பங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகள் பங்கு பெறும் ஒரு நாள் போட்டியில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ்,மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ்அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுபெடுத்தடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இலங்கை அணியின் சார்பில் சனத் ஜெயசூர்யா மட்டுமே 54 ஓட்டங்களை பெற்றார்.
வெற்றி பெற 148ஓட்டங்களை பெற வேண்டிய பங்களாதேஷ் அணி23.5ஓவர்களில் 151 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.அந்த அணியின் சார்பில் ஷகிப் அல் ஹஷன் 92 ஓட்டங்களை (ஆட்டமிழக்காமல்) பெற்று பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு உதவினார்.இவரே ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக