனி ரசிகர் வட்டமுண்டு.
2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்ற டேனி, ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். செவன் இயர்ஸ் இன் திபெத் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் நடித்துள்ளார்.(வலையில் ரசித்தவை )

பங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி..!

பங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகள் பங்கு பெறும் ஒரு நாள் போட்டியில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ்,மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ்அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுபெடுத்தடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இலங்கை அணியின் சார்பில் சனத் ஜெயசூர்யா மட்டுமே 54 ஓட்டங்களை பெற்றார்.

வெற்றி பெற 148ஓட்டங்களை பெற வேண்டிய பங்களாதேஷ் அணி23.5ஓவர்களில் 151 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.அந்த அணியின் சார்பில் ஷகிப் அல் ஹஷன் 92 ஓட்டங்களை (ஆட்டமிழக்காமல்) பெற்று பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு உதவினார்.இவரே ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

14 ஜனவரி 2009

கற்பை விற்கும் கன்னி..!

செய்தி இங்கே: Girls Virginity Auction Bid Natalie Dylan Geisha Onenight Stand Defloration

கேள்வி இங்கே: 5 questions for woman selling her virginity online Technically Incorrect - CNET News: “Natalie, 22 years old, is selling her virginity to the highest bidder at Bunnyranch.com. The leading man’s offer currently stands at a breathtaking $3.8 million. The Bunny Ranch, for those who haven’t been initiated, is an extremely famous brothel in Nevada”

1-வயது 22 .

2-கல்லூரிச் செலவிற்காக கன்னித்தன்மையை காணிக்கையாக தயார் என்று அறிவித்துள்ளார்.

3-பத்தாயிரம் ஆடவர் களத்தில் குதித்து ஏலம் கேட்டு வருகின்றனர் மூணே முக்கால் மில்லியன் டாலருக்குபன்னிரான்ச்.காம் XXXXXXஇல் சூடாக பேரம்
நடந்து வருகிறது
4-மணமுறிவு பெற விரும்புவோருக்கான ஆலோசனை வழங்குவதில்
மேற்படிப்பு செய்யப் போகிறார்.
( வலையில் படித்தவை )

13 ஜனவரி 2009

என் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ
றன்றுபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல்
நன்னாள்நித்திரையில் இருக்கும் தமிழா.
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்
புத்தாண்டுஅண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு தை
முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.
-பாவேந்தர்
இந்த பதிவினை பார்வையிடும் அனைத்து பதிவாளர்கள்,வாசகர்கள்,நண்பர்கள்,அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
உங்கள் நண்பன் திலீப்

பாஸ்வேர்டுக்கு புதிய வழி..!

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது..
அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன.
பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் சொல்ல கட்டாயப் படுத்துகின்றன.
இதுபோன்ற தளங் களை பயன் படுத்த அவர்கள் கேட்கும் விவரங் களையெல்லாம் கொடுத்து விட்டு கூடவே இ-மெயில் முகவரியையும் சமர்ப்பித்து நமக்கான பயன்பாட்டு பெயர் அதாவது யூசர் நேம் மற்றும் அதனை இயக்க கூடிய பாஸ்வேர்டு அதாவது கடவுச் சொல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அந்த தளத்தை எப்போது பயன் படுத்த வேண்டும் என்றாலும், பயன்பாட்டு பெயரை சமர்ப்பித்து கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.
ஒரே ஒரு தளம் என்றால், இந்த முறையை பின்பற்றுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல்வேறு தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்த இப்படி பல விதமான பயன்பாட்டு பெயரையும், கடவுச் சொல்லையும் உருவாக்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.
-காமர்ஸ் தளங்கள், இ-மெயில் சேவை தளங்கள், பிரத்யேக ஆன் லைன் இதழ்கள், அரசு தளங்கள் என்று பலவற்றில் இப்படி தனித்தனியே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் அடையா ளத்தை உருவாக்க நேரத்தை செலவிட வேண்டியிருப்ப தோடு, பலவித அடையாளங்களை நிர்வகிப்பதும் சிக்கலாகிவிடுகிறது. கடவுச்சொல்லை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.
இதற்கு தீர்வாக வந்திருக்கும் புதிய சேவைதான் ‘ப்ரீ யுவர் ஐடி’.‘ஓபன் ஐடி டாட் நெட்’ இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து (ஒரே) ஒரு கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டீர்கள் என்றால் போதுமானது.
வேறு எந்த இணைய தளத்தை பயன்படுத்தும்போதும், உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது என்றால், ஓபன் ஐடி அடையாளத்தை சமர்ப்பித்தீர்கள் என்றால் போதுமானது.
உங்களைப் பற்றிய விவரங்களை ஓபன் ஐடி வழங்கி நீங்கள் தளத்தின் உள்ளே செல்ல கதவைத் திறந்து விடும். இதன் மூலம் கட்டண சேவை போன்ற தளங்கள் ஒவ்வொன்றுக் கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்க வேண் டியதில்லை.
ஒரு கதவைத் திறந்தால், ஓராயிரம் கதவுகள் திறக்கும் என்பதுபோல, இந்த ஒரே ஒரு கடவுச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டெர்நெட் முழுவதும் உலா வரலாம்.
ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பாஸ்வேர்ட் சேவை போன்றதே இது. அதைவிட மேம்பட்டதாக இது இருக்கிறது என ஓபன் ஐடி மார்தட்டிக் கொள்கிறது.(நன்றி -cybersimman)

மத்யூ ஹெய்டன் ஓய்வை அறிவித்தார்...!

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக உலகின் ஏனைய அனைத்து அணிகளின் பந்துவீச்சாளர்களையும் அச்சுறுத்தி வந்த வீரர் மத்யூ ஹைடன் தனது ஓய்வை அறிவித்துள்ளது.ஹெய்டனுக்கும் இப்போது வயது 37. அண்மைக்காலமாகவே தனது துடுப்பாட்டத்தில் குறைந்த ஓட்டங்களுக்கு அடிக்கடி ஆட்டமிழந்து வந்திருந்தார்.இவருடைய டெஸ்ட் ஓட்டங்கள் 8625. (சராசரி-50.73)ஆனால் கடந்த வருடம் முதல் இந்தியா, நியூ சீலாந்து,தென் ஆபிரிக்கா அணிகளுக்கு எதிராகவும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் பெற்றது வெறும் 149 ஓட்டங்கள் மாத்திரமே. டெஸ்ட் போட்டிகள் போலவே ஒரு நாள் போட்டிகளிலும் ஹெய்டன் பிரகாசித்துள்ளார்..6133ஓட்டங்கள்,10சதங்கள், மற்றும் இரண்டு தடவை உலகக் கிண்ணம் வென்ற அணியில் இடம் பிடித்தவர்..
ஆஸ்திரேலிய அணிக்கு ஹெய்டன் போல எதிரணியின் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தக் கூடிய ஒருவரை தேடுவதென்பது கஷ்டமானதே..
ஹெய்டனின் சொந்த ஊரான பிரிஸ்பேனில் இன்று இடம்பெறும் இருபது - 20 போட்டியின் இடைவேளையில் மைதானத்தின் மத்தியில் அவர் ரசிகர்களிடம் பிரியாவிடை பெறப் போகிறார்..

1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

இன்றைய இணைய உலகில் மின்னஞ்சலும், அரட்டையும் - நூற்றாண்டின் மிகச்சிறந்த ஊடகங்களாகும்.
ஒலி,ஒளி,புகைப்படம்,ஆவணங்கள் போன்றவற்றை தினமும் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இவை பயன்படுகின்றன.
ஆனால் மின்னஞ்சல் சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவுக்கு மேல் இணைப்புகளை ஏற்பதில்லை.
மின்னஞ்சலுடன் இணைக்கப்படும் இணைப்புகளின் கொள்ளளவுக்கு வரையறை விதித்திருக்கிறார்கள்.
இதனால் என்ன செய்கிறோம் ஒரு பெரிய அதிகமான கொள்ளளவு கொண்ட கோப்பு ஒன்றை சிறு சிறு கூறுகளாக்கி அதைத் தனித்தனியாக ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் இணைத்து அனுப்புகிறோம்.
அல்லது ஏதேனும் ஒரு கோப்புப்பகிர்வான் தளத்தில் ஏற்றி அதன் சுட்டியை எதிர்முனையில் இருப்பவரிடம் தருகிறோம்.
1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?இவ்வளவு பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு புதிய இணையத்தளம் புறப்பட்டுள்ளது.http://www.dropsend.com/
இதன் மூலம் 1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் அப்படியே மின்னஞ்சலில் இணைப்பாக இணைத்து அனுப்ப இயலும்.
தொடரும் .....

12 ஜனவரி 2009

தவறு செய்வது இவர்கள் ஆனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே..!(முதலாளித்துவத்தின் கோர முகம்)

இன்று நமது உலகம் சந்தித்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியாக இருக்கட்டும் இல்லை சத்யம் நிறுவன மோசடியாக இருக்கட்டும் இவற்றிற்கு ஒரே காரணம் பேராசைகொண்ட பண முதலைகள் அதாவது முதலாளிகள். ஆயிரக்கணக்கான கோடியில் புரளும் பணத்தை இன்னும் பல மடங்காக பெருக்கும் ஆசையில் இவர்கள் செய்யும் வேலைகள் மிகவும் கீழ்த்தரமானவை.நாட்டின் பொருளாதாரத்தை ஏதோ இவர்கள் மட்டுமே தங்கள் தலையில் தாங்குவதாக நினைத்து பெருமிதம் கொள்ளும் இந்த மூடர்கள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை. தவறு செய்வது இவர்கள் ஆனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே.அமெரிக்காவில் இதே போன்ற மோசடி என்ரான்(ENRON) கம்பெனியில் நடைபெற்ற பொழுது அதன் முதலாளிக்கு இருபத்தைந்து வருட சிறை தண்டனை கிடைத்தது.இதே போன்ற குற்றங்களுக்கு இந்தியாவில் அதிகபட்ச தண்டனை பத்து வருடம்.அது கூட ராமலிங்க ராஜுவுக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.காரணம் இந்திய சட்டத்தில் உள்ள ஓட்டைகள்.வேறு சில சமூக பிரச்சனைகளை மீடியா கையில் எடுத்துக்கொண்டு போராடியதை போல் இதில் நடக்கும் என்று எண்ணாதீர்கள் காரணம் இத்தகைய மீடியா நிறுவனங்களை நடத்துவதே பண முதலைகள் தான். இன்று சத்யம் நாளை விப்ரோ என்றும் வதந்திகள் பரவ துவங்கி உள்ளன. இன்னும் எத்தனை கம்பெனிகளின் உண்மை முகம் வெளியில் வரும் என்று தெரியவில்லை.பொருளாதார நெருக்கடி இவர்களுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்கும் என்பதே உண்மை.நன்றி -(புது யுகம் )

பங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் சிம்பாப்வே அணியை வென்றது..

பங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் சிம்பாப்வே அணியை வென்றது.நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மிகுந்தசிரமத்தின் மத்தியில் ஆறுவிக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்தது.சிம்பாப்வே வீரர்களின்பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத இலங்கை அணி வீரர்கள் வரிசையாக வெளியேறியதால் இலங்கை மிகக் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. இலங்கை அணி ஐந்து விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சிம்பாப்வே அணியின் கைமேலோங்கி இருந்த முபாரக் மத்தியூஸ், துஷார, ஆகியோர் இலங்கையின் மானத்தைக் காத்தனர்.சிம்பாப்வே அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததினால் இலங்கை அணிவீரர்கள் ஓட்டங்கள் குவிக்க சிரமப்பட்டனர். இலங்கை அணி 51 ஒட்டங்கள் எடுத்திருந்தபோது 22 ஓட்டங்கள் எடுத்த ஜயசூரிய ஆட்டம் இழந்தார். சிம்பாப்வே அணியை துவம்சம் செய்யும் நோக்குடன் களமறிங்கிய சங்கக்கார நான்கு ஓட்டங்களுடன் களத்தை விட்டு வெளியேறினார். அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். கபுகெதர ஏழு பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு பௌவுண்ரியுடன் ஆட்டமிழந்தார். இலங்கை அணி விக்கெட்டுகள் மளமளவென விழுந்தபோது ஒருபக்கத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தரங்க 43 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.20.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்த போது களமிறங்கிய முபாரக், மத்தியுஸ் ஜோடி இலங்கை அணியை தூக்கி நிறுத்தியது முபாரக் 31ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, 50 ஓவர்கள் முடிவில் இலங்கை ஆறு விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்தது. மத்தியூஸ் ஆட்டம் இழக்காது 52 ஓட்டங்களும், துஷார ஆட்டம் இழக்காது 28 ஓட்டங்களும் எடுத்தனர். சிம்பாப்வே அணி 26 ஓட்டங்களை உதிரிகளாக விட்டுக் கொடுத்தது. ரொபின் ஸ்ரொட் மூன்று விக்கெட்டுகளையும், சிக்கும்புரா, உசேயி பிரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.சிம்பாப்வே அணி 28.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்கள் எடுத்த மஸ்ரி தென்பதி 15 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். குலசேகர, மெண்டிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் முரளிதரன் இரண்டு விக்கெட்டுகளையும் துஷார மத்தியுஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.19 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மென்டிஸ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்தார். ஆட்டநாயகனாக மத்தியூஸ் தேர்வு செய்யப்பட்டார்.இலங்கை சிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.மூன்றாவது நாடாக விளையாடும் பங்களாதேஷ் ஒரு போட்டியில் விளையாடி தோல்வியடைந்துள்ளது.

புகழ் பெற்ற"கோல்டன் குளோப் விருதை ஏ.ஆர் .ரஹ்மான் பெற்றுள்ளார்..!

ஹலிவூட் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.66ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா இன்று(12/01/2009) வாஷிங்டனில் நடை பெற்றது.சிறந்த இசையமைப்புக்காக புகழ் பெற்ற "கோல்டன் குளோப் விருதை ஏ.ஆர் .ரஹ்மான் பெற்றுள்ளார்.இந்த விருது பெறும் முதலாவது இந்தியர் ஏ .ஆர் .ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை வாழ்க்கையை கதையின் அடிப்படையாகக் கொண்ட "ஸ்லம்டக் மில்லியனர் " படத்திற்காக அவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.மேலும் மூன்று விருதுகள் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.
சிறந்த எழுத்தாளர் விருது - சைமன் பேஃபயி
சிறந்த கதை அமைப்புக்கான விருது -"ஸ்லம்டக் மில்லியனர் " படம்
சிறந்த இயக்குனர் விருது-டேனி பாய்ல்

லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் விழா -2009 ,இங்கெல்லாம் இவ்வளவு விரைவாகவா ?

லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் விழா -2009 பொங்கல் பற்றிய விளக்கம் பற்றிய காட்சி
பொங்கல் கலை நிகழ்சியில் இராதா காதல் வராதா....பாடலுக்கு ஒரு கிருஷ்ணனும் நான்கு கோபியர்களும் நடனம் ஆடும் கட்சி.
இதுபொங்கல்நிகழ்சியில் பார்வையாளர்கள் மாட்டுப் பொங்கலுக்காக பசுக்கள். அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிலில் சிறுவன் ஒருவன் மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் கூப்பிடுடா... பொங்கலுக்கு தேவையான கரும்பு , மஞ்சக கொத்து, இஞ்சி கொத்து பொருட்களுடன்

11 ஜனவரி 2009

ஷில்பா ஷெட்டிக்கு பிடித்த நடிகர்கள்!

இந்திப்படவுலகில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் அழகான நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் ஒன்றிரண்டு படங்கள் நடித்தும், பெரியளவில் சோபிக்க முடியாததால், அதன் பிறகு தமிழ் சினிமா வாய்ப்புகளை மறுத்து வந்தவர். இந்நிலையில், 'குசேலன்' படத்துக்குப் பிறகு பிரபல நடிகைகளின் லிஸ்டில் இடம்பிடித்துவிட்ட சோனா தொடங்கியிருக்கும் அழகு சாதனங்கள் விற்பனை செய்யும் கடையை திறந்துவைப்பதற்காக சென்னை வந்திருந்தார் ஷில்பா.அப்போது, தமிழ் சினிமாவில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், தமிழில் ர‌‌ஜினி, விக்ரம், விஜய் ஆகியோரை ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்லிவிட்டு பறந்தார். முன்பை விட, சர்ச்சைகளால் ஷில்பா ஷெட்டியின் புகழ் மேலும் கூடிவிட்ட நிலையில், அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வர, சிலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

சத்யம் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

நெருக்கடியில் இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு மூன்று பிரபல வர்த்தக முகங்களை நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இந்திய அரசு அமர்த்தியுள்ளது. மாபெரும் நிறுவனமான சத்யமில் பண கையிருப்பு தொடர்பாக பொய்கணக்கு காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னர் இருந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாகக் குழுவினர் நீக்கப்பட்டனர். கிட்டதட்ட ஐம்பதாயிரம் பேர் பணிபுரியும் சத்யத்திற்கு ஸ்திரத்தன்மை கொண்டு வருவது தான் புதிய நிர்வாகக்குழுவின் பிரதான குறிக்கோளாக இருக்கும் என்று கம்பெனி நிர்வாக விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார். சத்யம் நிறுவனத்தின் தலைவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டார்.

இதுதான் வில்லு கதை...(யா)?இணையதளங்களில் வில்லு திரைப்படம்.?

இன்று இந்தியாவில் ரிலீஸ் ஆகியிருக்கும் (இலங்கையில் நாளை-12/01/2009)வில்லு திரைப்படத்தின் கதை இதுதான்விஜயின் அப்பாவை வில்லன் கொன்று விடுகிறான் அந்த சண்டையில் விஜயின்அம்மாக்கும் பயங்கரமான அடிபட்டு வழக்கம் போல டாக்டர்சும் ஆபரேஷன்பண்ணனும் இவ்ளோ காசு வேணும் எண்டு ஒரு அமௌண்ட சொல்லுறாங்க,விஜயும் எவ்ளோ ட்ரை பண்ணிப்பார்த்தும் காசு கிடைக்கல , கடைசில அவங்கபூர்வீக நிலைத்த வித்து அம்மாவ காப்பாத்துறார் . அதே நேரம் பழிக்குப்பழிவாங்குறதுக்கு வில்லன தேடுனா அவன் அமெரிக்கா போய்ட்டான் எண்டு தெரியவருது .அமேரிக்கா போக காசும் இல்லை, விசா,பாஸ்போர்ட் ஒண்ணுமே இல்ல விஜைகிட்ட . அப்போதான் அவருக்கு ஒரு ஐடியா வருது.உடனே கிளம்பி சென்னைக்கு வாரார் வந்து சென்னையில இருக்கும் லிக் கட்டடத்துக்கு மேல ஏறி , கடவுள வணங்கிட்டு குதிக்கிறார் .........ஆனா அங்கதான்டைரக்டர் டச் ......விஜய் கீழ விழாம அப்படியே அந்தரத்தில நிக்கிறார் ... நிக்கிறார்நிக்கிறார் ....(அதையே அப்பிடியே ஐம்பது கேமரா வச்சு ஷங்கரின் பேவரிட்ஷாட்டான Time Slicing ஷாட் மூலமா சுத்தி சுத்தி காட்டுறாங்களாம்.) பூமியும்சுத்துகிறது அப்போதான் விஜய் கீழ விழுறாரு ஆனா விழுந்தது அமெரிக்காலரோட்டால போன நயன்தாரா காரு மேல . அங்க ரெண்டு பேருக்கும் ஆரம்பத்துலசண்ட வருது .....அதில்தான் மாப்பு அந்த Are you crazy......? சாங்குவச்சிருக்காங்களாம் . (நம்மள பாத்துதான் கேக்குறாங்க போல )அப்புறம் சண்ட காதலா மாறி அவங்க சுத்திக்கிட்டு இருக்காங்க அதுக்கிடையிலவிஜய் வில்லன தேடுற வேலையையும் பாக்கிறாரு.ஒருவழியா வில்லன தேடி கண்டு பிடிச்சா........ வில்லன் நயன்தாராவின்அண்ணன் ......ஆனா விஜய் அத பற்றியெல்லாம் கவலைபடாம வில்லனகொன்று பழி வாங்குகிறார்.கொலகேசில அமெரிக்கா போலிஸ் விஜய தேட ........விஜயும் ஓடி ஓடி ஒருஉயரமான கட்டடத்து மேல ஏறிடுறார்.......கூடவே நயன்தாராவும் .....அப்பிடியே சென்னையில செஞ்சமாதிரி பாஞ்சு அந்தரத்தில நிக்கிறார் நயனையும்தூக்கிட்டு ......அப்போ அமெரிக்கா போலிஸ் Helicopter எல்லாம் வந்து சுட்டுபாக்கிறாங்க ஆனா விஜய் அதெல்லாம் தன்கிட்ட இருந்த ஒரு வில்லு மூலமாமுறயடிச்சுகிட்டிருக்கார் ......பூமியும் சுத்தி சென்னை வந்தது விஜயும் நயனும் கீழவிழுறாங்க.அங்க ஒரு லாரி நிறைய வைக்கோல் போட்டு நிக்குது....... அது மேல விழுறாங்கலாரி டிரைவர் யாருன்னு பார்த்தா பிரபுதேவா . அங்கயே ஒரு குத்துப்பாட்டுரெண்டுபேரும் போடுறாங்க .படமும் முடியுது . ஒரு நிறைவான Adventure படம் பார்த்த திருப்தி இருக்கும்னுபேசிக்கிறாய்ங்க.........ஆமா இதில வடிவேலு எங்க வாரார் எண்டு கேக்குறேங்களா ? ஹையோ.................. ஹையோபடத்த பாருங்கப்பு ..
இது இப்படியிருக்க இன்னுமொரு செய்தி வெளியாகியிருக்கிறது .
வில்லு படம் 'ஃபுல்லா' லீக்! இந்தியாவின் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் (இந்த விஷயம் ஜேம்ஸ்பாண்டுக்கு தெரிமாங்ணா!!) என பிரபுதேவா பெருமையுடன் குறிப்பிட்டுள்ள வில்லு திரைப்படம், நேற்று மாலை முதல் பெரும்பாலான சினிமா தளங்களில் வெளியாகி 'வெற்றிகரமாக' ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படம் நாளைதான் முறையாக உலகமெங்கும் வெளியாகிறது. பொங்கலுக்கு விஜய் தரும் ட்ரீட் என வர்ணிக்கப்பட்ட வில்லு திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் ரிலீசாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தப் படம் இணையதளங்களில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரு பகுதிகளாக முழுப் படமும் வெளியாகியுள்ளது. படம் தவிர 6 பாடல்கள் தனித் தனியாகவும் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே படத்தின் 45 நிமிடக் காட்சிகள் இணைய தளத்தில் ரிலீசாகி பரபரப்பேற்படுத்தியது நினைவிருக்கலாம்.வில்லு பவர்ஃபுல்லு என்று படத்தில் வசனம் பேசுகிறார் விஜய். ஆனால் படத்தை நெட்டில் விட்டவர்கள் அதை விட தாங்கள் பவர்ஃபுல் என்பதை நிரூபித்து விட்டார்கள்.
(வலையில் ரசித்தவை உங்களுக்காக )

தென்னாபிரிக்கா,-அவுஸ்ரேலியா இருபதுக்கு/ 20 போட்டியில் அவுஸ்ரேலியா 52 ஓட்டங்களினால் வெற்றி..!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இருபதுக்கு/ 20 போட்டியில் அவுஸ்ரேலியா 52 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.அவுஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப்பெற்றது . பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களை மட்டுமே பெற்றது .(டேவிட் வார்னெர்- 89 ஓட்டம்)இவரே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார் .(11/01/2009) (தென்னாபிரிக்கா அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் கட்சி )

இந்த மாதிரி தத்துவங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீங்களா ?

இந்த மாதிரி தத்துவங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீங்களா ? பாத்திட்டு கருத்தை எழுதுங்கோ .....!(வலையில் ரசித்தவை )
1-டி கப்ல டி இருக்கும் .அப்ப வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா ?
2-செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்ல அனுப்ப முடியாது .
3-டெய்லி காலண்டர்-லே தேதி கிழிக்கறது முக்கியம் இல்லை – அந்த தேதி-லே நீ என்ன கிழிக்கரே -ங்கறது தான் முக்கியம் !!
4-பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட தியேட்டர் -ல ரிலீஸ் பண்ண முடியாது ...
5-ரேஷன் கார்டு வச்சு சிம் கார்டு வாங்கலாம் _ ஆனா சிம் கார்டு வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது .
6-நீங்க என்ன தான் தீனி போட்டு கோழி வளத்தாலும் அது முட்டை தான் போடும் 100/100 எல்லாம் போடாது .
7-கண்ணா பஸ் ஸ்டாப் ல பஸ் தான் வந்து நிக்கும் அனா புல் ஸ்டாப் ல புல் l வந்து நிக்குமா
8-பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பன மரத்துல பணம் இருக்காது ..!!
9-சைக்கிள் ல போனா சைக்கிளிங் , ட்ரைன்ல (train) போனா ட்ரைனிங்கா ?
10-மெக்கானிக்கல் என்சினியர் மெக்கானிக் ஆகலாம் ஆனா சாப்ட்வேர் என்சினியர் சாப்ட்வேர் ஆகா முடியாது ..
11-கொசு கடிச்ச டோர்டாயஸ்(tortoise) கொளுத்திவைக்கலாம் ஆனா டோர்டாயஸ்(tortoise) கடிச்சா கொசுவைகொளுத்திவைக்கமுடியுமா...?
12-கீ போர்ட்ல கீ இருக்கும் ஆனா மதர் போர்ட்ல மதர் இருக்குமா...?
13-நீ எவளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால் ல போய் படிக்க முடியாது .
14-ஸ்கூல்ல டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ......... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ....... ஆனா ப்லோட் (blood) டெஸ்ட்ல பிட் முடியாது ..
15-என்ன தான் நாய் நன்றி உள்ளதா தான் இருந்தாலும் அதால தாங்யூ(thank you) சொல்ல முடியாது !!!!!!!! இதுதான் வாழ்க்கை .
16-லஞ்ச் பாக்ல லஞ்ச் கொண்டு போக முடியும் ... ஆனா ஸ்கூல் பாக்ல ஸ்கூல்_ல கொண்டு போகமுடியுமா ?
17-ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு ...
18-என்னதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டு தான் சாப்பிட முடியும் ..
19-நீ என்ன தான் வீரனா இருந்தாலும் , குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது ..
20-காசு இருந்த கால் டாக்ஸி !!! காசு இல்லேன்னா கால் தான் டாக்ஸி !!!
21-கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும் ... ஆனா கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் தான் வரும் .
22-மெழுக வச்சு மெழுகு வத்தி செய்யலாம் ... ஆனா கொசுவ வச்சி கொசு வத்தி செய்ய முடியாது..
23- பல்லு வலின்னா பல்ல புடுங்கலாம் ஆனா கண்ணு வலினா கண்ண புடுங்க முடியுமா .....?
24-இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம் ___ ஆனா மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியாது.
25-என்னதான் கருணாநிதி திமுக_வுல இருந்தாலும் அவர் வீட்டு _மாடு " அம்மா " னு_தான் கத்தும்.
26-வாழைமரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??
27-என்னதான் ஏரோபிளேன்(aeroplane) மேல பறந்தாலும் பெற்றோல் போட கீழதான் வரணும் .
28-கான்ட் வாஷ் 'ன்னா கை கழுவறது , 'பேஷ் வாஷ் 'ன்னா முகம் கழுவறது , அப்ப ' பிரைன் வாஷ் ' ன்னா ,, ப்ரைன கழுவறதா

தமிழ்நாட்டு பராக் ஒபாமா......!

பராக் ஒபாமா தமிழ் நாட்டில் பிறந்த்திருந்தால் இவர்களில் யாரவது ஒருவரை போல இருந்திருப்பாரோ....?(நான் ரசித்தவை)

இவை கைகளா?...அல்லது மிருகங்களா?

இவை கைகளா?...அல்லது மிருகங்களா? யாராவது உரிமையாளர்கள் இருந்தால் தெரிவிக்கவும்

கூகுள் ‘குரோம்’- அசத்தலான பிரெளசர்!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரெளசர் “குரோம்”. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பொக்ஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Internet Explorer, Firefox, Apple Safari, Opera ஆகிய Browser களில் இல்லாத பல அருமையான அம்சங்கள் குரோமில் உள்ளன. 1. இணையதளங்களுக்கான ‘Task Manager”‘: கூகுள் குரோமுக்குள் போன பின்னர், ‘Shift + esc’ கீயை அழுத்தினால், ‘டாஸ்க் மேனேஜர்’ திறக்கும். அதில், குரோம் ப்ரெளசரில் திறந்திருக்கும் அனைத்து இணையதளங்களின் பட்டியலும் காணப்படும். இதன் மூலம் பல்வேறு வகையான இணையதளங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் ‘Memory’யின் அளவை நாம் அறிந்திட முடியும். ஏதாவது ஒரு இணையதள பக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால், Task Manager இலிருந்தபடியே அதை மூடவும் வசதி உண்டு.
2. Visual Browser History: ‘Ctrl + H’ கீயை அழுத்தி ‘Browser History”யை திறந்து அதில் தேவைப்படும் பக்கங்களைத் தேடலாம். பொருத்தமான பக்கங்களைத் தேடுவதோடு, சம்பந்தப்பட்ட இணைய தள பக்கங்களின் ‘Thumbnail’களையும் இந்த Option நமக்குக் காட்டும். 3. Super Clean Contextual Menu: ஏதாவது ஒரு இணையதளத்தின் hyper Link இல் right click செய்தால், ஐந்து Options மட்டுமே அதில் இருக்கும். Image மீது right click செய்தால், நான்கு Option கள் இருக்கும். இது Firefox இல் குழப்பமானதாக இருக்கும். 4. Address Bar இலிருந்து ‘Site’ தேடலாம்: இது Brillient ஆன Option. இணையதளத்தை தேடக் கூடிய வசதியுடன் கூடிய இணையதளத்திற்குப் போகும்போது குரோம் அதை தானாகவே உணர்ந்து கொண்டு, அந்த தளத்தை Address Bar இல் பதிவு செய்து விடும். அடுத்த முறை அந்த site க்குப் போக விரும்பினால் Address Bar க்குப் போனால் போதும். 5. பயன்படுத்தப்பட்ட Memory யை அறிய.. இந்த Option மூலம் Browser ளில் பயன்படுத்தப்பட்ட Memory யை அறிந்து கொள்ளலாம். குரோம் பிரெளசருக்குள் போய், ஒரு புதிய Tab ஐ திறந்து, அதில் about:memory என்று டைப் செய்யவும். அப்போது பிரெளசருக்கு மேல், உங்களது கொம்ப்யூட்டரில் எந்தெந்த பிரெளசர் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரிய வரும். அதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலும் கூடவே இருக்கும். 6. தவறாக மூடிய Website Tab களை திறக்க.. Firefox-3 பிரெளசரில் “Undo Closed Tab” Option உள்ளது. அதேபோல Opera வில், Ctrl + Z கீயை அழுத்தினால் மூடிய Tab களை திறக்கலாம். குரோமில், Ctrl + T கீயை அழுத்த வேண்டும். அப்போது, Recently closed tabs என்ற Otion வரும். அதில் போய் எந்த Tab தவறுதலாக மூடப்பட்டதாக நினைக்கிறீர்களோ அதை திறக்கலாம். 7. Start Menu / Quick Launch பாரிலிருந்து Site திறக்கலாம்: இணையதளங்களுக்கான Desktop Shortcut கள் அனைத்து Browser களிலும் உள்ளன. இது கூகுள் குரோமில் எளிமையாக உள்ளது. ஏதாவது ஒரு தளத்தை திறந்து, அதில் file மெனுவிலிருந்து “Create application shortcut” என்ற Option ஐ தேர்வு செய்யலாம். அந்த தளத்தின் Shortcut, Desktop இல் உட்கார்ந்து கொள்ளும். இப்படி பல வசதிகள் குரோமில் கொட்டிக் கிடக்கின்றன. குரோம் நிகழ்த்தப் போகும் புரட்சி, Browser உலகில் நிச்சயம் பெரிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.(நான் ரசித்தவைகளுருந்து பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன்.)

நமீதா வீட்டு செல்லப்பிராணிகள்....! ?

நம்ம நமீதா வீட்டில செல்லப்பிராணிகளும் இப்பிடித்தான் இருக்குமோ என்னவோ...? (நமீதா ரசிகர்களுக்காக வேறு வலைப்பதிவிலிருந்து)

எந்திரன்: ரஜினியின் அறிமுகப்பாடல் பாடுபவர் - யோகி பி

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை என எந்திரனில் தி பெஸ்ட் எதுவோ அதை மட்டுமே பயன்படுத்துகிறார், இயக்குனர் ஷங்கர்.இசையை‌ப் பொறுத்தவரை இசைப் புயல் இழைத்து இழைத்து பாடல்களை உருவாக்கி வருகிறார். யார் யாரை பாட வைப்பது என்பதிலும் கறாராக உள்ளார் ஏ.ஆர்.ராணுவ ரகசியத்துக்கு இணையாக நடத்தப்படும் படப்பிடிப்பிலிருந்து லேட்டஸ்டாக நமக்கு கிடைத்த தகவல், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மலேசிய பாடகர் யோகி பி பாடுகிறார்.பொல்லாதவனில் எங்கேயும் எப்போதும் பாடலைப் பாடிய யோகி பி தமிழகம் முழுவதும் பிரபலம். அவரை வைத்து ஒரு பாடலை பதிவு செய்ய உள்ளார் ரஹ்மான். இது ர‌ஜினியின் அறிமுகப் பாடலாக இருக்கும் என்கிறார்கள்.எந்தப் பாடலாக இருந்தாலும் யோகி பி பாடுவது மட்டும் சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாகியுள்ளது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com